பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: அக்டோபர் 2019

 அசுரன்- இலக்கியமான திரைமொழி


இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் லூமியர் சகோதரர்களால் கண்டறியப்பட்ட திரைப்படம் என்கின்ற அறிவியல் கண்டுபிடிப்பு வெகுவிரைவிலேயே தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது. 1931ல் தமிழில் முதல் பேசும் திரைப் படமான காளிதாஸ் வெளியானது. ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் திரை உலகத்திற்கும் , தமிழ் இலக்கிய உலகிற்கும் மிக நெருங்கிய தொடர்பு தொடக்க காலத்திலிருந்தே உண்டு. ஆனந்த விகடனின் ஆசிரியரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான எஸ் எஸ் வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற நாவல் 1936இல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அனேகமாக முதன்முதலாக ஒரு நாவல் திரைப்படமாக தயாரிக்கப்பட்ட வரலாறு சதி லீலாவதியில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம்.

அதன் பிறகு தமிழிலக்கிய எழுத்தாளர்களின் பல்வேறு கதைகள் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய திகம்பர சாமியார், கும்பகோணம் வக்கீல், உள்ளிட்ட கதைகளும், வை மு கோதைநாயகி அம்மாள் எழுதிய தியாகக் கொடி ,அனாதைப் பெண் உள்ளிட்ட கதைகளும் தொடக்க காலத்தில் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன ‌.

1952இல் ஆனந்த விகடனில் லட்சுமி என்ற புனை பெயரில் டாக்டர் திரிபுரசுந்தரி எழுதிய காஞ்சனையின் கனவு என்கின்ற தொடர்கதை காஞ்சனா என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதை லட்சுமி எழுதிய இருவர் உள்ளம், பெண்மனம் ஆகிய கதைகளும் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

1960 இல் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதிய பாவை விளக்கு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அகிலன் எழுதிய மற்றொரு நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரில் உச்ச நடிகர் எம் ஜி ஆர் நடித்து திரைப்படம் வெளிவந்தது.

திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட தொடங்கியவுடன் திரைப்படத் துறைக்கான முக்கிய கச்சாப் பொருளான கதைக்கான அவசியம் அதிகரித்தது. தமிழில் சிறுகதை வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய புதுமைப்பித்தன் திரைப்படத் துறையில் பணியாற்றி இருக்கிறார். 1946 வெளிவந்த அவ்வையார் திரைப்படத்திற்கு புதுமைப்பித்தன் வசனம் எழுதியுள்ளார். ராஜமுக்தி என்ற திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதும் காலத்தில்தான் புதுமைப்பித்தன் காச நோய் முற்றி இறந்து விடுகிறார். ராஜாஜி எழுதிய திக்கற்ற பார்வதி என்கின்ற கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி அடைந்தது. கல்கி எழுதிய பார்த்திபன் கனவு தியாகபூமி கள்வனின் காதலி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் ராவ்பகதூர் சிங்காரம், விளையாட்டுப்பிள்ளை, என தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் பலரின் கதைகளும் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

திராவிட இயக்க வளர்ச்சி தமிழ் திரைப்பட உலகத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகும். திராவிட இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவர்களான அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோர் தனது எழுத்துக்கள் மூலமாக திரைப்படத்துறையில் ஆதிக்கம் செலுத்தி அதன் மூலமாக அரசியல் செல்வாக்கையும் வளர்த்துக் கொண்டார்கள். அறிஞர் அண்ணா எழுதிய ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி ,வண்டிக்காரன் மகன், நல்லவன் வாழ்வான் உள்ளிட்ட பல கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்பட்டன. அதேபோல கலைஞர் கருணாநிதி எழுதிய வெள்ளிக்கிழமை, அணையா விளக்கு, பொன்னர் சங்கர் உள்ளிட்ட கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

எழுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட இடதுசாரிகளின் எழுச்சி திரைப்படத் துறையையும் விட்டுவைக்கவில்லை. பொதுவுடமை சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டு எழுதி வந்த ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), , சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), உன்னைப்போல் ஒருவன்(1965), யாருக்காக அழுதான்(1966) போன்ற நாவல்கள் திரைப்படங்கள் ஆயின.
புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலை இயக்குனர் மகேந்திரன் உதிரிப்பூக்கள் என்ற புகழ்பெற்ற திரைப்படமாக உருவாக்கினார். அதே மகேந்திரன் தான் பொன்னீலன் எழுதிய கதையை பூட்டாத பூட்டுக்கள் என்ற திரைப்படமாக உருவாக்கினார். எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நண்டு என்ற கதையும் இயக்குனர் மகேந்திரனால் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. மேலும் சிவசங்கரி எழுதிய 47 நாட்கள், ஒரு மனிதனின் கதை, தியாகு உள்ளிட்ட பல கதைகள் திரைப்படங்களாகின. நீல பத்மநாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விக்ரம்,ஒரே ரத்தம் (நாடோடித்தென்றல்), பிரியா, பிரிவோம் சந்திப்போம், இது எப்படி இருக்கு போன்ற பல கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

மிகச்சிறந்த தமிழின் நவீன இலக்கிய உலகின் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளையும் வசனங்களையும் மூலமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ச தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய்.. என்ற கதையை மூலமாக வைத்து வசந்தபாலன் வெயில் என்ற திரைப்படத்தையும்.. ச.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் என்ற நாவலில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து
அரவான் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாகும் உருவாகும் போதாமைகள் மிக அதிகம்.எழுத்து மொழி வடிவத்திலான இலக்கிய வகைமையை காட்சி மொழியில் பொருத்தும் போது நிகழும் அபாயங்கள் மிக அதிகம். அசுரனின் திரைக்கதை அந்த சவாலை மிக எளிதாக எதிர்கொள்கிறது.

தமிழ் இலக்கிய உலகில் எளிய மனிதர்களின் வாதைகளை, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் அபூர்வ தருணங்களை தன் எழுத்து மூலமாக 50 வருட காலமாக தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்து வருகிற மிக முக்கியமான எழுத்தாளர் பூமணி அவர்கள்.

அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் தான் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக வெளிவந்திருக்கிறது.

நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த சுமார் 160 பக்கங்களுக்கு மிகாத ஒரு குறுநாவலை திரைப்படமாக உருவாக்க முனைந்த இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கு உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து தான் ஆகவேண்டும்.

நூல்வடிவில் வெளிவந்த வெக்கை என்கின்ற குறு நாவலின் கதை மிக எளிமையானது. ஊர் பெரிய மனிதனான வடக்கூரானுக்கு அந்த எளிய குடும்பம் வைத்திருக்கிற துண்டு நிலம் சிமெண்ட் பேக்டரி கட்டுவதற்காக தேவைப்படுகிறது. வடக்கூரானின் வயலுக்கு மிக அருகே இருக்கிற சிறு துண்டு நிலத்தை கொடுக்க மறுக்கிற ஏழை சிவசாமி யின் குடும்பத்தின் மூத்த வாரிசை கொடூரமாக கொலைசெய்து அந்த சிறு குடும்பத்தின் எளிய வாழ்வை அழித்து முடிக்கிறது வடக்கூரானின் பண்ணையார்த் தனத்தின் பேராசை. குடும்பத்தின் மையப்புள்ளியாக இருந்த வனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த குடும்பம் தவிக்கிறது. நிம்மதியற்ற இரவுகள். உறக்கமற்ற பொழுதுகள். இரவு பகலாக பகைமை ஒரு ஆழ்ந்த பசியாக அந்த குடும்பத்தை வருத்துகிறது. அனைவரும் ஒரு தருணத்திற்காக காத்திருக்க.. அந்த சிறிய இளைஞன் முந்திக்கொண்டு தன் அண்ணனின் உயிர் பறித்த வடக்கூரானை கொலைசெய்து பழி தீர்க்கிறான்.

வழக்கமாக பூமணி நாவல்களில் காணப்படும் அதே உணர்ச்சிப் படிமங்கள் இந்த நாவலிலும் நாம் காணலாம். நெல்லை வட்டார வழக்குகள் மிகுந்திருக்கும் பூமணியின் எழுத்துக்கள் சமூக உணர்ச்சி கொண்டவை.

வெக்கை நாவலை பொறுத்தவரையில் ஆழ் நெஞ்சுக்குள் அறுக்கும் பகைமை எப்படி பழித் தீர்த்து பசியாற்றி கொள்கிறது என்பதைதான் பூமணி மிக நுட்பமாக எழுதி இருப்பார்.

எழுத்து வடிவில் வாசிப்பு அனுபவத்தில் நாம் கண்டடைந்து வியந்த பூமணியின் நுட்பத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக திரையில் பார்த்த போதும் கண்டடைந்தது தான் இப்படத்திற்கான வெற்றி.

நாவலை அப்படியே கதையாக்காமல் தந்தை கதாபாத்திரத்திற்கு கீழ்வெண்மணி மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டங்கள் ஆகிய சம்பவங்களை முன்வைத்து ஒரு பின்கதை வைத்திருப்பதும், எண்பதுகளில் நடைபெறுகிற கதையில் தென்படுகிற சாதிப் படிநிலையின் நுண்ணரசியல் காட்சிகள் அசுரன் திரைப்படத்தை அரசியல் அசுரனாக காட்டுகிறது.

இத் திரைப்படத்தின் முத்தாய்ப்பு அதன் இறுதி காட்சி. பகைமை. அதைத்தொடர்ந்த இருபக்கமும் நிகழ்ந்த கொலைகள் என தொடர்கின்ற போது.. ஒரே மொழி பேசுறோம்.. ஒரே நிலத்தில் வாழ்கிறோம்.. இனியும் இது தொடரக்கூடாது என இன ஓர்மை பேசுகிற அந்த இறுதிக் காட்சி தான் வெற்றிமாறன் அசுரன் திரைப்படம் மூலம் நிகழ்த்த விரும்பும் அரசியல்.

எப்போதும் சாதி நிலை முரண்களை குறித்த திரைப்படங்களில் இறுதியாக சொல்லப்பட்டிருக்கும் அதே செய்திதான் இத்திரைப்படத்திலும்அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தந்தை சிவசாமி மகன் சிதம்பரத்திடம் எதையும் பறித்துக் கொள்வார்கள். ஆனால் படித்த படிப்பை மட்டும் பறித்துக் கொள்ள முடியாது. எனவே நன்கு படி என்று கூறுவது இத்திரைப்படம் வலியுறுத்த விரும்பும் செய்தியாக இருந்தாலும்.. கல்வி‌ பயிலும் இடங்களிலும், கல்வி கற்ற பின் வேலை பார்க்கும் இடங்களிலும் காட்டப்படும் சாதிய ஏற்றத்தாழ்வு பார்வை இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் நம் முகத்தில் அறையும் உண்மை.

ஒரு எளிய குடும்பத்தை தாங்குகின்ற தந்தை எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பான் என்பதை நுட்பமாக அசுரன் விவரிக்கிறது. தனது இளைய மகன் அடிபட்டு விழும் போதெல்லாம் தாக்கவரும் கழுகுவிடமிருந்து தனது குஞ்சினை காப்பாற்ற போர்க்குணம் கொண்டு போராடும் தாய்க்கோழி போல உக்கிர பார்வையோடு தனுஷ் தோன்றும் போதெல்லாம்.. திரையரங்கம் அதிர்கிறது ‌.

வரலாற்றுத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியலை தாழ்த்தப்பட்டவர்களே தான் முன்னெடுக்க வேண்டும் எனவும்.. அவர்களின் கலையை, இலக்கியத்தை, திரைப்படத்தை அவர்கள்தான் சரியாக, நேர்மையாக இருக்க முடியும் எனவும் இருந்த அனைத்து சமன்பாடுகளையும் வெற்றிமாறன் தனது உச்சபட்ச கலை வெளிபாட்டால் கலைத்துப் போட்டு இருக்கிறார்.‌ சாதி ஏற்றத்தாழ்வு பார்த்து செருப்பு போடக்கூடாது என்றவனை செருப்பாலயே அடித்து கட்டிப் போடுகிற அந்த கம்பீரக் காட்சி சாதிக்கு எதிராக வெற்றிமாறன் உபயோகப்படுத்தி இருக்கிற மாபெரும் ஆயுதம். ஒரு தந்தையின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படமொன்றில் சாதி உணர்வுக்கான சாட்டையடி காட்சிகளை வெறும் பிரச்சாரமாக துருத்தாமல் பொருத்தமாக பொறுத்தி இருப்பதுதான் வெற்றிமாறனின் சாதனை.

தனுஷ் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் , சிவசாமியின் மகனாக நடித்து இருக்கிற அந்த இரண்டு இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வாழ்நாள் சாதனையாக அமைய எடுக்கிற ஒரு திரைப்படத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கின்ற உள்ளார்ந்த வேட்கையில் அவர்கள் நடித்திருப்பது நமக்குப் புரிகிறது.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக எடுக்கப்படும்போது பிழைகள் நேருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்கு மிகச்சரியான உதாரணம் தி ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல். வாசிக்கும்போது மாபெரும் வாசிப்பனுபவத்தை தருகிற அந்த நாவல் ஞான.ராஜசேகரன் இயக்கி திரைப்படமாக காணும்போது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இத்தனைக்கும் இளையராஜா அந்த திரைப்படத்தில் மிக அற்புதமான இசையை வழங்கியிருந்தார்.அதே போல எழுத்தாளர் காந்தர்வன் எழுதிய சாசனம் கதை இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் அரவிந்த்சாமி ,கவுதமி ரஞ்சிதா நடித்து திரைப்படமாக வெளியான போது எழுத்து வடிவம் கொடுத்த நிறைவை தரவில்லை.

அதுபோன்ற பிழைகள், விடுதல்கள் எதுவும் அசுரனுக்கு நேரவில்லை. கதை நடக்கும் களத்தையும், காலகட்டத்தையும் மிக கவனமாக சித்தரித்த விதம் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயனாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற தனுஷ் சிறுசிறு முகபாவங்களில் கூட கவனம் செலுத்தி திரைப்படத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இசை ஜீ.வி பிரகாஷ். இதுபோன்ற ஒரு காலகட்டத்தை விவரிக்கின்ற திரைப்படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிக சவாலான ஒன்று. அந்த சவாலை மிக அற்புதமாக கையாண்டிருக்கிற ஜீ.வி பிரகாஷுக்கு இத்திரைப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஒரு பூச்செண்டு.

இயக்குனர் வெற்றிமாறனின் நிரந்தர ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என்று வலுவான அணியினர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி மாபெரும் அசுரத்தனம் காட்டியிருக்கிறார்கள்.

ஊருக்குள் ஆயிரத்தெட்டு சாதிகள்.. தலைமுழுக ஒரே ஆறு.. என்பதான அண்ணன் அறிவுமதியின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
அதைத்தான் தனது அசுரன் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக வெற்றிமாறன் வெற்றிகரமாக கூறியுள்ளார்.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக மாறுவதோடு மட்டுமில்லாமல் ஒரு திரைப்படம் ஒரு இலக்கிய வடிவமாக மாற முயன்று இருப்பதுதான் அசுரன் நிகழ்த்தி இருக்கிற பாய்ச்சல்..

