பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: விவாதங்கள்..

பாரதி-இந்துத்வா வெறியரா..?

தோழர்களே…

பாரதி குறித்து நம் அருமை தோழர்.வே.மதிமாறன் அவர்கள் வலைப்பூவிலும் ,பாரதீய ஜனதா பார்ட்டி என்ற நூலிலும் பலவிதமான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறார்.

திரு.வே.மதிமாறன் அவர்களுடைய விமர்சனம் பாரதி குறித்த சரியான பார்வையா என்பதில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.எனவே பாரதி குறித்த தெளிவை நாம் ஏற்படுத்திக் கொள்ளுல் மிக அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன்…

சூத்திரனுக்கு ஒரு நீதி,
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறொரு நீதி என்று சாஸ்திரம்
சொல்லிடுமாயின் அது சாஸ்திரம்
அன்று சதி என்று கண்டோம்……..

என்று பாடிய பாரதி சாதீய உணர்வாளரா என்பதே என் கேள்வி…..

பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே..என்று பாடிய பாரதி ..தன் வாழுங்காலத்தில் அவர் சொந்த பந்தங்களால் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்தார்..?

அக்ராஹாரமே அந்த தனி மனிதனை ஒதுக்கியதே……

என்ன காரணம்…?

சாதியை மறுத்தான்..சமயத்தை வெறுத்தான்…..அந்த ஈரமுள்ள மனிதன்..

அல்லா…அல்லா..என்று அதனால்தான் அவனால் பாடவும் முடிந்தது.

பாரதி மீது விமர்சனம் வைப்பவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்…..அது பாரதி வாழ்ந்த காலம்….

பாரதி வாழ்ந்த காலக் கட்டத்தில் ஊரோடு ஒத்து வாழ்ந்து..சாதி சமயம் பேண முடியாமல் தத்தளித்த அந்த மனிதனின் நிலை கவனிக்கத் தக்கது….

எதற்காக பாரதி என்ற தனி மனிதனிக்கு …..அத்தனை இடைஞ்சல்கள்…?

சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு சாவுமணியாய் பாரதியை பழைமைவாதிகள் பார்த்தனர்….

உயர்ந்த குலம் என்று போற்றப் பட்ட ஒரு குலத்தில் பிறந்து, வைதீக ,வேத கேள்விகளில் மிளிர்ந்து ,அளப்பரிய கவிதை திறன் உடைய ஒரு மனிதன் சாதி மறுப்பாளனாக ஏன் வாழ வேண்டும் ..? என்ற கேள்வி மிக முக்கியமானது.

கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் பாரதிக்கு ராஜபோக வாழ்க்கை கிடைத்து இருக்குமே…?

அதானாலேயே அந்த மனிதன் அனாதையாய் செத்து போனானே…?

இது கவனித் தக்க வேண்டிய அம்சம் இல்லையா..?

ஓகேனக்கல் விஷயத்தில்…..கலைஞரின் சமரசம் ராஜதந்திரம் என்றால் ….

பாரதிக்கு ஏன் ராஜதந்திரம் இல்லாமல் போயிற்று,,,,?

ஒரு மனிதன் ஏன் அவ்வளவு சவால்களும்,இடைஞ்சல்களும் உடைய வாழ்வினை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்…?

இது தான் என் முதல் கேள்வி..

எனக்கென்ன சந்தேகம் என்றால் …பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுள் ஏற்பட்ட மீறலால் விளைந்த சவால்கள் அதிகம் தானே..??

தமிழ் சமூகவியலில் பாரதியின் பங்கு அவரது குலம் சார்ந்த உணர்வை பிரதிபலிக்கிறதா…?

குறிப்பாக..பாரதி ஆரியன் என்று அழைக்கும் சொல் பார்ப்பனர்களை குறித்த சொல்லாடல் இல்லை என்ற சிந்தனை இருக்கிறது…

பிச்சை வாழ்வு உகந்து பிறருடைய ஆட்சியில்
அச்சம் உற்று இருப்போன் ஆரியன் அல்லன்.

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் இல்லன்.

என்றும் பாரதி பாடுகிறார்…..

அப்படி என்றால் ஆரியர் என்ற சொல் பொதுமைத் தன்மை வாய்ந்ததாகவே பாரதி பயன் படுத்தி உள்ளார்…..

தமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி….

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……

எந்த கல்லூரியில் படித்தீர்கள்?

இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை –யில் படித்தேன்…..பி.ஏ தமிழ் -79% எம்.ஏ தமிழ் 80.64% சதவீத மதிப்பெண்கள்….பி.எட் டில் 76% மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்….

தங்களின் தற்போதைய நிலை..?

வேலை தேடி வருகிறேன்..ஊரில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன்…

குடும்பத்தின் நிலை…?
வறுமை…மிக வறுமை.என்னை படிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு தம்பி கல்வியை நிறுத்தி விட்டனர்…இப்போது படித்த நானும்,படிக்காத அவனும் கூலி வேலை பார்த்து வருகிறோம்…..

எதற்காக தமிழ் படித்தீர்கள்…?

மொழி மீது உள்ள பற்று…+2வில் கணிப்பொறி துறைதான் படித்தேன்…தமிழாசிரியாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் படித்தேன்….

ஏன் தமிழ் படித்தோம் என்று நினைத்தது உண்டா…?

அந்த சூழ்நிலையில் தான் உள்ளேன்,…எப்போதும் நினைக்கிறேன்…

இந்த உலகம் தமிழ் படித்த பட்டதாரியை எப்படி பார்க்கிறது..?

சொல்ல வெட்கமாக உள்ளது….மிகவும் கேவலமாக பார்க்கிறார்கள்….தமிழ் படித்தால் தமிழ் நாட்டிலேயே வேலை இல்லை….மற்ற அறிவியல் படிப்புகளுக்கு உள்ள மதிப்பும்,வரவேற்பும் நம் தாய்மொழி தமிழ் படிப்பிற்கு இல்லை..இதில் தனியார் கல்வி நிறுவனங்கள் வேறு..எங்கள் வறுமையை பயன்படுத்தி மிக சொற்ப சம்பளத்தில் எங்களை வேலைக்கு அழைக்கிறார்கள்…எனக்கு தெரிந்த தமிழ் முதுநிலை பட்டதாரி , ஆராய்ச்சி மாணவர் ஒரு தனியார் கல்லூரியில் மிக சொற்பமான சம்பளத்தில் பியூனாக பணிபுரிகிறார்….அதற்கே ஆயிரெத்தெட்டு போட்டி….

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் பியூன் வேலைக்கு போவீர்களா..?
கண்டிப்பாக……நிச்சயம் செல்வேன்….என் கல்வி தகுதியை விட என் வறுமை மிகவும் உயர்ந்தது…

இனி யாருக்காக தமிழ் படிக்க சொல்லி சிபாரிசு செய்வீர்களா…?

கண்டிப்பாக மாட்டேன்…..

கற்றது தமிழ்..?

எங்கள் நிலையை அந்த திரைப்படம் மிக நெருக்கமாக படம் பிடித்து காட்டியுள்ளதாக உணர்கிறேன்….

உங்களைப் போன்று எத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள்..?

குறைந்தது 50,000 நபர்களாவது இப்படி இருப்பார்கள்…அறிவியல் முதுகலையும் ,பி.எட் டும் படித்தால் இடை நிலை ஆசிரியர் பணி கிடைத்து விடுகிறது…ஆனால் தமிழ் முதுகலை ,பி.எட் படித்தவனுக்கு இந்த விதி பொருந்தாது…

இந்த நிலைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்…?

அரசின் தவறான கல்விக் கொள்கை…..மற்றும் தாய்மொழி மீது எவ்வித அக்கறையும் ,அன்பும் இல்லாத சமூகமும், அதன் அமைப்பும் மற்றொரு காரணம்..

ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி என்ற தகுதியில் உலகமெங்கும் வாழும் …இணையத்தில் தமிழ்,தமிழுணர்வுக்கு ஆதரவாக,அக்கறையாக எழுதும் தமிழர்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்..?( எனக்கும் சேர்த்து…)

கணிப்பொறியில் இருந்து தட்டச்சு பலகையில் தமிழ் வளர்ப்பதாக நினைத்து கொண்டு…. பொழுது போக்கிற்காக தமிழ் உணர்வில் திளைப்பதாக நடிக்கிறீர்கள்…..

இங்கே தமிழ் படித்தவன் தட்டேந்துகிறான்….ஊர்க்காரன் கூட தமிழ் படித்தவனை கண்டு ஏளனமாக பார்த்து..ஒதுங்கி சென்று விடுகிறான்…..

உங்களுக்கு அடுத்த வேளை சாப்பாடும் ,வருமானமும் உள்ளது…நீங்கள் தமிழ் வளர்க்கலாம்…(?) …ஆனால் தமிழ் படித்தவன் இங்கு தெருவில் நிற்கிறான் ….இதனை மனதில் வைத்துக் கொண்டு தமிழ் வளருங்கள்….

உங்களின் நோக்கம் தமிழை வாழ வைப்பதா..? இல்லை தமிழனை,தமிழ் படித்தவனை வாழ வைப்பதா..?

என்னால் வாழ்க தமிழ் என்று சொல்ல முடியவில்லை…

நன்றி…

(பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கண்ணீரோடு விடை பெற்று செல்கிறார் தமிழ் பட்டதாரி தாமோதரன்…)

தோழர்களே….

குஷ்பு பிரச்சனை சம்பந்தமாக நாம் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ பேச தேவை இல்லை…

மிகத் தீவிரமாக நமது கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது….

தோழர்.திருமாவளவன்….திரைப் படங்களில் நடிப்பது இமாலய குற்றம் அல்ல…சினிமாவும் தீண்டதகாத பொருளும் அல்ல….

சாணிப்பால் புகட்டப் பட்டு, காலங்காலமாய் சாதி என்னும் இழிவில் சிக்கி தாழ்த்தப் பட்டு, அலைகழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி திருமா….

திருமாவின் மொழி உணர்வும், இனப் பற்றும் அப்பழுக்கற்றது……சமூக சிந்தனை உடைய போர்க் குணம் மிக்க தோழர் திருமா மதிப்பிற்குரியவர் என்பதில் தமிழனாய் உணருபவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை….

நம் பண்பாடு தெரியாத, நம் இனத்து பெண்களுக்கு கற்பு இல்லை என்று ஆபாச அவதூறு பேசிய குஷ்பு இது வரை சமூகத்திற்காக எந்த களத்தில் நின்றுள்ளார்..?

தோழர் திருமா நின்ற களங்கள் நாடறிந்தது..புலம் பெயர்ந்த நமது சகோதரர்கள் மத்தியில் அவருக்குள்ள மதிப்பு பெருமைக்குரியது…

நடந்த அந்தக் கூட்டத்தில் யாரும் குஷ்புவிடம் போய் மரியாதை யாசகம் கோர வில்லை…..அந்த பெண்மணியே வலிய சென்று திருமாவிற்கு வணக்கம் வைக்கவில்லை என்றால் என் மீது வழக்கு போடுவார்கள் என்று நக்கல் பேசிய பிறகுதான் பிரச்சனை துவங்கியது…..

குஷ்புவிற்கு ஒரு தமிழனை பார்த்தால் , ஒரு தமிழச்சியை பார்த்தால் இழிவுப் படுத்த வேண்டும் என்ற குணம் இயல்பாகவே உள்ளது…

ஏற்கனவே நம் மண்ணின் கலைஞன் தங்கர் பச்சான் மீது கருத்து தாக்குதல் நடத்திய
குஷ்பு , ஜெயா தொலைக்காட்சியில் தங்கரா…who is he…? என்று கேட்ட குஷ்பு…
பெரியார் பட விழாவில் தங்கர்பச்சான் ஒளிப் பதிவில் நடிக்காதது எனக்கு குறையாக உள்ளது என்று வருந்தினார்…

தோழர்.திருமா நம் மண்ணின் அடையாளம் …..முதலில் ஒரு அவர் ஒரு தமிழன்…

நம் வீடுகளில் வந்தோரை வரவேற்று உபசரித்து பாராட்டும் பண்பாடு நம்முடையது..

