மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

அவன் அப்படித்தான்..

அரசியல் /

  நீங்கள் என்ன வேண்டுமானாலும் அவனை விமர்சித்து விட்டு போங்கள். ஆனால் அவன் அவனாகவே இருக்கிறான். அலை பாய்ந்து வரும் அவதூறுகளுக்கு அவனுடைய பதில் செயல். விஷம் தோய்ந்த அம்புகள் என எய்யப்படுகிற பொய்களுக்கு அவனுடைய பதில் உண்மை. ஒதுக்கி வைத்து ஓரம் கட்டப்பட்டு வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிற சதிகளுக்கு அவனுடைய பதில் அலட்சிய எக்காளத்துடன் கூடிய சிறு புன்னகை. காலம் காலமாய் கட்டி வைத்திருக்கிற புராதன பழமை பஞ்சாங்கங்களுக்கு நெருப்பு வைத்து விட்டு புத்துலகம் படைக்க …

 611 total views

மெளனத்தின் மலர்

கட்டுரைகள்.. /

      அலைவரிசை தவறிய உன் தடுமாற்ற சொற்களுக்கு மத்தியில்.. உனது மெளனம் ஒன்று சின்னதாய் பூத்துவிடுகிறது. அந்த மெளனத்தின் ஆழத்தில் தான் எனது மீளெழும்பலுக்கான பாடலை நான் கண்டடைய வேண்டும். புராதன காதலுணர்வின் ஆதித்துயராக அந்த மெளனத்தை நான் நம்புகிறேன். அது அதுவாக கலைவதற்குள்.. அல்லது நீயே அதை கலைப்பதற்குள்.. இப்போதே நீ போகலாம். மணி செந்தில்.  780 total views

 780 total views

காலமென்ற பொல்லாத மிருகம்

அரசியல் /

வைகோவிற்கு அன்றைய திமுக அரசு தொடுத்த தேசத்துரோக வழக்கு மீது இன்று ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிற தண்டனையை நாம் நினைக்கும் போது சில காட்சிகள் நம் மனதிலே எழுகின்றன. வைகோ மீது தொடுக்கப்பட்ட வழக்கு போல.. அன்றைய இனத்துரோக திமுக ஆட்சியில் பல அநியாய வழக்குகள் தொடுக்கப்பட்டன. இனப்படுகொலையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய ஆதரவும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதில் அன்றைய திமுக அரசு மிகுந்த …

 594 total views

செத்துப் போன ஒரு திமுக காரனின் கடைசி முனகல்..

அரசியல் /

ராகு காலம் எமகண்டம் பார்த்து வளர்பிறை அமிர்த யோகத்தில் திமுக இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று இருக்கின்ற உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பினை பற்றி விடுதலையில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்.. இதேபோல ஒரு நாள் திகவின் தலைவராக ஆக இருக்கிற அன்புராஜ் வீரமணியின் பதவியேற்பினை பற்றி முரசொலியில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்.. இதேபோல திமுகவின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும்போது பதவியேற்பினைப் பற்றி விடுதலையில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும்.. அதேபோல திமுகவின் இளைஞரணி செயலாளராக …

 762 total views

ஒரு வரலாற்றின் கதை.. ——————————–

அரசியல் /

  அவன் முன்னால் கால்கடுக்க நின்றவாறு அவனின் சொற்களுக்கு ஏற்றவாறு.. சிந்தித்தும் சிரித்தும் கோபப்பட்டும் கொந்தளித்தும் ஆர்ப்பரிக்கும் அந்த இளைஞர் கூட்டம் அரியணையில் அமர்ந்து அரசாண்ட ராஜவம்சத்தினர் அல்லர். மிக எளியவர்கள். அவர்களின் தந்தையர் செய்திருந்த வரலாற்றுப் பிழைகளுக்காக.. அவர்கள் அங்கே கூடியிருந்தார்கள். அவர்களின் தந்தையரும் அவர்களைப் போலவே எளியவர்கள்தாம். தவறான எஜமானர்கள் மீது கொண்டிருந்த அளவற்ற விசுவாசத்தால் அவர்களுக்கு அவர்களாகவே விதித்துக் கொண்ட கொடும் விதியின் கரம் பற்றி வாழ்ந்தவர்கள். ஒரு பொன்னான ஐம்பது ஆண்டு …

 651 total views

உங்களோடு ஒரு நிமிடம்

அரசியல் /

  உங்களோடு ஒரு நிமிடம .. அந்த உணர்வை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது இனவெறியாக, பாசிசமாக நாசமாக காட்டுமிராண்டித்தனமாக எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். இந்தக் காற்று இந்த நிலம் இந்த மலை இந்த மண் இந்த செடி கொடிகள் இந்த மரம் என இங்கே இருக்கின்ற அனைத்தும் எங்களுக்குச் சொந்தம். நான் இம்மண்ணின் பூர்வகுடி. நீங்கள் உங்கள் தத்துவ ஆயுதங்களை தூக்கிக்கொண்டு எங்களது வீதிகளில் வந்து இனிப்பு தடவிய வார்த்தைகளால் ஒரு எதிர்காலத்தை …

 595 total views

ஜெயமோகனின் தோசை.

இலக்கியம் /

பிரச்சனை என்னவென்றால்.. அந்தக் கதையை முழுதாகப் படித்து பாருங்கள். தினந்தோறும் இயல்பான வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டு பிரபல எழுத்தாளர் ஒருவர் தாக்கப்படுகிறார். இதில் மகிழவோ சிரிக்கவோ ஒன்றுமில்லை என்றாலும் கூட.. இதுதான் தமிழ் சமூக மனநிலையின் நிலை, தமிழ் சமூகமே சாடிஸ்ட்.. என்றெல்லாம் கொதிப்பதற்கும், குதிப்பதற்கும் இதில் ஒன்றுமில்லை. ஆனால் சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கின்றன. ஆசானுக்கும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் கூடி …

 783 total views