மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

தொ.ப என்கின்ற தனிமனித பண்பாட்டு ஆய்வுலக பல்கலைக்கழகம்

கட்டுரைகள்.. /

மனித இன வரலாற்றில் தொன்மை இனமாக அறியப்படுகிற தமிழர் என்கின்ற தேசிய இனம் மற்ற இனங்களைக் காட்டிலும் நாகரீக வளர்ச்சியிலும் பண்பாட்டு முதிர்ச்சியிலும் அறிவுசார் இனமாக விளங்குகிறது என்பது பெருமித கதையாடல்கள் அல்ல , தொல் அறிவியல் ஆய்வுகள் மூலம் வரலாற்றின் போக்கில் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகிற உண்மை என்பதை சமீபத்திய பல ஆய்வாளர்கள் உரிய ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார்கள். தொன்ம இனமான தமிழர் இனம் வாழ்ந்து வருகிற இந்த நிலம் வெறும் மண்ணும், காடும், கடலும், மலைகளும் …

 670 total views

ஏனெனில்.. எங்கள் உலகம் அழகானது.

கட்டுரைகள்.., சுயம் /

❤️❤️❤️❤️❤️❤️❤️ தம்பி குடவாசல் மணிகண்டனின் திருமணத்திற்கு திருவாரூர் வரை என் அம்மா சென்று வந்தது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களுக்கு இந்தத் திருமணம் குறித்து உள்ளூர ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார்கள் என நான் அறிந்தே இருக்கிறேன். அவன் சக்கர நாற்காலியில் நாம் தமிழர் கூட்டத்திற்கு பாடுவதற்காக வரும் போதெல்லாம் அம்மா அருகில் சென்று நின்று கொள்வார்கள். ஒருபோதும் அவனுக்காக நான் எந்த சகாயமும் செய்ததில்லை. அவன் வருவான். பாட அனுமதி கேட்டு வற்புறுத்துவான். பிடிவாதம் …

 741 total views

தமிழ்நாடு- ஓர் வரலாற்று சித்திரம்

அரசியல், கட்டுரைகள்.. /

தமிழினம் தனது தனி நலன்களுக்காக போராட புரட்சிப் பாதையில் படை எடுத்து விட்டது.அந்த படையெடுப்பை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் இனி தமிழகத்தில் வாழ முடியாது.-ம. பொ. சி 1954 செப்டம்பர். ஒவ்வொரு தேசிய இனமும் தனது அடையாளங்களில் முதன்மையாக கொண்டிருப்பது மொழி. மொழி என்ற முகமே ஒரு தேசிய இனத்தின் முகவரி. உலகத்தில் தோன்றியுள்ள எத்தனையோ நாடுகள் மொழி அடிப்படையிலான தேசிய இனங்களை சார்ந்தே நிலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசிய இனம் என்பது பொதுவான மொழி, …

 812 total views,  1 views today

பொதுக்கருத்தியலின் வன்முறையும்,பொன்மகள்களின் அபத்தங்களும்..———————————————–

திரை மொழி /

சமீபகாலமாக பொது கருத்தாக்கத்தின் தாக்கம் அதிகமாகி வருவதை நாம் கவனிக்கிறோம். பொதுக்கருத்து என்பது யாதெனில் செல்வாக்குப் பெற்ற கருத்தாக்கம் என்பதே சரியானது. பலரும் பொது கருத்தாக்கத்தின் மீதான ஈர்ப்பினால் தங்கள் சுய கருத்துக்களை மறந்து விட்டு பொதுக் கருத்தாக்கத்தை வலுப்படுத்த வரிசையில் நிற்பதையும் பார்க்க முடிகிறது. பொதுக்கருத்து என ஏற்படுத்தப்படும் அதிகாரத்தின் புனைவு நிகழ்த்தும் ஆகப் பெரும் வன்முறையாகவே கருத முடிகிறது.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தீர்ப்பில்  கூட “சமூக கூட்டு உணர்வின் …

 631 total views

முடிவிலி அழைப்புகள்.

