பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 54 of 57

இளையராஜா-தமிழ் மண்ணின் இசை……

வணக்கம் தோழர்களே….
சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது…

இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த மாமேதை எப்படி மற்ற இசை வல்லுனர்களை விட தனித்து நிற்கிறார் என்பதற்காகவும் ,அவரின் தனித்துவமான இசைக் கூறுகள் எப்படிப்பட்ட உச்சங்களை தொடுகின்றன என்பதை நான் உணர்ந்தவைகளை உங்களிடத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டவன் என்பதற்காகவும் இந்த இக் கட்டுரையை எழுதுகிறேன்..

தமிழ்சினிமாவின் ஆரம்ப கால இசைக் கூறுகள் மேட்டிமைத் தனம் வாய்ந்த ,கர்நாடக இசை அறிவு உடைய மேலோருக்கும் உடையதாக இருந்தது என்பதும்,நாடகத்தின் நவீன வடிவமாய் சினிமா தோன்றியதால் இசை என்ற அம்சம் முழுக்க நாடகத் தன்மை நிறைந்ததாக விளங்கியது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை…

சினிமா என்ற அம்சம் மெல்ல மெல்ல பாமர மனிதர்களை ஈர்க்க துவங்கியதன் விளைவுகள் திரையசையிலும் எதிரொலிக்க துவங்கியது..

தமிழ்த்திரையுலகில்சி.ஆர்.சுப்பாராமன்(தேவதாஸ்),
எஸ்.வி.வெங்கட்ராமன்(மீரா),எஸ்.ராஜேஸ்வரராவ்(மிஸ்ஸியம்மா),
கண்டசாலா(பாதாளபைரவி,மாயாபஜார்),ஜி.ராமநாதன் (ஹரிதாஸ்,உத்தம புத்திரன்,அம்பிகாபதி) போன்ற இசைமேதைகள் மின்னத் துவங்கினர்.

திருவிளையாடல் ,வசந்தமாளிகை போன்ற படங்களுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன் அவர்களும் திரையிசையில் மறக்க இயலாத உச்சத்தை தொட்டவர்தான்.
1957-ல் மாலையிட்ட மங்கை படத்தில் அறிமுகமான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் –ராமமூர்த்தி என்ற இரட்டையர் தமிழ் திரையிசையின் போக்குகளை மாற்றத் துவங்கினர்.பாமர மக்களும் ,எளிய மக்களும் திரை இசை சுகத்தை அனுபவிக்க துவங்கினர்.
மெல்லிசை மன்னர்கள்,ஏ.எம்.ராஜா,போன்றோர் திரையிசையின் திரைக் கட்டுகளை மெதுவாய் நெகிழ்த்தி அதை சாதாரண மக்களின் உணர்வு தளத்திற்கு கடத்தினர்….மக்கள் திரையிசையை தன் சாதாரண வாழ்க்கையின் மறுக்க முடியாத அம்சமாய் வரையறுத்துக் கொண்டதும் இந்த காலக் கட்டதில்தான்…

தமிழ் திரையுலகில் பாபி,குர்பானி,சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட இந்தி திரையிசையின் தாக்கம் மிகுதியாக இருந்த காலக் கட்டத்தில் ,நவ நாகரீக தூதுவர்கள் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள துடித்த இளைஞர்களின் உதட்டில் இந்திப் பாடல்களே உட்காரத் துவங்கியது.
அந்த நேரத்தில்தான் அன்னக் கிளி படம் மூலம் ஒரு குக்கிராமத்தில் இருந்து,தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் பிறந்து,கருத்த நிறத்தில்,சினிமா உலகிற்கென வகுக்கப் பட்ட எந்த ஒரு இலக்கணத்திற்கும் உட்படாத ,
சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள் ஏதும் அறியாத,எளிய மக்களின் அடையாளமாய் நுழைந்த இளையராஜாவின் பிரவேசம் நடந்தது.

