மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நன்றிகளோடு விடைபெறுகிறேன்..

உலக புரட்சியாளர்கள்..., சுயம், திரை மொழி /

அன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்.. என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என் உணர்வுகளை கடந்த ஒரு வார காலமாக உங்களோடு பகிரும் வாய்ப்பை பெற்றது என் வாழ் நாளின் மிக பெருமைக்குரிய நாட்கள். ஒவ்வொரு நாளும் 500க்கும் மேலான பார்வையாளர்களை என் தளம் பெற்றது. மிகப் பெரிய வெளியில் எனக்கான கருத்துக்களை நான் பரப்புவதற்கான வாய்ப்பினை தமிழ் மணம் எனக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் மணத்தில் என் …

 1,309 total views

நம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்…

கட்டுரைகள்.. /

நம் நிகழ்காலத்துக்கு முழுமையான சமகாலத்தவராக ஒரு போதும் நாம் இருப்பதில்லை. மாறுவேடத்துடனேயே முன்னேறுகிறது வரலாறு .முந்தைய காட்சியின் முகமூடியை அணிந்த படியே மேடையில் தோன்றுகிறது அது –புரட்சிக்குள் புரட்சியில் ரெஜி டெப்ரே. என்றுமே சமூகம் சமநிலையாக இருந்ததில்லை என்பதில் இருந்து நம் சிந்தனையை துவக்குவோம். அரை நூற்றாண்டு காலமாக போராடிய நம் தேசிய இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்பட்ட ஈழ சகோதர சகோதரிகள் இன்று மிகப் பெரிய பின்னடைவில் இருக்கிறார்கள். சர்வ உரிமைகளுடன் வாழ ஒரு …

 975 total views

துரோகங்களை எரித்துப் போடும் விடுதலையின் ஊழித் தீ.

கட்டுரைகள்.. /

தமிழர்களின் தாயக நிலமான ஈழம் எதிரிகளின் கரங்களுக்கு இடமாறிய பிறகு கருத்து என்ற பெயரில் தத்துவங்களை உதிர்த்தும், ஆராய்ச்சி என்ற பெயரில் தன் இனத்தின் சுதந்திரத்திற்காக தன் உயிரையும் இழந்த போராளிகளின் பின்னடைவினை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மோசடி பேர்வழிகள் இணையத் தளங்களின் ஊடாக நிரம்பி வழிகிறார்கள். அ.மார்க்ஸ் என்ற உலக மானுட இனத்தின் மனித உரிமை காப்பாளர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அனுபவங்களை முற்காலத்தில் உலகப் பயணம் செய்து பயணக்கட்டுரைகள் எழுதுவாரே ..ஆம் அவரே தான் இதயம் …

 778 total views

பிரிவின் சாலை..

என் கவிதைகள்.. /

ஒற்றை இதழாய் உதிர்ந்து விட்டு போ. நீரிலிருந்து பிரியும் தூண்டில் முள்ளைப் போல என்னை சலனிக்காதே. காற்றாய் கடக்க முயலாதே. இரவின் புள்ளியில் இடமாறிய துயரம் போல சின்ன பிசிறலாய் உணர்த்தி விட்டு செல்லாதே. உந்தன் அசைவினை நான் உணராத கணத்தில் கடந்து விடு. உன் நிழலை என் மீது வரையாதே. எதற்கும் உன்னை பரிசோதித்துக் கொள் ஏதேனும் மிச்சம் இருந்தால் சுரண்டி எடுத்து விட்டுப் போ. அது நானாக இருந்தாலும் கூட. மிடறு விழுங்கி விரிந்த …

 862 total views

கும்பகோணம் பள்ளியின் தீ விபத்து – நேர்காணல்களோடு ..நேரடி சாட்சியமாய் ஒரு பகிர்வு.

கட்டுரைகள்.. /

கடந்த 2004 ஆம் வருடம் ஜீலை 16 ஆம் நாள் கும்பகோணம் தீ விபத்தில் பலியாகிப் போன 94 குழந்தைகளின் நினைவு நாள் வழக்கம் போல விமரிசையாக நிகழ்த்தப்படுகிறது. அனைத்துக் கட்சி ஊர்வலம், பள்ளி வாரியாக குழந்தைகளை அழைத்து வந்து அஞ்சலி நிகழ்வுகள்.. கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வந்து தீ விபத்து நிகழ்ந்த பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி எனஎப்போதுமே அமைதியாக இருக்கும் பள்ளி அமைந்துள்ள காசிராமன் தெரு இந்த ஒரு நாளில் மற்றும் …

 1,874 total views

போபால் பேரழிவு வழக்கு – அழிவினை மிஞ்சிய தலைகுனிவு.