அசுரன் -கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்

.

வரலாற்றின் பக்கங்கள் பெரும்பாலும் பேரரசர்களின் பெருமித கதைகளால் நிரம்பி வழிகின்றன. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், ராஜ பேரிகைகளும், அந்தப்புர அழகிகளும், புகழ்ச்சி வர்ணனைகளும் நிரம்பி இருக்கிற வரலாற்றின் ஏடுகளில் எளிய மனிதர்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. இந்திய நிலத்தில் மக்களின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

ஆனாலும் தலைமுறை தலைமுறைகளாக மக்களிடையே பிறந்து அவர்களுக்காக போராடி, மாமனிதனாக திகழ்ந்து, பெருமைமிக்க திரு உருவாக மாறி இருக்கின்ற பழைய எளிய மனிதர்களின் கதை.. வாய்மொழிப் பாடல்களாக,தெருக் கூத்து நாடகங்களாக, கதை சொல்லிகளின் கதைகளாக காலந்தோறும் கடத்தப்படுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதுபோன்ற கதைகளும், கால நதியின் பயணத்தில் எதிர்ப்படும் அனுபவங்களுமே புனைவிலக்கியதிற்கான கதவுகளாக திகழ்கின்றன.

இலக்கியம் என்பது என்ன.. அது மனிதர்கள் அடைந்த வாதைகளின் வசீகர விவரிப்பு தானே.. என்கிறார் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கி. மனித வாழ்வில் இழப்புகளைப் பற்றி பேசுவதற்கும், வரிகளைப் பற்றி பேசுவதற்கும் இலக்கியத்தை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன.. இலக்கியம் ஒரு கண்ணாடியாக மனிதவாழ்வின் பாடுகளை பிரதிபலிக்கிறது. கலையின் நோக்கமும் அதுதான். தெருக்கூத்து விலிருந்து தொடங்கி திரைக்கலை வரைக்குமான பல்வேறு நிகழ் கலைகள் சகலவிதமான உணர்ச்சிகளுக்கும் ஆட் படுகின்ற மனிதவாழ்வின் சாரத்தை தான் மூலமாகக் கொண்டிருக்கின்றன.
எனவேதான் திரைப்படத்திற்கும் இலக்கியத்திற்கும் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. பல இலக்கிய வடிவங்கள் உலக திரைப்படங்களாக எடுக்கப்பட்டு புகழ் அடைந்திருக்கின்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் பல மொழிகளில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு இருக்கின்றன. உலகளாவிய அளவில் ஏதேனும் ஒரு இலக்கியப் பிரதியை அல்லது ஏதேனும் நாவலை அல்லது யாரேனும் எழுத்தாளர் எழுதிய கதையை மூலமாக வைத்து திரைப்படம் எடுப்பதென்பது மிக மிக இயல்பான ஒன்று.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படம் ஆவது தமிழ் திரை உலகிற்கும் கூட புதிதல்ல. புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலை இயக்குனர் மகேந்திரன் உதிரிப்பூக்கள் என்ற புகழ்பெற்ற திரைப்படமாக உருவாக்கினார். ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), , சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), உன்னைப்போல் ஒருவன்(1965), யாருக்காக அழுதான்(1966) போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. நீல பத்மநாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விக்ரம்,ஒரே ரத்தம் (நாடோடித்தென்றல்), போன்ற கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

அண்மைக்காலங்களில் மிகச்சிறந்த தமிழின் நவீன இலக்கிய உலகின் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளையும் வசனங்களையும் மூலமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் எழுத்தாளர்களுக்கும் திரை உலகிற்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது.

எளிய மனிதர்களின் வாதைகளை, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் அபூர்வ தருணங்களை தன் எழுத்து மூலமாக 50 வருட காலமாக தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்து வருகிற மிக முக்கியமான எழுத்தாளர் பூமணி அவர்கள்.

அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் தான் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக வெளிவந்திருக்கிறது.

நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த சுமார் 160 பக்கங்களுக்கு மிகாத ஒரு குறுநாவலை திரைப்படமாக உருவாக்க முனைந்த இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கு உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து தான் ஆகவேண்டும்.

நூல்வடிவில் வெளிவந்த வெக்கை என்கின்ற குறு நாவலின் கதை மிக எளிமையானது. தனது அண்ணனை பகையின் காரணமாக கொலை செய்த உள்ளூர் பெரிய மனிதரை பதின்ம வயது கொண்ட சிறு இளைஞன் கொலைசெய்து பழித்தீர்க்கிறான். அந்தக் கொலையை அந்த இளைஞனின் தந்தையும் அவனது குடும்பமும் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதுதான் கதை. அந்த ஊர்ப் பெரிய மனிதனின் வயலுக்கு மிக அருகே இருக்கிற சிறு துண்டு நிலத்தை கொடுக்க மறுக்கிற அந்த எளிய குடும்பத்தின் மூத்த வாரிசை கொடூரமாக கொலைசெய்து அந்த சிறு குடும்பத்தின் எளிய வாழ்வை அழித்து முடிக்கிறது பண்ணையார்த் தனத்தின் பேராசை. குடும்பத்தின் மையப்புள்ளியாக இருந்த வனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த குடும்பம் தவிக்கிறது. நிம்மதியற்ற இரவுகள். உறக்கமற்ற பொழுதுகள். இரவு பகலாக பகைமை ஒரு ஆழ்ந்த பசியாக அந்த குடும்பத்தை வருத்துகிறது. பகை முடித்து பழி தீர்க்க அனைவரும் ஒரு தருணத்திற்காக காத்திருக்க.. அந்த சிறிய இளைஞன் முந்திக்கொண்டு தன் அண்ணனின் உயிர் பறித்தவனை கொலைசெய்து பழி தீர்க்கிறான். இதைத்தான் அப்படியே வைக்காமல் திரைமொழியில் சமூக சீர்திருத்த காட்சிகளோடு கூடிய பதிவுகளை வைத்து கூடுதலான கதை சேர்க்கை அம்சத்துடன் இத்திரைப்படத்தை வெற்றிமாறன் உருவாக்கியிருக்கிறார்.

வழக்கமாக பூமணி நாவல்களில் காணப்படும் அதே உணர்ச்சிப் படிமங்கள் இந்த நாவலிலும் நாம் காணலாம். நெல்லை வட்டார வழக்குகள் மிகுந்திருந்தாலும் பூமணியின் எழுத்துக்கள் சமூக உணர்ச்சி கொண்டவை.

வெக்கை நாவலை பொறுத்தவரையில் ஆழ் நெஞ்சுக்குள் அறுக்கும் பகைமை எப்படி பழித் தீர்த்து பசியாற்றி கொள்கிறது என்பதைதான் பூமணி மிக நுட்பமாக எழுதி இருப்பார்.

எழுத்து வடிவில் வாசிப்பு அனுபவத்தில் நாம் கண்டடைந்து வியந்த பூமணியின் நுட்பத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக திரையில் பார்த்த போதும் கண்டடைந்தது தான் இப்படத்திற்கான வெற்றி.

நாவலை அப்படியே கதையாக்காமல் தந்தை கதாபாத்திரத்திற்கு கீழ் வெண்மணி மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டங்கள் ஆகிய சம்பவங்களை முன்வைத்து ஒரு பிளாஷ்பேக் வைத்திருப்பதும், எண்பதுகளில் நடைபெறுகிற கதையில் தென்படுகிற சாதிப் படிநிலையின் நுண்ணரசியல் காட்சிகள் அசுரன் திரைப்படத்தை அரசியல் அசுரனாக காட்டுகிறது.

இத் திரைப்படத்தின் முத்தாய்ப்பு அதன் இறுதி காட்சி. பகைமை. அதைத்தொடர்ந்த இருபக்கமும் நிகழ்ந்த கொலைகள் என தொடர்கின்ற போது.. ஒரே மொழி பேசுறோம்.. ஒரே நிலத்தில் வாழ்கிறோம்.. இனியும் இது தொடரக்கூடாது என இன ஓர்மை பேசுகிற அந்த இறுதிக் காட்சி தான் வெற்றிமாறன் அசுரன் திரைப்படம் மூலம் நிகழ்த்த விரும்பும் அரசியல்.

ஒரு எளிய குடும்பத்தை தாங்குகின்ற தந்தை எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பான் என்பதை நுட்பமாக அசுரன் விவரிக்கிறது. தனது இளைய மகன் அடிபட்டு விழும் போதெல்லாம் தாக்கவரும் கழுகுவிடமிருந்து தனது குஞ்சினை காப்பாற்ற போர்க்குணம் கொண்டு போராடும் தாய்க்கோழி போல உக்கிர பார்வையோடு தனுஷ் தோன்றும் போதெல்லாம்.. திரையரங்கம் அதிர்கிறது ‌.

வரலாற்றுத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியலை தாழ்த்தப்பட்டவர்களே தான் முன்னெடுக்க வேண்டும் எனவும்.. அவர்களின் கலையை, இலக்கியத்தை, திரைப்படத்தை அவர்கள்தான் சரியாக, நேர்மையாக இருக்க முடியும் எனவும் இருந்த அனைத்து சமன்பாடுகளையும் வெற்றிமாறன் தனது உச்சபட்ச கலை வெளிபாட்டால் கலைத்துப் போட்டு இருக்கிறார்.‌ சாதி ஏற்றத்தாழ்வு பார்த்து செருப்பு போடக்கூடாது என்றவனை செருப்பாலயே அடித்து கட்டிப் போடுகிற அந்த கம்பீரக் காட்சி சாதிக்கு எதிராக வெற்றிமாறன் உபயோகப்படுத்தி இருக்கிற மாபெரும் ஆயுதம். ஒரு தந்தையின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படமொன்றில் சாதி உணர்வுக்கான சாட்டையடி காட்சிகளை வெறும் பிரச்சாரமாக துருத்தாமல் பொருத்தமாக பொறுத்தி இருப்பதுதான் வெற்றிமாறனின் சாதனை.

தனுஷ் மஞ்சு வாரியர் பசுபதி பிரகாஷ் ராஜ் , சிவசாமியின் மகனாக நடித்து இருக்கிற அந்த இரண்டு இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வாழ்நாள் சாதனையாக அமைய எடுக்கிற ஒரு திரைப்படத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கின்ற உள்ளார்ந்த வேட்கையில் அவர்கள் நடித்திருப்பது நமக்குப் புரிகிறது.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக எடுக்கப்படும்போது பிழைகள் நேருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்கு மிகச்சரியான உதாரணம் தி ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல். வாசிக்கும்போது மாபெரும் வாசிப்பனுபவத்தை தருகிற அந்த நாவல் ஞானராஜசேகரன் இயக்கி திரைப்படமாக காணும்போது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இத்தனைக்கும் இளையராஜா அந்த திரைப்படத்தில் மிக அற்புதமான இசையை வழங்கியிருந்தார்.

அதுபோன்ற பிழைகள், விடுதல்கள் எதுவும் அசுரனுக்கு நேரவில்லை. கதை நடக்கும் களத்தையும், காலகட்டத்தையும் மிக கவனமாக சித்தரித்த விதம் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயனாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற தனுஷ் சிறுசிறு முகபாவங்களில் கூட கவனம் செலுத்தி திரைப்படத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இசை ஜீ.வி பிரகாஷ். இதுபோன்ற ஒரு காலகட்டத்தை விவரிக்கின்ற திரைப்படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிக சவாலான ஒன்று. அந்த சவாலை மிக அற்புதமாக கையாண்டிருக்கிற ஜீ.வி பிரகாஷுக்கு இத்திரைப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஒரு பூச்செண்டு.

இயக்குனர் வெற்றிமாறனின் நிரந்தர ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என்று வலுவான அணியினர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி மாபெரும் அசுரத்தனம் காட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை தயாரிக்கவே ஒரு துணிச்சல் தேவையாக இருக்கிறது‌. அதை மிகச்சரியாக கலைப்புலி தாணுு சாத்திய ப்படுத்திருக்கிறார்.இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் அண்ணன் ஜெகதீச பாண்டியன் பணியாற்றி இருப்பது நமக்கெல்லாம் கூடுதல் மகிழ்ச்சி.

ஊருக்குள் ஆயிரத்தெட்டு சாதிகள்.. தலைமுழுக ஒரே ஆறு.. என்பதான அண்ணன் அறிவுமதியின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
அதைத்தான் தனது அசுரன் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக வெற்றிமாறன் வெற்றிகரமாக கூறியுள்ளார்.

அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து கொண்டாட வேண்டிய சமூக செய்திகளை உள்ளடக்கிய சிறந்த திரைப்படமாக அசுரனை இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட அவரது குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்களது கடும் உழைப்பிற்கு காட்சிக்கு காட்சி திரையரங்குகளில் கைதட்டல்களே சாட்சி.

அசுரன் தவறவே விடக்கூடாத மாபெரும் அனுபவம்.

 

உறங்கா உண்மைகளின் அடங்காப் பெருநெருப்பு..

——————————————–

ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது நீண்ட காலமாய் உறைந்திருக்கும் அந்த தொன்மை இன மக்களின் கலையாத கனவு மட்டுமல்ல.. அது காலங்காலமாய் தொடரும் உயிர்த் தாகம்.

உலகத்தில் நம்மை விட நிலப் பரப்பிலும், மக்கள் தொகையிலும் குறைவான எண்ணிக்கை கொண்ட எத்தனையோ தேசிய இனங்கள் தங்களுக்கென ஒரு நாடு அடைந்து தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழும் இக்காலத்தில்.. தமிழர் என்கின்ற தொன்ம தேசிய இனத்திற்கு மட்டும் உள்ளங்கை அளவு கூட ஒரு நாடில்லை என்கிற நிலை வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் பெரும் சோகமாய் தொடர்ந்து வருவதென்பது எதனாலும் சகிக்க முடியாத ஒன்று.

அடிமைப்பட்டு தாழ்ந்து விழுந்து கிடக்கிற ஒவ்வொரு இனமும் தனது விடுதலைக்கான ஆயுதத்தை அதுவே தயாரிக்கும் என்பதுதான் இத்தனை ஆண்டு காலமும் இயற்கை நமக்கு போதித்த பெரும் பாடம். அப்படி தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஆயுதமாக நம் இனத்தில் பிறந்த மாபெரும் தலைவர் எம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

எதிரிகளாலும் குறைகூற முடியாத கறைபடாத வாழ்விற்கு சொந்தக்காரர்.
எங்கள் தலைவர் பிரபாகரன் அவன் முருகனுக்கே நிகரானவன் என்ற அண்ணன் அறிவுமதியின் வார்த்தைகளில் நமக்கு காணக் கிடைப்பது.. தலைவர் பிரபாகரனின் பெருமைகள் மட்டுமல்ல.. மூத்தகுடி ஒன்றின் மரபின் வழி பிறந்த ஒப்பற்ற தலைவனாகவும் அவர் விளங்கி இருக்கிறார் என்பதுதான்.

அப்படிப்பட்ட தலைவர் பிரபாகரனை தன் ஆன்மாவில் சுமந்து.. அவரது சொற்களை.. அவரது கனவுகளை.. தன் நினைவோடு நிறுத்தி அவரின் தம்பியாக
தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடுதலையை நிகழ்காலத் தலைமுறைக்கு கடத்துகிற உன்னதப் பணியை அண்ணன் சீமான் அவர்கள் செய்து வருகிறார்.