இளையராஜாவின் இசை துவக்கம் முதலே மனித உணர்வின் தளத்தின் ஊடே நுழையும் வித்தையை தெரிந்துவைத்திருந்தது தான் இன்றளவும் எனக்குள்ள ஆச்சர்யம்.
முதல் பாடல் அன்னக் கிளியே உன்னை தேடுதே என்ற பாடலில் அவர் நம் தமிழ் மண்ணுக்கே உரிய நாட்டுப் புறத்தன்மையும்,வளைவும் நெளிவும் நிறைந்த புல்லாங்குழல் இசையோடு கூடிய ,ஒரு கிராமத்து வாழ்வியலை நினைவுக் கூறும் ,மெல்லிய மேற்கத்திய இசை வடிவங்களின் அடிப்படையோடு கலந்த புதுமையான இசையை வழங்கினார்…

கோரஸ் என்ற கூட்டுப் பாடல் உத்தியை மிகவும் அழகாக தன் பெரும்பாலான பாடல்களில் கையாளுகின்ற இளையராஜா அதற்கென பாடலோடு இழைகின்ற சின்னச் சின்ன உத்திகளால் அந்தப் பாடலை ஒரு அழகான கவிதையாய் மலர்த்துவதில் தனித் திறமை கொண்டவராக இருக்கிறார்..

இளையராஜாவின் ஆரம்பகால படங்களான , சிட்டுக்குருவி,கவிக்குயில் பத்ரகாளி போன்ற பாடங்களில் தனக்கேரிய தனி முத்திரை எதுவென தேர்ந்தெடுக்க இளையராஜாவிற்கு எந்த ஒரு குழப்பமும் இருந்ததில்லை.

கவிக்குயில் என்ற திரைப் படத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் இன்றும் கவனித் தக்க இசையை கொண்டிருக்கிறது…அந்தப் பாடல் முழுக்க நீரோடை போன்ற ஒட்டத்தை கொண்டது…குறிப்பாக அந்த பாடலை பெண் குரலில் கேட்கும் போது …முதலில் அதிர்ச்சி அம்சத்துடன் துவங்கும் சோக உணர்வை ஏற்படுத்தும் வயலின் இசையையும், இனிய புல்லாங்குழல் குரலோடு,பனி இரவில் பெளர்ணமி நிலவில் தனியாய் ஒடும் ஒற்றை நீரோடை காண்பதில் உள்ள சுகத்தை ஏற்படுத்தும்.

அதே போல சிட்டுக்குருவி என்ற படத்தில் வரும் என் கண்மணி என்று துவங்கும் பாடல் மிகவும் வித்தியாசமான முயற்சி..இரட்டை குரலோடு ஒலித்தாலும், அந்த குரல்களின் இடைவெளி தூரத்தை இளையராஜா வகுத்திருக்கும் தன்மை பிரமிக்க வைக்கக் கூடியது. அந்த பாடலின் ஊடே பேருந்து பயணச் சுவடுகளை விதைத்து அந்த பாடலை அழகானதாக ,அபூர்வமான ஒன்றாக வடிவமைத்து இருப்பார் ராஜா.

சக்களத்தி படத்தில் வாடை வாட்டுது என்ற பாடல் இரவின் தனிமையும்,தன்னிரக்கத்தையும் நம்மிடையே விதைக்க வல்லது.
இதே போன்ற பாடல்தான் மலைக்கிராமத்தின் இரவினைப் பற்றிப் பேசும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் உச்சி வகுந்தெடுத்து என்ற பாடல்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் சிறு பொன்மணி துவங்கும் பாடல் சரணமும் ,பல்லவியும் நீண்ட தொடர்களாக அமையும் வண்ணம் அமைத்திருப்பது புதுமை.இதே உத்தியை அவர் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வரும் கண்மணியே …காதல் என்பது என்ற பாடலிலும் ,கேளடி கண்மணி படத்தில் மண்ணில் இந்த ..என்ற பாடலிலும் ,புதிய வார்ப்புகள் படத்தில் தம் தன தம் தன தாளம் வரும் என்ற பாடலிலும் பயன்படுத்தி இருப்பார்.

நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற ஒரு பாடலுக்காகவே தனிக் கட்டுரை எழுதலாம்…இசைக் கலவையின் உச்சம் அது.ஜென்ஸி என்ற மயக்கும் குரல் உடைய பாடகி தன்னால் முடிந்த அளவிற்கு அந்த பாடலை கிளாசிக் என்ற வகையில் சேர்த்திருப்பார்…
இதே போன்ற பாடல்தான் கரும்பு வில் திரைப்படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மதராஜன்..என்ற பாடல் மற்றும் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…..என்ற பாடல்களும்…

அதே போல் உதிரிப் பூக்கள் படத்தில் கேட்கும் போதெல்லாம் நம்மை உள்ளுக்குள் கலங்க வைக்கும் அழகிய கண்ணே என்ற பாடலின் தனித்துவத்தை உணர்ந்து காட்சியமைப்பில் கவிதையாக்கி இருப்பார் மகேந்திரன்…தாயின் வாசனையையும், தனிமையின் துயரத்தையும் அந்த பாடல் இன்றளவும் கசிய விட்டுக் கொண்டிருக்கிறது.இதே போன்ற மற்றொரு பாடல் மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே…என்ற பாடல்.

