மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சந்தேகங்கள் நிரம்பிய தேர்தல் முறைமை -எழும்பும் வினாக்களும்.. நீடிக்கும் பொது மெளனமும்..

அரசியல் /

இந்தத் தேர்தலைப் பொறுத்து சில சந்தேகங்கள் நமக்கு எழுந்திருக்கின்றன. இதையே சந்தேகங்கள் இன்னும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். இந்த சந்தேகங்கள் குறித்து இதுவரை எந்த ஊடகமும் எவ்விதமான விவாதங்களும் மேற்கொள்ளாமல் கடந்து போக முயற்சிப்பதில் இருந்தே இந்த சந்தேகங்கள் மீதான வலிமை அதிகரிக்கிறது. உரையாடல்கள்/ கேள்விகள்/ விவாதங்கள் எதுவுமற்ற சந்தேகங்கள் உண்மைகளுக்கு நெருக்கமானவை என்பதுதான் அச்சமாக இருக்கிறது. 1. பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்த மாநிலத்தை ஆளுகின்ற அண்ணா திமுக அரசிற்கு தனது ஆட்சியைக் காப்பாற்றிக் …

 720 total views

துளி -26 Photograph -hindi- தயக்கங்களின் பேரழகு.

துளிகள் /

  நீ நடக்கும் பாதையில் எனது சொற்கள் மஞ்சள் நிறப் பூக்களாய் உதிர்ந்து கிடக்கின்றன. உன் மௌனம் ஒரு வண்ணத்துப் பூச்சியாய் மாறி என் தோளின் மீது அமர்ந்து விட்டு செல்கிறது. உன்னைக் காணும் கணப்பொழுது என்னுடைய நிகழ்காலத்தை வெள்ளை பனிக்கட்டியாய் உறைய வைக்கிறது. உறைந்துவிட்ட காலத்தை உலர வைக்க மீண்டும் உன்னைத்தான் தேடி வர வேண்டியிருக்கிறது. ஒருமுறை பார்த்துவிட்டு போ. சலசலத்து ஓடும் வாழ்வின் நதி எதையும் கடத்தி விட்டு போகும் கரைத்துவிட்டு போக்கும் வல்லமை …

 731 total views

திமுக Vs நாம் தமிழர்.

அரசியல் /

  கடந்த சில நாட்களாக திமுகவினர் நம்மை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் பதிவுகளில் குறிப்பிட்ட சில அம்சங்கள் காணப்படுகின்றன. இது வரை இல்லாத மூர்க்க எதிர்ப்பினை பதிவு செய்து வரும் அவர்களது பதிவுகள் நாம் தமிழர் கட்சி கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியலில் பெற்றிருக்கின்ற மறுக்க முடியாத வளர்ச்சியை ஒரு குறியீடாக குறியிட்டு காட்டுகின்றன. இப்படி விமர்சிக்கும் எந்த திமுகவினரும் நாம் தமிழர் கட்சி முன்வைக்கிற சுற்றுப்புற சூழல் சார்ந்த பசுமைப் பொருளாதாரத்தை பற்றியோ, தற்சார்பு …

 614 total views

கடவுள் மரித்த நிலம்..

கவிதைகள் /

—-+-+-+++++++++ கரை ஒதுங்கிய மீனின் வயிற்றில் குழந்தையின் கண் ஒன்று இமைக்காமல்.. கண்ணை உற்றுப்பார்த்தோர் கலங்கித்தான் போனார்கள். அசையாத விழியில் உறைந்த காட்சிகள் அசைந்துக் கொண்டிருந்தன.. பிஸ்கட் தின்றவாறே எங்கோ வெறித்திருந்த சிறுவனின் பார்வை. இடுப்பிற்கு கீழே வெடிக்குண்டால் சிதைக்கப்பட்ட பெண்ணொருத்தியின் நிர்வாண உடல் நெஞ்சோடு தாய் மண்ணை இறுக்கிப் பிடித்த வாறே இறந்திருந்த போராளியின் இறுக மூடிய விரல்கள்.. பின்னந்தலையில் சுடப்பட்ட தோட்டாவால் முன்னால் சிந்திய உதிரத்தை பார்த்த விழிகள்.. கைவிலங்கிடப்பட்ட சீருடைப் பெண்ணின் குனிந்த …

 1,054 total views

பத்தாண்டுகள் ஆனாலும் கடக்க முடியாத இன அழிவின் கொடும் பாலை..