ஆனால் நாங்கள் தான் தலைவருக்கு நெருக்கமானவர்கள்.. எங்கள் பேச்சை கேட்டு தான் தலைவர் நடப்பார்.. தலைவருக்கு மிகுந்த மதிப்பிற்குரியவர் நாங்கள்தான் என்றெல்லாம் பெருமைகள் பேசிக் கொண்டவர்கள்.. இனத்தைக் கொன்றவர்களோடு இன்முகம் காட்டி நிற்க.. அண்ணன் சீமான் மட்டும்தான் இந்த இனத்தையும், உயிரையும் தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கின்ற எளிய இளைஞர்களோடு களத்தில் நிற்கிறார்.

எத்தனையோ தலைவர்கள் ஈழ விடுதலையை ஆதரித்தார்கள். ஆனால் சீமானோ ஆதரிக்க பிறந்தவர் அல்ல. ஈழ விடுதலை என் விடுதலை என்று முழங்கினார். ஈழம் என்பது எங்கோ தூர இருக்கின்ற தேசம் என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது.. ஈழம் தமிழர்களின் மற்றொரு தாய் நாடு என்று சீமான் முழங்கினார். மற்றவரெல்லாம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்தார்கள். ஆனால் சீமான் பிரபாகரன் தலைவர் உடன் பிறந்த என் அண்ணன் என்று முழங்கினார்.

இதுதான் அண்ணன் சீமானுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த வித்தியாசத்தை விடுதலைப்புலிகளும் உணர்ந்திருந்தார்கள். அண்ணன் சீமான் அவர்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பாகவே.. உலகத்தின் பல நாடுகளில் இன விடுதலைக்கு அவர் முழங்கிய முழக்கம் தலைவருக்கு சென்று சேர்ந்திருந்தது.

இவர்களெல்லாம் சொல்வதுபோல திரைப்படம் எடுக்கதான் சீமான் ஈழத்திற்கு சென்றாரெனில்.. கடற்புலிகளின் தலைவர் சூசை எதற்காக சீமானை கடைசி நொடியில் கை காட்ட வேண்டும்..??

ஆம்.. சீமான் எளியவன் தான்.. வயதில் மற்றவர்களைவிட இளையவன் தான்.. தலைவராக அறியப்படுகிற பலருக்கு கீழே தரையில் அமர்ந்து இருந்தவர்தான்..

ஆனாலும்… தனக்கு யார் உண்மையாக இருப்பார் என தலைவருக்கு தெரியாதா என்ன.. அதனால் தான் இனத்தின் பெரும் கடமை சீமான் கரங்களுக்கு வந்து சேர்ந்தது.

உண்மையில் சீமான் பிரபாகரனைச் சந்தித்தாரா.. அங்கு என்னதான் நடந்தது… எது பற்றி பேசப்பட்டது.. என்பது பற்றி தெரிவிக்க உலகத்தில் இருவருக்கு மட்டுமே உரிமை உண்டு.

அந்த சந்திப்பில் இடம்பெற்ற தலைவருக்கும், அண்ணன் சீமானுக்கும் மட்டுமே அந்த தகுதி உண்டு. அவரவர் கற்பனைக்கு ஏற்றார்போல்.. சீமானை பொறாமையால் சீண்டுகிற சில்லறை வேலைகளை சிலர் தொடர்ச்சியாக இங்கே பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

எனவேதான் வெளிப்படையாக இது குறித்து பேச அண்ணன் சீமான் முதன்முதலாக குமுதம் ரிப்போர்ட்டர் மூலமாக ஒரு தளத்தை அமைத்திருக்கிறார்.

குமுதம் ரிப்போர்ட்டரில்.. அடங்கா பெரு நெருப்பு என்ற தலைப்பில் அண்ணன் சீமான் தன் நெருப்பு தமிழில் எழுதி வருகிற அந்த வரலாற்றுப் பெரும் தொடரில்… தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் உள்ள உறவை பற்றி.. அவர்களுக்குள் நடந்த சந்திப்பை பற்றி..
விரிவாக பேச இருக்கிறார்.

யார் பிரபாகரன் என தலைப்பிட்ட இந்த வாரத் தொடர்.. மறைந்திருந்த பல உண்மைகள் மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சமாய் ஒளிர்கிறது. பிரபாகரன் என்ற தனிமனிதன் ஒரு தேசிய இனத்தின் தலைவனாக எவ்வாறு அறியப்படுகிறார் என்பதைப்பற்றி பெருமித மொழியோடு அண்ணன் சீமான் அவர்கள் விவரிக்கும்போது.. நமது கண்கள் கலங்குகிறது.

தன் உயிராக நேசிக்கின்ற தன் அண்ணனைப் பற்றி.. தமிழ் தேசிய இனத்தின் மன்னனைப் பற்றி.. அண்ணன் சீமான் மிக ஆழமாக உணர்வுபூர்வமாக விவரித்து இருக்கின்ற அந்தக் கட்டுரை.. இவ்வார குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு தமிழனும்.. வாசிக்கவேண்டிய
வரலாற்றுப் பெரும் தொடர்

அடங்கா பெரு நெருப்பு.

உண்மை என்பது ஊழித் தீ. அதை வெறும் குப்பைகளைப் போட்டு அணைத்து விட முடியாது.

அடங்கா பெரு நெருப்பு .. பற்றி எரிகிறது.
சுற்றி பரவுகிறது.

அவசியம் படியுங்கள்.

மணி செந்தில்.

அண்ணன் கொளத்தூர் மணிக்கு..

 

 

திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு கொளத்தூர் மணி அவர்களுக்கு… வணக்கம்.

இதுபோன்ற ஒரு கடிதம் எழுத நேர்ந்த நிலைமைகளுக்காக உண்மையில் நான் வருந்துகிறேன். உங்களை ஒரு கதாநாயகனாக எனது கண்கள் பார்த்து இருக்கின்றன. உங்களை ஒரு தேவ தூதனாக கருதி எனது கரங்கள் தொழுதிருக்கின்றன. கனிவும் அன்பும் நிறைந்த உங்கள் சொற்களில் தான் அன்று எவ்வளவு உண்மையும் நேர்மையும் நிறைந்திருந்தன..??

அவர்தான் நீங்களா என்ற சந்தேகம் உங்களை உண்மையாக நேசித்த என்னைப்போன்ற ஒரு எளிய மனிதனுக்கு இன்று எழுந்திருப்பது என்பது வரலாற்றின் மாபெரும் அபத்தக் காட்சி.

ஆனால் காலம் தான் எவ்வளவு கொடுமையானது..??

ஒரு காலத்தில் நம் கண் முன்னால் கண்டு நேசித்த ஒரு உதாரண மனிதன் உயிரென கொண்டிருந்த இலட்சிய பற்றுகளை தவற விட்டுவிட்டு.. வரலாற்றின் வீதியில் அம்பலப்பட்டு நிற்பது எதனாலும் சகிக்க முடியாத பெரும் வீழ்ச்சி..

அப்படி ஒரு வீழ்ச்சியில் உங்களை நீங்களே சரித்துக்கொண்டு எதை தூக்கி நிறுத்தப் போகிறீர்கள் அண்ணா..??

இருந்த நாட்டை நசுக்கி, வாழ்ந்த இனத்தை அழித்ததை மறந்துவிட்டு.. இல்லாத திராவிடத்தை காக்க நிற்கிற உங்களது பரிதாபநிலை எதற்காக அண்ணா..??

உண்மையில் கடந்த சில நாட்களாக நீங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு எதிராக ஆற்றிவரும் எதிர்வினைகளை பார்க்கும் பொழுது.. பல்லாண்டு காலமாக அம்னிஷியாவில் தூங்கிக் கிடந்த நோயாளி ஓருவர் திடீரென எழுந்து காந்தியை சுட்டுட்டாங்களா.. ராஜீவ்காந்தியைக் கொன்னுட்டாங்களா.. என்று கேட்கும் காட்சிகளைப் போல இருக்கிறது.

அந்த கால கட்டங்களில் உங்களை அண்ணன் சீமான் மேடைகளில் அழைக்கும் முறையைப் பற்றி இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

என் அண்ணனுக்கும் அண்ணனாக விளங்கக்கூடிய என் உயிர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களே.. என்று அவர் அழைக்கும்போது மேடைக்கு கீழே நின்று கொண்டிருக்கின்ற என்னை போன்றவர்களுக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சிலிர்க்கும்.

ஆனால் அண்ணனுக்கு அண்ணனாக , ஈழ மன்னனுக்கு அண்ணனாக நின்றவர்
கோபாலபுரத்து தெருக்களில் திமுக தலைவரின் சந்திப்புக்காக காத்துக் கிடப்பார் என்று யாரும் கனவிலும் அப்போது நினைத்துப் பார்த்ததில்லை.

உண்மையில் உங்களுக்கு எதுவும் நினைவில் இல்லையா அண்ணா..

நமது மகன் பாலச்சந்திரனின் பிஞ்சு உடல் தோட்டாக்கள் பாய்ந்து சடலமாக காணப்பட்ட புகைப்படம் வெளியான காலகட்டத்தில்.. நாம் நேரடியாக சந்தித்தபோது கண் கலங்கி நின்று கொண்டிருந்த என்னை பார்த்து.. அதே விழிகள் கலங்க இந்தக் காங்கிரசை பற்றியும் திமுகவின் சதிகள் பற்றியும் நெஞ்சம் குமுற குமுற வகுப்புகள் எடுத்தீர்களே..??

எப்படி அண்ணா.. கோபாலபுரத்து படிக்கட்டுகளை உங்கள் பாதம் தீண்டியது..?? உங்களுக்கு கூச வில்லையா..??

தலைவரின் உடல் என காட்டப்பட்ட ஒரு உடலை முள்ளிவாய்க்காலில் வைத்து சிங்களன் காட்டிய போது.. அறிவு நம்ப மறுத்தாலும்.. தலை உடைக்கப்பட்ட அந்த உடலை காணும்போது மனம் கதறி உங்களிடத்தில் எடுத்துப் பேசினேனே..??

அப்போது நீங்கள் சொன்ன சொற்கள் ஞாபகம் இருக்கிறதா..

அழுது கோபத்தை தீர்த்துக் கொள்ளாதீர்கள். சேர்த்து வையுங்கள். பழிதீர்க்க நிறைய இருக்கிறது. இந்தக் காங்கிரஸ் என்ற கட்சியும் திமுக என்ற கட்சியும் இனி இருக்கவே கூடாது என்று ஆத்திரம் பொங்க நீங்கள் தானே சொன்னீர்கள்..??

நம் இனத்தை அழித்தவர்களோடு தத்துவக் கூட்டு வைப்பதாக நினைத்துக்கொண்டு.. திராவிடத்தை காப்பதாக சொல்லிக்கொண்டு.. கைகோர்த்து நிற்கிறீர்களே..??

எதன் பொருட்டு இதை சகிக்க இயலும்..??

இந்த ராஜீவ் காந்தி படுகொலையைப் பற்றி நீங்கள் பேசாததையா சீமான் பேசிவிட்டார்..?? இதே திமுக தலைமை பற்றி காங்கிரஸ் கட்சியை பற்றி மேடைகளிலும், எங்களைப்போன்ற தம்பிகளை சந்திக்கும் தனிப்பட்ட சந்திப்புகளிலும் எத்தனை வார்த்தைகளை எவ்வாறு உதிர்த்து இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நினைவில்லையா..??

தலைவர் பிரபாகரனை வெறும் எட்டு நிமிடங்கள் தான் சீமான் சந்தித்தார் என்று இன்று வாய்கூசாமல் பேசுகிறீர்களே.. உங்களது மேடைகளிலேயே எத்தனை முறை அந்த சந்திப்பைப் பற்றி அண்ணன் சீமான் மிக விரிவாக பேசி இருக்கிறார்..அப்போதெல்லாம் பின்னால் உட்கார்ந்து கொண்டு கைதட்டி மகிழ்ந்து விட்டு இப்போது யாருக்கு சேவகம் செய்ய உங்கள் திருவாய் மலர்கிறது என்று சொல்ல முடியுமா..??

உண்மையில் நீங்கள் ஒரு மனசாட்சி உடைய மனிதராக இருந்தால்.. உங்களது மேடையில் சீமான் அன்று பேசும்போது அந்த நொடியிலேயே.. அந்த மேடையிலேயே.. உங்களது மறுப்பினை உடனே அல்லவா தெரிவித்திருக்க வேண்டும்..??

உங்களிடம் நேரடியாக சீமான் ஈழத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எத்தனை முறை விளக்கியிருப்பார்.. அத்தருணங்களில் எல்லாம் நானே பலமுறை உடன் இருந்திருக்கிறேனே.. என் கண்ணால் நானே கண்டிருக்கிறேனே.. என் காதால் நானே கேட்டிருக்கிறேனே.. அப்போதெல்லாம் அமைதியாய் கேட்டுவிட்டு இப்போது எட்டு நிமிடம் தான் பார்த்தார், திரைப்படம் எடுக்கத்தான் சென்றார் என்று உள்ளுக்குள் உண்மைகளைப் புதைத்துவிட்டு வாய் முழுக்க பொய்களோடு வார்த்தைகளை வாரி இறைக்கிறீர்களே.. யாருக்காக..??
எந்த செஞ்சோற்றுக்கடன் உங்களை சேராத இடம் சேர்த்து வைத்திருக்கிறது..??

நீங்கள் சொல்வது போல திரைப்படம் மட்டும் எடுக்கச் சென்றவரைப் பற்றி சாவின் இறுதி நொடியில்.. கடற்புலிகளின் தலைவர் அண்ணன் சூசை எதற்காக பேச வேண்டும்..??

மனித மனம் எல்லாவற்றையும் மறந்து விடும்.. காலம் அனைத்தையும் கடத்தி விடும் , எல்லோரும் எல்லாவற்றையும் மறந்திருப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அண்ணா..

எதையும் மறக்காமல் சிலர் இருக்கத்தான் செய்கிறோம்.

இந்த காங்கிரசை பற்றி, இந்த திமுகவைப் பற்றி இந்தக் கூட்டணி நிகழ்த்திய இன அழிப்பைப் பற்றி எங்களிடம் அணு அணுவாக விவரித்து போராட சொல்லிக்கொடுத்தது நீங்கள்தானே அண்ணா..??

இந்த கருணாநிதி யார்..?? அவர் செய்த அரசியல் துரோகங்கள் என்னென்ன..?? என்று அடுக்கடுக்காய் எங்களுக்கு வகுப்பு எடுத்துவிட்டு அறிவாலயம் வாசலில் வரிசைகட்டி நின்று கொண்டு இருக்கிறீர்களே அண்ணா..??

இனம் அழிந்தபோது காங்கிரசை வீழ்த்த, அந்த காலகட்டத்தில் ஈழம் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்த ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்கிற முடிவினை நீங்கள் தானே எடுத்தீர்கள்..??

