மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சுஜாதா தொடர்ந்துள்ள வக்கிர தாக்குதல்……….

விவாதங்கள்..

வெகு காலமாய் பார்ப்பன சுஜாதா ரங்கராஜன் தமிழ்ப் பண்பாட்டு கருத்துக்கள் மீதும்,முற்போக்கு பெண்ணிய நிலைப்பாடுகள் மீதும் , தொடர்ந்துள்ள போர்
சிவாஜி பட வசனங்கள் மூலம் உச்சக்கட்டத்தை எட்டத் துவங்கியுள்ளது….

தன்னை பார்ப்பன சங்கத்தின் உறுப்பினர் என்று வெளிப்படையாக
பெருமைப் பொங்க அழைத்துக் கொள்ளும் சுஜாதாவோடு எந்த வகையிலும்
தமிழன் என்று உணரும் யாராலும் சமரசமாய் போகமுடியாது…….

தற்சமயம் தமிழ் மன்னன் மகள்களின் பெயரை தன் வசனத்தில் கேலிப் பொருளாக்கிய சுஜாதா ரங்கராஜன் தொடர்ந்து ஆபாச வசனங்கள் எழுதுவதிலும்,
தமிழின உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து வக்கிர இன்பம் அடைவதில் வல்லவர்….
அவரின் ஒட்டுமொத்தப் படைப்புகளை வாசிப்பவர்கள் மாயாவி உலகில் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் போல மயக்கமுற்று,வண்ணக் கனவுகளின் சுழற்சிவலையில் சிக்கிக் கொண்டு ,ஏதோ நல்ல தேர்ந்த படைப்புகளைத்தான்
வாசிக்கிறோம் என்ற மாய உணர்வுக்கு ஆளாவார்கள். ஆனால் மலிந்த பால் உணர்வுகளை தூண்டக்கூடிய அந்த மயக்கம் தெளிவான உடன் உண்மைப் புலப்படும்…….உண்மைக் கண்ணாடியைக் கொண்டு படியுங்கள் ….தெரிந்து விடும்… சுஜாதாவின் ஆரியம் தோய்ந்த சொற்களில் பாய்ந்து பொங்கும் விஷமத்தனத்தின் வீரியம் எத்தகையத் தன்மை வாய்ந்தது என்று……

பல வருடங்களுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்திலேயே இவரின் ஆபாச வசனங்கள் உலகப் புகழ் பெற்றுவிட்டன. பாய்ஸ் பட வசனங்கள் எத்தகையது என்பதை அந்தப் படம் வெளியானப் போது அது எதிர் கொண்ட எதிர்ப்பலைகளில்
இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

இது போன்று சுஜாதா எழுதுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்தோமானால் பணம் என்ற ஒற்றைச் சொல்லோடு நம் ஆய்வை நிறுத்தி விட முடியாது..கொஞ்சமும் சமூக உணர்வு இல்லாமல் தான் அண்டிப் பிழைக்கும் சமூகத்தில் தன் வாலிப (?) எழுத்துக்கள் மூலம் உருவாக்கும் கற்பிதங்கள் படம் பார்க்கும், சுஜாதா இலக்கியம் படிக்கும் இளைஞர்களை எவ்வளவு பாதிக்கின்றன
என்பது சமூக ஆர்வலர்களின் திவீர விசாரணைக்கு உட்பட்டது ஆகும்

 915 total views,  1 views today