பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 53 of 56

தமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி….

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……

எந்த கல்லூரியில் படித்தீர்கள்?

இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை –யில் படித்தேன்…..பி.ஏ தமிழ் -79% எம்.ஏ தமிழ் 80.64% சதவீத மதிப்பெண்கள்….பி.எட் டில் 76% மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்….

தங்களின் தற்போதைய நிலை..?

வேலை தேடி வருகிறேன்..ஊரில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன்…

குடும்பத்தின் நிலை…?
வறுமை…மிக வறுமை.என்னை படிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு தம்பி கல்வியை நிறுத்தி விட்டனர்…இப்போது படித்த நானும்,படிக்காத அவனும் கூலி வேலை பார்த்து வருகிறோம்…..

எதற்காக தமிழ் படித்தீர்கள்…?

மொழி மீது உள்ள பற்று…+2வில் கணிப்பொறி துறைதான் படித்தேன்…தமிழாசிரியாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் படித்தேன்….

ஏன் தமிழ் படித்தோம் என்று நினைத்தது உண்டா…?

அந்த சூழ்நிலையில் தான் உள்ளேன்,…எப்போதும் நினைக்கிறேன்…

இந்த உலகம் தமிழ் படித்த பட்டதாரியை எப்படி பார்க்கிறது..?

சொல்ல வெட்கமாக உள்ளது….மிகவும் கேவலமாக பார்க்கிறார்கள்….தமிழ் படித்தால் தமிழ் நாட்டிலேயே வேலை இல்லை….மற்ற அறிவியல் படிப்புகளுக்கு உள்ள மதிப்பும்,வரவேற்பும் நம் தாய்மொழி தமிழ் படிப்பிற்கு இல்லை..இதில் தனியார் கல்வி நிறுவனங்கள் வேறு..எங்கள் வறுமையை பயன்படுத்தி மிக சொற்ப சம்பளத்தில் எங்களை வேலைக்கு அழைக்கிறார்கள்…எனக்கு தெரிந்த தமிழ் முதுநிலை பட்டதாரி , ஆராய்ச்சி மாணவர் ஒரு தனியார் கல்லூரியில் மிக சொற்பமான சம்பளத்தில் பியூனாக பணிபுரிகிறார்….அதற்கே ஆயிரெத்தெட்டு போட்டி….

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் பியூன் வேலைக்கு போவீர்களா..?
கண்டிப்பாக……நிச்சயம் செல்வேன்….என் கல்வி தகுதியை விட என் வறுமை மிகவும் உயர்ந்தது…

இனி யாருக்காக தமிழ் படிக்க சொல்லி சிபாரிசு செய்வீர்களா…?

கண்டிப்பாக மாட்டேன்…..

கற்றது தமிழ்..?

எங்கள் நிலையை அந்த திரைப்படம் மிக நெருக்கமாக படம் பிடித்து காட்டியுள்ளதாக உணர்கிறேன்….

உங்களைப் போன்று எத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள்..?

குறைந்தது 50,000 நபர்களாவது இப்படி இருப்பார்கள்…அறிவியல் முதுகலையும் ,பி.எட் டும் படித்தால் இடை நிலை ஆசிரியர் பணி கிடைத்து விடுகிறது…ஆனால் தமிழ் முதுகலை ,பி.எட் படித்தவனுக்கு இந்த விதி பொருந்தாது…

இந்த நிலைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்…?

அரசின் தவறான கல்விக் கொள்கை…..மற்றும் தாய்மொழி மீது எவ்வித அக்கறையும் ,அன்பும் இல்லாத சமூகமும், அதன் அமைப்பும் மற்றொரு காரணம்..

ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி என்ற தகுதியில் உலகமெங்கும் வாழும் …இணையத்தில் தமிழ்,தமிழுணர்வுக்கு ஆதரவாக,அக்கறையாக எழுதும் தமிழர்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்..?( எனக்கும் சேர்த்து…)

கணிப்பொறியில் இருந்து தட்டச்சு பலகையில் தமிழ் வளர்ப்பதாக நினைத்து கொண்டு…. பொழுது போக்கிற்காக தமிழ் உணர்வில் திளைப்பதாக நடிக்கிறீர்கள்…..

இங்கே தமிழ் படித்தவன் தட்டேந்துகிறான்….ஊர்க்காரன் கூட தமிழ் படித்தவனை கண்டு ஏளனமாக பார்த்து..ஒதுங்கி சென்று விடுகிறான்…..

உங்களுக்கு அடுத்த வேளை சாப்பாடும் ,வருமானமும் உள்ளது…நீங்கள் தமிழ் வளர்க்கலாம்…(?) …ஆனால் தமிழ் படித்தவன் இங்கு தெருவில் நிற்கிறான் ….இதனை மனதில் வைத்துக் கொண்டு தமிழ் வளருங்கள்….

உங்களின் நோக்கம் தமிழை வாழ வைப்பதா..? இல்லை தமிழனை,தமிழ் படித்தவனை வாழ வைப்பதா..?

என்னால் வாழ்க தமிழ் என்று சொல்ல முடியவில்லை…

நன்றி…

(பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கண்ணீரோடு விடை பெற்று செல்கிறார் தமிழ் பட்டதாரி தாமோதரன்…)

புத்திசாலி ஞாநிக்கு ஒரு கடிதம்…..

———————————————————

திருவாளர்.ஞாநி அவர்களுக்கு…..

