மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

அடர்பச்சை- வன்முறையின் அழகியல்

இலக்கியம் /

—————————————————————– “நான் காட்டில் வாழ்ந்திராத காட்டு விலங்கு. என் பயத்தை மிஞ்சியும் கூட உன் இருப்பிற்குள் வந்தேன். நீ எவ்வளவு நல்லவளாக இருந்தாய்.. நான் உன் காலடியில் கிடந்து, உன் கைகளுக்குள் என் முகத்தை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெருமிதப் பட்டேன். சுதந்திரமாய் சக்திவாய்ந்து இயல்பாய் இருந்தேன். ஆனால் இது எல்லாவற்றுக்கும் அடியில் நான் ஒரு விலங்காகவே இருந்தேன். ஏனெனில் நான் காட்டுக்கு சொந்தமானவன்.” பிரான்ஸ் காப்கா அவரது பெண் தோழி மெலினாவுக்கு எழுதிய கடிதம் …

 807 total views

அழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..

அரசியல் /

      சுய சாதியை குறித்து எந்தவித பெருமிதமும் கொள்ளாமல் அதை மிக இழிவான அடையாளமாக கருதுவதுதான் உண்மையான சாதிமறுப்பு. மேலும் சாதியக் கட்டமைப்பினால் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற உனது சக மனிதனை கை தூக்கி விடுவது போல பிறக்கிற எந்த ஒரு இலக்கியமும், திரைப்படமும் கொண்டாடத்தக்கவையே.. பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு நான் எல்லாம் தலைகுனிந்து இருக்கிறேன். எங்களது தாய்வழி பூர்வீக கிராமத்தில் எனது குடும்பத்து முன்னோர்கள் இந்த சாதி கட்டமைப்பினால் சக மனிதர்களை அடிமையாக …

 557 total views

வாழ்வின் பொருள் யாதெனில்..

இலக்கியம் /

  வாழ்வின் மீதான சுவை மிக விசித்திரமானது. வாழ்வின் எந்த ஒரு கணத்திலும் அதன் சுவை தீர்ந்து போகலாம். சலிப்புற்ற அந்த கணத்தில் எதற்காக பிறந்தோம்‌ எதற்காக வாழ்ந்தோம் என்றெல்லாம் உள்ளுக்குள் கேள்விகள் எழலாம். பல தருணங்களில் நான் அவ்வாறு தான் உழன்று இருக்கிறேன். உறக்கமற்ற இரவுகளில் ஏதேனும் ஆழ்மனதில் நாம் எப்போதோ பெற்றுக்கொண்ட ஒரு முள் மெல்ல அசைந்து கீறத் தொடங்க.. கொடும் நரகம் என இரவுகள் நீளும். ஏன் இந்த கொடும் வாழ்க்கை.. என்ற …

 562 total views,  1 views today

வானவில் போராளிகள்..

என் கவிதைகள்.., கவிதைகள் /

—————————————- அதோ அவர்கள் நடந்துப் போகிறார்கள்.. உயிர் ஆழத்தில் உதிரக்கனவாய் உறைந்திருக்கும் ஒரு தேசத்தின் பாடலை உரத்தக் குரலில் பாடியவாறு அவர்கள் நடந்துப் போகிறார்கள்.. முன்னோர் மூச்சடக்கி புதைந்த மண்ணில் இருந்து மட்காமல் துளிர்த்திருக்கும் சேர்ந்திசைப் பாடல் அது.. காரிருள் படர்ந்து காலங்காலமாய் நிலைத்த பனை நின்ற படி எரிந்த கந்தக நெடி கருப்பையில் கருவுற்ற பாடல் அது.. பசும் ஈரம் போர்த்திய ஆதி வனத்தின் முதிர் கொடி ஒன்று முறிக்கப்பட்டப்போது முதிர்ந்தெழுந்த பாடல் அது.. மூதாதை …

 606 total views

பயணங்கள் முடிவதில்லை..

அரசியல் /

————————————————– ஒரு பொன் அந்திமாலையில் கரை ஓரத்தில் நின்றுகொண்டு அடர்ந்து படர்ந்து ஓடும் நதியைப் பார்ப்பதுபோல.. நான் இந்த வாழ்வை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எதன் பொருட்டும் அந்த நதி நிற்பதில்லை. யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எதனாலும் திசை மாறுவதில்லை. தன் கடன் பயணிப்பதே என்பதுபோல அது ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த முடிவிலியான பயணத்தில் சட்டென நிகழ்ந்துவிடுகின்றன நம்மோடு உயிரென நின்றவர்களின் இழப்புக்கள். அப்படித்தான் சமீபகாலமாக என் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களை நான் இழந்து விட்டு எதனாலும் கட்டுப்படாத வாழ்வின் …

 517 total views