சுயம் /

வெகு நாட்களுக்குப் பிறகு என் அலைபேசியில் நான் மறைத்து வைத்திருந்த ஒரு பெயரில் அவள் வந்தாள். ஒளிர்ந்துக் கொண்டே இருந்த அலைபேசியை, அதில் புலப்பட்ட அவள் பெயரை சற்றே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அது வெறும் அழைப்பல்ல. அது ஒரு சுழல். அந்த சுழலில் மீண்டும் சிக்கி சிதைந்து விடக்கூடாது என சுதாரித்தேன். சிதைந்தழிந்து மீண்டும் மீண்டும் மீள் எழுவதென்பது‌ பழங்கால விக்ரமாதித்தன்-வேதாளம் கதை போல முடிவிலி என அறிந்து இருக்கிறேன். சில நொடிகள் அமைதியாக ஒளிர்ந்து …

 671 total views

பகலில் ஒரு இரவு.

சுயம் /

முகத்தில் மெல்லிய வெப்பம் பரவ நான் கண் விழித்தேன். விடிந்திருந்தது. அருகில் நீ இல்லை. எழுந்து பார்த்தபோது அறைக்கு வெளியே பால்கனியில் நின்று கொண்டு கையில் ஒரு தேனீர் குவளையோடு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாய். இமைக்காத விழிகளோடு உறைந்திருந்த உன் பார்வை ஏதோ ஒரு இசை குறிப்பை எனக்கு நினைவூட்டியது. பெரும்பாலும் நீ கவனிக்காத பொழுதெல்லாம் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான். சாப்பிடும்போதும், தூரத்தில் எங்கோ நின்று கொண்டு திரும்பிப் பார்க்கும் போதும், …

 675 total views

மஞ்சள் நிற வாழ்வொன்றின் மர்மக்கதை.

சுயம் /

அந்த நாள் மட்டும் ஒரு மஞ்சள் நிற சுடிதாரால் இன்னும் நிறம் மங்காமல் அப்படியே சலவையோடு கசங்காமல் இருக்கிறது. காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ அலைவுகளில் எதை எதையோ தவறவிட்ட நான் முதல்முதலாகப் பார்த்தபோது அந்தக் கதவு இடுக்கின் வழியாக தென்பட்ட அந்த மஞ்சள் நிற சுடிதாரின் அசைவினை மட்டும் மறக்க முடியவில்லை. ஆனாலும் காலம் வலிமையானது தான். என்னையே மறக்கின்ற களைப்பினிலும், உச்சபட்ச களிப்பினிலும் சில நேரங்களில் அந்த மஞ்சள் நிற சுடிதார் கூட மரத்துப்போனதுண்டு. ஆனாலும்..அவ்வப்போது …

 653 total views,  1 views today

நினைவோ ஒரு பறவை..

சுயம் /

நினைவோ ஒரு பறவை. இரவினை போர்த்தியிருந்த அந்த இருட்டு விரல்களால் தொட்டுப் பார்த்து உணரும் அளவிற்கு பிசுபிசுப்பின் அடர்த்தியோடு இருந்தது. அனேகமாக அப்பொழுது நள்ளிரவு கடந்து பின்னிரவின் தொடக்கமாக இருக்கலாம். அப்போதுதான் கண்கள் சோர்வடைய தொடங்கி,கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில்..விழிப்புக்கும் உறக்கத்திற்கும் நடுவேயான ஒரு கனவு மயக்கத்தில் நான் புரண்டு கொண்டிருக்க, சற்றே அதிர்ந்து அடங்கிய என் அலைபேசியின் ஒலியற்ற அதிர்வொலி இரவின் மௌன இசைக்கு சுருதி பேதம் போல ராகம் தப்பி ஒலித்தது. களைத்த …

 661 total views