வணக்கம். குமுதம் 09-04-08 இதழில் பேராசிரியர் சுப.வீ .அவர்களுக்கு ஒ..பக்கங்கள் பகுதியில் தாங்கள் எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் எழுத தமிழனாய் தன்னை உணருகிற எவருக்கும் பதில் சொல்ல உரிமை உண்டு என்ற நியாயமான பார்வையில் இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்…

நமக்குள் ஏற்கனவே அறிமுகம் உண்டு.தந்தை பெரியாரையும்,அறிஞர் அண்ணாவையும் மிகத் தவறான முறையில் ஒப்பிட்டு ஆனந்த விகடன் இதழில் தாங்கள் எழுதிய ஒ..பக்க கட்டுரைக்கு எதிர்வினையாக நான் எழுதியவிமர்சனங்களுக்கு– ஞாநி தி ரைட்டர் என்ற ஆர்குட் குழுமத்தில் தாங்கள் நேரிடையாக வந்து என்னோடு விவாதித்தீர்கள்.மீண்டும் அதே போன்ற ஒரு காரணத்திற்காக தங்களின் பழித் தூற்றல் கருத்துக்களுக்காக நான் என்னுடைய விமர்சனங்களை முன் வைப்பது என்னுடைய இனக் கடமையாக நான் நினைக்கிறேன்.

பேரா.சுப.வீ அவர்களுக்கு தனிப்பட்ட முறைமையில் எழுதப் பட்ட கடிதமாக நான் அதை கருத வில்லை.பேராசிரியர் இயங்கி வருகின்ற தமிழ் உணர்வாளர்கள் தளத்தில் இயங்கி வருகின்ற அனைவரும் மீதும் வீசப்பட்ட, அவதூறு என்ற விஷம் தோய்ந்த கத்தியாகவே நான் அதை பார்க்கிறேன்.

என் மொழிக்காகவும், என் இனத்திற்காகவும் தாங்கள் அய்யா சுப.வீ அவர்களோடு இணைந்து பணியாற்றியதை நான் மிக்க நன்றியுடன் நினைவு கூறுகிறேன்….ஆனால் இந்த ஒரு தகுதி மட்டுமே எங்கள் உணர்வு மிக்க செயல்பாடுகளின் மீது அவதூறு பூசி விட முயற்சிக்கும் உரிமையை தங்களுக்கு தந்து விடாது என்பதனையும் தங்களிடம் நான் பதிவு செய்கிறேன்.
முதலில் தங்களுக்கு நான் தெளிவாக ஒன்றை கூறி விடுகிறேன்…என் தாய்மொழிக்காகவும்.,என் இனத்திற்காகவும் போராடவும்.., ஓங்கிக் குரல் கொடுக்கவும் எனக்கு உரிமை உண்டு.என் இனத்தின் மாண்பை குலைக்கும் வகையில் தவறான முறையில் ,உள்நோக்கத்தோடு திரைப்படம் ,பத்திரிக்கை ஆகிய ஊடகங்களில் கருத்தால் தாக்கும் சிங்கள பட இயக்குனர் தூசாரா பெய்ரிஸ் மற்றும் தங்களைப் போன்றவர்களை எதிர்த்து போராட…குரல் கொடுக்க…என் கருத்தை பதிவு செய்ய எனக்கு பரிபூரண உரிமையூண்டு.

ஒரு இனத்தின் மீது தாக்குதலை நாம் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
1.யுத்தக் களத்தில் நின்றும், நிலம்,வான்,கடல் பரப்புகளில் நின்றும் ஒரு இனத்தின் மீது …அந்த இனத்தை சேர்ந்த மக்கள் , அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவது…
2.ஒரு இனத்தின் வரலாற்றை,அடையாளங்களை அழிப்பது அல்லது தவறான கற்பிதங்களால் மாற்றி நிறுவ முயற்சிப்பது. மற்றும் பத்திரிக்கை,நூல்கள்,,இணையம்,திரைப்படங்கள்,கல்வியியல் சார்ந்த பாடப் புத்தகங்கள் போன்றவற்றில் தவறான கற்பிதங்களை திணித்து.., அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்களை தங்கள் இனம் சார்ந்த பற்றை பலவீனப் படுத்துவது.
மேற்கண்ட இரண்டு தாக்குதல்களில் இரண்டாவதாக சொல்லியுள்ள தாக்குதலையே நான் மிகவும் ஆபத்து நிறைந்ததாக கருதுகிறேன்.

வரலாற்று கருத்தியல் தளத்தில் ஒரு இனம் சார்ந்த பற்றை ,அடையாளங்களை,நடவடிக்கைகளை பலவீனப் படுத்துவதன் மூலம் அந்த இனம் சார்ந்த அனைத்தையும் மாசுப் படுத்தி , இறுதியில் அந்த இனத்தை அழிப்பதற்கான அத்தனை வழிகளையும் சாத்தியப் படுத்துவது…மேலும் இனத்தை அழிப்பதற்கான தங்களது முயற்சியை சமூகத் தளத்தில் நியாயப் படுத்துவது.ஆகியவற்றையும் உள்ளடக்கிய அந்த இரண்டாம் வகை தாக்குதலைதான் திருவாளர் .ஞாநி அவர்களாகிய தாங்களும், அந்த சிங்கள இயக்குனரும் செய்து வருகிறீர்கள்.
அந்த சிங்கள இயக்குனரின் நடவடிக்கைக்காகவாது அவரது இனம் சார்ந்த நியாயம் இருக்கிறது…ஆனால் தொடர்ந்து கருத்தியல் ரீதியாக தாக்கி வரும் தங்களுக்கு எவ்விதமான நியாய,தர்மங்களும் இல்லை.

நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலி ஞாநி அவர்களே…அதனால் தான் ஈழப் போராட்டத்தையும்,சாதியம் சார்ந்த அமைப்பையும் தங்களால் புத்திசாலித்தனத்தோடு முடிச்சிப் போட முடிகிறது.ஆனால் ஈ.வே.ரா என்று கருப்புச் சட்டைக்காரரால் இரண்டு தலைமுறைகளாகத்தான் நாங்கள் கல்வி கற்க முடிகிறது.எனவே தான் தங்களது புத்திசாலித் தனங்களை புரிந்துக் கொள்ளவும்,மென்று விழுங்கி சீரணிக்கவும் சற்று கடினமாக உள்ளது.
இந்த்துவா,பஜ்ரங் தள்..,தாங்கள் கட்டுரையில் சொன்ன அந்த வேதாந்தி ஆகியோர் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி முட்டாள்களே. உங்களைப் போன்று .இதயத்தில் உள்ளவற்றை உதட்டிலும் ,நடவடிக்கைகளிலும் நிறுத்தி வைக்க அவர்களால் முடியவில்லை.தங்களின் புத்திச்சாலித் தனம் இல்லாத அவர்களை தாங்கள் முட்டாள் என்று வருணித்தது தங்களைப் பொறுத்தவரையில் நியாயமே.ஆனால் எங்களால் முட்டாள்களை எளிதில் சமாளிக்க முடிகிறது.ஆனால் தங்களைப் போன்ற புத்திசாலிகளை தான்
அடையாளம் காணுவதில் தமிழ் மண்ணிற்கு தாமதம் ஏற்பட்டு விடுகிறது.

சாதீயம் சார்ந்த நடவடிக்கைகளில் அய்யா சுப.வீ அவர்களின் நடவடிக்கையை பற்றி வினா எழுப்பி உள்ளீர்கள்…..தந்தை பெரியாரின் கருத்துக்க்களை மேடை தோறும் பேசி,எழுதி ,என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வாழும் உதாரணமாக இருந்து வரும் பேராசிரியரின் சாதி ஒழிப்பு நிலைப்பாடு அனைவரும் அறிந்த ஒன்று.பார்ப்பனீய நிலைகளை கருத்தியல் ரீதியாக தகர்ப்பதன் மூலம் சாதி,சமயமற்ற சமூகத்தை படைத்து விடலாம் என்ற கொள்கை அடிப்படையில் செயல்பட்டு வரும் பேராசிரியரின் நடவடிக்கைகள் தங்களைப் பொறுத்தவரையில் கவலைப் படத் தக்க அம்சமே..தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் ஆகியோர் தோன்றிய பிறகுதானே பார்ப்பனீய ஆலமரத்தின் விழுதுகளான சாதி நிலைகளால் தாழ்ந்துக் கிடந்த மனிதனுக்கு சுய உணர்வு வந்தது….இப்போதுதான் மீள துவங்கி உள்ளோம்…இன்னும் சில காலங்களில் சாதி,சமய நிலைகள்,இரட்டைக் குடுவை முறைகள் அனைத்தும் தமிழ் மண்ணை விட்டு அகன்று விடும் என்ற உன்னத நம்பிக்கையோடு பேராசிரியரும் ,தமிழ் உணர்வாளர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

தங்களின் கவலைகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது..எங்கள் ஈழ உறவுகளை கொன்று குவிக்கும்.சிங்கள பேரினவாத அரசின் தலைவர் ராஜபக்சே வை தன் வீட்டு மணவிழாவிற்கு அழைத்து கொண்டாடிய,எங்கள் ஓட்டு வாங்கி வென்ற மணி சங்கர் அய்யர் கூட இப்போது கவலை அடைவார்தான் .என்ன செய்வது..? தமிழன் விழிக்க துவங்கி விட்டானே,,,,,,,
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை தொடர்ந்து தாக்கி எழுதி வருகின்ற தாங்கள் ‘முட்டாள் வேதாந்தி’ குறித்து கவலைக் கொள்வதும் நியாயம்தான்…உங்கள் புத்திசாலித்தனங்களை உங்கள் ஆட்களுக்கு சொல்லிக் கொடுங்கள் ஞாநி அவர்களே….

தங்கள் சொந்த நாடு இழந்து….உறவுகளை பலிக் கொடுத்து அகதிகளாய்…நெஞ்சம் முழுக்க வலிகளோடும் ,வடுக்களோடும் திரியும் எங்களது ஈழ உறவுகளுக்கு எங்களது ஆதரவை ,எங்களது பரிவை,எங்களது கண்ணீரை பகிர்ந்துக் இந்த நாட்டில் எங்களுக்கு உரிமையில்லை.எங்களது ஈழ உறவுகளின் போராட்டத்தை, அவர்களது வாழ்விற்கான விடுதலைப் போரை கொச்சைப் படுத்தி,கருத்தியல் ரீதியாக ஈழப் போராட்டத்தை உலக அளவில் மாசுப் படுத்த துடிக்கின்ற சிங்கள பேரினவாத அரசின் தூதுவனாக படம் எடுத்து,அதையும் தமிழ் மண்ணிலே பிரிண்ட் போட வந்திருக்கும் சிங்கள இயக்குனரிடம் நியாயம் கேட்க சென்ற இடத்தில் என் சகோதரர்கள் உணர்ச்சி வயப் பட்டு உடல் ரீதியாக செயல்பட்டது தங்களக்கு தவறாக தெரிகிறது…

ஆனால் கிட்டத் தட்ட 35 வருடங்களாக கொன்று குவிக்கப் பட்டு வரும் எங்கள் ஈழ உறவுகளை பற்றி அவதூறாக படம் எடுத்து வெளியிட முயலும் சிங்கள இயக்குனருக்கு பரிந்து வர ஞாநிக்கு எவ்வாறு உரிமையுள்ளதோ அதே உரிமை அந்த இழிவை தட்டிக் கேட்கும் உரிமை எங்களுக்கும் உண்டு.
எங்களால் எங்கள் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாத அரசிற்கு ஆதரவாக படம் எடுத்து தமிழ் மண்ணிலே வெளியிட துணியும் சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக இந்த மண்ணிலே ஞாநிகளும்,சாமிகளும் இருக்கின்றார்கள்.ஆனால் கடல் கடந்து கொன்று குவிக்கப் பட்டு வரும் எம் ஈழ உறவுகளை நினைத்து கண்ணீர் விட இந்த நாட்டில் தடை..

