மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

எம்.எஸ்.வி -இசையால் நிறைத்த பெருமழை..

கட்டுரைகள்.. /

    எழுபதுகளின் இறுதியிலும் , எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான கட்டமைக்கப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாங்களெல்லாம் இளையராஜாவோடு வளர்ந்தவர்கள். ஏறக்குறைய எம்எஸ்வி காலம் அப்போது இறுதி காலத்தை எட்டியிருந்தது.நாட்டுப்புற அழகியலோடு இளையராஜா அள்ளிக்கொடுத்த மென் சோக செவ்வியல் இசை இரண்டு தலைமுறை காலத்து தமிழ்ச் சமூகத்தை கட்டிப்போட தொடங்கியதும் அந்த காலகட்டத்தில்தான் . இளையராஜாவின் இசை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகவே நாங்கள் நம்பினோம். அவரது சமகாலத்து …

 702 total views

கணக்கு-வழக்கு

என் கவிதைகள்.. /

  நின்று நிதானித்து திரும்பிப் பார்த்தால் நிறைவொன்றுமில்லை. குறையொன்றுமில்லை. கண் கூசும் வெளிச்சங்களுக்கு, உச்சுக் கூசும் உயரங்களுக்கு, புகழ் வார்த்தை தளும்புகிற போதைகளுக்கு, அடிமையாகிப் போன கணக்கினைத் தவிர மிஞ்சியது ஏதுமில்லை. கடந்தவை நடந்தவை எல்லாம் கணக்கிட்டால் நிகழ்ந்தவை தானே என பெருமூச்சுயன்றி வேறில்லை. முதுகில் உரசும் கத்திகளுக்கு இடையே.. நெஞ்சில் உறுத்தும் புத்திகளுக்கு இடையே.. விளையாடித்தீர்த்தும் பலனில்லை‌. ஆயிரம் சூழ போகித்திருந்தாலும் சத்தியமாய் சொல்கிறேன் நலனில்லை. இது தானா வாழ்வு என்பதிலும்.. இது நானா – …

 447 total views

நிகழுலக நினைவுகள்..

என் கவிதைகள்.. /

  எங்கிருந்தோ வீசி என் பின்னங்கழுத்தை உரசி செல்கிற காற்றில் உன் மெல்லிய விரல்கள் ஒளிந்திருக்கின்றன. எதிர்பாராமல் சிந்துகிற எதிர்ப்படும் குழந்தையின் புன்னகை ஒன்றில் பொன்னெழில் பூசிய உனது கன்னக்கதுப்புகள் மலர்ந்து இருக்கின்றன. அடர்மழை குளிர் இரவில் கண்ணாடிக் கூண்டினில் அசையும் மெழுகுச்சுடரில் நிலா இரவொன்றில் கிறங்கிப் போயிருந்த உன் நீல விழிகளின் வெப்பம் தகிக்கின்றன. பின்னிரவின் ஒத்திசைவு லயிப்பில் கேட்கும் இளையராஜாவின் பியானோ வாசிப்பின் இடையே மலரும் மெளனங்கள் அடர்த்தியாய் என் முகம் போர்த்தும் உன் …

 479 total views

தேவைப்படுகிற புரிதலின் வெளிச்சம்..

அரசியல் /

    *** எதையும் புரிந்து கொள்ளாமல் தாங்கள் சொன்னது மட்டுமே சரி என வாதாடுகிற சங்கிகள் மட்டுமல்ல இன்னும் சிலதுகள் இருக்கின்றன. தாய்மதம் மாற சொல்கிறார் சீமான் என இஸ்லாமிய கிருத்துவ மதங்களை தழுவிய தமிழர்களிடம் பதிவுகள் இட்டும் , காணொளிகள் போட்டும் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றன. அண்ணன் சீமான் சொன்னது ஆதித் தமிழரின் நம்பிக்கையை, மெய்யியல் தத்துவங்களை கொள்ளையடித்து இந்துத்துவ மயமாக்கி கொண்ட வருணாசிரம கேடுகளில் இருந்து தமிழர்கள் விடுதலை அடைந்துகொள்ள மீண்டெழும் தமிழர் …

 520 total views

பரவச வானை உரசிப் பார்த்த எளிய கரங்கள்..

அரசியல் /

      ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை பொறுப்பேற்று நடத்துவது என்பது ஏறக்குறைய‌ முதன்முதலாக தன் ஒரே மகளின் திருமணத்தை பொறுப்பேற்று நடத்துகிற‌ தந்தையின் வலிக்கு நிகரானது. ஆனால் கும்பகோணம் நாம் தமிழருக்கு பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்துகிற அனுபவம் புதிதல்ல என்றாலும்.. இந்த முறை வேறு வகையான மாறிப்போன சூழல்கள். வீரத்தமிழர் முன்னணியில் சாமிமலை கூட்டம் ஒரு வருட காலத்திற்கு முன்பே அண்ணன் சீமானால் அறிவிக்கப்பட்டது என்றாலும் நடுவில் ஏற்பட்ட பல சூழல்கள், குடந்தை நகரச் செயலாளர் …

 570 total views

அண்ணன் சீமானின் “அன்பு”

கட்டுரைகள்.. /

அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் தான் இருக்கிறதா என்பது போன்ற சந்தேகங்களை எழுப்புகிற ஒரு நிலப்பகுதி. தஞ்சை கடைநிலை பகுதியான சீர்காழி என்கின்ற ஒரு சிறிய நகரத்தைத் தாண்டி தில்லை நத்தம் என்கின்ற உள்ளடங்கிய ஒரு குக்கிராமம். ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் வழி விட முடியாத அளவிற்கு குறுகிய ஒற்றைச் சாலை. அந்தக் கிராமத்தின் தெருவில் கடைசி வீடாக அந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட எளிய வீடு இருந்தது.‌ மிகச் சிறிய வீடு. …

 534 total views