அலை அலையாய் துவங்கும் 16 வயதினிலே திரைப்பட பாடல் செந்தூரப் பூவே என்ற பாடலில் நாட்டுப் புற இசை வடிவங்களை கொண்டு பருவத்தின் கனவுகளை மெல்லிய சோகத்துடன் வடிவமைத்து இருப்பார்….

மெல்லிய ராகமாய் ,ஒரு பூ அவிழ்வது போல உச்சத்தை எட்டும் மற்றொரு பாடல் ஜானி திரைப்படத்தில் காற்றில் எந்தன் கீதம் என்ற பாடல்…அதில் முதல் முதல் பல்லவிக்கு முன்னர் சேர்க்கப் பட்டிருக்கும் இசைக் கோர்வை மிகவும் பிரசித்தமானது. அதே படத்தில் வரும் மற்றொருப் பாடலான என் வானிலே என்ற பாடலும் மிகவும் நல்ல உணர்வுகளை நம்மில் எழுப்பக் கூடியது.

ஜாஸ் வகை பாடல்கள் என்ற வரிசையில் ஒலிக்கும் சிவப்பு ரோஜாக்கள் பாடலான இந்த மின்மினிக்கு …என்ற பாடலில் துவக்கத்தில் மற்றும் நடுவில் வரும் பெண்ணின் கோரஸ் குரல் கேட்க மிகவும் சுவாரசிய தன்மையை உடையது.விக்ரம் படத் தலைப்பு பாடலான விக்ரம் என்ற பாடலில் வரும் பெண்களின் கோரஸ் குரல் கோர்வைகளும் இத்தகையதே…

காதலாகட்டும், காமம் ஆகட்டும் ,கோபம் ஆகட்டும், விரக்தி ஆகட்டும் இளையராஜா மனித உணர்வுகளை இசை மொழியாக வகுக்கும் விதமே அலாதி.அவரின் மிகுதியான உற்சாகத்தை வழங்கக் கூடிய பாடல்களிலும் மாலை இருட்டினை பேசும் தனிமையான சோக உணர்வினை வழங்கக்கூடிய இசையினை மெலிதாக கசிய விட்டிருப்பார்.

(தொடர்ந்து எழுதுவேன்…)

என் கவிதைகள்…

*

இன்னும் ஈரம் குலையாத
வண்ணத் தூரிகையில்
இருந்து
சொட்டிக்கொண்டே இருக்கின்றன…
வரையப் படாத என் ஓவியங்கள்…

*

அறியப் படாத பின்னிரவுகஆளில்
வெளிர் நீலமாய் கசியும்
என் கனவுகளை மிரட்டி
துரத்துகின்றன தெரு
நாய்களின் ஓலங்கள்…

*

விடியலின் பிளிறலில்
மிரண்டு ஓடும்
விட்டில்கள்…..

*

நீ விசி எறிந்த
எனக்கான
ப்ரத்யோக பார்வையை
உலர்ந்த சருகுகளிடயே
சப்தமிடாமல் நான் தேடிய
அந்த மஞ்சள் மாலைப்
பொழுதில்……..
என்னைக் கடந்து எத்தனை
பட்டாம்பூச்சிகள் பறந்து
சென்றன என்பதற்கான
கணக்கில் நினைவில்
நின்றவை தவிர
மறந்துப் போன
சில உதிரிகளைக் குறித்து
எனது பெரும் கவலை
இருந்தது என்பது பற்றி
நீ ஏதும் அறிவாயா..?

*

ஆங்காங்கே இடப்பட்ட
புள்ளிகளில் யூகிக்க
முடியாமல் திணறுகிறேன்
ஒரு அழகிய கோலாத்தை….

*

**********************************************************************************

பிரிவிற்கான மொழி…
——————-

மிக நெருங்கிய தருணத்தில்
ஒரு வியர்வைத்துளியின்
இடைவெளியில் மெல்ல
விலகி விட்டோம் நாம்….

எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
எது நகருகிறது….?

நிகழ்தகவுகளாய் வர்ணம்
மாறிய மனதின் மெளனத்தை
பேச முடியுமா உன்னால்…?

இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
இருவருமே அமைதியாய்
காத்திருக்கிறோம்….

பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உதடுகள்
தங்களை ஈரப் படுத்திக்
கொள்கின்றன…

ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நம் பிரிவிற்கான
உறவு….

