மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

மரணம்- தீராத் துயர் நீங்க சிறுபுன்னகை..

திரை மொழி /

    எப்போதும் என் இரவுகளில் தனிமை தகர வாளியின் மீது சொட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகள் போல அமைதியற்றது. விரிந்த வானில் தனித்து பறக்கும் ஒரு பறவை போல ஆழ் தனிமையை என் இரவுகள் போற்றுகின்றன. கண் மூடி அமைதிக் கொண்டிருக்கிற இமைகளுக்குள் அமர்ந்து தனிமை வயலின் வாசிப்பதை என் இரவுகள் உணர்ந்திருக்கின்றன. ஆதி வனத்தின் விடியற்காலைப் பொழுதைப் போல களங்கமற்ற தனிமையைத் தான் மரணமும், பிறப்பும் சதா நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. ஒரு சிறு புன்னகை, இடது …

 1,372 total views

சொல்லில் மறைந்த செய்திகள் ..

கவிதைகள் /

    வெளிச்சப்புள்ளிகள் முளைக்காத காட்டில் கண்களிரண்டையும் பிடுங்கி யாருக்கும் தெரியாமல் புதைத்து விடு.. கால்கள் இரண்டையும் கட்டி. கைகள் இரண்டையும் வெட்டி.. ஒலி படா வண்ணம் செவிகளை அறுத்து புதை.. மறக்காமல் என் ஆணுறுப்பினை வெட்டி ஓநாய்களுக்கு மத்தியில் வீசியெறி.. ஆழமாக புதை.. இன்னும் தோண்டு.. தப்பித்தவறி முளைத்து விட கூடாது என்ற கவனம் உன் அறிவினை பதட்டத்திலேயே வைக்கட்டும்.. ஆழ புதைத்து.. உன் கால்களால் மண்ணை மிதித்து உறுதிச்செய்து கொள்.. ஆழ புதைத்து விட்டு …

 1,373 total views

இப்போதைய நிலை குறித்த சில தகவல்கள்…

கவிதைகள் /

      தழும்பாக மிஞ்சுவதும் வலியாக எஞ்சுவதுமாக கனன்று எரியும் காயம் நீ… பயப்படாதே.. ஒரு போதும் என் காயங்கள் ஆறுவதில்லை.. நானும் ஆற்ற நினைப்பதில்லை.. உன்னால் நகராத ஆற்றின் சுழி மையத்தில் விசையற்றும் திசையற்றும் ஆழ்ந்திருக்கின்றேன்.. அந்த மோனநிலையில் நானாகவே உணர்ந்தது எதுவும் உன்னால் இல்லை எனவும்… அது என்னால் தான் எனவும்.. சொல்லப்போனால் நீ கூட நானாக வரைந்துக் கொண்ட கனவு ஓவியம் எனவும்… …………………. இதை பார்த்து உன்னால் மெலிதாக புன்னகைக்கூட …

 1,470 total views

பனித்துளிகளின் வியாபாரி

இலக்கியம் /

      நீல ஆகாயத்தின் கீழ் பச்சைப் போர்வை என விரிந்திருந்த பசும் புற்களின் நுனியில் சேகரித்த பனித்துளிகளை விற்பவன் நேற்று வந்திருந்தான். கண்ணாடிக்குடுவையினுள் மின்னிக் கொண்டிருந்த அந்த பனித்துளிகள் இதுவரை பார்த்தறியாத தூய்மையால் ஏரிப்பரப்பில் படர்ந்திருந்த நிலவொளியை ஒத்திருந்தன. மெல்ல நெருங்கி பார்க்கும் போது அந்த பனிக்குமிழியை பார்ப்பவரின் பால்ய முகம் தெரிந்து பரவசப்படுத்தியது. பனித்துளிகளை சுமக்கும் அந்த கண்ணாடிக்குடுவைவினை அப்படியே ஏந்தி முகத்தில் வைத்து மகிழ்ந்தவர் கன்னத்தில் முதல் முத்தம் தந்த இதழ்களின் …

 1,760 total views

….யார்..யார்..

கட்டுரைகள்.. /

    வெம்மை பூக்கும் இப்பாலையில்.. தனிமை யார்.. அனலேறிய நினைவு யார்… துளித்துளியாய் வடியும் இந்த இரவில்.. இருள் யார்.. குளிர் யார்.. அலை அலையாய் தழுவி எழும் இக் கடலில் படகு யார்.. தத்தளிப்பு யார்.. நிலவொளி சிலையாய் உறைந்திருக்கும் இந்தக் குளத்தில் நீர் யார்.. மெளனம் யார்.. வானமே வழிந்து ஓடுவதாய் உணர வைக்கும் இந்த அருவியில் ஓசை யார்.. பாய்ச்சல் யார்.. மேகமாய் திரண்டு வந்து பொழியும் மழை மாலையில்.. தேநீர் …

 1,547 total views

.சொல்ல முடியாத கதை.