இந்த நொடி வரை அண்ணன் சீமான் மீது ஒரு விமர்சனமாக வைக்கப்படுகிற அந்த முக்கிய முடிவினை எடுத்தது நீங்கள் தானே..??

உங்களிடமிருந்து அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் பிரிந்தபோது ஏற்பட்ட சர்ச்சைகளில் எதுவெல்லாம் விவாதப் பொருளானது என்பது குறித்து இன்று நீங்கள் நினைத்து பார்க்க முடியுமா..??

அந்தக் காலகட்டத்தில் உங்களோடு அரணாக இருந்து தெருத்தெருவாக உங்களோடு அலைந்து, தொண்டை வலிக்க வலிக்க பேசி, வழக்கு செலவுகளுக்காக துண்டேந்தி எல்லோரிடம் வசூலித்து உங்களின் உடன்பிறந்தவனாக நின்றவர் இதே சீமான் தானே..??

நாம் தமிழர் என்கின்ற அமைப்பு இனத்தை அழித்த காங்கிரசையும் துணைபோன திமுகவையும் வீழ்த்த உருவாக வேண்டும் என்று முதன்முதலாக நினைத்தது நீங்கள் தானே அண்ணா..??

மதுரையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அறுத்தெறியும் வாரீர் என்கின்ற நாம் தமிழரின் முதல் நிகழ்ச்சிக்கு பனியன் அச்சிட்டு தந்தது, மேடை வடிவமைப்பை கண்காணித்தது, உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் தானே அண்ணா செய்தீர்கள்..??

அதுதொடர்பாக மறைந்த இயக்குனர் அப்பா மணிவண்ணன் இல்லத்தில் நடந்த தொடர்ச்சியான கூட்டத்தில் எங்களுடன் நீங்கள் தானே அண்ணா கலந்து கொண்டு திட்டங்களை தீட்டியது நீங்கள்தானே அண்ணா..??

எல்லாவற்றையும் எங்களை திசைகாட்டி அனுப்பிவிட்டு நீங்கள் திசை மறந்து, திக்கற்று திரிந்து கொண்டிருப்பது எதனால் அண்ணா..??

“ராஜீவ் காந்தி கொலை என்பது சரிதான். ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதை விடுதலைப்புலிகள் செய்தாலும் அது யார் செய்தாலும் அது சரிதான். செய்யவில்லை என்றால் தான் நாம் கண்டனம் தெரிவித்து இருப்போம்”
என்று நீங்கள் மேடையில் பேசும்போது சீமான் உங்கள் பின்னால் தானே அமர்ந்திருந்தார்.. நீங்களும் ,சுப வீயும் அண்ணன் தொல் திருமாவளவனும் அவரை பின்னால் அமர வைத்துக்கொண்டு இதைத்தானே பேசியிருக்கிறீர்கள்.. சமூக வலைதளங்களில் பல காணொளிகள் உலவுகிறதே..நீங்களெல்லாம் கற்றுக் கொடுத்ததை தானே அவர் இன்று மேடையில் பேசினார்.. நீங்கள் அன்று பேசியது சரி என்றால் அவர் பேசியதும் சரிதானே..??

என்ன அண்ணா.. ஆளுக்கு ஆள் மாற இது என்ன திராவிடம் என்ற சொல்லின் வரையறையா..??

சீமான் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்கிறீர்கள். ஆனால் சீமானை பற்றி பேசி விளம்பரம் தேடி கொள்ளுமளவிற்கு நீங்கள் காணாமல் போய் விட்டீர்கள் அண்ணா..

அண்ணன் சீமான் வெகுஜன அரசியல் களத்தில் , தமிழக நலன் சார்ந்த போராட்ட களங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று மக்களோடு மக்களாக நின்று கொண்டிருக்கிறார். அவருக்கென தனிப்பட்ட விளம்பரம் எதுவும் தேவை இல்லை.

ஆனால் நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..?? காஷ்மீரி களுக்காக, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, பாஜக அரசின் இந்துத்துவ திணிப்பை எதிர்த்து , தமிழக நலன் சார்ந்த போராட்டங்கள் ஏதாவது நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..??

உங்களால் உருவாக்கப்பட்ட உங்கள் தம்பி சீமான் இன்றளவும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மக்கள் பிரச்சினைக்காக போராடி பேசி ஒவ்வொரு ஊரிலும் வழக்குகள் வாங்கிக்கொண்டு நீதிமன்றங்களிலும் போராட்ட களங்களிலும் தொடர்ச்சியாக நின்று கொண்டிருக்கிறாரே..

நீங்கள் எங்கே அண்ணா போனீர்கள்..??

நீங்கள் வாழ்ந்த வாழ்விற்கு.. இருந்த மரியாதைக்கு.. இதுபோன்ற உண்மைக்கு நெருக்கமானவற்றில் எதிர்கருத்து பேசி ஒவ்வாமை ஆகிவிடாதீர்கள் அண்ணா..இதிலிருந்து சில காலம் நீங்கள் ஒதுங்கி இருப்பது தான் சரியானது.

அண்ணன் சீமான் உங்களைப் போன்றவர்களால் எய்யப்பட்ட ஒரு அம்பு என்றாலும்.. தலைவர் துவக்கிலிருந்து உமிழப்பட்ட ஒரு தோட்டா என்றாலும் பாதை மாறாது இலக்கை நோக்கி மிகச்சரியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நீங்களோ பாதை மறந்து இனத்தை அழித்தவர்களோடு இன்முகம் காட்டி.. தீர்ந்துபோன திராவிடக் குடுவையில் அமிர்தம் சுரக்கிறது என்று பாசாங்கு காட்டி கொண்டிருக்கிறீர்கள்.

உங்களால் பாதை காட்டப்பட்டு பயணிப்பவர்கள் சரியாக பயணித்துக் கொண்டிருக்கும்போது திசைக் காட்டி திசை மறந்துப் போனதுபோல.. சரியாக இருக்கும் உங்கள் தம்பி மீது உங்களுக்கு ஏற்படுகிற அந்த வஞ்சினம் தான் உங்களை இவ்வாறெல்லாம் பேச வைக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

இன்றளவும் அவர் உங்களை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் இந்தக் கடிதத்தை எழுதுவது அவருக்குத் தெரிந்தால் என் மீது மிகுந்த வருத்தம் கொள்வார். அவர் அண்ணன் காயப்படும் எதையும் செய்ய எங்களை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

ஆனாலும் நான் இதை செய்யத்தான் வேண்டியிருக்கிறது. கொளத்தூர் மணியின் தம்பி சீமான் அவர் அண்ணனுக்காக சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் சீமானின் தம்பி அமைதியாக இருக்க மாட்டான்.

ஏனெனில் அவன் உண்மை நிறைந்த ஒரு ஆன்மாவிற்கு அருகில் நிற்கிறான்.
அவ்வாறாகத்தான் அவன் கேள்விகள் கேட்பான்.

வணக்கங்களுடன்‌..
மணி செந்தில்.

காற்றில் கரைந்த கார்த்தி…

 

நினைத்துப் பார்ப்பதற்குள் கார்த்தி காற்றோடு காற்றாய் கலந்து விட்டான்.

அவனை முதன்முதலாக பார்த்த அதே மகாமகக் குளக்கரையில் அவனை இடுகாட்டில் வைத்துவிட்டு வந்து தனியே இந்த அந்தியில் நின்று கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக என்னைச் சுற்றி சூழ்ந்துக் கொண்டிருக்கிற மரணங்கள் என்னை முற்றிலுமாக உருக்குலைத்து போட்டிருக்கின்றன. இரவு நேரங்கள் மிகக் கொடியதாக நீண்டதாக சகிக்க முடியாத துயரம் நிரம்பியதாக மாறிவிட்டன.

என் வாழ்வில் என்னோடு அனைத்திலும் இணைந்து இயங்கியும், ரசித்தும், சிரித்தும், மகிழ்ந்தும், சிந்தித்தும், கலங்கியும் கலந்து இருந்தவன் கார்த்தி. நான் நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்கும் தருணங்களில் எல்லாம் கார்த்தியின் புன்னகை என்னை தொடர்ந்து வந்த நாட்களில் நான் வென்ற வண்ணம் இருந்திருக்கிறேன். எது குறித்தும் இதுவரை நான் அச்சப்பட்டதில்லை. எல்லா இடமும் நான் தொடக்கூடிய உயரத்தில் தான் இருக்கிறது என்று எனக்கு ஒரு உன்மத்தம் உண்டு. ஆனால் ஒரு மரணத்தின் மூலம் அனைத்து சமன்பாடுகளையும் சரித்துப் போட்டுவிட்டு சாய்ந்து விட்டான் கார்த்தி.

எப்போதும் அவன் மேடையில் நின்றதில்லை. திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்தவன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அந்தப் பொறுப்பை அன்று ஏற்று நடத்திய ஆசைத்தம்பியோடு இணைந்து அனைவருக்கும் இறுதிவரை பரிமாறிக் கொண்டு இருந்தான்.

இறுதிவரை என்றால்.. கார்த்தியைப் பொறுத்தவரை இறுதிவரை தான். நடுவில் ஏதோ காரணம் காட்டி நகர மாட்டான். ஒரு வழியாக அனைவருக்கும் சாப்பாடு போட்டு விட்டு பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு.‌. அவன் வேர்வையும் அழுக்குமாக திரும்பி வந்தபோது என்னிடம் சொன்னது.. சீமான் அண்ணனுக்கு என் கையால் சாப்பாடு போட்டேன் அண்ணா என்று பெருமைப்பட்டுக் கொண்டான்.

அவன் ஒரு முழுமையான சீமான் தம்பி. தத்துவமோ, கொள்கை முடிவுகளோ, அரசியலோ எதுவாக இருந்தாலும் அவனுக்கு அண்ணன் சீமான் சொன்னால் அதுதான் வேதவாக்கு. அண்ணன் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதைக் கூட பழகும் தம்பிகளிடமும் அவன் விதைத்துக் கொண்டே இருப்பான்.

எங்களது கும்பகோணம் நாம் தமிழர் கட்சி எத்தனையோ சரிவு களையும் உயர்வுகளையும் கண்டிருக்கிறது. உடன் இருந்த பலரை இந்த பயணத்தில் நாங்கள் இழந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை நாங்கள் இழப்பிலிருந்து, கட்சியில் அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் சரிவுகளிலிருந்து மீள் வர துடித்து எழுந்திருக்கிறோம். சரிந்து விழுந்த தருணங்களில் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் கைகோர்த்துக்கொண்டு மீண்டும் எழுந்து நிற்க துணிவோம். அவ்வாறு நாங்கள் எழுந்து நிற்க துணியும்போதெல்லாம் முதலில் எங்களில் எழுவதற்காக உயரே நீளுகின்ற கை கார்த்தியினுடையது.
எல்லா சரிவிலிருந்து கட்சியை காப்பாற்றி அதை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய ஒரு காலத்தை நோக்கி அழைத்துச் சென்றவன் கார்த்தி.
ஆனால் கொடுங் காலம் எங்களுக்கு இழைத்துவிட்ட இத்தருணத்து சரிவிலிருந்து நாங்கள் எப்படி மீளப் போகிறோம் என்று எங்களுக்கே தெரியவில்லை.

கட்சி தொடங்கிய நாளிலிருந்து.. தனி நபர்கள் மீது.. தனிநபர்கள் சார்ந்து அமைக்கப்படும் அணிகள் மீது.. நம்பிக்கையற்று அண்ணன் சீமானின் சொல் எங்கே இருக்கிறதோ அங்கே இருந்தவன் கார்த்தி. நான் இங்கே இருக்கும் யாரையும் பார்த்து கட்சிக்கு வந்தவன் அல்ல அண்ணா.. நான் சீமான் அண்ணனைப் பார்த்து வந்தவன். அவர் எங்கு இருக்கிறாரோ அங்கே நான் இருப்பேன் என்று தனது நிலைப்பாட்டை நிர்ணயித்து உறுதிப்படுத்திக் கொண்டவன் கார்த்தி.

நிறைய என்னோடு பயணித்து இருக்கிறான். என்னிடம் கேட்டு கேட்டு ரசனைகளை உருவாக்கிக் கொள்வான். மகேந்திரன் படங்களாக பார்த்து கொண்டு இருக்கிறேன் அண்ணா.. ஒருநாள் அவன் என்னிடம் சொன்ன போது ஆச்சரியமாக பார்த்தேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் வந்தாளே அல்லிப்பூ என்ற பாட்டைப் பற்றி சிலாகித்து ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மறுநாள் எங்கோ அந்தப்பாடலை தேடி எடுத்து தேர்ந்த ஒலித் தரத்தில் மறுபதிப்பு செய்து எனக்கு வந்து பரிசளித்துவிட்டு போனான்.

புது வீடு கட்டினான். கனவு போல ஒரு வாழ்க்கையை அமைக்க உழைத்துக் கொண்டிருந்தான். எல்லோருடனும் கூடி வாழ ஒரு வாழ்க்கை.. மகிழ்வாக, அர்த்தமுள்ளதாக.. உருவாக்க ஓடிக்கொண்டிருந்தான். வெண்மை நிறமுள்ள அந்த வீடு இவ்வளவு சீக்கிரம் இருள் அடைந்து போகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவனுடன் பழகிய பல பேரை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறான். அவரில் பல பேருக்கு பிழைக்க ஏதோ ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கிறான்.
பார்ப்போரை எல்லாம் நாம் தமிழர் ஆக மாற்ற இடைவிடாது முயற்சிகள் செய்து கொண்டே இருப்பான்.

இன்று இடுகாட்டில் அவனது உடல் தகனம் செய்ய வைக்கப்பட்ட பொழுதில்… கட்சி முறைப்படி நாங்கள் அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். எங்கள் அனைவரின் மனதிற்குள்ளும் தாங்க முடியாத வலியும்.. எதிர்காலம் குறித்த இனம் புரியாத பயமும் நிறைந்திருந்தன. எங்கள் கண்கள் நீரால் நிறைந்திருந்த அப்பொழுதில்.. நாங்கள் ஒருவருக்கொருவர் கைகளை இறுக்க பற்றிக் கொண்டோம்‌ . அந்த உறுதியில் கார்த்தி இன்னும் உயிரோடு இருக்கிறான் என நாங்கள் நம்பத் தொடங்கிவிட்டோம்.

அவன் இல்லாத அரசியல் வாழ்வு ஒன்றை நாங்கள் அனைவரும் வாழ்ந்துதான் ஆகவேண்டும். இனி ஏதாவது ஒன்றென்றால் அலைபேசியில் அனிச்சையாக அவன் பெயரை தொடும் எனது விரல்கள் தட்டுத்தடுமாறி பழகிக்கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும்.

இப்போதைக்கு அவன் நினைவுகள் மட்டும் தான் எங்கள் அனைவரின் மனதிலும் ததும்பிக் கொண்டே இருக்கிறது.

அதைத் தாண்டி ஏதாவது யோசித்தால்..

வெறும் இருட்டு.. இருட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை.

ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்- அண்ணன் சீமான் அதிரடி- பதிவுகள்

 

 

ராஜீவ் காந்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்றால்..

அண்ணன் சீமான் தமிழகத்தின் வருங்கால முதல்வர்.

போடா..

