மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

தனித்தலைகிற தழுவல்கள்…

கவிதைகள் /

சொற்கள் குவிக்கப்பட்டிருந்த அந்த நிலா முற்றத்தில் நான் தனித்திருந்தேன் எனக்கு ஆக பிடித்தவனுக்காக.. விழி இழந்தவனின் விரல் நுனி போல தேர்ந்த சொற்களின் பதம் பார்த்து நினைவின் அடர்பாசி மாலை ஒன்றினை சூட்ட ஒளி உமிழும் கரங்களோடு காத்திருந்தேன். . அடுக்கடுக்காய் தடுக்கிற நினைவின் மடிப்புகளில் சதா கலைந்துக் கொண்டே இருந்தேன் ஒரு வித சங்கடத்தோடு.. என்னை கண்டு வாரி அணைக்கிற அவனது புன்னகையும்.. தோள் தழுவி பூரிக்கின்ற அவனது ஈர விழி அசைவுகளும்.. பழகிய அடவுகளாய் …

 1,259 total views,  1 views today