எங்கள் அண்ணன் சீமானை வைத்து ‘படம் எடுக்கத் துணியுங்கள் என்று சொல்கிறீர்கள்…ஏற்கனவே ஜான் என்பவர் எடுத்த ஆணிவேர் என்ற படத்தின் வரலாறு தங்களுக்கு தெரியும்.புகழேந்தி எடுத்து ‘காற்றுகென்ன வேலி’க்கு இன்னும் தடையாய் ஆயிரமாயிரம் வேலிகள்…

ஜனநாயகம் என்ற அம்சம் ஒரு இனத்திற்கு எதிரான கருத்து தாக்குதலை ஆதரிக்கிறதா என்ன..? உங்கள் ஜனநாயகக் கருத்துக்களை வாட்டாள் நாகராஜிடம் போய் சொல்லுங்கள்….

எங்கள் சொந்த உறவுகளை பற்றி அப்பட்டமாக,அட்டூழியமாக படம் எடுத்தவர் மீது கூட உணர்ச்சி வேகத்தில் பலம் குறைந்த வகையில் தாக்குதல் நடத்தி விட்டு,புத்தாடை அணிவித்து சகல பாதுகாப்புடன் இந்த மண்ணை விட்டு பாதுகாப்பாக வெளியேற அனுமதித்துள்ள நம் தமிழர்களின் உணர்வு ஞாநிக்கு எப்படி தெரியாமல் போகுமா…?
இயக்குனர் சீமான் உள்ளிட்ட என் அண்ணன்களுக்கு படமெடுப்பதை பற்றியும், அதில் கொள்கைகளை பேசுவது பற்றியும் ஞாநிக்கு திடீரென்று ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றி.
பக்கத்து கர்நாடகத்தின் கதை இந்நேரம் ஞாநிக்கு தெரிந்திருக்கும்…கருத்தை கருத்தால் சந்திப்போம் என்ற கருத்து தமிழக மண்ணிலே இருப்பதால் இங்கே ஞாநிகளும்,சாமிகளும், சர்வ சுதந்திரத்துடன் நடமாடி விஷம் கக்க முடிகிறது..

தற்போதைக்கு அண்ணன் அறிவுமதி கவிதையோடு விடை பெறுகிறேன்…

“கசக்கிப் பிழிந்து …ருசித்து சுவைத்தப் பின்.. தூக்கி எறியப் படுகின்ற
மாங்கொட்டைகள் மரங்களாய் விசுவரூபம் எடுக்கும்
என்பதை இவர்கள் மறந்து போயிருக்கிறார்கள்……
கோழிக் குஞ்சிகளை காப்பாற்றுவதற்காகக்
கழுகுக் கூடுகளை கலைக்கத் துடிப்பது குற்றமா ..என்ன..?
சூரிய முகங்களை சுமந்த என் தோழர்களே…
புறப்படுங்கள் ..தொடரட்டும் …நம் மக்கள் பணி…..
-பாவலர் அறிவுமதி…
மீண்டும் வருவேன்…

(இக்கடிதம் கீற்று.காம் இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது)

பதுங்குக் குழிகளை தேடும் ஞாநி….

குமுதம் இதழில் ஓ பக்கங்களில் பேரா.சுப.வீ குறித்து அவதூறுகளை அள்ளி வீசிய ஞாநி தொடர்ந்த நம் எதிர்ப்புகளால் இப்போது பதுங்குக் குழிகளை தேடி அலைகிறார்..திடீரென்று இந்த வாரம் மருத்துவர் ராமதாஸை ஆதரித்துள்ளார்…ஜெயலலிதா ஆட்சியில் ஒகேனக்கல் திட்டம் இம்மியளவும் நகர்த்தப் பட வில்லை என்று சாமரம் வீசிய கைகள் இன்று சாமர்த்தியம் பேசுகின்றன…மாலடிமை ..என்றும் தமிழ் கலாச்சார காவலர்
என்றும் மருத்துவர் அய்யாவை தூற்றியவர் பாய்ந்து வரும் எதிர்ப்புகளால் இன்று பதுங்குக் குழிகளை தேடி அலைகிறார்…

ஞாநி…அவர்களே…
கருத்துச் சுதந்திரத்தின் நவீன காவலரே….தங்கள் ஆர்குட் குழுமத்தில் இருந்து மாற்றுக் கருத்துக்கள் வைத்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை தடை செய்துள்ளீர்கள்…என் கருத்துகளும் ….என் அண்ணன் அறிவுமதியின் கடிதம் அடங்கிய கட்டுரையை …தங்களை அம்பலப் படுத்தி விடும் என்ற அச்சத்தால் அவசர..அவசரமாக ..முன் அறிவிப்பின்றி…அகற்றி உள்ளீர்கள்..இது தான் தங்களின் கருத்து காவலின் கதை….விவாதத்தில் பங்கெடுக்க முடியாத தாங்கள்…..எங்கு பதில் சொன்னால் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சியை உருவி விடுவார்கள் என்று அஞ்சும் நீங்கள்… உண்மைத் தமிழனாய்….உணர்வின் வீரனாய் பொங்கி எழுந்து ….ஆவேசமாய்…..உங்கள் ஆணி வேரை ஆட்டி பார்த்த …சத்யராஜ் அவர்களுக்கு குட்டு வைக்கிறீர்கள்…..சத்யராஜ் சங்கர மடத்து பெருமைகளை பாடி இருந்தால் பூச்செண்டு கொடுத்து இருப்பீர்கள்..

