பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

மலையாள நடிகர் ஜெயராமின் விருதுகளை விட உன்னதமானவர்கள் எங்கள் தாய்மார்கள்..

.
சில நாட்களுக்கு முன் தமிழின தாய்மார்களை கருத்த எருமை தமிழச்சி என தரக்குறைவாக பேசி.. எம் இனப் பெண்கள் மீது காறித் துப்பி கொக்கரித்த நடிகர் ஜெயராம் இன்று தொலைக்காட்சிகளில் அழுதுக் கொண்டே (?) நடிக்க துவங்கியுள்ளார்.
ஆம் . மலையாளத்தான் ஜெயராம் அவர்களே..
நாங்கள் கருப்பர்கள் தான்.
வந்தவர்களை எல்லாம் வாழ வைத்து விட்டு…
சுடும் வெயிலில்..உழைப்பேறிய உடலோடு..வியர்வைக் குளியலாடி…அன்றாட வாழ்க்கைக்கே
அல்லலுற்று…நிற்கிற நாங்கள் வெளுப்பாகவும்..சிறப்பாகவும் இருக்க இயலாது தான்.
வந்தவனை எல்லாம் வாழ விட்டு…ஆள விட்டு..வீதியில் நிர்கதியாய் நிற்கிற நாங்கள் உங்களைப் போல ..உங்கள் குடும்பத்தினர் போல.. வெளுப்பாகவும்..தளுப்பாகவும்,, இருக்க இயலாதுதான்.
உழைக்கும் மக்களினமான தமிழின மக்கள் கருத்த உடலை உடையவர்கள் என்பதுதான் மலையாள நடிகர் ஜெயராமின் எள்ளலுக்கும்..நக்கலுக்கும் காரணமாக இருக்கிறது.
ஆரியப் புளுகு புராணங்களில் தமிழர்களை குரங்குகளாக..அரக்கர்களாக படைத்த ஆரியர்களின் இன்றைய மனநிலையின் சின்னம் தான் இந்த மலையாளத்து பார்ப்பான் ஜெயராம்.
எம் ஈழத்து உறவுகளை கொன்று குவிக்க காரணமாக இருந்த மலையாள திமிரில்.. அங்கே.. நம் தாய்மார்களை கருத்த எருமை தமிழச்சி என மிகச் சாதாரணமாக சிரித்துக் கொண்டும்..குதுகலித்தும்.. கூறி விட்டு இப்போது நானும் தமிழன் தான் என அழுதுக் கொண்டே நடிக்கிறார் நடிகர் ஜெயராம்.
பல ஆண்டுகளாகவே தமிழர்களை குறித்து மிக கேவலமான..மூன்றாம் தர சொல்லாடல்களை மலையாள திரை உலகு கடைப் பிடித்து வந்தது. அதன் உச்சம் தான் அந்த மலையாள ஜெயராமின் திமிர்த்தனப் பேட்டி…கேட்டால் சென்னையில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், அவரது பிள்ளைகள் தமிழ் தான் (?) படிப்பதாகவும் என கண்கலங்க பேசுகிறார்.
உண்மையில் தமிழர்களாகிய நாங்கள் தான் எம் இனமும், எம் மக்களும் அடையும் அவமானத்திற்கு கண்கலங்க வேண்டும். வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு மலையாளத்தான் வீட்டில் கருத்த எருமை தடிச்சி பட்டமும் வாங்கிக் கொண்டு வேலைக்காரிகளாக எங்கள் தாய்மார்கள் வேலைப் பார்க்கிறார்களே… அதை நினைத்து நாங்கள் தான் கண்கலங்க வேண்டும்.. கேட்டால் நகைச்சுவையாக மிமிக்ரி பேசினாராம். நீங்கள் நகைச்சுவையாக பேசி விளையாட ….வறுமைக்கு ஆட்பட்டு, உம் வீட்டில் பணிபுரியும் எங்கள் அப்பாவி தாய்மார்களா கிடைத்தார்கள்..? .
உங்கள் விருதுகளை விட .. உங்கள் கேடயங்களை விட..எம் தாய்மார்கள் எங்களுக்கு உயர்ந்தவர்கள்.
.
ஆண்டாண்டு காலமாய் ..வந்தவரை எல்லாம் வாழ விட்டு…தங்களுக்கு தாங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளும் வக்கில்லாத இனமாக…கேட்பாரும் ..மீட்பாரும் இல்லாத நாதிஅற்ற இனமாக நம் தமிழினம் இருந்து வருகிறது.அந்த துணிச்சல் தான் இந்த மலையாளத்தானை அங்கே பேச வைத்தது.
ஒரு மலையாள நடிகன் எம் தாயையும், எம் சகோதரியையும் கருத்த எருமை தமிழச்சி என எள்ளி நகையாடினால்…
நாங்கள் மறந்து விடவும் வேண்டுமாம். மன்னித்து விடவும் வேண்டுமாம்..
மீறி கேட்டால்..
போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காதாம்.
உணர்வுள்ள தமிழர்களே.. உணர்ந்துக் கொள்வீர்.
.

Previous

முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….

Next

நடிகர் ஜெயராமைக்கைது செய்ய வேண்டும்.வன்முறையைத்தூண்டியது நானல்ல.ஜெயராம் தான்.நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை

1 Comment

  1. இது வன்மையாக கண்டிக்க வேண்டியது. சேனா போன்ற அமைப்புகள் நம்மிடம் இல்லாமையே இவர்களின் வாய் கொழுப்பிற்கு காரணம். மானங்கெட்ட தமிழ் கதாநாயகர்கள் வாயையும் அதையும் மூடிக்கொண்டு இருக்கின்றனர். காரணம் அவர்கள் படம் கேரளா விலும் ஓட வேண்டும். நல்ல வேலை வீர தமிழர்கள் சீமானும், தங்கர்பச்சானும் இருக்கின்றனர். கொழுத்த சுந்தரிகள் கலை நிகழ்ச்சிக்கு தேவை. அதனால் மறப்போம் மன்னிப்போம் என்று அண்ணா வை இழுக்கின்றார். இன்னும் என்ன இருக்கு உருவுவதற்கு. ஈழத்திலும் தமிழனை அழித்தார்கள், தமிழகத்தில் உண்மையான தமிழ் கலைஞன் இல்லை. நாங்கள் பாடினால் மக்கள் கேட்க மாட்டார்களா. ஜெயராம் கு தரும் பாடம் இனி எவனும் வாய் திறக்கவே கூடாது. கேரளா சுந்தரிகளை தேடும் தமிழர் சேரன் எங்கு போனார்.

Powered by WordPress & Theme by Anders Norén