 

====================================================================================

ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லை. அதில் உள்நாட்டு வெளி நாட்டு சதிகள் அடங்கியிருக்கின்றன. என்று பலரும் வீதிக்கு வீதி கத்தி சொன்னபோது ஒருவர் கூட பேசவில்லை.

இன்று கடந்து குதிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி.. ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமிக்கு பங்கு உண்டு என்று உண்மையான காங்கிரஸ்காரர் ஆன திருச்சி வேலுச்சாமி புத்தகம் எழுதியபோது எங்கே போனார்..

தூங்கினாரா…??

அதேபோல அதே சுப்பிரமணியசாமி ராஜீவ் கொலையை செய்தது சோனியா காந்திதான் என்று சொன்னபோது, அன்று தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதை வழிமொழிந்த போது இன்று குதிக்கின்ற ஒரு காங்கிரஸ்காரர் கூட அன்று ஏன் குதிக்கவில்லை..??

இதுவரை ஏன் ஜெயின் கமிஷனின் முழுமையான முடிவான அறிக்கை வெளிவரவில்லை என்று ஒரு காங்கிரஸ்காரர் கேள்வி எழுப்பி இருக்கிறாரா..??

ராஜீவ் கொலையைப் பற்றி பேச தகுதி உடைய ஒரு காங்கிரஸ்காரர் இந்த மண்ணில் உண்டா..??

ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களை அழித்து கொன்ற இந்திய அமைதிப்படையை அனுப்பியது இந்த ராஜீவ் காந்தி..

தேசபிதா காந்தியை போல பொம்மை செய்து.. சுட்டு விளையாடி கொண்டிருப்பவர்களை கூட இவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இப்போது மட்டும் என்ன‌ இருமல்..??

ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்று நாங்கள் கதறிய போது.. கேட்க யாருமில்லை.

ராஜீவ் காந்தியை தமிழர்கள் தான் கொன்றார்கள் என அறிவித்துவிட்டு அணுஅணுவாய் கட்டப்பட்ட தமிழீழ தேசத்தை அழித்த போதும்.. கேட்க யாருமில்லை.

எங்கள் பச்சிளம் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட போது..பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர்கூட உயிரோடு இருக்கக்கூடாது என்று கருணையற்ற வார்த்தைகள் காங்கிரஸ் தலைமையிலிருந்து வந்தபோது.. கேட்க யாருமில்லை.

அப்போதெல்லாம் கேட்காதவர்கள்..
இப்போது வந்து ஏன் கேட்கிறீர்கள்..

ராஜீவ் காந்தியை தமிழர்கள் கொன்றார்கள் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்..

சொல்லப்போனால் நீங்கள் சொன்னதை தானே நாங்களும் சொன்னோம்..

இப்போது மட்டும் என்ன எகிறிக் கொண்டு வருகிறீர்கள்..??

உங்களுக்கு ராஜீவ் காந்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர். ஒரு கட்சியின் தலைவர். அவ்வளவே.

எங்களுக்கு பிரபாகரன் எங்கள் உயிர் தலைவர். எம் தேசியத் தலைவர். உலகம் முழுதும் பரந்து வாழும் 12 கோடி தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்.

அவர் பாட்டுக்கு அவர் பேசிவிட்டு போயிருப்பார்.அதுவரை அது பலராலும் கவனிக்கப்படாமல் தான் இருந்தது.
தேவையில்லாமல் அவர் பேசியதை எடுத்து.. அவருக்கு எதிராக பயன்படுத்துவதாக என நினைத்துக் கொண்டு அவருக்கு மைலேஜ் ஏற்றி விடுவதில்.. கதர் கும்பலை அடித்து கொள்ள யாருமில்லை.
இதில் திராவிட ஜால்ரா வேற.

இப்ப பாருங்க.. தொலைக்காட்சி, இணையம் என சகலத்திலும் சீமான்தான்.

கடந்த பத்து நாளா விக்கிரவாண்டி வீதிகளில் நின்று காட்டுக் கத்தா கத்துறோம்.. ஒரு ஊடகம் எட்டிப் பார்க்கல..

இன்று திராவிட மேதைகளின் உதவியோடு ‌.. கதர் பெரியப்பா க்களின்
ஆட்டத்தால்.. இன்னிக்கு தான் நாங்கள் பேசப் படுறோம்.

இதிலென்ன பெரிய காமெடி என்றால்..
ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள் ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள் என்று இவர்கள்தான் கத்திக்கொண்டு இருந்தார்கள்.

ஆமா.. ராஜீவ்காந்தியை கொன்னுட்டோம் னா சண்டைக்கு வருகிறார்கள். உலகத்தில் ஒருவர் பேசியதை இன்னொருவர் ஒத்துக் கொண்டால் கூட சண்டை வருவது இதுதான் முதல் முறை. ????????????

ராஜீவ் காந்தியை நாங்கள் கொலை செய்யவில்லை என்று நாங்கள் கதறிய போதும் சண்டைக்கு வந்தார்கள்.
சரி சண்டைக்கு வருகிறார்களே.. இவர்கள் சொல்வதை ஒத்துக் கொள்வோம் என்று ஆமாம் ராஜீவ் காந்தியை கொன்று விட்டோம் என்று சொன்னால் போதும் சண்டைக்கு வருகிறார்கள்.

சும்மா இருந்தவர்களை சொறிஞ்சி விட்டுட்டானுகளே.. என ராஜீவ் காந்தியின் ஆன்மா கூட அலறுகிற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

================================

ராஜீவ் காந்தி படுகொலை நடந்து … வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம் வரை நடைபெற்று இறுதித் தீர்ப்பு வெளியாகி விட்டது. அதன் பிறகு தூக்குத்தண்டனையாக இருந்த முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாகவும் மாற்றப்பட்டுவிட்டது.

வழக்கு முடிந்துவிட்டது. தண்டனை வழங்கப்பட்டு விட்டது. தண்டனைக் காலத்தை ஏறக்குறைய 28 வருடங்கள் ஏழு தமிழர்களும் அனுபவித்து விட்டார்கள். அதன்பிறகு தமிழக சட்டமன்றம் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஒருமனதாக தீர்மானம் இயற்றி அந்தத் தீர்மானம் ஆளுனர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

ஏறக்குறைய அனைத்தும் முடிந்துவிட்ட ஒரு வழக்கு அது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி படுகொலையை பற்றி பேசினால் எழுவர் விடுதலை பாதிக்கப்படும் என்று உளறுவது அப்பழுக்கற்ற 100 சதவீத முட்டாள்தனம்.

ராஜீவ் காந்தி படுகொலை பற்றி அண்ணன் சீமான் பேசிய கருத்திற்கும் எழுவர் விடுதலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

எழுவர் விடுதலை என்பது ஆளுநர் கரத்தில் நிலுவையில் இருக்கின்ற ஒரு கோப்பு. முடிந்துபோன வழக்கொன்றில் தண்டனை முழுமையாக அனுபவித்த குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் விடுதலை நடவடிக்கை.

அரசியல் உரையாடல்கள் பாதிப்பை ஏற்படுத்தாத அலுவலகம் சார்ந்த நடவடிக்கைகளை கொண்ட விவகாரம் அது.

ஏற்கனவே அண்ணன் சீமான் மீது இருக்கின்ற எக்கச்சக்க வெறுப்பினை தீர்த்துக்கொள்ள திராவிட கும்பல் இந்த விஷயத்தையும் இவ்வாறாகவே இழிவாக கையாளும் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுதான்.

பொம்மை காந்தியை நிற்க வைத்து
ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கும்பல் சுட்டு கோட்சேவுக்கு ஜே போட்டபோது.. இந்த அறிவுரை திலகங்கள் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

வரலாறு அனைத்தையும் மாற்றும்.. காலம் அனைத்தையும் கடத்தும் என்றக் கருத்தில் காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் வரிசையாக உட்கார்ந்து கொண்டு ஆமா காந்தியை நாங்கள் சுட்டோம் என்று சொன்னபோது..

நாங்களும் சொல்லிவிட்டுப் போகிறோம்.
ராஜீவ் காந்தி நாங்கள்தான் கொன்றோம் என்று.

இதைத்தான் அண்ணன் சீமான் பேசினார்.

உடனே பாய்ந்து கொண்டு இவர்களைத் தடை செய்ய வேண்டும் ,கைது செய்ய வேண்டும் என்று கதர் கூட்டம் ஒருபக்கம்
தாவித் தாவி குதிக்க..

மறுபக்கம் திராவிட கும்பல் இவர்களால் 7 தமிழர் விடுதலைக்கு சிக்கல் வந்துவிட்டது என்று தவ்வி தவ்வி குதிக்க..

இன்னா நாடகம் டோய்..

அப்புறம் என்ன ……. க்கு 7 தமிழரை விடுதலை செய்யக்கூடாது என கேட்கும் காங்கிரசோடு.. திராவிடக் கும்பல் கூட்டு வைத்திருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா..??

அது வேறு இது வேறு என்றால்..
இதுவும் வேறுதான்.

தமிழர்களான எங்களை நோக்கியே எப்போதும் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.

நாங்களும் குற்ற உணர்வுடன் தலையை ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

எங்களது இன்னொரு தாய் நாடு தரிசாக அழிந்தாலும்.. எங்களது சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டாலும் இந்த குற்ற உணர்வால் நாங்கள் பேசக்கூடாது.

ஏனெனில் நாங்கள் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்.

இதை காட்டி காட்டித்தான்.. நாங்கள் அனைத்தையும் இழந்தோம்.

ஏனெனில் நாங்கள் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்.

28 வருடங்களாக மீண்டும் மீண்டும் இதே குற்றச்சாட்டு.. மறுத்தாலும் அதே நிலைதான். ஏற்றாலும் அதே விலைதான்..

ஏற்று விட்டே போகிறோம்.

இப்போதுதான் வரலாற்றில் முதல்முறையாக குற்ற உணர்வால் குனிந்த கூட்டம் நிமிர்ந்து பதிலளிக்க தொடங்கியிருக்கிறது.

ஆமா.. அதுக்கு என்ன இப்போ..???

===============================================================================

ஆமாம்.. அவன் பேசினான்..

கடந்த 28 வருடங்களாக தமிழர்களை ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள்.. ராஜீவ்காந்தி கொன்றுவிட்டார்கள்.. என்று ஒரு இனத்தை அழித்து ,ஒரு நாட்டை அழித்து, ஒரு தேசிய இனத்தை அரைநூற்றாண்டு காலமாக குற்ற உணர்விற்கு உள்ளாக்கி இழிவு படுத்தியவர்களை நோக்கிய அறச்சீற்றம் அது.

அடிக்க அடிக்க அடி வாங்கி குனிந்து கிடக்கிற ஒரு அடிமை தேசிய இனத்தின்
மீள் எழுச்சி எல்லோரும் சொல்வது போல நாசுக்காக.. நாகரீகமானதாக எல்லாம் இருக்காது தான்..

சிலவற்றை மோதிதான் உடைக்க வேண்டி இருக்கிறது. இனி தமிழரை நோக்கி எவராவது ராஜீவ் காந்தியை கொலை செய்து விட்டீர்கள் என்று சொன்னால்‌‌.. ஆமாம்.‌ அதற்கு என்ன இப்போ.. என்று கேட்டுவிட்டு கடந்து போக ஒரு காலம் உண்டாகி விட்டது.

இப்படித்தான் பிரபாகரனை பற்றி பேசவோ , எழுதவோ அவர் படத்தை வைத்துக் கொள்ளவோ உரிமை இல்லாத ஒரு காலம் இருந்தது.

அவன் வந்தான்.

மற்றவரெல்லாம் ஈழநாடு எங்கோ தூரத்தில் இருக்கும் தீவு போல.. ஈழ விடுதலையை ஆதரித்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவனோ ஈழ விடுதலை என் விடுதலை… என் இனத்தின் விடுதலை என்று முழங்கினான்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்றெல்லாம் எதுகை மோனையில் பலரும் முழங்கிக் கொண்டிருக்க..

அவனோ பிரபாகரன் என் அண்ணன்.. என் தலைவன் என்று முழங்கினான்..

வீட்டுக்கு வீடு புகைப்படமாய், சட்டை படமாய், பதாகை படமாய் தமிழனின் திருவுருவாய் தலைவர் மாறிப்போனார்.

தமிழ்நாட்டில் திராவிடன் ,இந்தியன், என்றெல்லாம் ஆயிரத்தெட்டு கொள்கை குழப்பங்கள்,கோட்பாட்டு குடைசல்கள்..

வந்தான் அவன்.

நாம்தமிழர் என்று முழங்கினான். அவன் வருகைக்குப் பின்னால் திராவிடத்தின் பேரில் இங்கு கட்சி என்ன.. ஒரு குச்சி கூட முளைக்கவில்லை.

அதே போலத்தான்..

ராஜீவ் கொலையாளிகள் என்று யாரும் பேச முடியாத ஒரு காலகட்டம் இருந்தது.

திமுக ஆட்சி காலத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில்.. ஆறு மாதம் அவன் சிறையில் அவர்களோடு இருந்தான்.

வெளியே வந்து அவன் தான் முதன்முதலில் முழங்கினான்.

7 தமிழர் விடுதலை.. எம் இனத்தின் விடுதலை என்று.

அவன் தான் இன்று பெரும் சீற்றமாய்
வெடித்திருக்கிறான்.

தண்ணீரில் அழுத்தப்படும் பந்து எப்படி மேல்நோக்கி திமிறி எழுமோ.. அப்படிப்பட்ட திமிறல் அது.

ஆமாம்.. அதற்கு என்ன இப்போ.. என்று மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகுபவனின் உச்சகட்ட கொதிப்பு அது..

அப்படித்தான் அவன் அன்றும் பேசினான்.
இன்றும் பேசுகிறான்.

தடைகளை உடைக்க.. தளராமல் அவன் பேசிக் கொண்டு இருக்கிறான்.

செந்தமிழன் சீமான் என்பது பெயர் அல்ல.

நிகழ மறுக்கும் பொற்காலத்தை
கட்டி இழுத்து வந்து
நிகழ்காலத்திலேயே நிகழ்த்திக்
காட்டும் தமிழரின் எதிர்காலம்.

================================================================================================

மிக மிக அவசரம்- பெண் வாதையின் கலை வடிவம்..

 

சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது எனது மிக நெருங்கிய நண்பரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அலைபேசியில் திடீரென அழைத்தார். சுரேஷ் காமாட்சியின் அழைப்பு எப்போதும் முக்கிய செய்திகளை உள்ளடக்கியதாக தான் இருக்கும். நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருப்பார். அரசியலும் சினிமாவும் என அவரோடு பேச பல செய்திகள் இருக்கின்றன. தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் தான் பிறந்த இனத்திற்கான அரசியலோடு இணைத்தே செய்வதில் அவர் தனித்துவமானவர். இப்போதும் ஒரு முக்கியமான காரணத்திற்காக தான் அழைத்திருந்தார்.

தல ஓய்வாய் இருக்கீங்களா எனக் கேட்டார். சொல்லுங்க தல வரேன்.என்றேன். அவர் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 11 அன்று வெளிவர இருக்கின்ற மிக மிக அவசரம் என்ற திரைப்படத்தை தனிப்பட்ட திரையிடலில் காண என்னை அழைத்தார்.