…ஒரு மனிதனை குட்டுவேன் என்று எழுதுவது வன்முறை இல்லையா….
எந்த தகுதி உங்களுக்கு குட்டும் அதிகாரத்தை வழங்கியது என தெரிந்து கொள்ளலாமா….ஞாநி…..தலையில் தோன்றிய தகுதியா…?

ஞாநி அவர்களே….

தங்களை அம்பலப்படுத்துவதை நான் இந்த தமிழுலகிற்கு செய்யும் பெரிய சேவையாக கருதுகிறேன்…தாங்கள் மிகவும் ஆபத்தானவர்….தமிழகத்தின் மிகப் பெரிய இதழியல் ஊடகங்களான ஆனந்த விகடனிலும்,அதற்கு பிறகு குமுதத்திலும் தொடர்ந்து தமிழ் பண்பாட்டு நிலைகள் மீதும்,திராவிட இயக்க ஆளுமைகள் மீதும் கருத்துத் தாக்குதலை தொடர்ந்துள்ளீர்கள்..இந்த தாக்குதல் சிங்கள பேரினவாத அரசு எம் ஈழ உறவுகளின் மீது தொடுத்திருக்கும் வன் தாக்குதலுக்கு இணையானது…சிங்கள இராணுவத்தின் தாக்குதலாவது இந்த தலைமுறையோடு நின்று விடும்…எம் தொப்புள் கொடி உறவுகளின் அடுத்த தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது…ஆனால் தாங்கள் ஊடகங்களில் பரப்பி வரும் தமிழ் உணர்வாளர்கள் ,மற்றும் திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களின் மெய் நிலைகளை திரிக்கும் கருத்து திணிப்புகள் ஒட்டுமொத்தமாக தடுக்கப் படவேண்டிய ஒன்றாக நான் கருதுகிறேன்….

இத்தனை ஆண்டு காலம் உங்களது முன்னோர்கள் எங்களது பண்பாட்டு வரலாற்றை அவர்களுக்கு சாதகமாக மாற்றி எழுதினார்கள்..பார்ப்பனர்கள் அடுத்தவரை ஏய்த்து..அரசனை கருத்தால் மாய்த்து…,மாய்மாலம் செய்து உச்சாணிக் கொம்பில் கொழுத்து இருந்து..சதுர்வேதி மங்கலங்களை,பட்டவர்த்திகளை பெற்ற காலங்களை பொற்காலம் என்றும்…சாதி வேறுபாடுகளை தகர்த்து,, பார்ப்பனர்களுக்கான சலுகைகள் மறுக்கப் பட்ட காலங்களை இருண்டகாலங்கள் என்று தமிழ் வரலாற்றை தங்களுக்கான வரலாறாக எழுதிய அதே உத்தியைத் தான் இன்று தாங்களும் எழுதுகிறீர்கள்…..

தாங்கள் எழுதியுள்ள தவறான…உண்மைக்கு திரிபான கருத்துக்களை எதிர்கால தமிழகம் அப்படியே வடிக்கட்டலின்றி வரலாறாக கவனித்து விடும் என்பதற்காகவே தாங்கள் கருத்துகள் மீது இவ்விதமான தொடர் மாற்றுக் கருத்துக்களை வைத்து வருகிறேன்…
தங்களை நேரடியாக விவாதத்திற்கு அழைக்கிறேன்…..நீங்கள் புழங்கும் உங்கள் தளத்திலேயே வந்து எழுதுகிறேன்….உண்மை இருப்பின்…உங்கள் கருத்தில் தெளிவு இருப்பின் …உங்களது ஆரவாரமான சேனைகளோடு வந்து விவாதிக்க வேண்டியது தானே..?

அதை விடுத்து…..என் கட்டுரையை அழிக்கிறீர்கள்…என்னை தடை செய்கிறீர்கள்….
இது கருத்து சர்வாதிகாரம் இல்லையா…தங்கள் கருத்துக்களை அப்படியே தமிழன் தயங்காமல் முழுங்கி விட வேண்டுமா என்ன……

சென்ற முறை தந்தை பெரியாரை தாங்கள் இழிவுப் படுத்தியது குறித்து தாங்கள் என்னோடு நடத்திய விவாதத்தில் உங்கள் ஆர்குட் குழுமத்தையே அழிக்க வேண்டும் என உத்திர விட வில்லையா….?

தங்களது கருத்துகளை வெளியிடும் குமுதமும் அடுத்த வாரம் தங்கள் அவதூறு கருத்துகளை எதிர்த்து பேரா.சுப.வீ அவர்களின் பதிலையும்..அவரின் பதிலுக்கான உங்களது எதிர்வினையையும் ஒரே இதழில் வெளியிட துணிந்திருப்பதும் தங்களை காப்பாற்றும் செயலாகவே நான் பார்க்க வேண்டியுள்ளது…குமுதம் போன்ற மக்கள் அதிகமாக படிக்கக்கூடிய இதழ் ..இப்படிப்பட்ட அவதூறுகளை வெளியிடுவது தவறு…இந்த போக்கு எதிர்காலத்தில் பிழையான வடுவாக எஞ்சி இருக்காதா…?

