மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

காதலின் பெருங்குளம்..

கவிதைகள் /

      https://youtu.be/rMAOPsp5EB0 நினைவுகள் பாசியாய் படர்ந்திருக்கிற அந்த விழிகளில்தான்.. தவழும் கனவலைகளில் தவிப்போடு நான் நீந்துகிறேன்.. காற்றின் சிறகுகளோடு கணப்பொழுதுகளில் கைக் கோர்த்து நடம் புரிகிற அந்த காரிருள் கூந்தல் இழைகளில்தான் நான் விழித்திருக்கிறேன். அசையா நொடிகளில் கசிந்துருகி.. இமையோரம் ததும்பி நதியென பின் பெருக்கெடும் கண்ணீர்த் துளிகள் வழிகிற அந்த செம்மை கன்னக் கதுப்புகளில் தான் நான் உயிர்த்தெழுகிறேன்.. மோகத்திரள் மழை மேகமாய் கருக்கிற முடிவிலி இரவில் .. நிகழாத பெளர்ணமிக்காக காத்திருக்கும் …

 1,433 total views

நேசிப்பின் நதிக்கரை..

சுயம் /

வருஷம் 16 திரைப்படத்தில்..முதல் காட்சி. கார்த்திக் சிறைக்கு சென்று 16 வருடங்கள் கழித்து திரும்பி வருவார். அந்த 16 வருடத்தில்..அவர் குடும்பத்தில் இருந்த பலரும் இறந்து படமாக உறைந்து இருப்பார்கள். காலச் சக்கரத்தின் இரக்கமற்ற வேகத்தில் கூழாங்கற்களாய் மானுட வாழ்வு சிக்கி மண்ணோடு மண்ணாய் மக்குகின்ற உண்மையை தான்..அந்த செல்லூயிட் காவியமும் விவரிக்க முயலும். அப்படி தான் என் குடும்பமும் சிறுக சிறுக வருஷம் 16 காட்சியை பிரதிபலிக்கிறதோ என்கிற துயர் மிக்க பிரமையோடு இந்த தனிமை …

 823 total views

அந்தந்த நேரத்து நியாயங்கள்..

கவிதைகள் /

    அந்த அழகான பலிபீடம் அந்த ஒற்றை வெள்ளாட்டின் முன் கருணை விழிகளோடு வீற்றிருந்தது.. குளிர்மையும் வழுவழுப்பும் நிரம்பிய அதன் வளைவுகளில் வெள்ளாடு லயித்திருந்தது.. அழகானது இது.. தலை பொருந்துவது போன்ற வளைவு.. சற்றே சாயலாம். கொஞ்சம் உறங்கலாம்.. வெள்ளாட்டின் விழிகளில் வண்ணக்கனவுகள் மிளிர்ந்தன.. கத்தியின் கனம் தெரிவு செய்ய வெள்ளாட்டின் கழுத்து மிருதுவான வருடல்களால் ஆராயப்பட்டது.. தனித்தே பிறந்த,திரிந்த வெள்ளாடு தன் மீது சொரியும் வருடல்களால் கசிந்தது.. எவ்வளவு கதகதப்பான கரங்கள்.. ஆதரவாய்..ஆதுரமாய்.. நீ …

 1,410 total views,  1 views today

ஞாநி..சில நினைவுகள்.

இலக்கியம் /

வாழ்வின் சூட்சமக் கோடுகள் விசித்திரமானவை. யாராலும் வகைப்படுத்த இயலாத மர்மச் சுழிகளால் வாழ்வெனும் நதி நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறது. எவரோடு எவர் பிணைக்கப்படுவர் …பிரிக்கப்படுவர் என்று தெரியாத வாழ்வின் பொல்லாத பகடை ஆட்டத்தில் தான் நானும்,அவரும் அறிமுகமானோம். 2006-07 காலக்கட்டம். அப்போது அவர் புகழ்ப்பெற்ற எழுத்தாளர். அவரது நவீன நாடகங்கள் மூலமாகவும்,எழுத்துக்கள் மூலமாகவும் தமிழுலகம் தெரிந்த ஆளுமையாக உருவான அக்காலக் கட்டத்தில் தான் அவர் ஆனந்த விகடனில் ஓ பக்கங்கள் என்கிற தொடரை எழுதத் தொடங்கினார். …

 988 total views,  1 views today

என் வானின் பகலவன்..

கடித இலக்கியம் /

    அன்புள்ள பகல்.. அப்பா எழுதுகிறேன். இந்நொடியில் உன்னை நெஞ்சார்ந்து அணைத்துக்கொள்கிறேன். எப்போதும் மினுமினுக்கும் உன் கண்களில் தான் என்னை தேட வேண்டி இருக்கிறது. எனக்காக நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாய். சகித்துக் கொள்வாய். சில சமயங்களில் என்னையும் கூட.. பல சமயங்களில் எங்கோ அலைந்து விட்டு, கூட்டம் முடித்து விட்டு வீடு திரும்புகையில்.. நீ அயர்ந்து தூங்கி இருப்பாய். வெளிச்சம் பட்டு உன் விழிகள் மெலிதாய் திறந்து பார்க்கும். எனை கண்டதும் சட்டென பூத்து …

 695 total views

என் இளமையின் பொன்னிறத் துகள்..