மிக மிக அவசரம் ஒரு வித்தியாசமான கதை. அது திரைக்கதை வடிவத்தில் இருக்கும்போதே நான் வரிக்குவரி படித்திருக்கிறேன். அப்போதே நண்பர் சுரேஷ் காமாட்சியிடம் இந்தத் திரைக்கதை கொடுக்கும் அதே உணர்ச்சியை நீங்கள் திரையில் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால்… ஒரு மிகச்சிறந்த படைப்பை தமிழ் திரை உலகிற்கு வழங்கிய பெருமை உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லி இருந்தேன். திரைக்கதையாக நான் அறிந்திருந்த ஒரு கதையை திரைப்படமாக காண இருக்கிற ஆர்வம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

இதுவரை தமிழ் திரை உலகில் பேசப்படாத ஒரு விஷயத்தை நண்பர் சுரேஷ் காமாட்சி இத்திரைப்படம் மூலம் பேச முனைந்திருப்பதன் மூலம் தான் எவ்வளவு துணிச்சலானவர் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பை அந்தக்கதை அவருக்கு வழங்கியிருந்தது.

காவல்துறை பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் மலையாள படமான மம்முட்டி நடித்த உண்டா குறித்து கூட நான் விரிவாக ஒரு பதிவிட்டிருந்தேன். மிகை சித்தரிப்புகளும், கதாநாயக பாவனைகளும் மிகுந்திருக்கும் காவல்துறை பற்றிய பல படங்கள் எனக்கு மிகுந்த சலிப்பை ஏற்கனவே ஏற்படுத்தியிருந்தன. காவல் துறையில் பணியாற்றுபவர்களை சூப்பர் மேனாக காட்டியதில் தமிழ் திரை உலகை அடித்துக்கொள்வதில் எவ்வுலகிலும் ஆளில்லை. காவல் துறையில் பணியாற்றுபவர்களும் நம்மைப் போன்ற சாதாரண எளிய மனிதர்கள் தானே என்கிற எண்ணத்தை தமிழ் திரை உலகின் பல இயக்குனர்கள் அழித்து முடித்து விட்டார்கள். ஆனால் சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம் காவல்துறை மீது நாம் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகளை மாற்றிப் போடுகிறது. அவ்வகையில் இது மிக முக்கியமான திரைப்படம் ‌.

இது ஒரு பெண் கான்ஸ்டபிளின் உயிர் வாதையை பற்றி பேசுகிற ஒரு மனிதநேய படைப்பு. பணியிடங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகும் பெண்களைப் பற்றிய திரைப்படங்களில் மிகமிக அவசரத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

நாம் நினைப்பது போல பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. ஒரு ஆணாய் இருந்துகொண்டு பெண்களின் சிரமங்களைப் புரிந்து கொள்ள ஆணுக்குள்ளும் ஒரு தாய்மை தேவைப்படுகிறது. பெண்களிடமிருந்து உழைப்பு, அன்பு, காதல், கருணை, உடல் என அனைத்தையும் சுரண்டிக் கொள்கிற ஒரு மோசமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் அவர்களுக்காக வாழ்ந்ததை விட நமக்காக, இந்த சமூகத்திற்காக.. வாழ்ந்தது மிக அதிகம். பெண் உடல் மீது பல்வேறு வன்முறைகளை ஆணாதிக்க சமூகம் பிரயோகித்துக்கொண்டே இருக்கிறது. அது குடும்ப அமைப்புகளாக இருக்கட்டும் அல்லது பணியிடம், கல்வி பயில சென்ற இடங்கள் ஆகியவைகளாக இருக்கட்டும்.. பெண்கள் மீதான ஆணாதிக்கம் எண்ணங்களாக, சொற்களாக, செயல்களாக, அசைவுகளாக, எழுத்துக்களாக, வெளிப்பாடுகளாக நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

நாம் நினைத்தால் வன்முறையை பயன்படுத்துவதற்கு.. சுரண்டுவதற்கு.. பயன்படுத்திக் கொள்வதற்கு மிக அருகிலேயே வாய்த்து விட்ட ஜீவன்களாக
பெண்கள் மாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக இவற்றை அணுகவேண்டும் என்பது உறுதியாகிறது.

ஒரு பெண்ணை அடிமைப்படுத்த குடும்பம், சமூகம், சாதி, மதம் என பல காரணிகள் திட்டமிட்டு இங்கே கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் தொடர்ந்து வருகிற வர்ணாசிரம அடுக்குகள் பெண்களை திட்டமிட்டு வீழ்த்தி வைத்திருக்கின்றன.

அதே போல வர்ணாசிரம அடுக்குகளை போன்றே காவல்துறையின் அதிகாரம் சார்ந்த அடுக்குகள் கொடூரமானவை. உயர் அதிகாரி நினைத்தால் தனக்கு கீழுள்ளவரை எப்படியும் வதை செய்யலாம் என்கின்ற உச்ச அதிகாரம் காவல்துறையில் மிகுதி ‌‌. அப்படி ஒரு வதைக்கு உள்ளான ஒரு பெண்ணின் சில மணி நேர வாழ்க்கை பயணம்தான் மிக மிக அவசரம்.

படம் தொடங்கிய முதல் எடுத்த எடுப்பிலேயே உச்ச வேகத்தில் கதை பயணிக்கத் தொடங்கியது. திரைக்கதையில் நான் கண்ட அதே வேகம் திரைப்படத்திலும் மிளிர்ந்தது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். படத்தின் நாயகியாக நடித்திருக்கிற அந்த இளம்பெண் மிக அற்புதமான பங்களிப்பினை செய்திருக்கிறார். அதேபோல படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நாம் ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்த பிரபலமான நடிகர்கள் தான். அண்ணன் சீமான் அவர்களுக்கு கதையின் முடிவினை தீர்மானிக்கிற முக்கிய கதாபாத்திரம். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனது உயிர் நண்பர் வெற்றிக்குமரன் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நாம் தமிழராய் கை உயர்த்தி போகிறார்.

இத்திரைப்படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கதையைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. திரையரங்கம் சென்று பாருங்கள். குறிப்பாக குடும்பத்தோடு தாய் ,சகோதரி, மனைவி என அவரவரும் குடும்பத்தில் இருக்கின்ற பெண்களோடு இத்திரைப்படத்தை காணுங்கள்.

திரைப்படத்தின் முடிவில் அவர்களது கண்களை கவனியுங்கள். உங்களது விழிகளையும் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு சேர கலங்கி இருக்கின்ற அந்த விழிகள் தான் நண்பர் சுரேஷ் காமாட்சி அடைய இருக்கிற மகத்தான வெற்றி.

தமிழ்த் தேசியவாதியா.. பெரியார்..??

எப்போதும் இல்லாத அளவிற்கு திராவிட கருத்தாக்கம் வலுவான எதிர் தாக்குதலை தனது வரலாற்றில் முதன்முதலாக எதிர்கொள்கிறது. திராவிடம் ஆரியத்தை எதிர்த்த கதை என்பது.. ஏறக்குறைய தடவிக் கொடுத்தது போல.. மென்மையான ஏசல், கேலி ,கிண்டல் போன்ற அளவில் ராஜாஜி- பெரியார் இடையிலான உறவு போன்ற நட்பு முரண்களோடு இருந்தது.

காலப்போக்கில் ஆரியம் திராவிடத்தை செரித்துக் கொண்டதையும், திராவிடம் மிக எளிமையாக ஆரியத்தை உள்வாங்கி கொண்டதையும் ஒளிவு மறைவின்றி வரலாற்றின் ஓட்டத்தில் காண முடிகிறது.

ஆனால் தமிழ்த்தேசியக் கருத்தாக்கமோ தன் இயல்பிலேயே ஆரிய வைதிக எதிர்ப்பை மரபுவழியில் கொண்டிருக்கிறது. தமிழ்த்தேசியர்கள் நவீன அரசியல் களத்தில் ஆரியத்தையும், திராவிடத்தையும் சமமான தராசுத் தட்டில் வைத்து தகர்த்து வருகிறார்கள்.

ஆரிய- இந்துமத எதிர்ப்பில் விளைந்ததாக கூறப்படும் திராவிட கருத்தாக்கத்தின் மாபெரும் அரசியல் அமைப்பான திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் தனது கட்சியில் 90% இந்துக்கள் என பேசுகிறார். மதிமுகவின் தலைவர் வைகோ 99% கோவிலுக்கு போகிறார்கள் என்று பெருமிதம் கொள்கிறார்.

ஆனால் சமகால தமிழ்த் தேசிய அரசியல் அமைப்பான நாம் தமிழர் கட்சி தமிழர்கள் இந்துக்கள் அல்ல என தீர்மானம் இயற்றுகிறது.

திராவிடத்தை பொறுத்தவரையில் இந்து என்பது மாபெரும் அடையாளமாக, பெருமிதமாக மாற்றப்பட்டு விட்டது. திராவிடத் தலைவர்களின் குடும்பத்தினர் அத்திவரதரை பார்க்க வரிசைக் கட்டி அணிவகுத்து நின்றதை அனைவரும் பார்த்தோம். இந்து மத எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு ,கடவுள் மறுப்பு போன்ற முனைகளில் திராவிடத்தின் முனைகள் மழுங்கி .. வலுவிழந்து, வழக்கொழிந்து போய்விட்டது.திராவிடக் கட்சிகளுக்கு பெரியாரே ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வாகவும், பலசமயங்களில் தர்மசங்கடம் ஏற்படுத்துகிற தத்துவத் தொந்தரவாகவும் கருதப்படுகிறார்‌.

முன்னுக்குப் பின்னான கருத்தியல் முரண்களாலும், அரசியல் சமூக வெளிகளில் சுயநலம் சார்ந்த சமரசங்களாலும் பலமுனைகளில்.. தத்துவப் போதாமை ஏற்பட்டு தள்ளாடுகிற திராவிடக் கருத்தாக்கத்தை தூக்கி நிறுத்த கலைஞர் டிவியின் திருமாவேலன் போன்றோர் கிளம்பி இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. இது வழக்கமான செஞ்சோற்றுக்கடன் என்றாலும் வரலாற்றை மாற்றி எழுதுகிற வழக்கமான திராவிட யுக்தியை திருமாவேலனும் செய்யத் துணிந்திருக்கிறார். .. முழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில்.. விளக்கு ஏற்றுகிற வில்லங்க வேலையை விபரீதமாக செய்திருக்கிறார்.

அவர் எழுதுகிற எழுத்துக்களே அவருக்கே எதிராக அமைகிற.. பெரியாருக்கு பெரியாரையே எதிராக நிற்க வைக்க முயல்கிற வில்லங்க பதிவு ஒன்றை.. சமீபத்தில் அவர் பேசியிருக்கிறார்.22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இணையதளங்களில் கிடைக்கிறது.

திராவிடம் என்றாலே தமிழ் தானாம்.அப்படிதான் பாவாணர் சொன்னாராம். பாவாணர் சொன்னதையாவது ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று திருமாவேலன் பரிதாபமாக கேட்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் தொடக்க காலங்களில் திராவிடப் பண் என்றெல்லாம் எழுதி திராவிட இயக்கங்களுக்கு தன்னுடைய மகத்தான ஆதரவை வழங்கியவர். அதே பாவேந்தர் தான் இறுதிகாலத்தில் முழுமையான தமிழ்த் தேசியராக மாற்றமடைந்து திராவிடம், திராவிடர் என்பதான சொற்களை நீக்கி தன் கவிதைகளில் தமிழ், தமிழர் என்ற சொற்களை இணைத்து நாம் தமிழர்.. நாம் தமிழர் என்று முழங்கியவர்.

அதேபோலத்தான் பாவாணரும்.. திராவிடத்திற்கு ஆரம்பகாலத்தில் சில ஆதரவு பதிவுகள் செய்தாலும்.. இறுதி காலத்தில் திராவிடம் என்பதையே ஒழிக்க வேண்டும் என்றும், திராவிடத்தை கடைபிடித்தால் தமிழ் தாழும் என்றும் தமிழியற் கட்டுரைகள் எழுதியவர். பாவாணரின் சிந்தனைப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள் அவரது நூல்கள் முழுக்க பரவிக்கிடக்கின்றன. தமிழின உணர்வோடு திராவிட எதிர்ப்போடு தமிழியல் கட்டுரைகளை எழுதிய பாவாணரை சுட்டிக்காட்டுவதும், மேற்கோள் காட்டுவதும் திருமாவேலன் சொல்ல வந்த கருத்திற்கு எதிராக அவரே மாறக்கூடிய அபாயம் இருக்கிறது.

மறைமலை அடிகள் சொன்னார்.., பாவாணர் சொன்னார்.. என்றெல்லாம் சாட்சிக்கு ஆள் கூப்பிட்டு வந்து வலுவில்லாத வழக்கை வலுக்கட்டாயமாக திருமாவேலன் நடத்தி பார்க்கிறார். மறைமலை அடிகளின் ஆரிய எதிர்ப்பு புத்தகம் பெரியார் இயக்கத்தவர்களின் கூட்டத்தில் தான் அதிகம் விற்றது என்று மறைமலை அடிகள் மகிழ்ச்சி அடைந்தாராம். நல்ல வேளை அவர் அப்போதே இறந்துவிட்டார்.
அவர் ஆரிய எதிர்ப்பு புத்தகம் ஜெயலலிதாவுக்கு தி.க சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்த கூட்டத்திலும், பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து திமுக நடத்திய பல்வேறு கூட்டங்களிலும் விற்கப்பட்டதா என்பதைப் பார்க்க அவர் இல்லை.

முதலில் தேசியம், மொழி, இனம் குறித்து பெரியார் சொன்ன கருத்துக்களை சுட்டிக்காட்டி பெருமித கதையாடல்கள் பேசுவது என்பது மிகுந்த ஆபத்தானது. ஏனெனில் பெரியாரே அவைகளிலிருந்து கடுமையாக முரண்பட்டு எழுதியும் பேசியும் இருக்கிறார்.

பெரியாரின் கருத்துக்கள் ஐயா ஆனைமுத்து அவர்கள் தொகுத்தளித்த பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள் மூலம் நமக்கு கிடைக்கின்றன. பெரியார் தன் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் மேடைகளில் பேசியும், விடுதலை, குடியரசு போன்ற அவரது இதழ்களில் எழுதியும் தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அவை அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு நமக்கு காணக் கிடைக்கின்றன.

பெரியாரை அறிதல் என்பது நமக்கு பல தன்மைகளில் நிகழ்கிறது. தலைவர்கள் அறிஞர்கள் பேச்சின் ஊடாக, பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பு நூல்கள் மூலமாக, பெரியாரைப் பற்றி பலர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்கள் மூலமாக பெரியாரை அறிதல் நமக்குள்ளாக நிகழ்கிறது.

