ராஜீவ் காந்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்றால்..
அண்ணன் சீமான் தமிழகத்தின் வருங்கால முதல்வர்.
போடா..
====================================================================================
ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லை. அதில் உள்நாட்டு வெளி நாட்டு சதிகள் அடங்கியிருக்கின்றன. என்று பலரும் வீதிக்கு வீதி கத்தி சொன்னபோது ஒருவர் கூட பேசவில்லை.
இன்று கடந்து குதிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி.. ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமிக்கு பங்கு உண்டு என்று உண்மையான காங்கிரஸ்காரர் ஆன திருச்சி வேலுச்சாமி புத்தகம் எழுதியபோது எங்கே போனார்.. தூங்கினாரா…?? அதேபோல அதே சுப்பிரமணியசாமி ராஜீவ் கொலையை செய்தது சோனியா காந்திதான் என்று சொன்னபோது, அன்று தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அதை வழிமொழிந்த போது இன்று குதிக்கின்ற ஒரு காங்கிரஸ்காரர் கூட அன்று ஏன் குதிக்கவில்லை..?? இதுவரை ஏன் ஜெயின் கமிஷனின் முழுமையான முடிவான அறிக்கை வெளிவரவில்லை என்று ஒரு காங்கிரஸ்காரர் கேள்வி எழுப்பி இருக்கிறாரா..?? ராஜீவ் கொலையைப் பற்றி பேச தகுதி உடைய ஒரு காங்கிரஸ்காரர் இந்த மண்ணில் உண்டா..?? ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களை அழித்து கொன்ற இந்திய அமைதிப்படையை அனுப்பியது இந்த ராஜீவ் காந்தி.. தேசபிதா காந்தியை போல பொம்மை செய்து.. சுட்டு விளையாடி கொண்டிருப்பவர்களை கூட இவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இப்போது மட்டும் என்ன இருமல்..?? ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்று நாங்கள் கதறிய போது.. கேட்க யாருமில்லை. ராஜீவ் காந்தியை தமிழர்கள் தான் கொன்றார்கள் என அறிவித்துவிட்டு அணுஅணுவாய் கட்டப்பட்ட தமிழீழ தேசத்தை அழித்த போதும்.. கேட்க யாருமில்லை. எங்கள் பச்சிளம் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட போது..பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர்கூட உயிரோடு இருக்கக்கூடாது என்று கருணையற்ற வார்த்தைகள் காங்கிரஸ் தலைமையிலிருந்து வந்தபோது.. கேட்க யாருமில்லை. அப்போதெல்லாம் கேட்காதவர்கள்.. ராஜீவ் காந்தியை தமிழர்கள் கொன்றார்கள் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்.. சொல்லப்போனால் நீங்கள் சொன்னதை தானே நாங்களும் சொன்னோம்.. இப்போது மட்டும் என்ன எகிறிக் கொண்டு வருகிறீர்கள்..?? உங்களுக்கு ராஜீவ் காந்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர். ஒரு கட்சியின் தலைவர். அவ்வளவே. எங்களுக்கு பிரபாகரன் எங்கள் உயிர் தலைவர். எம் தேசியத் தலைவர். உலகம் முழுதும் பரந்து வாழும் 12 கோடி தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர். |
அவர் பாட்டுக்கு அவர் பேசிவிட்டு போயிருப்பார்.அதுவரை அது பலராலும் கவனிக்கப்படாமல் தான் இருந்தது.
தேவையில்லாமல் அவர் பேசியதை எடுத்து.. அவருக்கு எதிராக பயன்படுத்துவதாக என நினைத்துக் கொண்டு அவருக்கு மைலேஜ் ஏற்றி விடுவதில்.. கதர் கும்பலை அடித்து கொள்ள யாருமில்லை.
இதில் திராவிட ஜால்ரா வேற.
இப்ப பாருங்க.. தொலைக்காட்சி, இணையம் என சகலத்திலும் சீமான்தான்.
கடந்த பத்து நாளா விக்கிரவாண்டி வீதிகளில் நின்று காட்டுக் கத்தா கத்துறோம்.. ஒரு ஊடகம் எட்டிப் பார்க்கல..
இன்று திராவிட மேதைகளின் உதவியோடு .. கதர் பெரியப்பா க்களின்
ஆட்டத்தால்.. இன்னிக்கு தான் நாங்கள் பேசப் படுறோம்.
இதிலென்ன பெரிய காமெடி என்றால்..
ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள் ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள் என்று இவர்கள்தான் கத்திக்கொண்டு இருந்தார்கள்.
ஆமா.. ராஜீவ்காந்தியை கொன்னுட்டோம் னா சண்டைக்கு வருகிறார்கள். உலகத்தில் ஒருவர் பேசியதை இன்னொருவர் ஒத்துக் கொண்டால் கூட சண்டை வருவது இதுதான் முதல் முறை. ????????????
