மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கங்காரு -தீவிர அன்புணர்வின் எளிய மொழியியல்…

கட்டுரைகள்.. /

  மிருகம்,உயிர்,சிந்து சமவெளி போன்ற சர்ச்சை திரைப்படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ள கங்காரு வேறு தளத்தில் பயணிக்கிறது. எப்போதும் உணர்வு சார்ந்த திரைக்கருவில் மிகை நடிப்பிற்கான சாத்தியங்கள் அதிகம். அதே போன்ற அண்ணன் -தங்கை அன்புணர்வினை தீவிரமாக பேசுகிறது கங்காரு.. எப்போதும் வாழ்க்கை நினைத்தது போல அமைந்துவிடுவதில்லை.நினைப்பது போல நடக்காததன் அவஸ்தைகளை,வலிகளை,வேதனைகளை, ஏமாற்றங்களை,சவால்களை பேசுவதுதான் திரைப்படங்களும், இலக்கியங்களும்… மனித மனம் விசித்திரமானது. அந்த விசித்திரங்களின் தொகுப்பில் மகத்தானது அன்பு என்கிற மகத்தான உணர்வு.ஒரு வகை பதிலீட்டை,எதிர்பார்ப்பை,கைமாற்றை கோரி …

 989 total views

ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன்

இலக்கியம் /

ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன் -மணி செந்தில் —————————————————————————————— ஜெயகாந்தனுக்கு ஏன் நீங்கள் ஒரு பதிவு எழுதவில்லை..என்று கேட்டே விட்டான் என் தம்பி துருவன் செல்வமணி. இறந்து விட்டார் என்பதற்காக அவரை ஆஹா-ஓஹோ என புகழ்ந்து பதிவிடும் போக்கு இணையத்தளம் வந்த பிறகு அதிகமாகி விட்டது என நான் கருதுகிறேன்.ஜெயகாந்தன் ஒரு வேளை மீண்டும் பிழைத்தாரென்றால்….”நான் செத்தால் இப்படியெல்லாம் எழுதுவீர்கள் என்றால்…நான் சாகவே மாட்டேன்” என சொல்லி விடுவார் போல… வெறுப்பின் குணாம்திசியங்களோடு,கறாராய் வாழ்ந்த அம்மனிதனுக்கு திகட்ட திகட்ட …

 2,021 total views

மரம் வெட்டிகள் சொன்ன கதை..

கவிதைகள் /

  பால்யத்தின் பாடப்புத்தகங்களிலும், தேவதைக் கதைகளிலும் சட்டென சந்தித்திட இயலும் சாதாரண மரம் வெட்டிகள்தான் நாங்களும்.. தங்கக்கோடாலியை எடுத்து தருகிற தேவதையை யாரோ கற்பழித்து போட்ட தினத்தில் தான்… அடிவயிற்றுப் பசித்தீக்காக நாங்கள் வெயில் அலையும் வனத்தில் நின்று கொண்டிருந்தோம்.. எம் காதோரம் பெருகுகிற வியர்வைத் துளிகளுக்குள் வீட்டில் பூனை உறங்குகிற எம் வீட்டு அடுப்படிக் கதைகள் ஒளிந்திருக்கின்றன… புன்னகை மறந்த எம் உதடுகளில் பசித்திருக்கும் எம் குழந்தைகள் உதிர்க்கும் நடுநிசி முனகல்களின் சாயல் படிந்திருக்கின்றன… கனவுகளில் …

 977 total views

ராஜ வாழ்க்கை…

கவிதைகள் /

எப்போதும் என் குதிரை இராஜபாட்டையில் செல்வதான கனவில்.. நான் மன்னன் இல்லை என்பதையும், வாழ்க்கை குதிரை இல்லை என்பதை மறந்து போனேன்… சறுக்கி விழும் தருணங்களே அறிவிக்கின்றன… சதுப்பில் பயணப்படும் எருமையாய் வாழ்வும் ஒட்டிய ஈயாய் நானும்…  922 total views,  1 views today

 922 total views,  1 views today

சொற்களின் மினுக்கும் சிறகுகள்

கட்டுரைகள்.. /

காற்றில் மிதந்து திரிகிற உன் சொற்களில் மின்மினி பூச்சிகளின் சிறகினை கண்டேன்… வளைந்து,நெளிந்து திரிகிற புதிர் பாதையில் ஆயிரத்தி எட்டு நட்சத்திரங்களை விதைத்து போயின அவை. சட்டென கிளைத்த மெளனத்தில்… நட்சத்திரம் அழிந்த வானமாய் நிர்மூலமானது நானும் கூட….    810 total views

 810 total views

தோட்டாவின் பாடல்..

