மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

காயங்களால் ஆனவன்.

கவிதைகள் /

அங்கே.. அவரவர் ஆன்ம விருப்பத்தின் ரகசிய கணக்குகள் மீன்களாய் அலைகின்றன … என சொற்களின் குளத்தில் குளித்தவன் சொல்லி விட்டு போனான். அனல் மேவிய சொற்களும்.. நிச்சயமற்ற காலக் கணக்குகளின் அமில மழையும்.. கனவுப் பூக்கள் ஒளிர்கிற என் ஏதேன் தோட்டத்தை அப்போதுதான் அழித்து முடித்து இருந்தன.. காரிருளாய் மேனி முழுக்க துயர இருட்டு அப்பிய பொழுதொன்றில்.. உதிரம் கசிந்த விழிகளோடு.. நானும்.. அவரும்.. மட்டுமே அறிந்த மொழி ஒன்றில் சொன்னார்.. கடவுள். ..ஆகவே.. மகனே.. நீ …

 966 total views

கணங்களின் கதை

கவிதைகள் /

  கோப்பை ஏந்தியிருக்கும் கரத்தின் சிறு நடுக்கத்தில் சற்றே சிந்தும் ஒரு துளி தேநீர்.. யாருடனோ பேசுதலின் போது.. சொற்களின் ஊடே கசியும் மெளனம்.. மழை நனைக்கும் பொழுதில் விழி மூடி வானை நோக்கி தலை உயர்த்தும் கணங்கள்… எங்கிருந்தோ கரையும் பாடலில் தலையணை நனைய முகம் சிவந்து கிடக்கும் நடு நிசிப் பொழுது.. இப்படி.. இப்படி.. ஏதேனும் நொடிகள் வாய்த்து விடுகின்றன.. சொல்ல முடியாதவற்றை.. நமக்குள்ளே சொல்லிக் கொள்ள.. உறைந்த உயிரை நாமே கிள்ளிக் கொள்ள.. …

 1,086 total views

.**** சுயபுராணம்

கவிதைகள் /

மீண்டும் மீண்டும் என்னை பிரசவிக்கும் எனது மொழி.. வற்றா வளத்தோடு குன்றாப் பெருமை மணக்கும் எனது சொல்.. எப்போதும் காண்பவர் முகத்தில் கண்ணீரையும், புன்னகையையும் ஒரே நேரத்தில் சிந்த வைக்கும் எனது எழுத்து.. இத்தனை வருடங்களில் இரவு பகலாக விழித்து.. வாசித்து.. ரசித்து.. உழைத்து.. எனக்கு நானே கனவுகளை உளியாக்கி செதுக்கிக் கொண்ட தன்னம்பிக்கை சுடர் விடும் ஒரு வாழ்க்கை.. என்றெல்லாம் பேசிட என்னிடம் ஏதேனும் இருந்தாலும்… துளித்துளியாய் சேமித்து பெருமழையென பொழிய எனக்குள் ஒரு மழை …

 1,093 total views

பயணம் என்கிற பெருவழி..

கட்டுரைகள்.. /

எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’ – கோணங்கி (விகடன் 16-09-2009) என் வீட்டிற்கு முன்னால் கிளை கிளையாய் விரிந்திருக்கும் பாதைகளை காணுகின்றேன். இப்பாதைகளின் தொடக்கப்புள்ளி எது, இப்பாதைகள் …

 1,736 total views

சொல்லப்படுகிற சொற்களற்ற கதை.

கவிதைகள் /

காதிற்கு பின்னால் வழியும் ஒரு வியர்வைத்துளி சொல்லக்கூடும் இப்போது என்ன நிகழும் என.. எதிரெதிர் திசைகளில் நகரும் ரயில் பெட்டிகளில் நீயும் நானும்.. செல்லும் ரயிலில் இருந்தவாறே.. மெளனித்து கிடக்கிற என் ரயில் பெட்டி அசைகிறது என நீ நினைப்பது உனக்கான ஆறுதல் என எனக்கு புரிகிறது.. நிகழ்தகவுகளாய் வர்ணம் மாறிய மனதின் மொழியை ஒரு போதும் பேச முயற்சிக்காதே.. ஏனெனில் உண்மைகள் பொய்களை விட மோசமானவை. கருணையற்றவை. இயல்பு மீறிய ஒரு சலனத்திற்காக நீ காத்திருப்பது …

 982 total views