ராஜீவ் காந்தியை நாங்கள் கொலை செய்யவில்லை என்று நாங்கள் கதறிய போதும் சண்டைக்கு வந்தார்கள்.
சரி சண்டைக்கு வருகிறார்களே.. இவர்கள் சொல்வதை ஒத்துக் கொள்வோம் என்று ஆமாம் ராஜீவ் காந்தியை கொன்று விட்டோம் என்று சொன்னால் போதும் சண்டைக்கு வருகிறார்கள்.
சும்மா இருந்தவர்களை சொறிஞ்சி விட்டுட்டானுகளே.. என ராஜீவ் காந்தியின் ஆன்மா கூட அலறுகிற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
================================
ராஜீவ் காந்தி படுகொலை நடந்து … வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம் வரை நடைபெற்று இறுதித் தீர்ப்பு வெளியாகி விட்டது. அதன் பிறகு தூக்குத்தண்டனையாக இருந்த முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாகவும் மாற்றப்பட்டுவிட்டது.
வழக்கு முடிந்துவிட்டது. தண்டனை வழங்கப்பட்டு விட்டது. தண்டனைக் காலத்தை ஏறக்குறைய 28 வருடங்கள் ஏழு தமிழர்களும் அனுபவித்து விட்டார்கள். அதன்பிறகு தமிழக சட்டமன்றம் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஒருமனதாக தீர்மானம் இயற்றி அந்தத் தீர்மானம் ஆளுனர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
ஏறக்குறைய அனைத்தும் முடிந்துவிட்ட ஒரு வழக்கு அது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி படுகொலையை பற்றி பேசினால் எழுவர் விடுதலை பாதிக்கப்படும் என்று உளறுவது அப்பழுக்கற்ற 100 சதவீத முட்டாள்தனம்.
ராஜீவ் காந்தி படுகொலை பற்றி அண்ணன் சீமான் பேசிய கருத்திற்கும் எழுவர் விடுதலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
எழுவர் விடுதலை என்பது ஆளுநர் கரத்தில் நிலுவையில் இருக்கின்ற ஒரு கோப்பு. முடிந்துபோன வழக்கொன்றில் தண்டனை முழுமையாக அனுபவித்த குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் விடுதலை நடவடிக்கை.
அரசியல் உரையாடல்கள் பாதிப்பை ஏற்படுத்தாத அலுவலகம் சார்ந்த நடவடிக்கைகளை கொண்ட விவகாரம் அது.
ஏற்கனவே அண்ணன் சீமான் மீது இருக்கின்ற எக்கச்சக்க வெறுப்பினை தீர்த்துக்கொள்ள திராவிட கும்பல் இந்த விஷயத்தையும் இவ்வாறாகவே இழிவாக கையாளும் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுதான்.
பொம்மை காந்தியை நிற்க வைத்து
ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கும்பல் சுட்டு கோட்சேவுக்கு ஜே போட்டபோது.. இந்த அறிவுரை திலகங்கள் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.
வரலாறு அனைத்தையும் மாற்றும்.. காலம் அனைத்தையும் கடத்தும் என்றக் கருத்தில் காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் வரிசையாக உட்கார்ந்து கொண்டு ஆமா காந்தியை நாங்கள் சுட்டோம் என்று சொன்னபோது..
நாங்களும் சொல்லிவிட்டுப் போகிறோம்.
ராஜீவ் காந்தி நாங்கள்தான் கொன்றோம் என்று.
இதைத்தான் அண்ணன் சீமான் பேசினார்.
உடனே பாய்ந்து கொண்டு இவர்களைத் தடை செய்ய வேண்டும் ,கைது செய்ய வேண்டும் என்று கதர் கூட்டம் ஒருபக்கம்
தாவித் தாவி குதிக்க..
மறுபக்கம் திராவிட கும்பல் இவர்களால் 7 தமிழர் விடுதலைக்கு சிக்கல் வந்துவிட்டது என்று தவ்வி தவ்வி குதிக்க..
இன்னா நாடகம் டோய்..
அப்புறம் என்ன ……. க்கு 7 தமிழரை விடுதலை செய்யக்கூடாது என கேட்கும் காங்கிரசோடு.. திராவிடக் கும்பல் கூட்டு வைத்திருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா..??
அது வேறு இது வேறு என்றால்..
இதுவும் வேறுதான்.
தமிழர்களான எங்களை நோக்கியே எப்போதும் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.
நாங்களும் குற்ற உணர்வுடன் தலையை ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
எங்களது இன்னொரு தாய் நாடு தரிசாக அழிந்தாலும்.. எங்களது சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டாலும் இந்த குற்ற உணர்வால் நாங்கள் பேசக்கூடாது.
ஏனெனில் நாங்கள் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்.
இதை காட்டி காட்டித்தான்.. நாங்கள் அனைத்தையும் இழந்தோம்.
