=========================================
மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு…
கடந்த சில நாட்களாக திமுக அமைத்திருக்கும் அண்ணன் சீமான் அவர்கள் மீதான வசைபாடல் பிரிவிற்கு நீங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து வரிசையான வசையாடல்களை வாரி வழங்கி வருவதற்கு… அப்பட்டமான 3 ஆம் தர பிழைப்பு வாதம் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்..
அய்ய்யயோ.. நானா…பிழைப்பு வாதியா என்றெல்லாம் கூப்பாடு போட முடியாத அளவிற்கு உங்களது பிழைப்பு வாத தந்திரங்கள் பதிப்புலகிலும், அரசியல் உலகிலும் , தொலைக்காட்சி ஊடக உலகிலும் வரிசையாக வெளிப்பட்டு மூத்திரச்சந்தில் எண்ணி அடிவாங்கி மூச்செறிந்து போய் கொண்டிருக்கிற வடிவேல் போல உங்கள் நிலைமை ஆகிக் கொண்டிருக்கிற இக்காலக் கட்டத்தில் தான் ..அரசியல் அதிகாரம் மீதான உங்கள் இனக்கவர்ச்சிக்கு சீமான் மீதான வசைபாடல் என்பது ஒரு கருவியாக,அதிகார போட்டியினூடே நீங்கள் காட்டுகிற கபடமாக.. நீங்கள் உங்கள் சக அரசியல் போட்டியாளர்களுக்கு இடையே அமைத்துக்கொள்கிற தகுதியாக… காட்ட விரும்பும் உங்களது எக்கசக்க ஆர்வம் புரிகிறது.
அரசியல் இருப்பினை தக்க வைப்பதற்காக, அரசியல் பங்களிப்பில் தனது பாகம் பழுது படாமல் இருப்பதற்காக, தாங்கள் எடுக்கிற பிழைப்புவாத பிச்சையில்..சீமானை சீண்டுவதென்பது ..உங்கள் புரட்சியாளர் தளபதி ஸ்டாலினிடம் நானும் உள்ளேன் அய்யா என்பது போன்ற அட்டெண்டன்ஸ் போடுகிற அரைகுறைச் செயலே..
சுத்த ,கலப்பிடமில்லாத, தூய இலக்கியவாதியாக உங்களை அமைத்துக் கொள்ள முயன்று, சற்றே பிழைப்பிற்காக சுஜாதாவின் பாக்கெட் சைஸ் மாத நாவல்களில் கொட்டும் சில்லரைகளுக்கு ஆசைப்பட்டு..பிறகு சுஜாதாவையே தூய இலக்கிய ஆத்துமாவாக காட்ட விரும்பி.. பிறகு அது மானாவாரியாக இலக்கிய ஏரியாக்களில் தர்ம அடி வாங்கும் வடிவேலாக தன்னை மாற்றுவதை அறிந்து…
நாமும் தமிழ்நாட்டின் அருந்ததி ராய் போல,மேதா பட்கர் போல ஆகலாம் என கருத்து கந்தசாமி அவதாரம் எடுத்து .. ”மாலை மங்கும் நேரத்தில் ஜமுக் லேகியம் விற்கும் அமுக் வைத்தியர்” போல கிடைக்கும் தொலைகாட்சியில் புடைக்கும் ”கருத்து அரிப்பிற்கு” சத்தம் போட்டு கத்தி விட்டு போவதையே தன் அறிமுகமாக அமைத்து..
வேறு எந்த வித விசேட காரணமும் இல்லாமல், கருணாநிதியிடம் தான் சன்,கலைஞர்,சன் நியூஸ் என்றெல்லாம் சேனல்கள் இருக்கின்றன என உணர்ந்துக்கொண்டு.. அதில் முகம் காட்ட, அதை கொண்டு முகவரி தேற்ற.. நீங்களே அண்ணா அறிவாலயத்திற்கு கருத்து கேட் கீப்பராக மாறிப் போன கதைகள் உலகம் அறிந்தவை மனுஷ்..
கடந்த 2009 க்கு பிறகு ஈழத்தை ஆதரிப்பவர்கள்,இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் என பெரும்பாலும் கருணாநிதிக்கும், திமுகவிற்கும் எதிர்ப்பானவர்களாக தான் ,மாறிப் போய் இருப்பதை உங்களின் கண்கள் மறைக்கும் தலைமுடி மறைத்து விட்டது போல.. எப்போதும் பிரபாகரனின் துதி கருணாநிதிக்கு எதிராகதான் போகும் மனுஷ்.. அதிலென்ன ஆச்சர்யம் உங்களுக்கு.. பிரபாகரன் என்ற பிம்பத்தின் எதிர்மறை கருணாநிதி தான்.. தன் பதவிக்காக, ஆதாயத்திற்காக , ஊழலால் விளையும் பணத்திற்காக ஈழத்தின் இனபடுகொலைகளுக்கு எதிராக கபட மவுனம் காட்டிய கருணாநிதியை பிரபாகரனின் ஆதரவாளர்கள் எதிர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்..?