கவிதைகள் /

    என்னிடம் சொல்ல இதை தவிர வேறு ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்வி ஏதோ ஒரு புள்ளியில் தொக்கி நிற்பதாக உனக்கு என்றேனும் தோன்றி இருக்கிறதா? வலிந்து முகத்தில் ஒரு புன்னகையையும்… உணர்ச்சியற்ற உரையாடல்களையும் நிகழ்த்தி நிகழ்த்தி கையறு நிலைப்பட்ட பொம்மலாட்டமாய் உறைந்துப் போன நாளில் தான்.. விடையற்ற வினாக்களுக்குள் தொலைந்து விட துடிக்கிறாய் . நிகழ்காலம் இறக்கத்துடிக்கிற மெழகுத்திரியாய் மின்னி நடுங்க.. இறந்த காலமோ உருகி வழிகிறது.. நினைவுகளாய். நிலா உரசும் மலை முகட்டு …

 1,303 total views

***** முத்தப் புராணம்***

கவிதைகள் /

      ஆழ் கடலின் வேரில் ரகசியமாய் புதைத்து வைத்திருந்த முத்தம் ஒன்று ஈரம் அடர்ந்து ஒரு நள்ளிரவிற்காக காத்திருந்தது.. வெம்மைப் படர்ந்த கனவின் மயக்கத்தினில் விழிகள் சொக்கி ஆழ்ந்திருந்த நேற்றிரவில் தான் பசும் உதடுச் சாயம் பூசி கழுத்தை கவ்வியது அந்த முத்தம். மயிர்க்கால்களில் அனலை மூட்டும் தீக்கங்கினை சுமந்த அந்த தனித்துவ முத்தத்தினை உறக்கம் தொலைத்த நினைவுகளின் கண்கள் சரியாகவே அடையாளம் கண்டன… மாலை நேர மழைச்சாரலின் வாசம் துளிர்த்திருந்த அந்த உதடுகளை.. …

 1,248 total views

என் வாழ்க்கைக் கதை..

கவிதைகள் /

  பிரிவின் குருதியினால் வண்ணம் மாறுகிற முடிவற்ற துயரத்தின் மூர்க்க ஓவியத்தை.. …… எல்லையற்ற ஆற்றாமைத் துளிகளால்.. வேறொரு கவிதையாய்.. வேதனை கசியும் வயலின் இசை துணுக்காய்.. எழுதுவதை தான்.. ……. என் வாழ்க்கைக் கதையாக விரிகிற.. இத்திரைப்படத்தை கைத்தட்டல்களோடு பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.  1,341 total views,  1 views today

 1,341 total views,  1 views today

தோளில் சாய்ந்த கதைகள்..

கவிதைகள் /

    அந்த வேனிற்கால தேநீர் பொழுதில்.. கடற்கரை காற்றோடு உன் தோளில் சாய பொன்மாலை பொழுதொன்று வேண்டும் என்கிறாய்… என் தோளில் உன் முகம் புதையும் நொடிகள் எல்லாமே என் பொன்மாலைப் பொழுதுகள் தான் என்றேன் நான். சட்டென நிமிர்ந்து விழிகள் மிளிர.. சிவந்த உன் கன்னக் கதுப்புகளில் இருந்து சூரியன் மஞ்சள் அள்ளி பூசிக் கொண்ட அப் பொழுதே பொன் மாலை பொழுதென்றும்.. சின்ன சிரிப்போடு நீ தலை குனிந்த போது.. உன் பாதங்களை …

 1,222 total views

இறுதிச்சொல்லின் வரலாறு..

கவிதைகள் /

  இதுதான் இறுதிச் சொல்.. அந்த சொல் யூதாசின் காட்டிக் கொடுப்புப் போல ஒரு சாபச்சொல்லாகவோ.. சீசர் புரூட்டசை நோக்கி வீசிய வலிச்சொல்லாகவோ.. இருக்கட்டும்.. ஆனாலும் உன்னோடு இதுதான் இறுதிச் சொல். முடிந்தது எல்லாம் என சொல்லின் முடிவில் இடப்படும் முற்றுப்புள்ளியில் எனது அனைத்து விதமான தர்க்கங்களையும் குவித்து அழுத்தி பொருத்தினேன்.. அடுத்த சொல் நீளாத அந்த உரையாடல் இரவு நேர கடற்கரையில் தனித்திருந்த.. காலடித்தடம் போல மெளனித்திருந்தது. இனி எதுவும் இல்லை என்பதில் தான் எல்லாமும் …

 1,272 total views,  1 views today