மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

முதல் மரியாதை.

கட்டுரைகள்.. /

சொல்லுக்குள்தன் மொழியைதன் நிலத்தைதமிழர் வாழ்வைசுருக்கி உட்புதைத்துதைத்த வித்தகனுக்கு.‌..முதல் மரியாதை ❤️ வான்புகழ் கொண்டதனி மொழி தமிழுக்குதன் கறுப்பு மண்ணின்கரும்பு சாறெடுத்து கவிதைஅமுதூட்டியவன். பூங்கதவின் தாழ் திறந்துஅந்தி மழை பொழிகையில்ஆயிரம் தாமரை மொட்டுக்களில்பாயிரத் தமிழ்க் கும்மி அடித்தவன். சின்னச்சின்ன ஆசைகளோடுசிகரங்களை நோக்கிதமிழாற்றுப்படையோடுநடைபோட்டாலும்கள்ளிக்காட்டில் அமர்ந்து கருவாச்சி காவியம் கண்டவன். பழைய பனை ஓலைகளில்இந்தப் பூக்கள் விற்பனைக்கல்லஎன நேற்றுப் போட்ட கோலமாய்கல்வெட்டுகளில் உறைந்திருந்ததமிழுக்கு நிறம் கண்டுவடுகப்பட்டி முதல் வால்கா வரைஎல்லா நதிகளிலும் தமிழ் ஓடங்களை மிதக்க விட்ட திருத்தி எழுதிய தீர்ப்புக்காரன். …

 176 total views

தவிர்க்க கூடாத தவிர்ப்பு..

கட்டுரைகள்.. /

❤️ மனித குணங்களில் வெறுப்பினை போல் விசித்திரமானது ஏதுமில்லை. உண்மையில் வெறுப்பு என்பது கொப்பளித்துக்கொண்டு இருக்கிற நீர்க்குமிழி போன்றது. சில வெறுப்புகளுக்கு காரணங்கள் தேவையில்லை. அப்படி காரணமில்லாமல் ஏதோ ஒன்றை வெறுக்க முடிகிற ஒரு உயிரி இந்த பிரபஞ்சத்தில் உண்டு என்றால் அது மனிதன் மட்டும்தான். சகமனிதனின் வெறுப்பு நெருப்பாய் நமது மீது கொட்டும்போது நாம் தவித்து விடுகிறோம். எதனால் இது நேர்ந்தது என்பது குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். நம்மை வெறுப்பவர் அனைவரையும் நாமும் வெறுக்க …

 76 total views

அண்ணன் சீமான் தந்த அண்ணன்.

அரசியல் /

❤️ அண்ணன் திருமா அவர்களைப் பற்றிய சித்திரம் அண்ணன் சீமானது மதிப்பு மிகுந்த வார்த்தைகளால்தான் எனக்குள் உருவானது. அதற்கு முன் தமிழ்ப்பாதுகாப்பு இயக்க மேடைகளில் அவரை நான் பார்த்திருந்தாலும் அண்ணன் சீமான் தான் தொல். திருமா என்கிற தனிமனிதரின் முழு உருவத்தை, எனக்குள் வரைந்தார். உண்மையில் சமூகத்தின் கடைக்கோடி எல்லையிலிருந்து ஒரு மனிதன் உருவாகி, பலதரப்பட்ட அனுபவங்களை உள்வாங்கி, ஒரு ஆற்றல் மிக்க தலைவராக மாறுவதென்பது மிக மிக அபூர்வம். அதுவும் சமீப நாட்களில் நாம் காண …

 70 total views

பாவம் அவர்கள்..

அரசியல் /

⚫ நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல,90 சதவீதம் இந்துக்கள் தான் எங்கள் கட்சியில் உள்ளார்கள் என பகிரங்கமாக சொல்கிற திமுக வை நம்புகிறவர்கள். இது ஆர்எஸ்எஸின் திட்டம், நவீன குலக்கல்வித் திட்டம் என திக தலைவர் வீரமணியால் , கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் முத்தரசன் போன்றவர்களால் கூட சுட்டிக் காட்டப்படும் “இல்லம் தோறும் கல்வித் திட்டம்” தான் திராவிடத்தின் அடையாளம் என பேசுகிற திமுகவை நம்புகிறவர்கள். ஆர்எஸ்எஸ் சமூக இயக்கம் எனச் சான்றிதழ் கொடுத்து சங்பரிவார் …

 73 total views

ஜெய் பீம்- அநீதிகளுக்கு எதிரான கலைக்குரல்.

