பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

மிதக்கும் வலி…


இதழ்களின் இடுக்கில் புகையும் சுருட்டின்
உதிரும் சாம்பல்களுக்கு மத்தியில்….
தேடிப்பார்க்கலாம்…தப்பித் தவறி உதிர்ந்து விட்ட
உயிரோட்டம் உடைய காயம் ஒன்றை.
தனிமையில் கசியும் என் கோப்பை
முழுக்க குழந்தைகளின் உடலங்கள் மிதக்கின்றன..
வளைந்து நெளிந்து எழும் புகை வளையங்களின்
ஊடே…நன்கு கவனித்து பார்த்தால் நீங்கள் அறியலாம்.
ரசாயன எரித்தலில் கருகிப் போன
பிணம் ஒன்று தூக்கில் தொங்குவதை….
என் அறையின் உயரத்தில் தொங்கும் ஒற்றை
விளக்கின் உமிழலில் பரவித் தெறிக்கிறது
கருப்பை ரத்தச் சுழி ஒன்று….
நாசியை புணரும் ரத்த வாடை
என் விழிகளில் மாற்ற இயலா
வடுவாய் எஞ்சி நிற்கிறது..

தூரத்தில் யாரோ அழைக்கிறார்கள்
அறுந்து தொங்கும் ஒற்றை ரத்த விரல் நீட்டி..
தொப்புள் கொடி கழுத்தை சுற்றி பிறந்த பிணங்களின்
வாயில் எச்சில் கோழையாய் வழிகிறது இறையாண்மை..

.
ஓங்காரக் குரல் எடுத்து அழுகிறேன்.
எல்லாம் முடிந்த பின்னர்.
தனிமையாகத் தான் இருக்கிறேன்
என உறுதி செய்துக் கொண்டு.
.

Previous

மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

Next

பறை மொழி அறிதல்..

3 Comments

  1. நன்று…
    வேறென்ன சொல்ல!…

  2. இனிய தோழருக்கு..

    நீண்ட நாட்களுக்கு முன் இரவொன்றில் அலைபேசிய கவிதைதானே இது. அப்போதே நாங்கள் அச்சேற்ற சொன்னோம். காலமும் சேர்த்தே கவிதையை உருவாக்குகிறது புது பொருள் தருகிறது வலியை தருகிறது.
    இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனியான வலியை தருவதே இக்கவிதையின் வாழ்வு..
    நன்றி தொடருங்கள்

  3. ஓங்காரக் குரல் எடுத்து அழுகிறேன்.
    எல்லாம் முடிந்த பின்னர்.
    தனிமையாகத் தான் இருக்கிறேன்
    என உறுதி செய்துக் கொண்டு.//

    கோடி மடங்கு உண்மை. பின்னிருக்கீங்க.

Powered by WordPress & Theme by Anders Norén