தோழர்.திருமாவளவன் வந்தவுடன், கால் மேல் கால் போட்டுக் கொண்டு தலையை திருப்பிக் கொண்ட குஷ்பு பின் வலியச் சென்று வம்பிற்கிழுத்து நம் உணர்வை சீண்டி பார்க்கிறார்…

அதே கூட்டத்தில் கலந்து கொண்ட நம் தமிழனப் பாவலர் அண்ணன் அறிவுமதி தன்னுடைய கண்டனத்தை உடனே பதிவு செய்துள்ளார்….

அந்த குஷ்பு விற்கு விமர்சனத்தை தாங்கிக் கொள்ள இயல்பு இல்லை என்பதால் அவர் அவசர , அவசரமாக கூட்டத்தை விட்டு வெளியேறி உள்ளார்..

தாழ்த்தப் பட்ட மக்களின் புரட்சிக் குரலான தோழர் .திருமாவளவன் மதிப்பு மிகுந்தவர் என்ற கருத்தாக்கத்தை நோக்கி தன்னுடைய வம்பிற்கிழுக்கும் ஆயுதத்தால் தாக்க முனைந்துள்ளார்…

குஷ்பு மேற்கொண்டுள்ள தாக்குதல் ஒட்டுமொத்த தமிழர் நிலைகளுக்கு எதிரானது…..

தோழர் திருமா விற்கு குஷ்புவின் மதிப்பு தேவை இல்லை….

ஆனால் குஷ்பு கண்டனத்திற்கு உரியவர் என்பது அவரது கவனத்தில் கொள்வதற்காவே இந்த பதிவுகள் பதிக்கப் படுகின்றன……

இது போன்ற செயல்களுக்கு குறைந்த பட்ச நம் எதிர்ப்பை காட்ட வில்லை என்றால்
நாம் தமிழர்களாய் உணர்வதில் அர்த்தம் இல்லை….

குஷ்புவை கூட்டத்திற்கு அழைத்தது தவறில்லை….குஷ்பு அப்படி நடப்பார் என்று யாரும் எதிர்ப்பார்க்க வில்லை….

குஷ்பு நடந்த கொண்ட விதம்……நமக்கு சவால் விடுப்பதை போல் அமைந்துள்ளது….

தமிழர்கள் தங்களின் உணர்வை வெளிப் படுத்தும் ஒரு களமாகவே உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தை பயன் படுத்தி வருவதில் என்ன தவறு…….

உலக தமிழ் மக்கள் அரங்கம் -இணையம் பயன் படுத்தும் தமிழர்களால் வாசிக்கப் பட்டு வருகிறது,….

எனவே உண்மையை எடுத்து கூற ……எங்கள் கருத்துக்களை கூற நம் மக்கள் அரங்கம் ஒரு களமாக நாங்கள் பயன் படுத்துகிறோம்…..
தோழர்களே…

குஷ்பு கலந்து கொண்ட விழாவை தோழர் திருமா புறக்கணித்து இருக்கலாமே என்ற கருத்தை தோழர் யுவன் பிரபாகரன் முன் வைத்துள்ளார்…

..அது ஒரு இலக்கிய விழா…..இலக்கிய அறிமுகம் , உலக புரட்சி,தலித்தியம் ,பெண்ணீயம் போன்ற தளங்களில் நல்ல அறிமுகம் உடைய தோழர்.திருமாவளவன் கலந்து கொள்வது தவறா..?

மேலும் குஷ்பு இப்படி அநாகரிகமாக, தமிழர்களை சீண்டி பார்க்கும் வகையில் செயல்படுவார் என்பதை யார் அறிந்திருக்க முடியும்..?

எதிரி வந்தால் கூட அன்புடன் உபசரித்து ,மரியாதை செய்வது தமிழர் பண்பாடு இல்லையா..?

