மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இ எம் எஸ் நம்பூதிரி பாட்- என்ற கனவு மனிதனும், கடந்த காலமான இடதுசாரிகளும்…

அரசியல் /

தற்கால இந்திய அரசியல் வரலாற்றில் இடதுசாரி இயக்கங்களின் தோல்வி என்பது இந்த மண்ணிற்கு நேர்ந்த மாபெரும் அவலம் என்பதை எல்லாம் தாண்டி பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமை, சகோதரத்துவம், அமைப்பின் ஊடாக விவாதங்கள்/ உரையாடல்கள் மூலமாக கட்டி எழுப்பப்படும் ஜனநாயகம், போன்ற பல்வேறு அபூர்வமான அரசியல் கட்டுமானங்களை கொண்ட இடதுசாரி இயக்கங்கள் தனது இறுதிக் காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என உண்மையிலேயே நமக்கெல்லாம் அச்சம் ஏற்படுகிறது. இந்திய மண்ணுக்குரிய அடிப்படைத் தன்மைகளை இடதுசாரிகள் புரிந்து கொள்ள …

 16 total views

அரூவ கத்தியோடு அலைபவன்.

என் கவிதைகள்.. /

உன் நினைவின் துளிஎன்னை தீண்டி விடக் கூடாதுஎன்பதற்காகயாரும் அறியா இருட்மனக்குகையில்மௌனத்தின் விலங்கிட்டுஎன்னை நான்சிறை வைத்திருக்கிறேன். ❤️ பின்னிரவு ஒன்றில்காயாத கனவுகளின்கயிற்றினைபிடித்துக் கொண்டுநான் அடைந்திருக்கும்ஆழ் குகைக்குள் இறங்கிஎன்னை நான்பார்க்கும் போதுஇமைகள் உதிர்த்தவிழிகளைக் கொண்டவன்வெற்றுக் காகிதங்களைபார்த்துக் கொண்டிருப்பதைநான் பார்த்தேன் ❤️ எதற்காகஅந்த வெற்றுக் காகிதங்கள்என நான் கேட்கலாம்என நினைத்தபோதுஇன்னும்எழுதப்படாத கவிதைகள்இந்தத் தாளில் தான் உள்ளதுஎன பதில் வந்தது. ❤️ அனலேறியஅந்தக் கண்ணில்இருந்துசொட்டு விழி நீர்ததும்பி விழுந்த போதுதாள் எங்கும்பசுமை ஏறிஉன் நினைவின்சின்னஞ்சிறுஅல்லி மலர்கள்பூக்கத் தொடங்கின. ❤️ மறக்க வேண்டியதைமறக்க…இருக்க வேண்டும்என்று …

 13 total views

நந்தனின் கேள்வி.

சுயம் /

தனக்குள் ஆழ்ந்திருந்த தியானத்திலிருந்து கால நழுவலின் ஒரு நொடியில் கண் விழித்த புத்தர் மௌனத்தின் உரமேறி இருந்த ஞானத்திலிருந்து சிந்தப்போகும் சொற்களுக்காக எதிரே தன் முன்னே காத்திருந்த சீடர்களைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார். ஒரு இலை உதிர்தல் கூட அங்கே சூழ்ந்து இருக்கும் அமைதியின் ஒழுங்கை சிதைத்து விடுமோ என்ற சிந்தனையில் சீடர்கள் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எங்கும் அமைதி . எங்கும் அமைதி. முன்வரிசையில் அமர்ந்திருந்த நந்தன் எழுந்து நின்றான். புத்தரின் கனிவுமிக்க பார்வை தன் உச்சி …

 12 total views

மாமன்னன்- கட்டமைக்க முயலும் போலி பிம்பங்களும், சில அற்புத தருணங்களும்…

திரை மொழி, திரைப்பட விமர்சனம் /

🛑 என்னை சக மனிதனாக பார்க்கும் விழிகளைக் காணும் போது தான் நான் நிம்மதி அடைகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். சாதி என்கின்ற கொடும் பேய் சாத்தான் போல அவரை துரத்தி துரத்தி வேட்டையாடிய ரத்தப்பக்கங்களை அவரது சுயசரிதையில் படிக்கும் போது எவராலும் கண்ணீர் சிந்தாமல் கடக்க முடியாது. ஏனெனில் சாதி பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் உணர்வாக/பண்பாடாக/செயலாக /வழிபாடாக/ உணவாக/ உடையாக .. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவி உள்ள அநீதியாகும். அதைத்தான் தனது தீவிர …

 12 total views

மே-18.

