துளி 15
துளிகள் /மெளனங்களோடு பேசுதல். —————————- நீங்கள் எப்போதும் சொற்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள். வெறும் சொற்கள் நம்பிக்கையின் வேரற்றவை. வறண்டப் பாலையின் எப்போதோ அறியாமல் சிந்தி விடும் மழைத்துளி ஒன்றின் இருப்பினைப் போன்றவை . காதற்ற வெளியில் தவறி உதிர்ந்து விடும் ராகத் துளியின் சாயல் கொண்டவை. அவைகளால் எதையும் நிரப்பவும் முடியாது. அவைகளாக எதனுள் நிரம்பவும் முடியாது. அந்தந்த கணங்களுக்கே உரிய கூட்டிசைவிற்கான சமாதானங்கள் அவை. சில தொண்டை விம்மும் கணங்களை கண்டும் காணாமல் நகர்த்தக் …
752 total views