குஷ்புவிற்கென்ன அவ்வளவு ஆணவம்…?

தமிழர்களிடையே நிலவும் அரசியல்,கோஷ்டி பூசல், சாதி ஆகியவைகளை தனக்கு சாதகமாக குஷ்பு பயன்படுத்துகிறார்….

இது அறிவுமதிக்கோ , திருமாவளவனுக்கோ, இழிவு இல்லை…

கலைஞர்,இராமதாஸ்,திருமாவளவன், கிருஷ்ணசாமி, போன்ற தமிழர் தலைவர்கள்
யார் அவமானப் பட்டாலும் அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கானது…

இதில் தோழர்கள் கிண்டல் செய்வதற்கும் ,கேலி செய்வதற்கும் என்ன இருக்கிறது…?

பாவலர் அறிவுமதி எழுப்பிய கலகம் இயல்பிலேயே தமிழனாய் உணருபவனுக்கு உரியது…..

அந்த இடத்தில் நான் இருந்தாலும் அதை தான் செய்திருப்பேன்…

இதில் நமக்குள் இருக்கும் அரசியலை ,கோஷ்டிப் பூசலை காட்ட இதுவா நேரம்…?

தோழர் சம்போ ஏன் கோபப் படுகிறார்…அவர் என்ன சொல்ல வருகிறார்,,?

குஷ்பு செய்தது சரி என்று சொல்ல என்ன காரணங்கள் வைத்திருக்கிறார் சம்போ..?

பதில் சொல்ல காத்தி இருக்கிறேன்…

இதில் கருத்து சுதந்திரம் எங்கிருந்து வந்தது என்று தோழர் .யுவன் தான் சொல்ல வேண்டும்….

கருத்து சுதந்திரம் வேறு…தமிழன் மேல் திணிக்கப் படும் இழிவு என்பது வேறு….

திருமாவை விட குஷ்பு தோழர்களுக்கு எவ்விதத்தில் உகந்ததாக இருக்கிறார்…?

என்பதை தெரிவித்தால் நலம்…

இந்த பிரச்சனையில் நமது ஒற்றுமையை காட்டுவதே சாலச் சிறந்தது…..

தோழர்.திருமாவளவன் ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர் என்பதால் குஷ்புவிற்கு வரம்பு மீறிய கருத்து சுதந்திரம் வந்து விடுமா என்ன..?

தலித்தியம், பெண்ணீயம் ,பெரியாரியம,தமிழ் உணர்வு், போன்றவற்றை முன் எடுத்து செல்கிற தோழர்.திருமாவளவன் மீது குஷ்பு வீசும் அலட்சியமும், துர்நோக்கும் உடைய
இழிவு ,,,,

கலைஞர்,மருத்துவர் ராமதாஸ்,மருத்துவர் கிருஷ்ணசாமி,பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, இடது சாரி தோழர்கள்,சுபவீ, தியாகு என்று யார் மீது வீசப் பட்டாலும் அது எதிர்ப்பிற்குரிய விஷயம் இல்லையா..?

தோழர்களே….

நமக்குள் எழுந்த இந்த விவாதம் ஆரோக்கிய கருத்துக்களை பேசிக் கொள்ளவே துவங்கப் பட்டது…..

எந்த மனிதருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் என்று ஒன்று உண்டு…..

தனிப்பட்ட கருத்துக்கள்,கருத்து சுதந்திரம் போன்ற உரிமைகள் மற்றவர்களை காயப் படுத்தாமல் இருப்பதே சிறந்தது…

குஷ்பு தொடர்ந்து தனது செய்கைகளால் ஊடகப் பரபரப்பிற்கு ஆளாகி வருவது சிந்தனைக்குரிய கேள்வி…

தமிழனாய், தமிழ் உணர்வோடு வாழ்வது என்பதே இப்போது கிண்டலுக்குரிய, கேலிக்குரிய விஷயமாய் மாறிப்போனது என்பது தான் என் கவலை….