நீண்ட மெளனங்களின்
கருத்த வராண்டாக்களில்
தளர்ந்து நடக்கிறது….
நம்மை மீறி கொப்புளிக்க
துடித்த நம் முதல்
துளிர்த்தலுக்கான நினைவு….

மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
நம் அரிதாரத்தை காட்டும்
அளவுக்கு மீறிய ஓப்பனை…

நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிறது இந்த
இமைக்காத பொழுது….

சில பெருமூச்செறிதல்களுக்கு
பிறகு…

சின்னப் புன்னகையோடும்
மென்மை கைக் குலுக்கலோடும்
துவங்கிறது…

நம் பிரிவிற்கான மொழி.

சொல்லின் சொல்….
——————

நம் உரையாடலில்
ஒரு கண உமிழலில்
பிறப்பெடுக்கப் போகும்
எனது அடுத்த சொல்
விசேடமானது….

நான் உதிர்க்கும் இறுதி
சொல்லாக அது இருக்கலாம்…
அல்லது நீங்கள் கேட்கும்
கடைசிச் சொல்லாக கூட
இது அமையலாம்….

ஏற்கனவே நான்
காற்றில் விதைத்துப் போன
சொற்களின் தொடர்வாய்
இது நிகழலாம்…

ஒரு கண உமிழலில்
காலங் காலமாய் கட்டி
வைக்கப் பட்டிருந்த
கோட்டைக் கொத்தளங்களை
சரிக்கும் உளியாக கூட இது
இருக்க்கலாம்..

ஆதிக்கத்திற்கு எதிரான தோட்டாவாக
அது வெடிக்கலாம்…

அல்லது

மெளனமாய் இறந்தவனின்
கல்லறையில் ஒரு
உதிரிப் பூவாகக் கூட
அது கிடக்கலாம்….

ஆனால் அந்த சொல்லின்
கரைசலின் மீதத்தில்
நான் இருப்பேன் என்பதை
இப்போதைக்கு
உறுதியாய் சொல்ல முடியும்.

நாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.

தோழர்களே…..

வணிக மயமாக மாறிப்போன நம் நாட்டின் திரைப்படத் துறையை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் மாற்றுச் சிந்தனைகளை, திரைப்படங்கள் குறித்த நேர்மறையான எண்ணங்களை சமூகத் தளத்தில் உண்டாக்க திரைப்பட இயக்கங்களின் இயக்கம் நாளது தேதியில் அவசியமாக உள்ளது.

உலக சினிமாக்கள் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இடம் பிடிக்க துவங்கி விட்ட இந்த சூழலில் திரைப்படம் என்ற அரிய பொருளை வெறும் பொழுதுபோக்கிற்கானது என்று உணரும் அபாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது..
மக்களை அசலாக பிரதிபலிக்கக் கூடிய திரைப் படங்களை காணுவதும்,அவை குறித்த எதிர்வினைகளை சமூகத் தளத்தில் ஆரோக்கிய சூழலில் ஏற்படுத்திட திரைப்பட இயக்கம் என்ற குழுவின் செயல்பாடு அவசியமானது.

குறும்படங்கள் ,மாற்று சிந்தனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படைப்பிற்கு துரோகம் இழைக்காமல் சித்தரிக்கின்ற படங்கள் ஆகியவைகளை முன்னிறுத்த வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.ஏதோ ஒரு வகையில் உண்மையான திரைமொழியை நிகழ்த்தத் துடிக்கும் படைப்பாளிகளை கெளரவப் படுத்துவதும் இதில் அடங்கும்.

இதைத் தான் என் தோழர்கள் கோவையில் நாய்வால் திரைப்பட இயக்கம் மூலம் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கோவையில் செயல்பட்டு வரும் நாய்வால் திரைப்பட இயக்கம் மாற்றுப் படங்கள் மற்றும் குறும் படங்கள் ஆகியவை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமில்லாமல் அவற்றை சார்ந்து இயங்கும் படைப்பாளிகளை முன்னிலைப் படுத்தியும் வருகிறது….அத்தி பூத்தாற் போல் நல்ல திரைமொழியை உள்ளடக்கமாக கொண்டுவரும் திரைப்படங்கள் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைத்து,அதன் படைப்பாளிகளை பாராட்டி வரும் நாய்வால் திரைப்பட இயக்கத்தின் பணி மகத்துவமானது.

தோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில்வாணன் மற்றும் தோழர்கள் நடத்தி வரும் நாய்வால் திரைப் பட இயக்கம் நாளை கோவையில் நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளது…நடிகர் சத்யராஜ்..,எழுத்தாளர் மணா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.தோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில் வாணன் ஆகியோர் தன் தெளிந்த சிந்தனைத் திறத்தால், ஊக்கம் மிக்க செயல்பாட்டால் நாய்வால் திரைப்பட இயக்கத்தை மிளிரச் செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் புகழ்ப் பெற்ற எழுத்தாளுமை, நம் சகா..நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் பெருமைமிகு தோழமை ….தோழர் பாமரனின் சிறப்புரையும் உண்டு…
நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சக இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கம் தனது அளப்பரிய செயல்பாடுகளால் திரைப்படங்கள் குறித்த மாற்றுச் சிந்தனைகளை முன் வைத்து வருகின்ற இந்த பெருமை மிகு சூழலில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் தனது சகோதர இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கத்தை பெருமையுடன் பாராட்டுகிறது..

தோழர் யுவனின் அழைப்பும்,.தோழர் ஜெயக்குமாரின் அழைப்பும் என்னைப் பொறுத்தவரையில் விலை மதிக்க முடியாதவை….அவர்களை நோக்கி என் தவறுதலுக்கான வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
என் சார்பாக தோழர் யுவனின் பங்கேற்பும் ,செயல்பாடும் சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மேற்கண்ட விழாவில் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் தோழர்.யுவன் பிரபாகரன்..,தம்பிகள் தமிழ்,நாசர் மற்றும் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் கோவை உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்… தம்பி இளவரசன் இறுதி நேரத்தில் எப்படியாவது சென்றுவிடுவதாக கூறியுள்ளான்.
தேர்வு வகுப்பு காரணமாய் என்னாலும் ,பணிப் பளு காரணமாய் தோழர் சசியாலும் கலந்துக் கொள்ள முடியவில்லை.. கடல் கடந்து இருக்கும் தோழர்கள் உமாசங்கர்,தயாள் ஆகியோரும் பணி காரணமாய் தலைநகரில் இருக்கும் தோழி விக்னெஷ்வரி..படப்பிடிப்பில் இருக்கும் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார் ஆகியோரும் இதில் அடக்கம்.

இருந்தாலும் எம் நினைவுகள் விழா சிறக்க வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
வாழ்த்துக்கள்.

உலகத் தமிழ் மக்கள் அரங்கம்
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக…

மணி.செந்தில்குமார்

சிலைகள் குறித்தான பார்வையும்..பதிவும்…

சிலைகள் உருவாக்கப் படுவதன் தத்துவமும்,நோக்கமும்,வரலாறும் கண்டிப்பாக ஆராயத் தக்கவை…

சிலைகளின் தோற்றம் என்பது இறந்த மனிதனை மீள் புனைவு மூலம் அவரது நினைவை சாத்தியமாக்கும் தன்மையே ஆகும்….கிறிஸ்து பிறப்பதற்கு முன் சிலைகள் ஏற்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது…சிறு சிறு சிலை போன்ற வடிவங்களை சிந்துவெளி அகழ்வாரச்சியின் போதே கண்டெடுக்கப் பட்டுள்ளது…

எனவே சிலையின் தோற்றம் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது அல்ல…

சிலைகள் தேவையா என்பது அந்தந்த மக்களின் சமூக ,அரசியல் வரலாற்றிக்கு உட்பட்டதாகும்…சிலைகள் உருவாக்குவது என்பது எதிர்காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஆளுமை குறித்தான செய்தியை நிரந்தரமாக விட்டுச் செல்லும் எண்ணத்தின் பாற் சார்ந்தது…

தந்தை பெரியார்,, அண்ணல் அம்பேத்கார் ஆகியோரின் சிலைகள் நிறுவப் படுதலை ஆதரிப்பதும் இவ்வகையை சார்ந்தது…பறவைகள் சிலைகள் மீது மட்டுமா அசிங்கம் செய்கின்றன…?

பறவைகளுக்கு சிலை,மனிதன் என்றெல்லாம் பேதமில்லை..நாம் துடைத்துக் கொள்கிறோம்..சிலைகளை மழை குளிப்பாட்டுகிறது. அவ்வளவே…

ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் மீதும் தான் பறவைகள் அசிங்கம் செய்கின்றன,,,,காக்கைகளுக்கு தெரியுமா…மனிதன் கண்டுபிடித்த கடவுளின் அரசியல்…?