அரசியல் /

காலங்கள் கணக்கில்லாமல் கடந்தாலும்,வருடங்கள் வரிசையாக நகர்ந்தாலும் கண் முன்னால் நடந்த நம் இனத்தின் அழிவு,உலராத குருதியாய் உள்ளுக்குள் வடிகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடி பாரினை ஆண்ட பைந்தமிழ் இனம்,கேட்பாரும் மீட்பாரும் இல்லாமல்,உலகத்தார் அனைவராலும் கைவிடப்பட்டு அழிந்த கதை உள்ளத்தில் உறைகிறது. கண்ணுக்கு எட்டிய தொலைவில் சொந்த இனம் அழியும்போது,கைகட்டி வேடிக்கை பார்த்த கையாலாகாத தனம் குற்ற உணர்வாய் இதயத்தில் குமைகிறது. உடன் பிறந்தவள் உடை விலகினால் கூட மற்றவர் அறியாமல் மறைவாய் சரி …

 12 total views,  1 views today

அவனைப்போல வேறு யாருண்டு…??

சுயம் /

🟥 முதன் முதலாக நாம் தமிழர் கட்சியில் மாணவர் பாசறை உருவாக்கப்பட்டபோது அதன் தொடக்க கூட்டத்தில் தான் அந்த இளைஞனை நான் பார்த்தேன். மிக ஒல்லியான உடல்வாகு. யாரிடமும் முன்வந்து எதையும் கேட்காத கூச்ச உடற் மொழி. அவன் பெயரை அழைத்து மேடையில் ஏற்றிய போது தயங்கியவாறே சென்று பின் வரிசையில் நின்று கொண்ட அந்த நொடியில் என்னை போன்ற பலரது இதயத்தில் முன் வரிசையில் வந்து அமர்ந்து கொண்டவன் அவன். தம்பி என்று அழைத்தாலும் மனதால் …

 12 total views

“விடுதலை”நிகழ்த்தும் அரசியல் உரையாடல்களும் அதன் ஊடாக இருக்கின்ற அரசியலும்..

திரை மொழி, திரைப்பட விமர்சனம் /

🟥 சமீபத்தில் வெளியாகி இருக்கின்ற விடுதலை திரைப்படத்தைப் பற்றி பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடப்பதை சமூக வலைதளங்கள் மூலமாக அறிகிறோம். குறிப்பாக இது தமிழ்த்தேசிய அரசியலை பேசுகிறது என்று ஒரு கருத்தை தமிழ் தேசியர்கள் முன் வைக்கும் போது திராவிடக்கூடாரத்தில் இருந்தும் ,முற்போக்கு வகையறாவிடம் இருந்தும் கடுமையான வசவுகளும், பதட்டம் நிறைந்த சொல்லாடல்களும் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. விடுதலை திரைப்படம் அந்த வகையில் மாபெரும் வெற்றி அடைந்து விட்டது என்பதை அது அடைகிற எதிர்வினைகள் மூலம் …

 10 total views

எங்களுக்கு இளையராஜா போதும்.

திரை மொழி /

Disclaimer. முதலில் ஆஸ்கர் விருது பெற்றிருக்கின்ற நம்மூர் மரகதமணிக்கு அந்த ஊர் கீரவாணி க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பூங்கொத்து. அவரது அழகன் திரைப்படத்தில் வரும் எல்லா பாடல்களும் எனக்கு மிக மிக பிடித்தவை. குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே.” இப்பதிவு கீரவாணி மற்றும் ஏ ஆர் ரகுமானை குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல. இந்த சமயத்தில் இசைஞானி இளையராஜாவோடு ஒப்பீடுகளை நிகழ்த்தும் சமூக வலைதள வம்பர்களுக்கான பதில் மட்டுமே. 🛑 எங்கள் பள்ளி …

 11 total views

10827- வெறும் வாக்குகள் மட்டுமல்ல இவை.

அரசியல் /

🟥 ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்டன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை மேனகாவோடு நேற்று பேசிய போது “விடுடா தங்கை, இன்னும் கடுமையாக உழைத்து எதிர்காலத்தில் வெல்வோம்..” என்று ஆறுதலாய் சொன்னபோது, அவள் சொன்ன பதில்தான் இது. “நிகழ்காலத்திலேயே நாம் வென்று விட்டோம் அண்ணா …” 🟥உண்மைதான். பல்வேறு அனுபவங்களையும், உண்மையான போராளிகளையும்,எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இனத்திற்காக உழைக்க வந்த உழைப்பாளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற அண்ணன் சீமான் ஏற்கனவே வெற்றி …

 8 total views

ஈரோடு கிழக்கில் வென்றார் அண்ணன் சீமான்..

அரசியல் /

🛑 ஒரு அசலான போர்க்களத்தை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி எதிர்கொள்கிறது.ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடக்கின்ற இந்த போரில் அரசியல் மாண்புகள் அனைத்தும் ஆளும் கட்சியினரால் கொலை செய்யப்பட்டு விட்டன. ஜனநாயகம் என்ற பச்சைக் குழந்தை துடிக்க துடிக்க ஆளும் கட்சியின் அதிகாரத்தால் கழுத்தறுக்கப்பட்டு ஈரோட்டு கிழக்குத் தொகுதியின் வீதிகளில் கொலை செய்யப்பட்டு விட்டது. ஆடு மாடுகளை பட்டித் தொட்டியில் அடைப்பது போல மக்களை லாரிகளில் ஏற்றி வந்து மண்டபங்களில் அடைத்து வைத்து மற்ற எந்தக் …

 8 total views