இத்தனை ஆண்டு காலம் தமிழ் அறிவுலகில் இயங்கி வந்துள்ளீர்கள்…தங்களை எத்தனையோ மேடைகளில் …ஊடகங்களில் நிறுத்தி வைத்து…..கைத் தட்டிய தமிழர்கள் மீது கொஞ்சமும் நன்றி இல்லாமல் தொடர்ந்து தவறாகவே எழுதி வருகிறீர்கள்…

விவாதத்திற்கு வாருங்கள் ஞாநி..அதை உலகத் தமிழர்கள் சார்பில் நான் வரவேற்கிறேன்…உங்களது அனைத்து பதிலுக்கு பதில்களுக்கும் எங்களிடம் தலைமுறை கடந்த கேள்விகள் இருக்கின்றன..அதனை விடுத்து பதில் சொல்லாமல் சாதூர்ய சந்தில் பதுங்காதீர்கள்….

இந்த சின்னத் தூறலுக்கே…
இப்படி இரும்புக் குடைக்குள்
ஒண்டுகிறீர்களே…….
நாளைய நெருப்பு மழைக்கு
எந்தக் குடையில்…
அடேய்..
எந்தக் குடையில்…

-பாவலர். அறிவுமதி..

இளையராஜா-தமிழ் மண்ணின் இசை……

வணக்கம் தோழர்களே….
சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது…

இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த மாமேதை எப்படி மற்ற இசை வல்லுனர்களை விட தனித்து நிற்கிறார் என்பதற்காகவும் ,அவரின் தனித்துவமான இசைக் கூறுகள் எப்படிப்பட்ட உச்சங்களை தொடுகின்றன என்பதை நான் உணர்ந்தவைகளை உங்களிடத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டவன் என்பதற்காகவும் இந்த இக் கட்டுரையை எழுதுகிறேன்..

தமிழ்சினிமாவின் ஆரம்ப கால இசைக் கூறுகள் மேட்டிமைத் தனம் வாய்ந்த ,கர்நாடக இசை அறிவு உடைய மேலோருக்கும் உடையதாக இருந்தது என்பதும்,நாடகத்தின் நவீன வடிவமாய் சினிமா தோன்றியதால் இசை என்ற அம்சம் முழுக்க நாடகத் தன்மை நிறைந்ததாக விளங்கியது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை…

சினிமா என்ற அம்சம் மெல்ல மெல்ல பாமர மனிதர்களை ஈர்க்க துவங்கியதன் விளைவுகள் திரையசையிலும் எதிரொலிக்க துவங்கியது..

தமிழ்த்திரையுலகில்சி.ஆர்.சுப்பாராமன்(தேவதாஸ்),
எஸ்.வி.வெங்கட்ராமன்(மீரா),எஸ்.ராஜேஸ்வரராவ்(மிஸ்ஸியம்மா),
கண்டசாலா(பாதாளபைரவி,மாயாபஜார்),ஜி.ராமநாதன் (ஹரிதாஸ்,உத்தம புத்திரன்,அம்பிகாபதி) போன்ற இசைமேதைகள் மின்னத் துவங்கினர்.

திருவிளையாடல் ,வசந்தமாளிகை போன்ற படங்களுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன் அவர்களும் திரையிசையில் மறக்க இயலாத உச்சத்தை தொட்டவர்தான்.
1957-ல் மாலையிட்ட மங்கை படத்தில் அறிமுகமான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் –ராமமூர்த்தி என்ற இரட்டையர் தமிழ் திரையிசையின் போக்குகளை மாற்றத் துவங்கினர்.பாமர மக்களும் ,எளிய மக்களும் திரை இசை சுகத்தை அனுபவிக்க துவங்கினர்.
மெல்லிசை மன்னர்கள்,ஏ.எம்.ராஜா,போன்றோர் திரையிசையின் திரைக் கட்டுகளை மெதுவாய் நெகிழ்த்தி அதை சாதாரண மக்களின் உணர்வு தளத்திற்கு கடத்தினர்….மக்கள் திரையிசையை தன் சாதாரண வாழ்க்கையின் மறுக்க முடியாத அம்சமாய் வரையறுத்துக் கொண்டதும் இந்த காலக் கட்டதில்தான்…

தமிழ் திரையுலகில் பாபி,குர்பானி,சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட இந்தி திரையிசையின் தாக்கம் மிகுதியாக இருந்த காலக் கட்டத்தில் ,நவ நாகரீக தூதுவர்கள் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள துடித்த இளைஞர்களின் உதட்டில் இந்திப் பாடல்களே உட்காரத் துவங்கியது.
அந்த நேரத்தில்தான் அன்னக் கிளி படம் மூலம் ஒரு குக்கிராமத்தில் இருந்து,தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் பிறந்து,கருத்த நிறத்தில்,சினிமா உலகிற்கென வகுக்கப் பட்ட எந்த ஒரு இலக்கணத்திற்கும் உட்படாத ,
சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள் ஏதும் அறியாத,எளிய மக்களின் அடையாளமாய் நுழைந்த இளையராஜாவின் பிரவேசம் நடந்தது.

