மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இயக்குனர் மணிவண்ணன் – நினைவலைகளில் மிதக்கும் விடுதலைச்சிறகு.

அரசியல் /

                   அது 2010 ஆம் வருடம் . சுட்டெரிக்கும் வெயிலால் தமிழ்நாட்டின் வெப்பநிலை பிரதேச வேலூர் நகரமே கொதித்திக் கொண்டிருந்தது . சிங்களர்களை எதிர்த்து பேசி மாபெரும், மகத்தான , கொடூரமான,கொலைக்குற்றத்திற்கு (?) நிகரான குற்றத்தை இழைத்த காரணத்தினால், இந்திய தேசியத்திற்கு குந்தகம் ஏற்படுத்திய காரணத்தினால் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காண்பதற்காக நான் உட்பட பலரும் சிறை வாயிலின் முன் காத்திருந்தோம். அங்கு காத்திருந்த எவருக்கும் அந்நாளில் சீமானைப் பார்க்க அனுமதி …

 1,029 total views

கொள்கையற்ற அரசியலின் கோமாளிகளும் – காணச்சகிக்காத காட்சிகளும் –

அரசியல் /

11-06-2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தேமுதிக வின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி பேசும் போது தமிழக முதல்வரை புரட்சித்தலைவி என்று பெருமைப் பொங்க விளித்தார். இதில் அதிர்ச்சியடைவோ, ஆச்சர்யம் கொள்ளவோ ஏதுமில்லை என்றாலும் கூட காட்சித்தாவும் அல்லது தாவ முயலும் ஒரு நபர் கொள்ளும் தயக்கத்தின் அளவு கூட  தற்போது சற்றும் இல்லாமல் போய் விட்டதுதான் வேதனை அளிக்கிறது. தொகுதி பிரச்சனைக்காகத்தான் முதல்வரை சந்தித்தேன் என்று …

 922 total views

சாதீயத்தினை தகர்க்கும் தமிழ்த்தேசியம்.-மணி செந்தில

அரசியல் /

     தீர்மானகரமானது எதுவெனில் நாளும் முதிர்ந்து வரும் போராட்ட மன உறுதி, நடக்கின்ற இழிவுகளுக்கும் ,அழிவுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான புரட்சிகர மாறுதல் தேவை எனும் உணர்வு, மற்றும் அது இயலும் என்னும் நிச்சயப்பாடு இவை தான் “- ரெஜி டெப்ரே (புரட்சிக்குள் புரட்சி  என்ற நூலிருந்து…)   முள்ளிவாய்க்கால் அவலத்தில் பெருகிய தமிழனின் குருதியின் ஈரம் தமிழக வீதிகளில் மூண்டெழுந்த இளையோர்களின் விழிகளில் வன்மமாய் படர்ந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்திற்குள் ஆழமாய் வேரூன்றி படர்ந்திருக்கும் …

 1,041 total views

பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்

அரசியல் /

        பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே  கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம்  சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும்  கருப்பேறிய அந்த …

 924 total views

ஈழ விடுதலை உணர்வை வீழ்த்த துடிக்கிற விகடனின் வில்லங்கம்.. — மணிசெந்தில்

அரசியல் /

            இன்னும் சில நாட்களில் மாவீரர் தினம் உலகத் தமிழர்களால் அனுசரிக்க இருக்கின்ற நிலையில்  இந்த வார ஆனந்தவிகடனில் வெளிவந்திருக்கும் ’பெண் போராளி ’யின் பேட்டி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது . ஒட்டு மொத்த போராளிகளின் உணர்வினையும் பிரதிபலிப்பதாக படிப்பவர் கருதும் வகையில் மிக திறமையாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பேட்டியை நாம் வெறுமனே கடந்து விட முடியாது.                   இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பின்  தமிழ்த் தேசிய …

 753 total views

தாய்நிலத்தை நேசிக்கும் தீரர்களின் போராட்ட பூமி -இடிந்தகரை

அரசியல் /

அவர்கள் சுழன்றடிக்கும்கடல்காற்றில்படகேறிவந்துசாரைசாரையாய்அந்தகடற்கரையோரம்அமைதியாககாத்திருந்தார்கள். கம்பீரமானஅந்தஅமைதிமூலம்இந்தஉலகிற்குசெய்திஒன்றினைஅவர்கள்தெரிவிக்கமுயன்றார்கள். அந்தஎளியமக்கள்மாபெரும்கல்விஅறிவுகொண்டவர்கள்அல்ல. மதிப்பிற்குரிய அப்துல்கலாம்போல  ஏவுகணைநுட்பங்களைஅறிந்தவர்கள்அல்ல. அமைச்சர்நாராயணசாமிபோலஅதிகாரபலம்கொண்டவர்கள்அல்ல. திமுகதலைவர்கருணாநிதிபோலபோராட்டம்என்றபெயரில்நடிக்கத்தெரிந்தவர்கள் அல்ல.  முதல்நாள்வரைஆதரித்துவிட்டுநம்பிநிற்கும்மக்களைநிராதரவாய்கைவிட்ட  தமிழகமுதல்வர்ஜெயலலிதாபோலநிமிடமுடிவுகளைநொடிகளில்மாற்றும்வல்லமைகொண்டவர்கள்அல்ல. மாறாகஎளியகடற்கரைகிராமமக்கள். அன்றாடபிழைப்பிற்கு உயிரைப்பணயம்வைத்தால்தான்அன்றையஉணவுஎன்றநெருக்கடியில் வாழ்பவர்கள். கடந்த பலஆண்டுகளுக்குமுன்பாகதங்களைச்சுற்றி கட்டியெழுப்பப்பட்டு வரும்  மாபெரும்வல்லரசுஒன்றின்அதிகாரம்தோய்ந்தகனவினைஅவர்கள்தீரத்துடன்எதிர்த்துநின்றார்கள். சவரம்செய்யப்படாதