மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

துளி-2

துளிகள் /

    இன்று தம்பி துருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தைப் பற்றி மிக சுவாரஸ்யமான பல தகவல்களை துருவன் சொல்லிக்கொண்டே போனான். உண்மையில் ஆரண்யகாண்டம் எனக்கும் பிடித்த படம் தான். தமிழில் வெளிவந்து இருக்கிற சில அபூர்வமான திரைப்படங்களில் ஆரணிய காண்டம் ஒன்றாக திகழ்கிறது. தமிழின் முதல் Neo noir வகை திரைப்படம். Neo noir வகை என்பது குற்றங்கள் அதன் பின்னணிகள் குறித்த தனித்துவ பார்வையோடு புனையப்படும் வகைமை. …

 1,098 total views

துளி-1

துளிகள் /

யாருடைய பிறப்பிற்காகவும் ,இறப்பிற்காகவும் காத்திருப்பதில்லை உலகம். யாருடைய வருகைக்காகவும், யாருடைய விலகலுக்காகவும் அது நிற்பதில்லை. பூமி சுழன்று கொண்டுதான் இருக்கிறது. எந்த இடமும் வெற்றிடமாக இல்லை‌. காற்று இல்லாத இடங்களில் கூட இன்மை நிறைந்திருக்கிறது. நீரை ஒத்திருக்கிறது மனிதனின் மனம். எந்த இடங்களிலும் எந்த சூழ்நிலைகளிலும் அது பொருந்திக் கொள்கிறது அல்லது பொருந்திக்கொள்ள போராடுகிறது. அவனை அவனாக தோற்கடிக்க வில்லையெனில்… எவனும் எவனையும் தோற்கடிக்க முடியாது. சுருங்கச் சொன்னால் உலகம் நாம் நினைப்பதைக் காட்டிலும் மகத்தானது . …

 670 total views

பெரியார்- என் புரிதலில்..

அரசியல் /

    தமிழ்ச் சமூகம் தனது நீண்ட நெடிய பாதையில் எத்தனையோ தலைவர்களை கண்டிருக்கிறது. ஆனால் பெரியார் போன்ற ஆளுமையை இந்த நிலம் அதுவரை பார்த்ததில்லை. பெரியார் எழுதியிருக்கிற /பேசியிருக்கிற அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நம் நிலத்தில் வேறு எந்த தலைவருக்கும் இப்படிப்பட்ட முறை வகை ஒழுங்கு நிகழ்ந்ததில்லை. பெரியார் இருந்த காலகட்டத்தில் அவர் உரைத்த கருத்துக்களில் பலவற்றில் குறிப்பாக அவரது மொழிக் கொள்கையில் ,மொழி பற்றிய அவரது நிலைப்பாட்டில் எனக்கு கடுமையான முரண்கள் உண்டு. …

 1,365 total views

இளையராஜா என்கிற கால இயந்திரம்.

சுயம் /

    சன் தொலைக்காட்சியில் சற்று நேரத்திற்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்தப் பாடல்களை நாம் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். அதே பாடல்கள்தான்.. அதே இசைதான். ஆனாலும் முதல் முறை கேட்ட போது எந்த உணர்ச்சியை நாம் பெற்றோமோ.. அதே உணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறை அந்த பாடலை கேட்கும் போதும் வருமே ..அதுதான் இளையராஜா. எனக்கெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்கும்போது அந்த பாடலை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் …

 761 total views

*****தனி ஒருவன்******

சுயம் /

நீ அந்தியின் கரைகளில் நின்று கொண்டு  வெளிச்சங்களை தன்னுள் புதைத்தவனைப் பற்றி புறம் பேசுகிறாய்.. முதுகில் குத்தும் கத்தி ஒன்றை கொண்டு உலகை உள்ளத்தால் வென்றவன் ஒருவனை எளிதாக வெல்ல முயல்கிறாய்.. உன்னால் புனையப்படும் பொய்மையின் தோற்றங்களின் எல்லைகளுக்கு அப்பால் நிற்கிற பேரன் பின் ஆதிச்சுழியை அவதூறு பேசுகிறாய்.. அவன் ரதகஜபடைகளோடு களத்திலே நிற்கிறான்.. நீ வெறும் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு அவனை வென்று விட்டதாக வாயை மெல்கிறாய்… அவன் காற்றின் அலைவரிசை கோர்த்து புத்தம் …