இளையராஜாவின் இசை துவக்கம் முதலே மனித உணர்வின் தளத்தின் ஊடே நுழையும் வித்தையை தெரிந்துவைத்திருந்தது தான் இன்றளவும் எனக்குள்ள ஆச்சர்யம்.
முதல் பாடல் அன்னக் கிளியே உன்னை தேடுதே என்ற பாடலில் அவர் நம் தமிழ் மண்ணுக்கே உரிய நாட்டுப் புறத்தன்மையும்,வளைவும் நெளிவும் நிறைந்த புல்லாங்குழல் இசையோடு கூடிய ,ஒரு கிராமத்து வாழ்வியலை நினைவுக் கூறும் ,மெல்லிய மேற்கத்திய இசை வடிவங்களின் அடிப்படையோடு கலந்த புதுமையான இசையை வழங்கினார்…

கோரஸ் என்ற கூட்டுப் பாடல் உத்தியை மிகவும் அழகாக தன் பெரும்பாலான பாடல்களில் கையாளுகின்ற இளையராஜா அதற்கென பாடலோடு இழைகின்ற சின்னச் சின்ன உத்திகளால் அந்தப் பாடலை ஒரு அழகான கவிதையாய் மலர்த்துவதில் தனித் திறமை கொண்டவராக இருக்கிறார்..

இளையராஜாவின் ஆரம்பகால படங்களான , சிட்டுக்குருவி,கவிக்குயில் பத்ரகாளி போன்ற பாடங்களில் தனக்கேரிய தனி முத்திரை எதுவென தேர்ந்தெடுக்க இளையராஜாவிற்கு எந்த ஒரு குழப்பமும் இருந்ததில்லை.

கவிக்குயில் என்ற திரைப் படத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் இன்றும் கவனித் தக்க இசையை கொண்டிருக்கிறது…அந்தப் பாடல் முழுக்க நீரோடை போன்ற ஒட்டத்தை கொண்டது…குறிப்பாக அந்த பாடலை பெண் குரலில் கேட்கும் போது …முதலில் அதிர்ச்சி அம்சத்துடன் துவங்கும் சோக உணர்வை ஏற்படுத்தும் வயலின் இசையையும், இனிய புல்லாங்குழல் குரலோடு,பனி இரவில் பெளர்ணமி நிலவில் தனியாய் ஒடும் ஒற்றை நீரோடை காண்பதில் உள்ள சுகத்தை ஏற்படுத்தும்.

அதே போல சிட்டுக்குருவி என்ற படத்தில் வரும் என் கண்மணி என்று துவங்கும் பாடல் மிகவும் வித்தியாசமான முயற்சி..இரட்டை குரலோடு ஒலித்தாலும், அந்த குரல்களின் இடைவெளி தூரத்தை இளையராஜா வகுத்திருக்கும் தன்மை பிரமிக்க வைக்கக் கூடியது. அந்த பாடலின் ஊடே பேருந்து பயணச் சுவடுகளை விதைத்து அந்த பாடலை அழகானதாக ,அபூர்வமான ஒன்றாக வடிவமைத்து இருப்பார் ராஜா.

சக்களத்தி படத்தில் வாடை வாட்டுது என்ற பாடல் இரவின் தனிமையும்,தன்னிரக்கத்தையும் நம்மிடையே விதைக்க வல்லது.
இதே போன்ற பாடல்தான் மலைக்கிராமத்தின் இரவினைப் பற்றிப் பேசும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் உச்சி வகுந்தெடுத்து என்ற பாடல்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் சிறு பொன்மணி துவங்கும் பாடல் சரணமும் ,பல்லவியும் நீண்ட தொடர்களாக அமையும் வண்ணம் அமைத்திருப்பது புதுமை.இதே உத்தியை அவர் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வரும் கண்மணியே …காதல் என்பது என்ற பாடலிலும் ,கேளடி கண்மணி படத்தில் மண்ணில் இந்த ..என்ற பாடலிலும் ,புதிய வார்ப்புகள் படத்தில் தம் தன தம் தன தாளம் வரும் என்ற பாடலிலும் பயன்படுத்தி இருப்பார்.

நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற ஒரு பாடலுக்காகவே தனிக் கட்டுரை எழுதலாம்…இசைக் கலவையின் உச்சம் அது.ஜென்ஸி என்ற மயக்கும் குரல் உடைய பாடகி தன்னால் முடிந்த அளவிற்கு அந்த பாடலை கிளாசிக் என்ற வகையில் சேர்த்திருப்பார்…
இதே போன்ற பாடல்தான் கரும்பு வில் திரைப்படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மதராஜன்..என்ற பாடல் மற்றும் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…..என்ற பாடல்களும்…

அதே போல் உதிரிப் பூக்கள் படத்தில் கேட்கும் போதெல்லாம் நம்மை உள்ளுக்குள் கலங்க வைக்கும் அழகிய கண்ணே என்ற பாடலின் தனித்துவத்தை உணர்ந்து காட்சியமைப்பில் கவிதையாக்கி இருப்பார் மகேந்திரன்…தாயின் வாசனையையும், தனிமையின் துயரத்தையும் அந்த பாடல் இன்றளவும் கசிய விட்டுக் கொண்டிருக்கிறது.இதே போன்ற மற்றொரு பாடல் மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே…என்ற பாடல்.

அலை அலையாய் துவங்கும் 16 வயதினிலே திரைப்பட பாடல் செந்தூரப் பூவே என்ற பாடலில் நாட்டுப் புற இசை வடிவங்களை கொண்டு பருவத்தின் கனவுகளை மெல்லிய சோகத்துடன் வடிவமைத்து இருப்பார்….

மெல்லிய ராகமாய் ,ஒரு பூ அவிழ்வது போல உச்சத்தை எட்டும் மற்றொரு பாடல் ஜானி திரைப்படத்தில் காற்றில் எந்தன் கீதம் என்ற பாடல்…அதில் முதல் முதல் பல்லவிக்கு முன்னர் சேர்க்கப் பட்டிருக்கும் இசைக் கோர்வை மிகவும் பிரசித்தமானது. அதே படத்தில் வரும் மற்றொருப் பாடலான என் வானிலே என்ற பாடலும் மிகவும் நல்ல உணர்வுகளை நம்மில் எழுப்பக் கூடியது.

