“நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!”
“என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும்.”
– சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரதுங்க.
சுதந்திரமான உணர்வோடு ..காத்திரமான சிந்தனைகளோடு..உலகம் தழுவி மனித நேயத்தை நேசித்த மாபெரும் இதழியலாளர். லசந்தா விக்கிரமதுங்க..
தன் கண்முன்னால் இனப்பேரினவாத அரசால் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படும் போது மெளனமாக சகித்துக் கொண்டு..தொலைக்காட்சி பெட்டியிலும், சாராயக்கடையிலும் வீழ்ந்துக்கிடக்க அவர் ஒன்றும் தமிழ்நாட்டு தமிழனில்லை. எந்த சாமியார் எந்த நடிகையோடு புரண்டார்.. இன்றைய தின பலன் என்ன..யார் யாரோடு ஓடிப்போனார்..ரஜினி அரசியலுக்கு வருவரா..கருணாநிதி-ஜெ வின் இன்றைய சண்டை என்ன..தொப்புள் காட்டி நடிக்க மறுத்த நடிகை..தல யின் செல்ல மகளுக்கு பிறந்தநாள்..இளைய தளபதியின் இளைய மகன் காலையில கக்கூஸ் போகல.. என்றெல்லாம் செய்திகள் வெளியிடும் தமிழக ஊடகவியலாளரும் இல்லை. சிங்களனாய் பிறந்தாலும் மனிதனாய் வாழ்ந்த லசந்தா விக்கிரமதுங்க மனசாட்சி கொண்ட பத்திரிக்கையாளனாய் (நம்ம ஆளுங்க போல..இல்ல ) வாழ்ந்தவர். ஒரு காலத்தில் தனது நண்பனாய் விளங்கிய சிங்கள பேரினவாத அதிபர் இராசபக்சேவை தனது எழுத்துக்கள் மூலம் பதற வைத்த லசந்தாவின் அறச்சீற்றம் சிங்கள பேரினவாதத்தை சுட்டெரித்தது. இதன் விளைவாக 2009 சனவரி 8 ஆம் நாள் அன்று சிங்கள பேரினவாத கைக்கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்த் தேசிய இனம் இன அழிப்பினை எதிர்த்து குரல் கொடுத்து போராடிய தனது தோழனை விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் துளிகளோடு நினைவு கூர்கிறது.. இன்று அவருடைய 4 ஆம் ஆண்டு நினைவு நாள்.
# வீரவணக்கம்.
தனிமரம்
மறக்க முடியாத ஊடக மகான்.