மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

எதுவுமே இல்லை.

கவிதைகள் /

  திரும்பிப் பார்த்தால் எதுவும் இல்லை. நினைவில் கொள்ளவும்.. நினைவில் வைத்துக் கொல்லவும்.. ஏதேனும் ஞாபகங்களின் நிழல் துரத்தி வரவில்லை. மகுடங்களின் போதைகளும் சாபங்களின் சாயைகளும் நீக்கிப் பார்த்தால் வாழ்வென்ற சாலை வெறிச்சோடித்தான் கிடக்கிறது. ஒரு துளி விஷத்தால் உயிர்பித்ததும்.. ஒரு துளி கண்ணீரால் மரணித்ததும்.. தாண்டி யோசித்துப் பார்க்க எதுவுமில்லை. காதலிகளால் கவிதைகள் என்றானதும்.‌.. கவிதைகளால் காதலிகள் உண்டானதும்.. தவிர இங்கே கிறுக்கிக் கொள்ளவும் கிறுக்குக் கொள்ளவும் எதுவுமில்லை. சத்தியமாக சொல்வதெனில் இந்த காலி கோப்பைக்கு …

 789 total views

உண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.

திரை மொழி /

ஒரு போலீஸ்காரர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன.. தொப்பை வயிறு.. இறுக்கி அணியப்பட்ட சட்டை, எண்ணைப் போட்டு பளபளக்க வைத்திருக்கும் லத்தி, ஏதாவது கவனிச்சிட்டு போ.. என்கிற வார்த்தை, ஏட்டையா என்கிற சொல், இவை போன்றவை தானே.. அப்படியானால் நீங்கள் அவசியம் இத் திரைப்படம் பார்க்க வேண்டும். இந்திய நிலத்தில் மலையாளத் திரைப்படங்களுக்கு எப்போதும் இயல்பின் அழகியல் உண்டு. ஈரமும் மழையும் நிரம்பிய நிலக் காட்சிகள், மலையாள மண்ணின் பாரம்பரிய வீடுகள், யதார்த்தமான மனிதர்கள், எண்ணெய் …

 686 total views

அவரை உங்களுக்கு தெரியுமா ‌…??

அரசியல் /

அவரை இதுவரை நான் பார்த்ததில்லை. ஒரு நாள் அலைபேசியில் பேசினார். கட்சியில் இணைய வேண்டும் என்று சொன்னார். சரி . இணைந்து கொள்ளலாம். உங்களை நேரில் சந்திக்க வேண்டுமே என்றேன். இல்லை இல்லை.. எனக்கு வேலை இருக்கிறது.. நான் அதிகம் நேரில் வர முடியாது என்றார். சரி .உங்கள் அலைபேசி எண், புகைப்படம், உங்கள் முகவரி ஆகியவற்றை தாருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுப்பினர் அட்டை தருகிறோம் என்றேன். அனைத்தையும் அவர் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைத்தார். எனக்கும் …

 620 total views

காணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.

திரை மொழி /

  வாழ்வென்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப வரைந்து கொள்ளும் ஓவியமா அல்லது எதிர்பாரா மின்மையையே சூட்சமமாக கொண்டு எதனாலோ கிறுக்கப்படும் கிறுக்கல் தான் வாழ்க்கையா.. என்று நினைக்கும்போது இரண்டும் தான் என நினைக்கத் தோன்றுகிறது. இந்த வாழ்வு என்பது நிரந்தரம்.. ஒரு பாதுகாக்கப்பட்ட பெட்டியில் நாமும் நமது குடும்பத்தினரும் பத்திரமாக இருக்கிறோம் என்றெல்லாம் பலர் நினைத்துக் கொண்டிருப்பதால் தான்.. சின்னஞ்சிறு விதியின் பிசகில் கூட மானிட வாழ்வு பலருக்கு நரகமாகி விடுகிறது. ஆனாலும் மாற்றி எழுதப்பட்ட ஒரு …

 746 total views

அண்ணன் உதயகுமாருக்கு..

அரசியல் /

பாசமிக்க. அண்ணனுக்கு.நேசத்துடன் சில வார்த்தைகள்.. கடந்த சில நாட்களாக மதிப்பிற்குரிய அண்ணன் எஸ்.பி உதயகுமாருக்கு.. நமது மீது ஏதோ கோபம். சரி நமது அண்ணன் தானே போகட்டும் என்று கடந்து போக பார்த்தால்.. இன்று நம்மை பாசிசம்.. கம்போடியாயிசம் என்றெல்லாம் திட்டி இருக்கிறார். அட இது என்ன திராவிட வாசனை என்று யோசிக்கும்போது.. சரி கனிமொழிக்கு ஓட்டு கேட்டவர் ஆச்சே.. சகவாச தோஷம் போல.. என்று நினைத்து விட்டு விடலாம் என்று பார்த்தால்.. ஏன் நாம் தமிழர் …

 718 total views

காக்கப்படட்டும் காஷ்மீரம்..