ஜாஸ் வகை பாடல்கள் என்ற வரிசையில் ஒலிக்கும் சிவப்பு ரோஜாக்கள் பாடலான இந்த மின்மினிக்கு …என்ற பாடலில் துவக்கத்தில் மற்றும் நடுவில் வரும் பெண்ணின் கோரஸ் குரல் கேட்க மிகவும் சுவாரசிய தன்மையை உடையது.விக்ரம் படத் தலைப்பு பாடலான விக்ரம் என்ற பாடலில் வரும் பெண்களின் கோரஸ் குரல் கோர்வைகளும் இத்தகையதே…

காதலாகட்டும், காமம் ஆகட்டும் ,கோபம் ஆகட்டும், விரக்தி ஆகட்டும் இளையராஜா மனித உணர்வுகளை இசை மொழியாக வகுக்கும் விதமே அலாதி.அவரின் மிகுதியான உற்சாகத்தை வழங்கக் கூடிய பாடல்களிலும் மாலை இருட்டினை பேசும் தனிமையான சோக உணர்வினை வழங்கக்கூடிய இசையினை மெலிதாக கசிய விட்டிருப்பார்.

(தொடர்ந்து எழுதுவேன்…)

என் கவிதைகள்…

*

இன்னும் ஈரம் குலையாத
வண்ணத் தூரிகையில்
இருந்து
சொட்டிக்கொண்டே இருக்கின்றன…
வரையப் படாத என் ஓவியங்கள்…

*

அறியப் படாத பின்னிரவுகஆளில்
வெளிர் நீலமாய் கசியும்
என் கனவுகளை மிரட்டி
துரத்துகின்றன தெரு
நாய்களின் ஓலங்கள்…

*

விடியலின் பிளிறலில்
மிரண்டு ஓடும்
விட்டில்கள்…..

*

நீ விசி எறிந்த
எனக்கான
ப்ரத்யோக பார்வையை
உலர்ந்த சருகுகளிடயே
சப்தமிடாமல் நான் தேடிய
அந்த மஞ்சள் மாலைப்
பொழுதில்……..
என்னைக் கடந்து எத்தனை
பட்டாம்பூச்சிகள் பறந்து
சென்றன என்பதற்கான
கணக்கில் நினைவில்
நின்றவை தவிர
மறந்துப் போன
சில உதிரிகளைக் குறித்து
எனது பெரும் கவலை
இருந்தது என்பது பற்றி
நீ ஏதும் அறிவாயா..?

*

ஆங்காங்கே இடப்பட்ட
புள்ளிகளில் யூகிக்க
முடியாமல் திணறுகிறேன்
ஒரு அழகிய கோலாத்தை….

*

**********************************************************************************

பிரிவிற்கான மொழி…
——————-

மிக நெருங்கிய தருணத்தில்
ஒரு வியர்வைத்துளியின்
இடைவெளியில் மெல்ல
விலகி விட்டோம் நாம்….

எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
எது நகருகிறது….?

நிகழ்தகவுகளாய் வர்ணம்
மாறிய மனதின் மெளனத்தை
பேச முடியுமா உன்னால்…?

இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
இருவருமே அமைதியாய்
காத்திருக்கிறோம்….

பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உதடுகள்
தங்களை ஈரப் படுத்திக்
கொள்கின்றன…

ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நம் பிரிவிற்கான
உறவு….

நீண்ட மெளனங்களின்
கருத்த வராண்டாக்களில்
தளர்ந்து நடக்கிறது….
நம்மை மீறி கொப்புளிக்க
துடித்த நம் முதல்
துளிர்த்தலுக்கான நினைவு….

மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
நம் அரிதாரத்தை காட்டும்
அளவுக்கு மீறிய ஓப்பனை…

நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிறது இந்த
இமைக்காத பொழுது….

சில பெருமூச்செறிதல்களுக்கு
பிறகு…

சின்னப் புன்னகையோடும்
மென்மை கைக் குலுக்கலோடும்
துவங்கிறது…

நம் பிரிவிற்கான மொழி.

சொல்லின் சொல்….
——————

நம் உரையாடலில்
ஒரு கண உமிழலில்
பிறப்பெடுக்கப் போகும்
எனது அடுத்த சொல்
விசேடமானது….

நான் உதிர்க்கும் இறுதி
சொல்லாக அது இருக்கலாம்…
அல்லது நீங்கள் கேட்கும்
கடைசிச் சொல்லாக கூட
இது அமையலாம்….

ஏற்கனவே நான்
காற்றில் விதைத்துப் போன
சொற்களின் தொடர்வாய்
இது நிகழலாம்…

ஒரு கண உமிழலில்
காலங் காலமாய் கட்டி
வைக்கப் பட்டிருந்த
கோட்டைக் கொத்தளங்களை
சரிக்கும் உளியாக கூட இது
இருக்க்கலாம்..

ஆதிக்கத்திற்கு எதிரான தோட்டாவாக
அது வெடிக்கலாம்…

அல்லது

மெளனமாய் இறந்தவனின்
கல்லறையில் ஒரு
உதிரிப் பூவாகக் கூட
அது கிடக்கலாம்….

ஆனால் அந்த சொல்லின்
கரைசலின் மீதத்தில்
நான் இருப்பேன் என்பதை
இப்போதைக்கு
உறுதியாய் சொல்ல முடியும்.

Page 53 of 56

Powered by WordPress & Theme by Anders Norén