கட்டுரைகள்.. /

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த உலக மகா பேரழிவுகளில் ஒன்றான விஷவாயு தாக்குதலில் சிக்கி தொழிலாளிகள், அப்பாவி பொதுமக்கள் என 20,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல் ,மனம் பாதிக்கப்பட்டு போனதும் உலக வல்லாதிக்க நாடுகளின் கைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும் இந்தியா சிக்கி எவ்வாறு சீரழிந்து கிடக்கிறது என்பதனை அப்பட்டமாக காட்டுகிறது. 26 ஆண்டுகளாய் நடந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விஷவாயு கக்கிய யூனியன் …

 849 total views

அலைக்கழிப்பின் இறுதி.

என் கவிதைகள்.. /

துடித்து வெடித்த நொடிக்குள் கிழித்த காற்றை அருந்திற்று அம்பு. அம்பின் துளிர்ப்பில் அதிரட்டும் இலக்கு. இருட்டின் பெருவெள்ளத்தில் நகரும் சுடராய் அலைந்தது இலக்கு. எய்யப்பட்ட அம்போடு பயணம் போன பார்வையும் சற்று முன்னதாகவே சென்று குத்திற்று இலக்கில். இலக்கின் அலைக் கழிப்பில் நிதர்சனத்தின் ஆட்டம். அம்பின் நுனியில் நம்பிக்கையின் சுமை. விசுவாசத்தின் பெருக்கில் கரைந்தது திசைகளின் சுழற்சி. நகராமல் ..விலகாமல் நடு உச்சத்தில் பெருகிற்று வெப்பம். நொடியை பிரித்து கசக்கி முகர்ந்தது வெறியேற்றிய வேகம். மூர்க்கத்தின் துளியில் …

 824 total views

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்…

கடித இலக்கியம் /

திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே… கருணாநிதியின் …

 1,351 total views

சிவப்பில் சிலிர்க்கும் கடல்..

என் கவிதைகள்.. /

உதிரம் உதிர கரிப்பினில் கடல் நீர். நீலத்தில் உறைந்த கடல் ரத்தத்தில் சிலிர்க்கிறது. அனாதையாய் கிடக்கும் மீன் வலைக்குள் மீன்கள் சுற்றி திரிகின்றன.. நடுங்கும் கடலில் நகராமல் நிற்கிற படகில் கனவோடு திறந்த கண்கள். கழுகின் வெறித்த பார்வைக்குள் சிக்குகிறது உடலம் மிதக்கும் படகின் நுனி. உறக்கத்தின் ஒரு புள்ளியில் திடுக்கிட்டு வெளுக்கிறது வானம். வீறீட்ட வானத்தில் சிவப்பாய் பரவுகிறது தமிழனின் ரத்தம். குடிசைக்குள் குழந்தை அழுகிறது உணராத சோகத்தின் அறியாத பசியாய். வரப் போகும் அரிசிக்காக …

 884 total views

மைக்கேல் ஜாக்சன் – காற்றில் உலவும் பேரிசை

கட்டுரைகள்.. /

பன்முகத் தன்மை கொண்ட பல வகை நாட்டுப் புற இசை வடிவங்களையும் ,பறை போன்ற உணர்வினை உசுப்பி உள்ளுக்குள் எழுப்பிற இசைக் கருவிகளையும் தன் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவே அடைந்த தமிழர்களுக்கு மைக்கேல் ஜாக்சன் போன்ற மேனாட்டு இசை கலைஞர்களின் இசை வடிவங்கள் நெருக்கமில்லாமல் போனது வியப்பேதும் இல்லை. ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மானின் இசை நம்மிடையே உலவினாலும் இன்றளவும் 80 களின் இளையராஜா பாடல்கள் வெற்றிக்கரமாக அனைவராலும் உணர்வு மேலீட்டு கேட்க இயலுகிறது என்றால் …

 791 total views