அரசியல் /

பத்தாண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் கடக்க முடியாத பெரும் வலியாக இனத்தின் அழிவு ஆழ்மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் போரின் இறுதிக் கால கட்டங்களில்.. யாராவது போராடி இந்தப் போரை நிறுத்தி விட மாட்டார்களா என்று ஒவ்வொரு அமைப்பும் நடத்திய போராட்டங்களில் உரத்த குரலில் முழக்கமிட்டது நினைவுக்கு வருகிறது. என்னைப் போலத்தான் பலரும் அக்காலகட்டத்தில் இருந்தார்கள். மனதின் சமநிலை தவறுகிற ஏதோ ஒரு நொடியில் தன்னைத் தானே எரித்துக் கொள்ளலாம், அதுவே மிகப்பெரிய …

 644 total views

கமலின் ‘ராஜதந்திர’ இந்துத்துவ அரசியல்

அரசியல் /

– முதலில் ஹே ராம் என்ற திரைப்படமே இந்துத்துவா திரைப்படம் தான். இந்து-முஸ்லிம் கலவரத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக காட்சியை வைத்து விட்டு கதாநாயகியை முஸ்லிம்கள் கற்பழிப்பது போல காட்சியை வைத்துவிட்டு, கதாநாயக கதை பின்னலில் முஸ்லிம்களின் கலவரத்தால் தான் இந்துக்கள் தூண்டப்பட்டார்கள் என்கின்ற அரசியலை மிக நுட்பமாக பேசுகிற படம் அது. கமல் எப்போதுமே எதையுமே நேரடியாக பேசியது இல்லை. கடவுள் இல்லை என்று நான் கூறவில்லை. இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன் என்று குழப்படி …

 528 total views

இதழியல் அறத்திற்கு தடம் விளைவித்த அவதூற்று தடங்கள்.

அரசியல் /

மதிப்பிற்குரிய தடம் ஆசிரியர் குழுவினருக்கு.. விகடனின் தடம் வெளியிட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பிதழை காண நேர்ந்தது. டெசோ மாநாடு ஒன்றின் சிறப்பு மலர் போல தயாரிக்கப்பட்ட அந்த சிறப்பிதழில் வேண்டும் என்றோ வேண்டாமென்றோ எக்கச்சக்க ஒருபக்கச்சார்பு அரசியல் நிராகரிப்புகள். இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்க முடியும் என்றாலும் கூட..விகடன் போன்ற வெகுஜன இதழ்கள் எக்கருத்தை முன்மொழிகின்றன என்பது கவனிக்க வேண்டிய அரசியல் செயல்பாடு என்பதனாலேயே இதை எழுத வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு கருத்தை தீவிரமாக ஆதரித்து அது சார்பாக …

 629 total views

உங்களுக்கும் பசிக்கும் அல்லவா.. சுபவீ..??

அரசியல் /

—————- பொய்யர் சுபவீ அவர்களே.. திராவிடத்தை நீங்கள் விமர்சித்த பேச்சுக்கு மழுப்பல் விளக்கம் கொடுப்பதற்காக நீங்கள் வெளியிட்ட காணொளி யில் என்னையும், பாக்கியராசனையும் பற்றி மிக இழிவான நோக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை முழுக்க பொய்யும் பித்தலாட்டங்களும் பிழைப்புத் தனமும் செய்வதையே முழு நேரப்பணியாக செய்துகொண்டு கொண்டு வாழ்ந்து வருகிறீர்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் உங்களோடு ஒரு காலத்தில் இணைந்து பயணித்தவன் என்ற முறையில் சில உண்மைகளை இந்த நேரத்தில் வெளியிட வேண்டி இருக்கிறது. …

 594 total views

நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்கான எதிர்வினைகள்..

அரசியல் /

நேற்று நள்ளிரவு நீண்டகாலமாக பழக்கப்பட்ட ஒரு தம்பி அலைபேசியில் எடுத்து நம்மைப் பற்றி அவதூறு பரப்புவதையே ஒரு முழு நேர வேலையாக கொண்டு திமுக இணைய தள அணியை சேர்ந்த சிலர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா.. என்று கேட்டார். அவருக்கு நான் அளித்த பதிலை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது இப்போது சரியாக இருக்குமென நான் உணர்கிறேன். பல இணையதள திமுக காரர்கள் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியை பற்றியும் அண்ணன் சீமான் …

 525 total views