நேற்று அதிகாலையில் என் மைத்துனர்

சே. பாக்கியராசனில் தொடங்கி நள்ளிரவு 11 மணி வரை நேரில் வந்தும், சமூக ஊடகப் பதிவுகள், மற்றும் அலைபேசி அழைப்புகள் வாயிலாகவும் எனக்கு பேரன்பு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

குறிப்பாக எனது உயிர் அண்ணன் அண்ணன் செந்தமிழன் சீமான். மற்றும் என் அண்ணி கயல்விழி அவர்கள்.

தனி பதிவிட்டும், அழைத்துப் பேசியும் வாழ்த்தி மகிழ்ந்த என் அண்ணனின் அன்பின் துணைக் கொண்டு தான் இந்த உலகில் நான் வாழ பழகி இருக்கிறேன்.

அவரால்தான் இந்த மாபெரும் பேரன்பு உலகம் எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்ந்தேன். அவரால் ஆனது நேற்று.அவரே என் தகுதி .

நேற்று நேரில் என் இல்லத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய கும்பகோணம் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அன்புத் தம்பி கர்ணன் , மூத்த வழக்கறிஞர் மாணிக்கம் மற்றும் அவர்களோடு வந்த வழக்கறிஞர்கள் தம்பிகள், மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி, பாபநாசம் ,திருவிடைமருதூர் ,கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் ,

சமூக வலைதளங்களில் அழகழகான பதிவுகளை எழுதி என்னை வாழ்த்தி என்னை நெகிழ வைத்த என் தம்பி தங்கைகள் , அண்ணன்மார்கள் , உடன்பிறந்தார்கள் , மூத்தவர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

அன்பினால் என்னை மேன்மை செய்தோருக்கு ..

என் மனதின் அடியாழத்தில் இருந்து தெரிவித்துக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.. இறுதிவரை இந்த அன்பிற்கு தகுதி உடையவனாக என்றென்றும் வாழ முயல்வேன்.

எனது இந்த வாழ்வு உங்களுடையது .

நெகிழ்வான நன்றிகள் !

❤️

மணி செந்தில்.