அரசியல் /

கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் காஷ்மீர் ஸ்ரீநகருக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த வாஜ்பாய் அப்போது ஒரு கவிதையை எழுதினார். வசந்தம் விரைவில் திரும்பும். அழகிய பள்ளத்தாக்கில் மீண்டும் மலர்கள் மலரும். நைட்டிங்கேல் பறவைகள் திரும்பும்.. மீண்டும் இசைத்துக் கொண்டே.. (Spring bill return to the beautiful valley Soon. The flowers will bloom again and the nightingales will …

 742 total views

சூனா. பானா வின் பஞ்சாயத்து..

அரசியல் /

  சமீபத்தில் காவிரி தொலைக்காட்சியில் பேட்டியாளர் மதன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதது குறித்து சுபவீ இன்று விளக்கம் என்ற பெயரில் வழக்கம் போல் வழ வழா கொழ கொழா பதிவு ஒன்றினை இட்டிருக்கிறார் . வழுக்கி விழந்ததை கூட இப்படி எண்ணை தடவி காட்டுவதற்கு சுப‌.வீயால் தான் முடியும். அது போகட்டும். பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுபவீ தடுமாறியது அவரது அரசியல் தோல்வி. அத்திவரதரை பார்க்க ஏன் திமுக தலைவர்களின் …

 1,109 total views

அது காதலில்லை..

கவிதைகள் /

எனவே அது காதலில்லை என்பதை அறிக.. வலி மிகுந்து தோளில் முகம் புதைத்து விசும்பியதை.‌. இறுக விரல் பிணைத்து நெடுநீள பயணத்தில் கதைகள் பேசியதை.. நள்ளிரவு உரையாடல்களில் தென்படும் மெளனத்தை நேசத்தின் மொழி கொண்டு மொழிபெயர்த்ததை… நடுநிசி கடலோர காற்றில் அலைபேசி இசையோடு கால்கள் நனைத்து கிடந்ததை.. மொத்தமாக சில நாட்கள் தொலைந்து நம்மை நாமே அறிந்துக் கொள்ள முகவரியற்ற ஊரில் அலைந்து திரிந்ததை… குறுஞ்செய்திகளில் இதயம் மிதக்க வைத்து பிடித்த பாடலின் இணைய முகவரியை தேடி …

 930 total views

இசைக்கப்படாத சொற்கள்

கவிதைகள் /

இந்த யாசிப்பில் எனக்கு எவ்வித கூச்சமுமில்லை. மண்டியிட்டு தாழவும் மருகி உருகவும் காலடி தொழவும் தயாராகவே உன் முன்னால் நிற்கிறேன். தயவு செய்து போய்விடு. இரக்கமற்ற உன் சமாதானங்களை நனைந்த காலணிக்குள் நெளியும் தவளை என உணர்கிறேன். காரணமற்று கலங்கும் உன் கண்கள் வியர்வைப் பொழுதுகளின் சுடுதேநீர் போன்றவை. பேச்சற்று நீ இசைக்கும் மெளனம் பாலையில் தனித்து பதியும் தடங்களை ஒத்தவை. பிரிவின் மொழி பூசி உதிரும் வெற்றுச் சருகுகளால் நிரம்பி இருக்கின்றன உன் சொற்களின் தாழ்வாரம். …

 767 total views

உதயநிதி போதும். நம்மாழ்வார் எதற்கு..??

அரசியல் /

நாம் தமிழர் கட்சியில் இன்று பயணிப்பவர்களில் நான் உட்பட 99% திமுக குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான். திமுகவை கருப்பு-சிவப்பு கொடியை கலைஞர் கருணாநிதி அவர்களை முரசொலி நாளிதழை தங்கள் உயிராக நினைத்து நேசித்தவர்கள் தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம். திமுகவின் முதல் இணையதள தலைமுறையின் முக்கிய மானவர்களில் நானும் ஒருவன் ‌. ஆர்குட் காலத்திலேயே திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து எழுதியவர்களை பக்கம் பக்கமாக எழுதி விரட்டி அடித்தவர்களில் நானும் ஒருவன். …

 772 total views