மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

தமிழ்த் தேசிய சுவடுகள் -4 தமிழ்த்தேசிய இனமும், தேசிய இன உருவாக்கமும்,

அரசியல் /

தேசிய இனம் என்ற சொல்லுக்கு சமகாலத்தில் பல விரிவான விளக்கங்கள் கிடைக்கின்றன. ஒரு பொது மொழி, பொதுவான வாழ்க்கை முறை, ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, ஒருபொதுவான பொருளியல் அமைவு, தனிப்பண்பாட்டின் சிறப்பியல்புகள் இவைகளால் அந்த இனத்திற்குள்ளாக ஏற்படுகின்ற பொதுவான உளவியல் உருவாக்கம் ஆகியவற்றைப் பெற்று வரலாற்றின் போக்கில் இணைந்த பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து  அமைந்த ஒரு நிலையான சமுதாய மக்களே தேசிய இனமென வரையறுக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஜே.வி. ஸ்டாலின் ஒரு மொழி வழி அமைந்த  ஒரு தேசிய …

 2,385 total views

சமீப மலையாளத் திரைப்படங்கள் -எளிமையின் அழகியல்.

திரை மொழி /

சமீப கால மலையாளத் திரைப்படங்களின் தரமும், திரைக்கதை அடவுகளும் நம்மைப் பொறாமைப்படுத்துகின்றன. ( நன்றி : துருவன் செல்வமணி, packiyarasan se) சமீப காலமாக வரிசையாக பல மலையாளப்படங்களை கண்டு வருதலில் நான் உணர்ந்தது மலையாளப்படங்கள் கொண்டுள்ள எளிமை.   இன்னமும் தன் பண்பாட்டு விழுமியங்களை தனது திரைமொழி மூலமாக ஆவணப்படுத்துகிற மலையாளிகளின் கவனம் பிரமிக்கத்தக்கது. புதியவர்களின் வருகையால் மலையாள திரையுலகம் புத்துணர்ச்சி அடைந்ததுள்ளது. துல்கர் சல்மான், நிவின் பாலி , பஹத் பாசில், சாவித்திரி என …

 1,490 total views

எஸ்.ராமகிருஷ்ணனும் -தங்கம்மா வீடும்..

இலக்கியம் /

புத்தக வாசிப்பு போல உலகில் இன்பமானது ஏதுமில்லை. அதுவும் தேர்ந்த எழுத்தாளன் கரத்தில் ரசனை மிக்க வாசகன் சிக்கிக் கொள்ளுதல் போன்றதோர் மகிழ்ச்சிக்கரமான தருணம் ஏதுமில்லை. என்னையெல்ல்லாம் அடித்து துவைத்து காயப்போட்ட பல புத்தகங்கள் உண்டு. வாசித்தல் என்பது ஒரு வசீகரமான மாயச்சுழி. அச்சுழியில் சிக்கிக் கொண்டு மீளவே முடியாத பல அடிமை வாசகர்களில் அடியேனும் ஒருவன்.   தமிழ் இலக்கிய உலகில் தி.ஜா என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் படித்து விட்டு அக்கதையில் வரும் …

 2,213 total views

தமிழரின் வரலாற்றுப் பயணம் – தமிழ்த்தேசியச் சுவடுகள் 3

கட்டுரைகள்.. /

      பின்னே திரும்பி பார்க்காதவன் முன்னே பார்க்கும் பார்வையை இழக்கிறான் என்கிறார் மாவீரன் அலெக்சாண்டர். நம்முன்னே விரிந்துக்கிடக்கும் கடந்த காலங்களின் சுவடுகளை கவனிக்காது, அறியாது எதிர்காலத்தின் பாதையை நம்மால் தீர்மானிக்க முடியாது. எனவே தமிழன் எவ்வாறு ஒரு தேசிய இனமாக உருவாக்கம் கொண்டான் என்பதற்கான பயணத்தில், தமிழரின் வரலாற்றுப் பாதையையும் நம் அறிவு வெளிச்சம் கொண்டு ஒரு பார்வை பார்த்து விட்டு வருவோம். ஆற்றங்கரையோரம் பிறந்தான் மனிதன். ஆற்றங்கரைகளே மனித இனத்திற்கான தொட்டில்களாக அமைந்தன …

 2,157 total views

தேசிய இனங்களும்- தமிழ்த்தேசிய இன உருவாக்கமும்- தமிழ்த்தேசியச் சுவடுகள் 2

கட்டுரைகள்.. /

  வரலாறு என்பது கால வீதிகளில் தடம் பதித்து,புகழ் மணக்க வாழ்ந்த பெரு மன்னர்களின்,புகழ் மனிதர்களின் வாழ்க்கை கதையாகவே பதியப்பட்டிருக்கிறது.  அப்படியென்றால்..காலங்காலமாக சாதாரணமாக வாழ்ந்த எளிய மக்களைப்பற்றி, அவர்களின் வாழ்வியலைப்பற்றி தெரிந்துக் கொள்ள,ஆய்வு செய்ய எழுதப்பட்டுள்ள வரலாறு அனுமதிக்கிறதா என்றால் கசப்பான உண்மை இல்லை என்பதே.. மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என புதிய வரலாற்றுத்துறை நிபுணர்கள் விருப்புகிறார்கள்.மனித சமூகங்களின் வரலாறு நேர்மையாக எழுதப்பட்டிருந்தால், நிகழ்காலத்தில் நடக்கிற எத்தனையோ பிரச்சனைகளுக்கான,முரண்களுக்கான தொடக்கப்புள்ளியை நாம் கண்டறிந்திருக்க முடியும் . …

 2,415 total views

தமிழர்மரபும், நாம் தமிழர் அமைக்க முயல்கிற சமூகநீதியும்..