 671 total views

தற்கால மருத்துவ நல விவாதங்களும்….தமிழர் மரபு மருத்துவமும்

கட்டுரைகள்.. /

      சமீப காலமாக மரபு வழி மருத்துவத்திற்கும், ஆங்கில மருத்துவத்திற்குமான முரண் உரையாடல்கள் நடந்து வருகின்றன. மரபு வழி மருத்துவம் பிற்போக்குத்தனமானது, அறிவியல் தன்மையற்ற கையாளல்   என்றும் , ஆங்கில வழி மருத்துவம் அறிவியல் பூர்வமானது என்றும் ,நவீனமானது என்றும் அவரவர் பார்வைகளுக்கேற்ப ,அரசியல்- சமூக சிந்தனைகளுக்கேற்ப ஒருவருக்கொருவர் ஊடகங்களிலும், சமூக வெளி தளங்களிலும் விவாதித்து வருகின்றனர்.  ஆங்கில மருத்துவம் தான் அகில உலகையும் காக்கவும் மீட்கவும் வந்த இறுதி மீட்பர் போல சில முற்போக்கு முட்டுச்சந்துகள் …

 2,296 total views,  1 views today

இ.த.ச பிரிவு 377 நீக்கம்- தேவைப்படும் சில புரிதல்கள்..

கட்டுரைகள்.. /

இன்றைய தினம் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களை விடுவிக்க அதிகாரம் தமிழக அரசுக்கு பிரிவு 161 ன் வாயிலாக உண்டு என்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. மற்றொன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 யை ரத்து செய்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. 1860 ஆம் ஆண்டு மெக்காலே பிரபு அந்த கால சூழலுக்கு ஏற்ப …

 952 total views,  1 views today

சொல்ல முடியாதவைகளின் சொற்கள்..

சுயம் /

      யாருக்காவது எதையாவது சொல்ல விரும்பி சொல்லமுடியாமல் தவித்திருக்கிற அனுபவம் உங்களில் யாருக்கேனும் இருக்கிறதா… சொல்ல முடியாத அன்பு.. காட்ட முடியாத காதல்.. நிறைவேறாத கனவு.. முடிவுறாத பற்று… பூர்த்தியடையாத ஆசை ..என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் உங்களின் உணர்ச்சியும் இருக்கக்கூடும். தாய் மடி வாசம் போல சில உணர்ச்சிகள் வார்த்தை வடிவங்களுக்கு உட்படாதவை. சொற்களின் விவரிப்பு எல்லைக்கு அப்பால் நின்று நம் தவிப்பை வேடிக்கை பார்ப்பவை. அப்படித்தான் நானும் இப்பொழுதில் தவித்துக் …

 621 total views

நிலாக்காலம்..

சுயம் /

  நாங்கள் ஒரு காலத்தில் நிலாவில் இருந்தோம். உண்மையாகவே எங்கள் ஆத்தா அந்த நிலாவில் தான் வடை சுட்டார்.. எப்போதும் வெளிச்சம் இருக்கிற நிலாவில் நாங்கள் பகலிரவு தெரியாமல் வளர்ந்தோம். பிணைக்கப்பட்ட விரல்களோடும்.. எங்களை சுமந்த 7 தோள்களில் தான் நாங்கள் முதற் கனவு கண்டோம். நம்ப மாட்டீர்கள். அந்த கனவிலும் நிலா வந்தது. .. நம்ப மாட்டீர்கள். நாங்கள் கூட நம்ப முடியாமல் தவிக்கிறோம்.. ஆம். நாங்கள் ஒரு காலத்தில் நிலாவில் இருந்தோம் ————– அன்பின் …

 592 total views,  1 views today

இமைக்கா நொடிகள்- ஒரு பார்வை.

திரைப்பட விமர்சனம் /

ஆல்பர்ட் ஹிட்சாக் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் ஒரு சம்பவத்தை ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி திரைப்படம் முடியும் போது அதை தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி வேறொரு புள்ளியில் முடிக்கின்ற யுக்தி குறித்து அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும். மனித உளவியலுக்கேயுரிய இயல்பாக இருக்கின்ற இந்த முரணை மூலதனமாகக் கொண்டுதான் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழில் இதுபோன்ற பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்து தமிழில் வெளிவந்த சிறந்த …

 798 total views