கவிதைகள் /

அடிமை இடுகாட்டின் பற்றி எரியும் வரலாற்று பெருமித பிணங்களுக்கு நடுவே… குனிந்த தலைகளாய்.. முணுமுணுத்த உதடுகளாய்.. கடந்துப் போன துயரோடிய சாட்சிகளாய்.. நீண்டிருந்த வரிசைகளுக்கு நடுவே.. ஏதிலியாய் ஏதுமற்று எதுவுமற்று எல்லாமும் அற்று மானம் விற்று வாழ்ந்த மானுட சவங்களுக்கு நடுவே.. உதிரம் உறைந்த ஆயுத முனைகள் குத்தி கிழிக்கும் சதை துணுக்கில் சதா ஒழுகிக் கொண்டிருக்கும் சிங்க இன இறுமாப்புகளுக்கு நடுவே.. வலிகளின் தடம் சுமந்து இழப்பின் பெருமூச்சாய் அனல் காற்று அலைகழித்த அவலங்களுக்கு நடுவே.. …

 1,023 total views

துயரக்காற்றில் அலையும் மலர்…

கவிதைகள் /

உணர முடியா தருணமொன்றில் மெளனமாய் சொட்டிக் கொண்டே இருக்கின்றன கருகிப் போன நம்பிக்கைகள்.. சின்னஞ்சிறு கரத்தோடு பின்னி பிணைந்த விரல்களின் நெருக்கமும்… நிலாக்கால இரவுகளில்.. கதைகள் கேட்ட கதகதப்பும்.. கனவாய் தொலைந்த வலியில் வார்த்தைகளற்று வெறித்தப்படியே… துயரக்காற்றில் அலைந்திருக்கும் ஒரு மலர் உதிரவும் முடியாமலும்.. உறங்கவும் முடியாமலும்….. (யார் பக்கம் தவறு இருந்தாலும்… தண்டனையை மட்டும் அடைந்திருக்கும் தியாகு-தாமரை மகன் சமரனிற்காக.. )  906 total views

 906 total views

நவனும்..அவனும்..

கவிதைகள் /

கோப்பைகளில் குடியேறிய இரவொன்றில் வெறியின் முனை கொண்டு மானுட சாசனமொன்றை எழுதவதாக அறிவித்தான் நவன்.. விடிவதற்குள் தன் பக்கங்களில் சூரியனை இழுத்து வந்து புகுத்தி விட கனவுகளின் வெப்பத்தை கடத்தி வந்திருக்கிறான்.. மிதக்கும் ஏடுகளில் அடுக்கடுக்காய் வார்த்தைகளை நவன் வசப்படுத்தி வரைந்திருந்த பொழுதில்… முறிந்த குழலில் சொட்டிய இசையாய் புனைவின் 68 ஆம் பக்கத்திற்கு அருகே அழுதுக் கொண்டிருந்த அவனை சந்தித்து விட்டான்… என்னை கொன்று விடு துயர் மிகு வரிகளால்.. என்று இறைஞ்சியவனின் மூடிய இமைகளில் …

 1,083 total views

கதை வீடு

கவிதைகள் /

நீல நதிக் கரையோரம் இடறிய சொற்களை சேகரித்து ஒரு கதை வீடு கட்டினேன்.. நாயகனும், நாயகியும் கொஞ்சி குலாவிய கதை வீட்டிற்கு வெறுமை நிரம்பி கோப்பை தளும்பிய தருணத்தில் வில்லன் ஒருவன் வந்தமர்ந்தான்.. பின்னரவின் கனவொன்றில் உதிர்ந்த புன்னகை வாசத்தோடு விதூசகன் ஒருவனும் வந்து சேர்ந்தான். அலை கடல் ஓரமாய் ஒதுங்கிய ஒற்றை செருப்பு, நதியில் மிதந்த பெளர்ணமி நிலவின் நிழல் குப்பைத் தொட்டியில் கிடந்த  ஒஷோவின் கிழிந்த பக்கம் என அடுக்கடுக்காய் துணை நடிகர்கள் வந்து …

 985 total views