சுயம் /

      அவன் என் இளமையின் பொன்னிறத் துகள். என் விழிகளில் பிணைந்திருக்கிற.. வாஞ்சைமிகு வசீகரம். என் கவிதை ஏடுகளில் நிறைந்திருக்கிற எனது அகம்.. பல சமயங்களில் அவனே நானாக..நானே அவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிற விசித்திர வாழ்வின் விந்தைக்கோடுகள் நாங்கள் இருவரும்.. இதில் யார் குரு..யார் சீடன்..?? என்ற குழப்பமில்லை எமக்கு. தானாகி போனதொரு வாழ்வில் அன்பள்ள சிவக்கிறது கிழக்கு. தோள் சேர்த்து.. கை பிணைத்து.. காலம் ஒன்றை கண் அசைவுகளால்.. வார்த்தை வளைவுகளால்.. கட்டி …

 633 total views

நித்திய நிலவொன்றின் சத்திய வார்த்தைகள்..

கவிதைகள் /

  சொற்களின் ஊடே ஒளிந்திருக்கும் முட்கள் நட்சத்திரங்களைப் போல மின்னி.. பேரன்பின் கதிர்களை மறைக்கின்றனவா என்றெல்லாம் நான் சிந்திப்பதில்லை. இன்னும் கூட வார்த்தைப் பின்னல்களால் உருவேறிய அந்த சாட்டை ஆன்ம உதிரத்தின் சுவை பருகுகிறது என்று நான் கலங்குவதில்லை.. ஏனெனில்.. கொடுங்காயத்தின் வலி மறைத்துக் கூட என் உணர்வுகளின் நிலா வெளிச்சம்.. உன் இருட்பாதையில் உன் துணையாய் நகரும் என்பதை நான் அறிவேன்.. உரையாடல்களற்ற பொழுதொன்று கால நதியில் சருகென மிதக்கும் அந்த நொடியில்.. உன் விழிகள் …

 1,043 total views

வரிசையில் நில்லுங்கள்.

அரசியல் /

  அந்த தத்தளிக்கும் கைகளை விட்டுவிடுங்கள்.. இறுதி நம்பிக்கை தீர்ந்த உச்சக் குரலோடு முழ்கித் தொலைக்கட்டும். பொங்கும் கடலலைகளை விழி அசையா வெறித்த பார்வையோடு பார்த்திருக்கும் அவர்களை விரைவாக கடந்துப் போங்கள்.. காத்திருந்து கடற்கரை மணலோடு மணலாய் மறையட்டும்.. ஒதுங்கும் உடல்களை ஏறெடுத்தும் பார்க்காதீர்கள். குண்டடி காயங்களோடு கரை சேர்ந்தவைகளையே எளிதாய் கடந்தோம். அலையோடு அலையாக அழுகி மக்கட்டும்.. ஆர்ப்பரிக்கும் அந்த கோப முழக்கங்களை அலட்சியப்படுத்துங்கள்… அடுத்த தேர்தலில் ஐநூறு ரூபாய் சேர்த்துக் கொடுத்து விடலாம்.. சுழன்றடித்த …

 936 total views,  1 views today

கடலானவனின் கதை..

கவிதைகள் /

    அந்த புன்னகை கடல். யாரும் கறைப் படுத்தி விட முடியாது. அந்தப் பார்வை கடவுளின் சாயலுடையது. யாரும் களங்கப் படுத்தி விட முடியாது. அந்த வீரம் வானம். யாரும் அளந்து விட முடியாது. அந்த அறம் மழை. யாரும் மலராமல் இருக்க முடியாது. அந்த நேர்மை சுடர் விண்மீன். யாரும் கவனிக்காமல் கடக்க முடியாது. அந்த தியாகம் பெருமழை அருவி. யாரும் நனையாமல் தப்ப முடியாது. அந்த மொழி வீசும் மென்சாறல். யாரும் சிலிர்க்காமல் …

 776 total views

நான் ஆகாயம் போல் வாழ்பவன்..

கட்டுரைகள்.. /

  எவரிடமும் யாசகம் பெறுவதல்ல அறிவு. சிலர் நினைப்பது போல தந்திரத்திலோ..குறுக்கு வழியிலோ பெற்று விடுதல்ல தகுதி. உலகின் விழிகள் உறங்கும் போது மூடா இமைகளை கொண்டு புத்தகங்களுக்குள் தன்னைத் தொலைக்கிற பயிற்சி.. நீண்ட பயணங்கள்.. ஒவ்வொன்றையும் பதிவு செய்ய சிறு வயது முதல் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி பார்த்து… படைப்பில் கரைகிற உளவியல்.. சிறு வயது முதல் உடன் பயணிக்கிற உடல் குறைபாடுகளை வைத்துக் கொண்டு வெல்ல துடிக்கிற உத்வேகம். உளராமல்,,தளராமல் வார்த்தைகளை விரயமாக்குகிற எவற்றிலிருந்தும் …

 1,284 total views