இருட்பாதையின் திசை வழி..
கவிதைகள் /பொய்கள் பாசியென படர்ந்திருந்த குளமொன்றில் அரூவ மீனாய் நீந்திக்கொண்டிருந்த உன்னை நோக்கி எறியப்பட்ட தூண்டில் வாயில்தான் என் கனவொன்று இரையாய் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. எதிர்பாராமின்மையை சூட்சம விதிகளாய் கொண்டிருக்கும் அந்த மாய விளையாட்டில் அவரவர் பசிகளுக்கேற்ப சொற்களின் பகடையாட்டம் நடந்தன…. உக்கிரப் பொழுதில் தாங்காமல் நிகழ்ந்த பெரு வெடிப்பு . கணத்தில் சிதறிய என் சிலுவைப் பாடுகளின் கதறல் ஒலிகள் உன்னால் சில்லறைகளின் சிந்திய ஓசை என அலட்சியப் படுத்தப்பட்ட நொடியில்.. திரும்பவே இயலா …
Continue reading “இருட்பாதையின் திசை வழி..”
2,372 total views