மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கருத்துரிமை என்பது யாதெனில்… . -மணி செந்தில்

கட்டுரைகள்.., கவிதைகள் /

…   எம் முகத்தில் நீ காறி உமிழ்ந்த அந்த மஞ்சள் எச்சிலுக்கு மற்றொரு பெயர் உண்டென்றாய்… எம் செவியில் நீ உரக்கச் சொல்லிப்போன அவமானச் சொற்களின் பின்னால் மகத்தான உரிமை ஒன்று மறைந்து கிடக்குதென்றாய்.. எம் கண்களை நோண்டியெடுத்து உன் கால்களுக்கு கீழே போட்டு நசுக்கி… அதில் கசிந்த உதிரத்தில் தான் உன் மஞ்சள் எழுத்திற்கான மை தயாரித்தாய்.. உதிர சிவப்பேறிய எம் விடுதலைக்கான பக்கங்களில் உன் மஞ்சள் புத்தியை பூசி விட்டு போனதைதான் உன் …

 1,103 total views,  1 views today

மனுஷ்ய புத்திரனின் பிழைப்புத்தனங்களுக்கு

கடித இலக்கியம் /

  ========================================= மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு…   கடந்த சில நாட்களாக  திமுக அமைத்திருக்கும்  அண்ணன் சீமான் அவர்கள் மீதான வசைபாடல் பிரிவிற்கு  நீங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து வரிசையான வசையாடல்களை வாரி வழங்கி வருவதற்கு… அப்பட்டமான 3 ஆம் தர பிழைப்பு வாதம் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்.. அய்ய்யயோ.. நானா…பிழைப்பு வாதியா என்றெல்லாம் கூப்பாடு போட முடியாத அளவிற்கு உங்களது பிழைப்பு வாத தந்திரங்கள் பதிப்புலகிலும், அரசியல் உலகிலும் , தொலைக்காட்சி ஊடக …

 962 total views

ஒற்றைத் தெறிப்பு ஊழி பெரும் தீயாய் ….

அரசியல் /

    மாநாட்டிற்கு முந்தைய நாள் அது. அந்த நள்ளிரவு நேரத்தில் அந்த மாபெரும் மாநாட்டு திடலில் தனியே அண்ணன் சீமான் மட்டும் நின்றுக் கொண்டிருந்தார் . நான் அவரை கவனித்த போது அவர் தனித்திருந்தார். சற்று தொலைவில் தான் நாங்கள் அனைவரும் இருந்தோம். ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாகி இருந்த அவர் தன் வாழ்நாளில் மறக்க முடியா நாளொன்றாக மறுநாள் அமையப் போவதை எதிர் நோக்கி இருந்தார். மெல்ல தன் காலடிகளை கவனித்தவாறே அந்த மாநாட்டு திடலெங்கும் …

 2,020 total views