ஏனெனில் நாங்கள் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்.
28 வருடங்களாக மீண்டும் மீண்டும் இதே குற்றச்சாட்டு.. மறுத்தாலும் அதே நிலைதான். ஏற்றாலும் அதே விலைதான்..
ஏற்று விட்டே போகிறோம்.
இப்போதுதான் வரலாற்றில் முதல்முறையாக குற்ற உணர்வால் குனிந்த கூட்டம் நிமிர்ந்து பதிலளிக்க தொடங்கியிருக்கிறது.
ஆமா.. அதுக்கு என்ன இப்போ..???
===============================================================================
ஆமாம்.. அவன் பேசினான்..
கடந்த 28 வருடங்களாக தமிழர்களை ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள்.. ராஜீவ்காந்தி கொன்றுவிட்டார்கள்.. என்று ஒரு இனத்தை அழித்து ,ஒரு நாட்டை அழித்து, ஒரு தேசிய இனத்தை அரைநூற்றாண்டு காலமாக குற்ற உணர்விற்கு உள்ளாக்கி இழிவு படுத்தியவர்களை நோக்கிய அறச்சீற்றம் அது.
அடிக்க அடிக்க அடி வாங்கி குனிந்து கிடக்கிற ஒரு அடிமை தேசிய இனத்தின்
மீள் எழுச்சி எல்லோரும் சொல்வது போல நாசுக்காக.. நாகரீகமானதாக எல்லாம் இருக்காது தான்..
சிலவற்றை மோதிதான் உடைக்க வேண்டி இருக்கிறது. இனி தமிழரை நோக்கி எவராவது ராஜீவ் காந்தியை கொலை செய்து விட்டீர்கள் என்று சொன்னால்.. ஆமாம். அதற்கு என்ன இப்போ.. என்று கேட்டுவிட்டு கடந்து போக ஒரு காலம் உண்டாகி விட்டது.
இப்படித்தான் பிரபாகரனை பற்றி பேசவோ , எழுதவோ அவர் படத்தை வைத்துக் கொள்ளவோ உரிமை இல்லாத ஒரு காலம் இருந்தது.
அவன் வந்தான்.
மற்றவரெல்லாம் ஈழநாடு எங்கோ தூரத்தில் இருக்கும் தீவு போல.. ஈழ விடுதலையை ஆதரித்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவனோ ஈழ விடுதலை என் விடுதலை… என் இனத்தின் விடுதலை என்று முழங்கினான்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்றெல்லாம் எதுகை மோனையில் பலரும் முழங்கிக் கொண்டிருக்க..
அவனோ பிரபாகரன் என் அண்ணன்.. என் தலைவன் என்று முழங்கினான்..
வீட்டுக்கு வீடு புகைப்படமாய், சட்டை படமாய், பதாகை படமாய் தமிழனின் திருவுருவாய் தலைவர் மாறிப்போனார்.
தமிழ்நாட்டில் திராவிடன் ,இந்தியன், என்றெல்லாம் ஆயிரத்தெட்டு கொள்கை குழப்பங்கள்,கோட்பாட்டு குடைசல்கள்..
வந்தான் அவன்.
நாம்தமிழர் என்று முழங்கினான். அவன் வருகைக்குப் பின்னால் திராவிடத்தின் பேரில் இங்கு கட்சி என்ன.. ஒரு குச்சி கூட முளைக்கவில்லை.
அதே போலத்தான்..
ராஜீவ் கொலையாளிகள் என்று யாரும் பேச முடியாத ஒரு காலகட்டம் இருந்தது.
திமுக ஆட்சி காலத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில்.. ஆறு மாதம் அவன் சிறையில் அவர்களோடு இருந்தான்.
வெளியே வந்து அவன் தான் முதன்முதலில் முழங்கினான்.
7 தமிழர் விடுதலை.. எம் இனத்தின் விடுதலை என்று.
அவன் தான் இன்று பெரும் சீற்றமாய்
வெடித்திருக்கிறான்.
தண்ணீரில் அழுத்தப்படும் பந்து எப்படி மேல்நோக்கி திமிறி எழுமோ.. அப்படிப்பட்ட திமிறல் அது.
ஆமாம்.. அதற்கு என்ன இப்போ.. என்று மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகுபவனின் உச்சகட்ட கொதிப்பு அது..
அப்படித்தான் அவன் அன்றும் பேசினான்.
இன்றும் பேசுகிறான்.
தடைகளை உடைக்க.. தளராமல் அவன் பேசிக் கொண்டு இருக்கிறான்.
செந்தமிழன் சீமான் என்பது பெயர் அல்ல.
நிகழ மறுக்கும் பொற்காலத்தை
கட்டி இழுத்து வந்து
நிகழ்காலத்திலேயே நிகழ்த்திக்
காட்டும் தமிழரின் எதிர்காலம்.
================================================================================================