எனவே தெரிந்ததை வைத்து பெரியாரை ஒரு சட்டகத்துக்குள் அடக்க துணிவது என்பது பெரும்பாலும் பிழையாகவே முடிந்திருக்கிறது. இதுபோன்ற மயக்கங்கள்/விபத்துகள் எனக்கும் நிறைய நடந்திருக்கின்றன.நானும் இதே மயக்கங்களோடு பல நூறு பக்கங்கள் இவ்வாறெல்லாம் எழுதி இருக்கிறேன். ஆனால் பெரியாரின் தொடர்ச்சியாக வாசிக்கும்போது தான் பெரியார் கட்டமைக்கப்பட்ட எதற்கும் எதிராக இருந்திருக்கிறார் என்பதும் மதம், சாதி, கிராமம், இனம், குடும்பம் ,மொழி, தேசியம் போன்ற பல கட்டமைப்புகளை பெரியார் பகிரங்கமாக எதிர்த்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

சாதி ஒழிய கிராமம் ஒழிய வேண்டும் என்ற பெரியார், பெண்ணடிமை தீர குடும்பம் என்ற அமைப்பு அழிய வேண்டும் என்றார். ஒரு கட்டத்திற்கு அதிகமாக சென்று பெண்கள் தங்கள் அடிமை நிலை ஒழிய தங்கள் கருப்பைகளை நீக்கிக்கொள்ள வேண்டும் என்றும் முழங்கினார்.

மொழி இனம் தேசியம் போன்ற கருத்துக்களில் தனது நம்பிக்கையின்மையை பெரியார் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

திராவிட கருத்தாக்கத்தின் தந்தை என அழைக்கப்பட்டவரை தமிழ்த்தேசியத்தின் மூலவர் என கலைஞர் டிவியின் திருமாவேலன் திடீர் பட்டம் சூட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கெல்லாம் என்ன பயம் என்றால்.. எங்கே உதயநிதியை தமிழ்தேசிய தத்துவத்தின் இளவரசர் என்று திருமாவேலன் சொல்லி விடுவாரோ என்றுதான்..

எதற்காக எந்த விபரீத முயற்சி என்று யோசித்தால்.. வலுவிழுந்து கிடக்கும் திராவிட தத்துவத்தை நிமிர்க்கும் வேலை இல்லை இது.. எந்தப்பக்கம் வலுவாக இருக்கிறதோ.. அந்தப் பக்கம் வான்டட் ஆக வண்டியில் ஏறுகிற வாய்ச்சாங்குளி வேலை.

இது தான் பெரியார் மண் ஆயிற்றே.. இங்கே தமிழ் தேசியம் எல்லாம் எடுபடாதே.. திராவிட தீரர் வைகோ சொல்வதுபோல தமிழ் தேசியம் என்ற பெயரில் சிலர் வருகிறார்கள் அது இங்கே எடுபடாது என்ற வகையில் எதற்காக இந்த வீண் வேலை என்று திருமாவேலனிடம் சர்வ யோக்கியதை அம்சங்கள் உள்ள எந்த திராவிடராவது கேட்பாரா என்பது தனிக் கேள்வி.

இன்னும் இதை ஆழமாக கேட்க வேண்டும் என்றால் ஒரே ஒரு கேள்வி தான் நினைவுக்கு வருகிறது.

பயமா இருக்கா குமாரு..??

*********

மொழி பற்றி பெரியார் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.அவர் குறிப்பிட்ட கருத்துக்களிலியே அவர் முரண்பட்டு இருக்கிறார்.

மொழி என்பது உரையாடுவதற்கான கருவி மட்டுமே என்றும் அதில் பெருமிதம் கொள்ளவோ பெருமையடையவோ எதுவுமே இல்லை என்றும் பெரியார் பல இடங்களில் பேசி இருக்கிறார்.

திமுக முதன்முதலில் ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது. பதவி ஏற்பதற்கு முன் திமுக தலைவர் அண்ணா அவர்கள் தனது அரசியல் குருவான பெரியாரை தனது அமைச்சரவை யோடு நேரடியாக சந்தித்து இந்த ஆட்சியே உங்களுடையதுதான் என்று சொல்லி ஆசி பெற்று பதவி ஏற்கிறார்

அண்ணா ஆட்சிக்காலத்தில் 1968-ம் வருடம் ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் உலக தமிழ் மாநாடு நடந்தது. மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அறிஞர்கள் சிலைகள் அந்த மாநாட்டில்தான் நிறுவப்பட்டன.

அந்த மாநாடு குறித்து.. 15.12.1967 தேதிய விடுதலை நாளேட்டில் பெரியார்..
உலகத் தமிழ் மாநாடாம்.. வெங்காய மாநாடாம்.. இது எதற்கு.. கும்பகோணம் மாமாங்கத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்க போகிறது என்று மிகக்கடுமையாக சாடி அறிக்கை விட்டார்

மொழி பற்றி பெரியாரின் கருத்துக்கள் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழும் தமிழரும் என்ற நூலின் வாயிலாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல் முதன்முதலாக வெளியிடப்பட்டபோது இதன் தலைப்பு தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்.. எப்படி..?? .. பிறகுதான் இந்த நூலின் தலைப்பு தமிழும் தமிழரும் என்று மாற்றப்பட்டது.

அந்த நூலில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன. தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என கடந்த 40 வருடங்களாக கூறி வருகிறேன் என பெரியார் தன்னிலை விளக்கம் அளித்து அதற்கான தர்க்கத்தை பல்வேறு பத்திகளில் விவரிக்கிறார்.

தமிழை விலக்கி தமிழருக்கு என்ன நஷ்டம்.. வேற்று மொழியை ஏற்றுக் கொள்வதால் என்ன பாதகம் வந்துவிடப்போகிறது என்றெல்லாம் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

மொழி என்ற ஒரு தேசிய இனத்தின் அடிப்படை பண்பினை பெரியார் ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கிறார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை கடுமையாக விமர்சித்த பெரியார் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

மொழியின் மீது ஒரு நாடு எதற்காக பிரியவேண்டும்.. மொழியினால் பெருமை சிறுமை லாப நஷ்டம் ஒன்றுமே இல்லை.. சாதியின் மீது மதத்தின் மீது இனத்தின் மீது பிரிவதாக இருந்தால் கூட அதற்கு அர்த்தம் உண்டு.ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட பொருத்தமற்ற ஒற்றுமையற்ற கொள்கைகள் திட்டங்கள் உண்டு. மொழிகளில் அப்படி கொள்கையோ, திட்டமோ, அனுபவமோ, கலாச்சாரமோ, பழக்கவழக்கமோ, மாற்றமாய் இருக்கும்படி நமக்குள் எந்த மொழியுமே இல்லை. ஆதலால் இதை காரணம் காட்டி பிரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை.(பெரியார் சுயமரியாதை சமதர்மம் எஸ்விஆர் பக்கம் 824)

தன்னுடைய தமிழ் ஆதரவு பற்றியும் இந்தி எதிர்ப்பு பற்றியும் மிகத்தெளிவாக பெரியார் ஒரு கருத்தினை முன் வைக்கிறார்.

எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்காகவோ தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை தோழர்கள் உணர வேண்டும். மற்றெதற்கு என்றால் ஆங்கிலமே பொதுமொழியாக ,அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

ஆகையால் தமிழர் தோழர்களே..! உங்கள் வீட்டில் மனைவியுடன் குழந்தைகளுடன் வேலைக்காரிகள் உடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள் பேசப் பழகுங்கள்.(27.01.69 விடுதலை)

தமிழை காட்டுமிராண்டி மொழி என 40 ஆண்டுகளாக கூறி வருகிறேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும் அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன். என பெரியார் தெளிவாக தெரிவிக்கிறார்.

நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளை தமிழில் நடத்துகிறோம். சமயத்தை ,சமய நூல்களை, இலக்கியத்தை தமிழில் கொண்டிருக்கிறோமே..! சரி ..இதற்கு மேல் சரியான தமிழுக்கு என்ன வேண்டும்..(ஈவேரா சிந்தனைகள் பாகம் 2 பக்கம் 985)

தான் ஒரு தேசியவாதியாக அல்ல ஒரு சீர்திருத்தவாதியாகவே அழைக்கப்பட விரும்புகிறேன் என பகிரங்கமாக அறிவித்தவர் பெரியார். அவரைப் பொறுத்தவரையில் எல்லாவற்றையும்விட சமூக சீர்திருத்தமே முதன்மையான கருப்பொருளாக இருந்தது.

பெரியார் தன் வாழ்வில் தன் கருத்துக்களில் நிறைய முரண்பட்டு இருக்கிறார். அதை அவர் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.

நான் மாறுதல் அடைந்து விட்டேன் என சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. இந்தமாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும் நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற் போல் நடந்து தான் தீரும். நாளை நான் எப்படி மாறப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால் நான் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
-குடியரசு 11.10.1931.

பெரியார் தன் வாழ்வில் மூன்று நிலைப்பாடுகளை அவ்வப்போது எடுத்திருக்கிறார். 1930 களில் தொடங்கி ஏறத்தாழ 1938 வரையிலான காலங்களில் தமிழ்நாடு தமிழருக்கே என்றார். 1939 தொடங்கி 1957 வரையிலான காலகட்டங்களில் திராவிடநாடு என்ற முழக்கத்தை முன் வைத்தார். 1958 ல் இருந்து தன் வாழ்நாள் முடிய தனித்தமிழ் நாடு, தமிழ்நாடு தமிழருக்கே போன்ற முழக்கங்களை முன்வைத்தார்.

இவை ஒவ்வொன்றும் பெரியாரிடம் புறச்சூழல் சார்ந்து ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களாகும். மொழி இனம் தேசியம் ஆகியவை குறித்து நிரந்தரமான கொள்கை முடிவு எதையும் பெரியார் தன் வாழ்வில் எடுத்ததில்லை.

பெரியாரை அவரது கருத்துக்கு மூலமாகவே அணுகவேண்டுமே ஒழிய, அவரவர் கருத்திற்கேற்ப பெரியாரை மொழிபெயர்ப்பது என்பது பெரியாருக்கே எதிரானது.

எனக்கு எந்த மொழி இனம் மீதும் பெரியப் பற்றில்லை.
ஒரு கட்டத்தில் நான் உலகளாவிய மனிதனாக மாறி விடுவேன் என்று சொன்ன பெரியாரை தான் திருமாவேலன் தமிழ்த்தேசியத்தின் மூலவராக அமர வைக்க முயற்சிக்கிறார். எவ்விதமான அரசியல் சுயநல கணக்குகள் இன்றி பெரியாரை மிகச்சரியாக வாசித்தவர்களுக்கு திருமாவேலனின் இந்த முயற்சி அடிப்படையிலேயே எவ்வளவு பிழையானது என்று நன்கு புரியும்.

நம்மால் ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது. மிகத்தீவிர திராவிட ஆதரவாளர் திருமாவேலனுக்கு கூட பெரியாரையும் தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்தவே விருப்பம் இருக்கிறது.

இனி திராவிடம் என்பது இல்லாத அழிந்துப்போன ஒரு தத்துவமாக தகர்ந்து விட்டது. இனி திராவிடத்தின் மூலவராக பெரியாரை காட்டி எந்த அரசியல் ஆதாயம் பெற முடியாது என்ற காரணத்தினால் .. தற்காலத்திய இளைஞர்களின் மாபெரும் ஈர்ப்பான பூர்வகுடிகளின் அரசியல் தத்துவமான தமிழ்த்தேசியத்தின் மூல இருக்கையில் பெரியாரை அவரது உளமார்ந்த கருத்தியல் அம்சங்களுக்கு விரோதமாக அமர்த்தி விட முயற்சிக்கிறார்.

பெரியாரின் சமூக பங்களிப்பு என்பது வேறு. பெரியாரின் மொழி, தேசிய இன சிந்தனைகள் என்பது வேறு. முன்னது போற்றத்தக்கது. பிந்தையது புறக்கணிக்கத் தக்கது.

தமிழர் என்ற சொல் எவ்வாறு தமிளொ த்ரமிள த்ரமிட திராவிட என திரிந்து திராவிடர் ஆனது என்கின்ற கால்டுவெல்லின் பழைய பஞ்சாங்கத்தை பாவாணரை மேற்கோள்காட்டி திருமாவேலன் பயன்படுத்தி இருப்பது அவலச்சுவையானது. மொழி அறிஞர் கால்டுவெல் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்ந்து ஒப்பிட்டு ஆய்வு நடத்தி திராவிட இனம் என்கின்ற ஒன்றை புதிதாக கண்டறிந்தார். வரலாற்றில் அதற்கு முன்பாக திராவிட இனம் என்ற ஒன்று இல்லவே இல்லை. அதே பாவணர் தான் தமிழுக்கு திராவிடம் தீது என்றவர்.

மொழிகளுக்கு அடிப்படையே இருக்கக்கூடிய ஒற்றுமைகளை வைத்துக்கொண்டு வரலாற்றையும் இனத்தையும் முடிவு செய்வதென்பது கற்பனையானது என்று மொழி அறிஞர் தாமஸ் டிரவுட்மன் தெரிவித்திருக்கிறார்.

கால்டுவெல் காலத்தில் சுமார் 12 மொழிகள் திராவிட மொழிகள் என அடையாள படுத்தப்பட்டன. கால்டுவெல் முறைமையிலேயே மொழி ஒப்பியல் ஆராய்ச்சி நடைபெற்று தற்காலத்தில் ஏறத்தாழ 85 மொழிகளை திராவிட மொழிக் குடும்பத்தில் மொழி அறிஞர்கள் இணைத்துள்ளனர்.

அதைத்தான் பாவாணர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்..

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

(பாவாணர் 1959)

ஏறக்குறைய 85 மொழிகள் பேசுபவர்கள் அனைவரையும் திராவிடர்களாக மாற்றிவிட்டோம் என்றால்.. அண்ணா அறிவாலயம் அகிலத்தின் அறிவாலயம் ஆக மாறிவிடும் இல்லையா.. திருமாவேலனின் எஜமானர்கள் ஏறக்குறைய அரைவாசி உலகத்தின் தலைவர்களாக ஆகிவிடுவார்கள் இல்லையா.. அதைத்தான் திருமாவேலன் தமிழ் என்றால் திராவிடம் ..திராவிடம் என்றால் தமிழ் ..என்றெல்லாம் எழுதியும் பேசியும் புலம்பியும் வருகிறாரோ.. (?)

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழர் என்கின்ற தனித்த தேசிய இனம் தனது அடையாளங்களை காப்பாற்றிக்கொள்ள எழும்பி வருகிறது.
அந்த மீளெழுச்சிக்கு வலுவூட்ட கீழடி போன்ற முதுபெரும் தமிழின அடையாளங்கள் பெருமித வலிமையை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை திராவிடத்தின் பெயராலும் அதன் அரசியலின் பேராலும் தமிழர்கள் வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டதை நினைத்து விழித்துக்கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். இந்த விழிப்பு தான் பிழைப்புவாதிகளான திராவிட அரசியல் தலைகளுக்கு சாவு மணியாக அலாரம் அடிக்க தொடங்கியிருக்கிறது.
அதனால் தான் தனக்கு சேவகம் செய்கிற திருமாவேலன் போன்ற சேவகர்களை வைத்து இல்லாததையும் பொல்லாததையும் பேசியும் எழுதியும் அற்று விழும் திராவிடத்தை கட்டி எழுப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.