ஒடுக்கப்பட்ட,விளிம்பு நிலை மக்களுக்கு போராடிய, மொழி ,இன உணர்விற்கு வித்திட்ட ,மக்களை சமூக தாழ்விநிலையில் இருந்து உயர்த்த துடித்திட்ட தலைவர்களுக்கு சிலை வைப்பது….கோவில் கட்டுவதை விட புனிதமான காரியம் ஆகும்.

எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு…

என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு….

வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..
மிகவும் மகிழ்ச்சி…

உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது…..

என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன…இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை…

உங்கள் புத்தகங்களை படிக்க எனக்கு கால,நேர,இட வரையறைகள் இல்லை..நெடுங்குருதியின் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க துவங்குவேன்….துணையெழுத்தை இன்று வாசித்தாலும் கண்கலங்குகிறேன்…ஏதேனும் முடிவில்லாத சாலைகளில் அந்த எளிய மனிதர்களை கண்டு விட மாட்டோமா என்று தவிக்கிறேன்..பின்னிரவின் விழிப்பின் ஊடே எனக்கு சதா உபபாண்டவத்து சகுனியின் பகடை உருட்டும் ஒலி துரத்திக் கொண்டே உள்ளது…

நான் அதிகம் நிம்மதியாக இருப்பதும் ,நிம்மதியற்று போவதும் தங்கள் எழுத்துக்களால்தான்…

ஒரு வாசகனை ஒரு படைப்பாளன் இந்த அளவில் பாதிக்க முடியுமா என்பதே எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது.

இன்னும் நிறைய இருக்கிறது…

ஒரு மழை பொழியும் நாளில்….
நாம் இதை கும்பகோணத்தில் உள்ள நம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசுவோம்……

முடிவிலியாக நீளும் நம் உரையாடல்களின் மூலமே நான் மீதி நாட்களில் வாழ்வதற்கான ஆர்வத்தையும், ஆசையையும் சேகரித்துக் கொள்கிறேன்…

மிகுந்த மகிழ்ச்சியோடு….
உங்களின் எளிய வாசகன்.
மணி.செந்தில்

தோழர்களே….

குஷ்பு பிரச்சனை சம்பந்தமாக நாம் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ பேச தேவை இல்லை…

மிகத் தீவிரமாக நமது கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது….

தோழர்.திருமாவளவன்….திரைப் படங்களில் நடிப்பது இமாலய குற்றம் அல்ல…சினிமாவும் தீண்டதகாத பொருளும் அல்ல….

சாணிப்பால் புகட்டப் பட்டு, காலங்காலமாய் சாதி என்னும் இழிவில் சிக்கி தாழ்த்தப் பட்டு, அலைகழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி திருமா….

திருமாவின் மொழி உணர்வும், இனப் பற்றும் அப்பழுக்கற்றது……சமூக சிந்தனை உடைய போர்க் குணம் மிக்க தோழர் திருமா மதிப்பிற்குரியவர் என்பதில் தமிழனாய் உணருபவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை….

நம் பண்பாடு தெரியாத, நம் இனத்து பெண்களுக்கு கற்பு இல்லை என்று ஆபாச அவதூறு பேசிய குஷ்பு இது வரை சமூகத்திற்காக எந்த களத்தில் நின்றுள்ளார்..?

தோழர் திருமா நின்ற களங்கள் நாடறிந்தது..புலம் பெயர்ந்த நமது சகோதரர்கள் மத்தியில் அவருக்குள்ள மதிப்பு பெருமைக்குரியது…

நடந்த அந்தக் கூட்டத்தில் யாரும் குஷ்புவிடம் போய் மரியாதை யாசகம் கோர வில்லை…..அந்த பெண்மணியே வலிய சென்று திருமாவிற்கு வணக்கம் வைக்கவில்லை என்றால் என் மீது வழக்கு போடுவார்கள் என்று நக்கல் பேசிய பிறகுதான் பிரச்சனை துவங்கியது…..

குஷ்புவிற்கு ஒரு தமிழனை பார்த்தால் , ஒரு தமிழச்சியை பார்த்தால் இழிவுப் படுத்த வேண்டும் என்ற குணம் இயல்பாகவே உள்ளது…

ஏற்கனவே நம் மண்ணின் கலைஞன் தங்கர் பச்சான் மீது கருத்து தாக்குதல் நடத்திய
குஷ்பு , ஜெயா தொலைக்காட்சியில் தங்கரா…who is he…? என்று கேட்ட குஷ்பு…
பெரியார் பட விழாவில் தங்கர்பச்சான் ஒளிப் பதிவில் நடிக்காதது எனக்கு குறையாக உள்ளது என்று வருந்தினார்…

தோழர்.திருமா நம் மண்ணின் அடையாளம் …..முதலில் ஒரு அவர் ஒரு தமிழன்…

நம் வீடுகளில் வந்தோரை வரவேற்று உபசரித்து பாராட்டும் பண்பாடு நம்முடையது..