கலைப் போராளி சீமான் சொன்னது போல உலகிலேயே அதிகம் இழிவுகளையும் அவமானங்களையும் சந்தித்தது -நம் தமிழினமாகத்தான் இருக்க முடியும்…

தான் கேவலப் படுத்தப் படுகிறோம் என்பது கூட இங்கே நகைச்சுவைக்கு உரிய விஷயமாகப் போனது நமது குறை….

தமிழன், சாதி துறந்து, அரசியல் மறந்து, கோஷ்டி தொலைந்து தமிழனாய் வாழும் காலம் எப்போது வரும் என்ற சிந்தனையோடு…. இந்த இரவில் உங்களிடத்தில் இருந்து விடை பெறுகிறேன்……நன்றி…..வணக்கம்

சுஜாதா தொடர்ந்துள்ள வக்கிர தாக்குதல்……….

வெகு காலமாய் பார்ப்பன சுஜாதா ரங்கராஜன் தமிழ்ப் பண்பாட்டு கருத்துக்கள் மீதும்,முற்போக்கு பெண்ணிய நிலைப்பாடுகள் மீதும் , தொடர்ந்துள்ள போர்
சிவாஜி பட வசனங்கள் மூலம் உச்சக்கட்டத்தை எட்டத் துவங்கியுள்ளது….

தன்னை பார்ப்பன சங்கத்தின் உறுப்பினர் என்று வெளிப்படையாக
பெருமைப் பொங்க அழைத்துக் கொள்ளும் சுஜாதாவோடு எந்த வகையிலும்
தமிழன் என்று உணரும் யாராலும் சமரசமாய் போகமுடியாது…….

தற்சமயம் தமிழ் மன்னன் மகள்களின் பெயரை தன் வசனத்தில் கேலிப் பொருளாக்கிய சுஜாதா ரங்கராஜன் தொடர்ந்து ஆபாச வசனங்கள் எழுதுவதிலும்,
தமிழின உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து வக்கிர இன்பம் அடைவதில் வல்லவர்….
அவரின் ஒட்டுமொத்தப் படைப்புகளை வாசிப்பவர்கள் மாயாவி உலகில் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் போல மயக்கமுற்று,வண்ணக் கனவுகளின் சுழற்சிவலையில் சிக்கிக் கொண்டு ,ஏதோ நல்ல தேர்ந்த படைப்புகளைத்தான்
வாசிக்கிறோம் என்ற மாய உணர்வுக்கு ஆளாவார்கள். ஆனால் மலிந்த பால் உணர்வுகளை தூண்டக்கூடிய அந்த மயக்கம் தெளிவான உடன் உண்மைப் புலப்படும்…….உண்மைக் கண்ணாடியைக் கொண்டு படியுங்கள் ….தெரிந்து விடும்… சுஜாதாவின் ஆரியம் தோய்ந்த சொற்களில் பாய்ந்து பொங்கும் விஷமத்தனத்தின் வீரியம் எத்தகையத் தன்மை வாய்ந்தது என்று……

பல வருடங்களுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்திலேயே இவரின் ஆபாச வசனங்கள் உலகப் புகழ் பெற்றுவிட்டன. பாய்ஸ் பட வசனங்கள் எத்தகையது என்பதை அந்தப் படம் வெளியானப் போது அது எதிர் கொண்ட எதிர்ப்பலைகளில்
இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

இது போன்று சுஜாதா எழுதுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்தோமானால் பணம் என்ற ஒற்றைச் சொல்லோடு நம் ஆய்வை நிறுத்தி விட முடியாது..கொஞ்சமும் சமூக உணர்வு இல்லாமல் தான் அண்டிப் பிழைக்கும் சமூகத்தில் தன் வாலிப (?) எழுத்துக்கள் மூலம் உருவாக்கும் கற்பிதங்கள் படம் பார்க்கும், சுஜாதா இலக்கியம் படிக்கும் இளைஞர்களை எவ்வளவு பாதிக்கின்றன
என்பது சமூக ஆர்வலர்களின் திவீர விசாரணைக்கு உட்பட்டது ஆகும்

Powered by WordPress & Theme by Anders Norén