மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சென்னை புத்தக கண்காட்சி – சில அனுபவங்களும்..நினைவுகளும்,,

கட்டுரைகள்.. /

                   இந்த முறையும் சென்னை புத்தகக் கண்காட்சி மிகுந்த வரவேற்போடும், உற்சாகத்துடனும், புதிய நம்பிக்கைகளோடும் முடிந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சிக்கு தவறாமல் செல்கிறவனாய் இருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், நமது பழைய-புது நண்பர்களை, எழுத்தாளர்களை,அறிவுலக  ஆளுமைகளை ஒரு சேர சந்திப்பதும் ,உரையாடவதும் அடுத்த ஒரு வருட காலத்தில் நாம் இயங்குவதற்கான,வாசிப்பதற்கான, எழுதுவதற்கான உந்துதல்.    ஒரு இயல்பான வாசகனுக்கு கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை  ஒரு சேர காணுவது உற்சாகம் என்றாலும் 700 …

 1,078 total views

தமிழர் திருநாள் சிந்தனைகள்..

கட்டுரைகள்.. /

வழக்கம் போல பொங்கல் என்றாலே இனிப்பு பூசிக் கொள்கிறது மனசு. தெருவில் அதிகரித்து இருக்கும் நடமாட்டமும், வீட்டு வாசல்களில் பூத்திருக்கும் கோல மலர்களும்.. சட்டென இனிப்பினை நம் மனதிற்குள் நிறைப்பி விடுகின்றன.. வீட்டுக்கு திடீரென பக்கத்தில் முளைத்திருக்கும் கரும்புக் கடையில் (என் கடை அல்ல..) கூட்டம் இருக்க வேண்டும் என மனசு சிறிதாக பதட்டம் கொள்கிறது. கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என சட்டென தொற்றுகிறது சிறு ஏக்கம் . என் பால்யத்தில் பொங்கல் என்றால் எங்களுக்கு …

 786 total views

லசந்தா விக்கிரதுங்க. – சக மனிதனை நேசித்த இதழலாளன்.

கட்டுரைகள்.. /

“நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!” “என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும்.” – சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரதுங்க. …

 947 total views,  1 views today