தோழர்.திருமாவளவன் வந்தவுடன், கால் மேல் கால் போட்டுக் கொண்டு தலையை திருப்பிக் கொண்ட குஷ்பு பின் வலியச் சென்று வம்பிற்கிழுத்து நம் உணர்வை சீண்டி பார்க்கிறார்…

அதே கூட்டத்தில் கலந்து கொண்ட நம் தமிழனப் பாவலர் அண்ணன் அறிவுமதி தன்னுடைய கண்டனத்தை உடனே பதிவு செய்துள்ளார்….

அந்த குஷ்பு விற்கு விமர்சனத்தை தாங்கிக் கொள்ள இயல்பு இல்லை என்பதால் அவர் அவசர , அவசரமாக கூட்டத்தை விட்டு வெளியேறி உள்ளார்..

தாழ்த்தப் பட்ட மக்களின் புரட்சிக் குரலான தோழர் .திருமாவளவன் மதிப்பு மிகுந்தவர் என்ற கருத்தாக்கத்தை நோக்கி தன்னுடைய வம்பிற்கிழுக்கும் ஆயுதத்தால் தாக்க முனைந்துள்ளார்…

குஷ்பு மேற்கொண்டுள்ள தாக்குதல் ஒட்டுமொத்த தமிழர் நிலைகளுக்கு எதிரானது…..

தோழர் திருமா விற்கு குஷ்புவின் மதிப்பு தேவை இல்லை….

ஆனால் குஷ்பு கண்டனத்திற்கு உரியவர் என்பது அவரது கவனத்தில் கொள்வதற்காவே இந்த பதிவுகள் பதிக்கப் படுகின்றன……

இது போன்ற செயல்களுக்கு குறைந்த பட்ச நம் எதிர்ப்பை காட்ட வில்லை என்றால்
நாம் தமிழர்களாய் உணர்வதில் அர்த்தம் இல்லை….

குஷ்புவை கூட்டத்திற்கு அழைத்தது தவறில்லை….குஷ்பு அப்படி நடப்பார் என்று யாரும் எதிர்ப்பார்க்க வில்லை….

குஷ்பு நடந்த கொண்ட விதம்……நமக்கு சவால் விடுப்பதை போல் அமைந்துள்ளது….

தமிழர்கள் தங்களின் உணர்வை வெளிப் படுத்தும் ஒரு களமாகவே உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தை பயன் படுத்தி வருவதில் என்ன தவறு…….

உலக தமிழ் மக்கள் அரங்கம் -இணையம் பயன் படுத்தும் தமிழர்களால் வாசிக்கப் பட்டு வருகிறது,….

எனவே உண்மையை எடுத்து கூற ……எங்கள் கருத்துக்களை கூற நம் மக்கள் அரங்கம் ஒரு களமாக நாங்கள் பயன் படுத்துகிறோம்…..
தோழர்களே…

குஷ்பு கலந்து கொண்ட விழாவை தோழர் திருமா புறக்கணித்து இருக்கலாமே என்ற கருத்தை தோழர் யுவன் பிரபாகரன் முன் வைத்துள்ளார்…

..அது ஒரு இலக்கிய விழா…..இலக்கிய அறிமுகம் , உலக புரட்சி,தலித்தியம் ,பெண்ணீயம் போன்ற தளங்களில் நல்ல அறிமுகம் உடைய தோழர்.திருமாவளவன் கலந்து கொள்வது தவறா..?

மேலும் குஷ்பு இப்படி அநாகரிகமாக, தமிழர்களை சீண்டி பார்க்கும் வகையில் செயல்படுவார் என்பதை யார் அறிந்திருக்க முடியும்..?

எதிரி வந்தால் கூட அன்புடன் உபசரித்து ,மரியாதை செய்வது தமிழர் பண்பாடு இல்லையா..?

குஷ்புவிற்கென்ன அவ்வளவு ஆணவம்…?

தமிழர்களிடையே நிலவும் அரசியல்,கோஷ்டி பூசல், சாதி ஆகியவைகளை தனக்கு சாதகமாக குஷ்பு பயன்படுத்துகிறார்….