அரசியல் /

வெகு காலமாகவே சமூக நீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் உள்ள இடைவெளி வரலாற்றுப் பூர்வமானது. தமிழகத்தின் வரலாற்றில் சமூக நீதிக்கான குரல்கள் வெகுகாலத்திற்கு முன்பே ஒலிக்கத் தொடங்கி விட்டன . ஆனால்  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக்கட்சி சமூகநீதி தளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் கவனிக்கத்தக்கவையாக அமைந்தன. தமிழ்த்தேசிய உரிமைக்கான வரலாறும் இத்தகைய தன்மை உடையதுதான்.  தமிழ்த்தேசிய இனம் வரலாற்றின் போக்கில் உருவான தருணத்தில் இருந்தே அதற்கான உரிமைக்குரல்களும் தோன்றின. பழந்தமிழ் இலக்கியங்களும்,ஒலைச்சுவடிகளும் ஏற்படுத்திய இலக்கியச் செழுமை …

 3,321 total views

ஷிண்டர்ஸ் லிஸ்ட்(1993 )- இன அழிப்பின் வலி நிறைந்த திரைமொழி

திரை மொழி /

  உலக வரலாற்றில் மாபெரும் மனித அழிவு காட்சியாக 1939-45 வருடக் காலங்களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நம் கண் முன்னால் தோன்றுகிறது . மனித குலத்தில் 3 ல் ஒரு பங்கு உயிர்களை பலிவாங்கிய இரண்டாம் உலகப் போர் மனித மனங்களில் நிகழ்த்தி இருக்கிற உளவியல் மாற்றங்கள் மிக முக்கியமானவை. மனித குலத்தின் பாற் நேசமும், சமநீதியும் போதிக்கிற கம்யூனிச கொள்கைகளின் பாற் உலகம் தழுவிய ஈர்ப்பும், எழுச்சியும் இரண்டாம் உலகப் போரின் அழிவிற்கு …

 1,297 total views

தி வாக்.. (The walk )

கட்டுரைகள்.. /

    உலகம் எப்போதும் தனித்துவமானவர்களையே நினைவில் கொள்கிறது. சராசரிகளை சரித்திரம் தனது குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு சென்று கொண்டே இருக்கிறது. இலட்சிய உறுதியும், அசாத்திய பொறுமையும்,கடும் உழைப்பும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற தனித்துவமான ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மை கதையே .. தி வாக்.. (The walk ) அவன் பெயர் பிலிப்பி பெடிட். தெருக்களில் நாம் ஒரு காலத்தில் இயல்பாக பார்த்த அந்தரத்தில் கட்டப்பட்ட கம்பிகளில் நடக்கும் வித்தைக்காரன். அதை …

 1,627 total views

பொழுதுகள் கடந்த வெளி..

கட்டுரைகள்.. /

கூந்தலை அள்ளி அப்படியே என் முகத்தில் படர்த்தினாய் …   இது நீள் இரவு என்றேன்..   இல்லை..இல்லை.. சூரியன் இருக்கிறதே இது பகல்.. என்றாய் நீ.. . அது உன் விழிகள்.. இது அதிகாலை என்றேன்.   போடா என்று புன்னகைத்தவாறே இறுக அணைத்தாய்..   மீண்டும் சிரித்தவாறே சொன்னேன்..   இது ஒரு பொன்மாலைப் பொழுதென..  1,673 total views

 1,673 total views

இளையராஜா – எம் தலைமுறை வாழ்க்கை.

கட்டுரைகள்.. /

தேவ தீண்டல்களால் உயிர் வாழ்பவனின்நன்றிக் குறிப்பு இது.   …..   புகழ்ப் பெற்ற டைட்டானிக் படத்தில் வரும் அந்த சில நிமிடக் காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. கப்பல் முழ்கி கொண்டிருக்கும் அந்த துயர வேளையில்..அந்த வயலின் இசை கலைஞர்கள் தங்கள் இசையை நிறுத்தாமல் வாசித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காட்சி உலகத்தையே உலுக்கிப் போட்டது. ஆனால் தமிழர்களோ ஒரு சிறிய புன்னகையோடு அந்த காட்சியை எளிதில் கடந்தார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு இசைக்கலைஞனை அவர்கள் ஏற்கனவே …

 1,695 total views