திரை மொழி /

எப்போதும் அநீதிகளுக்கு சாட்சியமாக குழந்தைகளின் விழிகள் அமைந்து போவது தான் உலகத்தின் கோர விதியாக இருக்கிறது. ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் இது நுட்பமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “ஜெய் பீம் -ல் குழந்தைகள்” என தனி ஆய்வே செய்யலாம் என்ற அளவிற்கு குழந்தைகளின் அழுகை, குணாதிசயங்கள், எதிர்பார்ப்புகள், அச்ச உணர்வுகள் என குழந்தைகளின் யதார்த்தக்காட்சிகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. சற்று பிசகினாலும் ஆவணப்பட சாயல் அளித்துவிடும் என்கிற அளவிற்கு உண்மை சம்பவங்களை, நிஜ மனிதர்களை காட்சிமைப் படுத்தியது சவாலான …

 72 total views

அண்ணன் என்ற அற்புதன்..

அரசியல் /

❤️ 2009 -ல் மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் “கூட்ட மேடையில் முதன்முதலாக ஏறிய போது கைப்பிடித்து என்னை ஏற்றினார். அந்த நொடி முதல் அந்த கைகள் என்னை விட்டு விலகியதே இல்லை. தாய்மை சாயல் கொண்ட அந்தக் கண்கள் என்னை விலக்கியதே இல்லை. அண்ணன் என்ற சொல்லுக்கு அவரைத் தவிர வேறு எதுவும் அர்த்தமில்லை. அவரிடமிருந்து வரும் என்ற தம்பி என்ற அழைப்பைத் தாண்டி வேறு எதுவும் உயர்வில்லை. தனிப்பட்ட அளவில் நான் எவ்வாறு அவரைப்பற்றி …

 67 total views

Missed call..

சுயம் /

❤️ ❤️ அந்தப் பாடல் ஒரு கருணை என்றாய். மழை போல. இளவெயில் போல.‌ எப்போதாவது உணரத்தக்க மனநிலையில் ‌ காலத்துளியின் நழுவத் துடிக்கும் ஒரு இழையில் அனிச்சையாக சிக்கிக்கொண்ட அபூர்வம் போல அந்தப்பாடல் ஒரு கருணை என விழிகள் மூடி மெய்மறந்து நீ சொல்லும் அந்தக் கணத்தில்… நிச்சயமாக நீதான் அந்தக் கருணை என எனக்கு சொல்லத் தோன்றியது. ❤️ இப்போதும் எங்கேயாவது என்னையும் மீறி கேட்டு விடுகிற அந்த பாடல் விரைந்து செல்கிற நதிகுளிர்கால …

 55 total views

மாநாடு-திரைக்கதை கலையின் விசித்திரம்.

திரை மொழி, திரைப்பட விமர்சனம் /

திரை உலகை கனவுத் தொழிற்சாலை என வரையறுத்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா . நம் கண்முன்னால் விரிகிற திரை நமக்கும் , நம் கனவிற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை அழிக்க முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சியை தான் நாம் திரைப்படம் என்கிறோம். ஒரு நல்ல திரைக்கதை “ஹைக்கூ” வடிவம் போன்றது என்கிறார் காட்பாதர் , அபாகலிஸ் நெள போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ. அவரே சொல்கிறார் , “ஒரு …

 77 total views

அப்பாவின் பிறந்தநாளில்..

சுயம் /

அப்பாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள்.எப்போதும் அவருக்கு பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாளாக தான் கடந்து போகும் ‌. இன்றும் அவர் அப்படித்தான் அதை அவர் எடுத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் நாட்களின் நகர்வு ஒன்று மட்டுமே மனிதனின் வாழ்நாள் அல்ல. அந்த நாட்களில் அவன் என்ன சாதித்து இருக்கிறான் என்பதே அவனது வாழ்நாள் என்கிறார். அவர் அப்படித்தான். இன்றளவும் தினந்தோறும் மூன்று மணிநேரங்கள் படிப்பதற்காக ஒதுக்குகிறார். நாம் தமிழர் காணொளிகள் அனைத்தையும் விடாமல் பார்த்து …

 66 total views

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு கடிதம்.

கடித இலக்கியம் /

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு. வணக்கம் தல. மாநாடு படத்தை உடனே பார்க்க முடியாததற்கு மன்னிக்கவும்.படம் வெளியாகி சில நாட்கள் கழித்து தான் பார்க்க நேர்ந்த போதிலும், கூட்டம் நிறைந்து அரங்கம் முழுமையாக இருந்ததை பார்த்த போது உண்மையிலேயே உங்கள் முகம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. மற்றபடி இந்த கடிதம் மாநாடு பற்றி அல்ல. திரையரங்கில் இருந்து நான் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய குரல் பதிவில் சொன்னதுபோலவே உங்கள் பெயர் திரையில் மின்னிய உடன் …

 71 total views