இது அறிவுமதிக்கோ , திருமாவளவனுக்கோ, இழிவு இல்லை…

கலைஞர்,இராமதாஸ்,திருமாவளவன், கிருஷ்ணசாமி, போன்ற தமிழர் தலைவர்கள்
யார் அவமானப் பட்டாலும் அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கானது…

இதில் தோழர்கள் கிண்டல் செய்வதற்கும் ,கேலி செய்வதற்கும் என்ன இருக்கிறது…?

பாவலர் அறிவுமதி எழுப்பிய கலகம் இயல்பிலேயே தமிழனாய் உணருபவனுக்கு உரியது…..

அந்த இடத்தில் நான் இருந்தாலும் அதை தான் செய்திருப்பேன்…

இதில் நமக்குள் இருக்கும் அரசியலை ,கோஷ்டிப் பூசலை காட்ட இதுவா நேரம்…?

தோழர் சம்போ ஏன் கோபப் படுகிறார்…அவர் என்ன சொல்ல வருகிறார்,,?

குஷ்பு செய்தது சரி என்று சொல்ல என்ன காரணங்கள் வைத்திருக்கிறார் சம்போ..?

பதில் சொல்ல காத்தி இருக்கிறேன்…

இதில் கருத்து சுதந்திரம் எங்கிருந்து வந்தது என்று தோழர் .யுவன் தான் சொல்ல வேண்டும்….

கருத்து சுதந்திரம் வேறு…தமிழன் மேல் திணிக்கப் படும் இழிவு என்பது வேறு….

திருமாவை விட குஷ்பு தோழர்களுக்கு எவ்விதத்தில் உகந்ததாக இருக்கிறார்…?

என்பதை தெரிவித்தால் நலம்…

இந்த பிரச்சனையில் நமது ஒற்றுமையை காட்டுவதே சாலச் சிறந்தது…..

தோழர்.திருமாவளவன் ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர் என்பதால் குஷ்புவிற்கு வரம்பு மீறிய கருத்து சுதந்திரம் வந்து விடுமா என்ன..?

தலித்தியம், பெண்ணீயம் ,பெரியாரியம,தமிழ் உணர்வு், போன்றவற்றை முன் எடுத்து செல்கிற தோழர்.திருமாவளவன் மீது குஷ்பு வீசும் அலட்சியமும், துர்நோக்கும் உடைய
இழிவு ,,,,

கலைஞர்,மருத்துவர் ராமதாஸ்,மருத்துவர் கிருஷ்ணசாமி,பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, இடது சாரி தோழர்கள்,சுபவீ, தியாகு என்று யார் மீது வீசப் பட்டாலும் அது எதிர்ப்பிற்குரிய விஷயம் இல்லையா..?

தோழர்களே….

நமக்குள் எழுந்த இந்த விவாதம் ஆரோக்கிய கருத்துக்களை பேசிக் கொள்ளவே துவங்கப் பட்டது…..

எந்த மனிதருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் என்று ஒன்று உண்டு…..

தனிப்பட்ட கருத்துக்கள்,கருத்து சுதந்திரம் போன்ற உரிமைகள் மற்றவர்களை காயப் படுத்தாமல் இருப்பதே சிறந்தது…

குஷ்பு தொடர்ந்து தனது செய்கைகளால் ஊடகப் பரபரப்பிற்கு ஆளாகி வருவது சிந்தனைக்குரிய கேள்வி…

தமிழனாய், தமிழ் உணர்வோடு வாழ்வது என்பதே இப்போது கிண்டலுக்குரிய, கேலிக்குரிய விஷயமாய் மாறிப்போனது என்பது தான் என் கவலை….

கலைப் போராளி சீமான் சொன்னது போல உலகிலேயே அதிகம் இழிவுகளையும் அவமானங்களையும் சந்தித்தது -நம் தமிழினமாகத்தான் இருக்க முடியும்…

தான் கேவலப் படுத்தப் படுகிறோம் என்பது கூட இங்கே நகைச்சுவைக்கு உரிய விஷயமாகப் போனது நமது குறை….

தமிழன், சாதி துறந்து, அரசியல் மறந்து, கோஷ்டி தொலைந்து தமிழனாய் வாழும் காலம் எப்போது வரும் என்ற சிந்தனையோடு…. இந்த இரவில் உங்களிடத்தில் இருந்து விடை பெறுகிறேன்……நன்றி…..வணக்கம்

Page 54 of 57

Powered by WordPress & Theme by Anders Norén