மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

உலகமெங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை..

கட்டுரைகள்.. /

🌑 “சங்கத் தமிழ் ஓசை” என்ற பெயரில் அழைப்பிதழ் பார்த்தவுடன் உண்மையில் அச்சமாகத்தான் இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுட்பமான இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரையப்பட்ட இலக்கிய பாடல்களான சங்க பாடல்களுக்கு சமகாலத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எந்த வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிற கேள்வியும்,சாதாரண வாசகர்களால் வெற்று வாசிப்பின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சங்க பாடல்களை எப்படிப்பட்ட இசை வடிவத்தில் பொருத்தி கேட்போரை ஈர்க்க செய்யப் போகிறார்கள் என்கிற கேள்வியும் …

 228 total views,  1 views today

திசை அறியும் திசைக்காட்டி.

அரசியல் /

சமகால தமிழக அரசியல் வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஆளுமையாக அண்ணன் சீமான் உருவாகி இருக்கிற உயரம் அவரே எதிர்பார்க்காத ஒன்று‌.அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அல்லது நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட நிகழ்வு அல்ல. காலத்தின் கருவியாக தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு தனி மனிதனின் அசாத்திய மனப்பாங்கு. தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்து யாரும் தொட தயங்குகிற ,பிற தலைவர்கள் அதுவரை தொட்டிராத வரலாற்றின் வீதியில் இறுக மூடப்பட்டு துருவேறிக் கிடக்கின்ற பல சர்ச்சைக் …

 28 total views

பொன்னியின் செல்வன் பார்ப்போர் கவனத்திற்கு…

திரை மொழி /

அமரர் கல்கி எழுதி ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து “புல்லரிப்போடு” இருக்கின்ற அனைவருக்கும்… 1. முதலில் பொன்னியின் செல்வன் என்பது கற்பனை கதை. வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட புனைவு. இந்தக் கதையையே வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டாம் . வரலாறு இந்த புனைவுகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்டமானது. 2. அமரர் கல்கி எழுதியபோதே வரலாற்று கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த கரிகாலன் …

 33 total views,  1 views today

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

என் கவிதைகள்.., கவிதைகள், சுயம் /

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள். “வேண்டாம். புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை. நினைவின் சுழல் கொண்டவை. கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை. மீளவே முடியாத ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை. வேண்டாம்..” …

 33 total views

எப்போதும் என் அம்மா.

சுயம் /

இன்று கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் என் அம்மா கலந்து கொண்டதை பற்றி என் தம்பி மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தான். இந்த காட்சி எனக்கு புதிதல்ல. சிறுவயதில் இருந்து எனக்கு தோளுக்கு தோளாக மட்டுமல்ல , உயிராக இருப்பது எனது அம்மா தான். நோயால் பாதிக்கப்பட்ட என் பால்ய காலத்தில் என் அம்மா மட்டும்தான் எனது பால்யகால தோழி. காலில் கட்டு போட்டு அமர்ந்திருக்கும் என்னோடு என் அம்மா …

 33 total views,  1 views today

நியாயத்தின் கதை.

என் கவிதைகள்.., கவிதைகள் /

நியாயம் என்ற வினாவின் ஓசை நடுநிசியில் மூடப்படாத குடிநீர் பைப்பு போல சரித்திரத்தின் வீதிகளிலே சொட்டி கொண்டே இருக்கிறது. எது நியாயம் என்பதற்கு அவரவருக்கு ஒரு தர்க்கம். ஆளாளுக்கு ஒரு கதை. வரையறையற்ற சுதந்திரத்துடன் அவரவர்‌ விழிகளில் படுகிற காட்சியாய், இலக்கற்ற ஓவியமாய், அலைந்துக் கொண்டே இருக்கும் சீரற்ற சிதறலாய் நியாயம். எந்த திசையில் நியாயம் உறைகிறது என்று எவருக்குமே தெரியாது. ஏனெனில் நியாயம் திசைகளை அழித்து அவரவருக்கு ஒரு திசையை பிரசவிக்கிறது. நியாயத்தை பற்றி எழுதி …

 28 total views

இதுதான் என் வாழ்வு.

என் கவிதைகள்.. /

அப்போது நான் அப்படி செய்திருக்க கூடாது என்கிற ஒன்றே ஒன்றை வாழ்வின் பல சமயங்களில் நீக்கி விட்டு பார்த்தால்.. எதுவுமே இல்லை வாழ்வில்.  34 total views

 34 total views

தேன் மொழி

என் கவிதைகள்.. /

நிறைவேறி விட்ட உறவில் தேன்மொழி மரணம் அடைகிறாள். நிறைவேறாத ஏக்கத்தில் தான் தேன்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறாள். உண்மையில் தேன்மொழியை தேடி அலைபவர்கள் காணும் போது தொலைத்து விடுகிறார்கள். சொல்லப்போனால் தொலைப்பதற்காகவே கண்டெடுக்கப்படுகிறவள் தான் தேன்மொழி. மீண்டும் மீண்டும் அலைகள் கரைகளை நோக்கி வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் செந்நிற அந்தி ஒன்றில் கைநழுவிப்போன அந்த ஒரு அலை திரும்பி வருவதே இல்லை. நினைவின் உயிர் கால் நனைத்து ஒருபோதும் திரும்பி வராமல் போன அந்த அலை …

 27 total views

சீமான் எனும் சொல்வல்லான்.

அரசியல் /

அது ஒரு பல்கலைக்கழக வகுப்பு அல்ல. ஆனால் வகுப்பு எடுப்பவர் குறைந்தது 30க்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோள்காட்டி பேசுகிறார். கனிம வள கொள்ளை நீர் மேலாண்மை, மத்திய மாநில உறவுகள், தமிழரின் தொன்மை, திருக்குறள், பாரதியார் கவிதை, பாரதிதாசன், ஜேசி குமரப்பா எழுதிய தாய்மை பொருளாதாரம் உள்ளிட்ட நூல்கள் என பலவற்றை எடுத்து உரிய இடத்தில் பொருத்தி ஒவ்வொரு நொடியும் தகவல்களை அள்ளித் தரும் இடமாக அந்த அரங்கை மாற்றுகிறார். சமகாலத்தில் இத்தனை நூல்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் …

 184 total views