அது திருமாவேலனால் மட்டுமல்ல..இனி எவராலும் முடியாது.

இனி திராவிடர்களுக்கு சொல்வதற்கு உண்மை ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.

முடிந்துவிட்டது. கிளம்புங்கள்.

கீழடி ஆய்வும், திராவிடப்புலம்பலும்..

 

கீழடியில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து விட்டன என்றவுடன்… திராவிட கும்பலுக்கு உடலெங்கும் வியர்த்து கொட்டத் தொடங்கி விட்டது.

எங்களின் மொழித் தொன்மை, இலக்கிய இலக்கண வளமை, பற்றி எந்த செய்தி வந்தாலும் உடல் நடுங்கி, நாக்கு குழற உளரத்தொடங்குவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

நாங்கள் சொல்வது மிக எளிது.

பூர்வகுடிகள் நாங்கள். மூத்தோர் வழிபாடும்,நாகரிகமும், கல்வியறிவும் கொண்ட ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.
நாங்கள் தனித்த தேசிய இனம். நாங்கள் திராவிடர் இனம் அல்ல. நாங்கள் தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் மக்கள். எமக்கென கலை பண்பாடு நாகரிகம் கல்வி என்ற பல காரணிகளின் வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. பண்பாட்டு செழுமை இருக்கிறது.

அதைத்தான் கீழடி உறுதி செய்கிறது.

இதுவரை… புற அரசியல் செயல்பாடுகளை வைத்துக்கொண்டு தமிழ் தேசிய இனத்தின் வரலாற்று மூலங்களை மறைத்து பொய் வரலாறு எழுதிய திராவிடத்தின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

திராவிட இயக்கத்தின் வளர்ச்சியால் தான் தமிழர்கள் அனைத்தும் அடைந்தார்கள் என்ற பொய்க்கதை கீழடி போன்ற உண்மைகள் வெளிவருவதால் இன்றைய இளைய தலைமுறை தமிழர்களால் எள்ளி நகையாடப்படுகிறது.

கல்வியறிவு என்பதை இவர்கள் கையெழுத்து போடுவது மட்டும் தான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பண்பாட்டின் தொடர்ச்சி மூலம், வரலாற்று செழுமை மூலம் அடைந்த அறிவும் ..கல்வியறிவே. அவ்வகையில் தமிழர்கள் தங்கள் வாழ்வியல் மூலமாக அடைந்திருந்த வானியல், வேளாண்மை, பொருளாதாரம், உணவு முறை, மெய்யியல் என பல துறைகளின் உச்சம் திராவிடர்கள் சுட்டிக்காட்டுகிற கல்வி அறிவை விட உயர்ந்தது. அதைத் தமிழர்கள் தங்கள் மரபின் தொடர்ச்சி யிலேயே இயல்பாக பெற்றிருந்தார்கள்.

இடையில் வந்த ஆரியர்கள் எம் இனத்தின் வரலாற்றை மாற்றி எழுதி தங்கள் வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்ட.. எமது வழிபாட்டை பண்பாட்டை நாகரீகத்தை கொள்ளையடித்தார்கள்.

ஆனாலும் நாங்கள் சித்தர் மரபில் இருந்து ஆரிய எதிர்ப்பை மிகச் சரியாக கடைப்பிடித்து வருகிறோம். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை எங்கள் மன்னனாக கொண்டோம். ஆரிய மன்னர்கள் கனக விசயன் தலையில் கல் எடுத்து வந்து கண்ணகிக்கு கோவில் கட்டினோம். ஆரிய எதிர்ப்பு என்பது எங்களது மரபு. உதிரத்தோடு கலந்தது.

அதை எந்த திராவிடமும் எங்களுக்கு கற்பிக்கவில்லை.

எங்களது பல்வகை அறிவு வளர்ச்சியின் தொடக்கம் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னதாக நிகழ்ந்திருக்கிறது என்பதைத்தான் கீழடி ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.

எங்களது பண்பாட்டு வரலாற்று மூலத்தை நினைத்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம். எங்களது வேர் 5000 வருடத்திற்கு முந்தையது என எண்ணி பெருமையடைகிறோம்.

 

சரி.

அதை நினைத்து திராவிடம் ஏன் பதற வேண்டும்..??

காரணங்கள் இருக்கின்றன.

இப்படிப்பட்ட இனப் பெருமிதம் உருவாவது திராவிடத்திற்கு ஆபத்து. இனப் பெருமை உண்டானால் திராவிடத் துணையோடு ஆரியம் கட்டியெழுப்பி இருக்கிற சாதி வேறுபாடுகளுக்கு ஆபத்து எழும். இனப் பெருமை ஏற்பட்டால் தமிழன் சாதி மதம் கடந்து இன ஒர்மை கொள்வான். இன ஓர்மை நடந்துவிட்டால்.. இங்கே திராவிடம் என்ற பெயரில் ஆண்ட ஆள துடிக்கிற பிறமொழியாளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.

திராவிடத்தை ஆதரிக்கிற தமிழர்களுக்கும் இதே சிக்கல். தன் மகன் செத்தால் கூட பரவாயில்லை. மருமகள் கணவனை இழக்க வேண்டும்..(தாலி ..பிரச்சனை வேற..சே..????????). தாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற திராவிடம் இப்படி இடிந்து தரைமட்டமாவது கண்டு சற்றே.. பதற்றம் அடைகிறார்கள்.

எனவேதான் இதுபோன்ற வசவுகள் கிண்டல் கேலி அனைத்தும்..

நாங்கள் மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்.

எதற்கெடுத்தாலும் பெரியாரை முன்னிறுத்துவது.. தங்களது பலவீனத்தை காட்டுவதாக திராவிடர்கள் உணர வேண்டும்.

எங்களது சமூக நீதிப் போராட்டம், கல்வி உரிமைக்கான போராட்டம் எதுவும் பெரியாரிடம் இருந்து தொடங்கியது அல்ல..

பெரியாரும் தமிழினத்தின் சமூக நீதிக்காக கல்வி உரிமைக்காக பெண்ணிய விடுதலைக்காக போராடினார். அவரது பங்களிப்பை போற்றுகிறோம். அவ்வளவே.

ஆனால் அனைத்தையும் மறந்துவிட்டு.. பெரியாரை ஏக ரூப பிரம்மாவாக காட்டுவதென்பது… தொன்மைவாய்ந்த ஒரு தேசிய இனத்தின் வரலாற்றினை இழிவு செய்வது. மாற்றி எழுத முயற்சிப்பது.

திராவிடத்திற்கு எப்போதும் சர்வரோக நிவாரணி ஒன்று தேவைப்பட்டு கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் நீதிக்கட்சி தலைவர்கள், பின் பெரியார், பிறகு அண்ணா இன்னொரு காலத்தில் கலைஞர்.. என இவர்கள் தனிநபர்களை முன்னிறுத்தி தத்துவங்களாக மாற்ற நிகழ்த்த முயற்சிப்பார்கள்.

ஆனால் தமிழ்த் தேசியம் அவ்வாறெல்ல. அது ஒரு இனத்தின் தேசிய உணர்வு.இறையாண்மை கொண்ட,தொன்மை வாய்ந்த வாழ்வியல் மூலமாக விளைந்த .. வரலாற்றின் போக்கில் அதன் தொடர்ச்சியில் விளைந்த.. உரிமை முழக்கம்.

தனிநபர்கள் தமிழ்த் தேசியத்தின் மூலவர்கள் அல்ல. ஆதிமனிதன் தொடங்கி, சித்தர் வழிபாட்டில் இருந்து செழுமை பெற்று, அகத்தியம் தொல்காப்பியம் திருக்குறள் என பண்டைய இலக்கிய வளங்களால் நிறைந்து.. சைவ, வைணவ, பௌத்த சமண ஆசிவக என பல்வகைப்பட்ட மெய்யியல் கோட்பாடுகளால் வளர்ந்து.. ஒவ்வொரு காலகட்டத்தின் அரசியல் புறச் சூழ்நிலைகளால்.. உருவாகி கொண்டே போவதுதான் தமிழ்த் தேசியம்.

தமிழராகிய எங்கள் உதிரத்தில் ஊறி கிடக்கிற ஆதிமனிதனின் மரபணு தனது முதுபெரும் வரலாற்று தொடர்ச்சியை நினைத்து
பெருமை கொள்ளத்தான் செய்யும்.

அது இயல்பு.

அதைப் பார்த்து திராவிடர்களால் பொறுக்க முடியவில்லை என்றால்.. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

ஏற்கனவே தத்துவத்தின் போதாமை திராவிடத்தின் தோல்வியாக வெளிப்பட்டு கொண்டிருக்கின்ற சூழலில்.. அரசியல் வலிமை மட்டுமே இன்று திராவிடத்தின் கைகளில் இருக்கிறது.

அதையும் அடைய ஒரு இளம் தமிழர் கூட்டம் முன்னேறி பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அந்த வெறி பாய்ச்சல் சற்றே நாகரிகக் குறைவானது தான். இதுவரை இருந்த இலக்கண விதிகளுக்குள் அடங்காது தான்..

ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்காமல்.. நடுவில் வந்து நின்று மறித்தால் ஓடி வருகிற கூட்டம் மிதித்து விட்டு தான் ஓடும்.

எனவே திராவிடம் அனைத்தையும் மூடிக்கொண்டு.. கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டிய காலம். இல்லையேல் மனுஷ்யபுத்திரன் வகையறாக்கள் போல்.. புலம்பத்தான் வேண்டியிருக்கும்.

கவனம்.

மறக்க முடியா மாமாலை.

 

என் வாழ்வில் நேற்று மாலை தான் ( ஆகஸ்ல் 25/ 2019)அவரை முதன்முதலில் நேரில் பார்த்தேன்.

பிறந்தது முதல் இருந்த வாழ்நாள் கனவு அது.

அவரது பாடல்களைக் கேட்டிருக்கிறேன். சிலிர்த்திருக்கிறேன். தனியே அழுதிருக்கிறேன். ஒன்றுமே செய்யாமல் மௌனமாய் இருந்திருக்கிறேன்.

ஒரு இசை இப்படியெல்லாம் வேதியியல் மாற்றம் செய்யுமா .. என்றெல்லாம் வியந்திருக்கிறேன்.

என் வாழ்வினை பற்றி யாராவது கேட்டால்.. நான் இளையராஜா பாடல்களை வைத்துதான் என் வாழ்வினை ஒரு பிளாஷ்பேக் போல சொல்ல முடியும்.

இந்த பாடலை கேட்டு கொண்டு செல்லும்போதுதான் நான் பள்ளியில் சேர்ந்தேன். அந்தப் பாடல் திருவிழாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் போது..நான் விளையாடப் போக முடியாமல் என் அம்மா மடியில் படுத்து இருந்தேன். இந்தப் பாடல் ஒலிக்கும்போதுதான் என் கல்லூரிக்கு செல்ல முதன்முதலாக கிளம்பிக் கொண்டிருந்தேன். என் மகன் பிறந்த பின்னர் நான் உடனே செய்த வேலை இந்த பாடலை கேட்டது தான்.

 

 

எங்கோ தேனீர் கடையில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது தான் அவளை சந்தித்தேன். அவளை ஒரு பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக பிரிந்து வரும் வேளையில் ஒரு பேருந்தில் இந்த பாடல்தான் ஒலித்துக் கொண்டிருந்தது. என் திருமணத்திற்கு முந்தைய தின இரவில் இந்த பாடலை கேட்டு தான் அழுது கொண்டிருந்தேன்.
என் மனைவியின் முதல் பிறந்த நாளில் இந்தப் பாடலோடுதான் அவளுக்கு வாழ்த்து சொன்னேன்.

சரிந்து விழுந்த தருணத்தில் என்னை நேசித்தவர்களோடு இணைந்து அப்பாவும் அம்மாவும் என்னை நிமிர்த்த முயன்ற கணங்களில்.. இந்தப் பாடலை தான் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

நள்ளிரவு களில், பயணங்களில், காலை பொழுதுகளில், மாலை மயக்கங்களில், மதிய தனிமைகளில் எப்போதும் அவரது பாடல்கள்தான் என்னோடு இருக்கின்றன.

இப்படி என்னைச் சுற்றி எங்கும் அவரது பாடல்கள்தான்.

அப்படிப்பட்ட என் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கிற அவரைத்தான் நேற்று முதன்முதலாகக் கண்டேன்.

கண்டவுடன் ஒரு கடவுளை நேரில் பார்த்த பரவசம். அது ஒரு மெய் மறந்து உலகம் மறந்து கண்கலங்கி சிலிர்த்த சூழல்.

அவரைச் சுற்றி அவராகவே போர்த்திக் கொண்ட ஆன்மீக போர்வைகளை எல்லாம் தாண்டி..

அவரைச்சுற்றி அவரின் அனுமதியோடு நிகழ்ந்த ஆச்சார்ய அரசியலை எல்லாம் தாண்டி..

நேர்மையாக சொல்வதென்றால்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத எதிர் நிலைகளில் அவர் நின்றிருந்த நிலைகளை எல்லாம் தாண்டி…

உண்மையில்.. அவர் என்னை மட்டுமல்ல.. அங்கு கூடியிருந்த அனைவரையும் ஆட்கொண்டார்.

அந்த இசை தான் அவரை நோக்கி என்னை ஈர்த்தது. அதை அவர் பாகுபாடில்லாமல் ஒரு அருவி போல கொட்டித் தீர்த்தார்.

மற்றபடி அவரிடம் நான் அரசியலை எதிர்பார்த்து செல்லவில்லை. அவர் வைத்திருக்கிற அரசியலும் எனக்கு உவப்பானது இல்லை.

எது வேண்டினேனோ அது கிடைத்தது.

 

இந்த அருமையான வாய்ப்பினை எங்களுக்கு ஏற்படுத்தி தந்த நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மாநிலச் செயலாளர் அருமை நண்பர் அரிமா நாதன் Arima nathan அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. உண்மையில் அவர் செய்த உதவி அவரை எங்கள் வாழ்வின் மறக்கமுடியாத ஒரு மனிதராக மாற்றிவிட்டது. இனி நான் இளையராஜாவை பற்றி யோசிக்கும் போதெல்லாம்.. உண்மையாக
அரிமாநாதனும் நினைவுக்கு வருவார். நன்றி தலைவா.

பிறகு.

காடு மலை மேடு பள்ளம் மாடி உயரம் உச்சம் என நான் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம்.. சுமையென கருதாது வாழ்வின் சுவை என கருதி நிறைவான மகிழ்வோடும், கொண்டாட்டங்களோடும் என்னை சுமந்து செல்லும் என்னுயிர் தம்பிகளான ஆசை துரை துருவன் சாரதி உள்ளிட்ட அனைவருக்கும்.. நான் என்ன தனியே நன்றி சொல்வது..

அவர்களாலேயே நான்.

நேற்றைய தினம் மாலை போல.. ஒரு மழை பெய்த இசை மாலை இனி ஒரு முறை என் வாழ்வில் வாய்க்குமா என ஏங்க வைத்ததுதான் இளையராஜா என்ற அமிர்தத்தின் நிறை தளும்பலில் கூட நின்றாடும் போதாமை.

Powered by WordPress & Theme by Anders Norén