சொல்லப்போனால் எங்களைப் போன்ற பல்லாயிரம் இளைஞர்களை இரட்டை இலைக்கு வாக்குக் கேட்க வைத்ததும், இரட்டை இலைக்கு ஒட்டுப் போட வைத்ததும், கருணாநிதியின் சுயநல,துரோகத்தன ,கபட அரசியல் நடவடிக்கைகளே தவிர வேறு என்ன..?
திமுகவின் ஊது குழலொன்று எங்களை அடிமை ஏஜெண்ட் என குற்றஞ்சாட்டுவதில் வியப்பில்லை தான். ஆனால் எங்களை ஜெயலலிதாவின் துதி பாடி என சொல்வதற்கு நாக்கு மட்டும் இருந்தால் போதாதது ம.புத்திரன்.
உப்பிசம் பிடித்தவனுக்கு தட்டில் இருப்பவை எல்லாம் தரக்குறைவானதுதான் என்பது போல எங்கள் மாநாட்டில் ஹிட்லர் படம் பற்றி மட்டும் உங்கள் அரசியல் அதிகார கனவு மிதக்கிற காமாலை கண்களில் சிக்குகிற நோய் எங்களுக்கு புரிகிறது.
இவர்கள் தொலைக்காட்சியில் ஹிட்லரை பற்றி ஒளிபரப்புவார்களாம், ஏனென்றால் உலகம் முழுக்க ஆவணங்கள் (?) இருக்கிறதாம்..மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைப்பார்களாம். ஆனால் திமுக ஸ்டாலினை கடைப்பிடிக்காதாம்… ஆனால் எங்களது அமைப்பினர் ஹிட்லர் படத்தை மாநாட்டின் ஒரு ஓரத்தில் வைத்தாலே ( இதற்கு சீமான் பல முறை விளக்கம் கொடுத்தும் இருக்கிறார் ) நாங்கள் ஹிட்லரின் ஆதரவாளர்களாம். நாக்கிற்கு நரம்பில்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் …வாங்கியதற்கு அதிகமாகவே கூவி…கோபாலபுரத்து விசுவாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிற உங்கள் வியாபாரத்தனத்திற்கு அகராதியில் ’வேறு பெயர்’ உண்டு…
ஈழ துயரத்தை பிசினஸாக பார்க்க நாங்கள் என்ன டெசோ கம்பெனி ஆட்களா… நினைத்தால் ,கூட்ட,பெருக்க உங்கள் கருணாநிதி வீட்டு கழிவறையாகத்தானே தானே டெசோவை வைத்திருக்கிறீர்கள்..சம்சா சாப்பிட வேண்டுமென்றால் கூப்பிடு டெசோவை என உங்கள் தலைவர் நடத்திய நாடகங்கள் நாடறிந்த நாறிபோனவைகள் என உங்களுக்கு தெரியும் தானே.. ஆனால் நாங்கள் அப்படியல்ல..இந்த நொடி வரை ..ஈழத்தின் துயரம் பேசியதால்..விடுதலைக் கனவை போற்றியதால்..நீங்கள் சொல்கிற அதே ஜெ. அரசுதான் எங்கள் மீது வழக்கு பதிந்து இருக்கிறது..
முத்துக்குமார் தெரியுமா..மனுஷ்..முத்துக்குமார்…
தன் மனதில் சுமந்த நெருப்பினை உடலில் கொட்டி செத்தானே… அதே முத்துக்குமார்… உங்கள் தலைவரைப் பற்றி தனது மரண சாசனத்தில் எழுதி வைத்திருக்கிற சொற்களைப் படித்து விட்டு ஈழ அரசியலைப் பற்றி பேச ..எங்களின் நேர்மைக் குறித்து தாக்க…உங்கள் சொற்களை தயார் செய்யுங்கள்.
சரி விடுங்கள்..காலையில் ஸ்டாலினுக்கும், மாலையில் கருணாநிதிக்கும் சால்வை கொடுத்தோமா…அறிவு சீவி முகமூடி போட்டு கலைஞர் டிவி கருத்து உதிர்த்தோமா..சந்தடிச் சாக்கில் ஏதாவது ராஜ்யசபா சீட்டுக்கு துண்டை போட்டோமா என்று இருந்து விட்டு போகாமல்…
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்கிற இளைஞர்கள் மீது ஏன் கல்லெறிந்து பார்க்கிறீர்கள்…?
நீங்க வாங்குற… 5 ,10 ————————— க்கு இதெல்லாம் தேவைதானா…?
-மணி செந்தில்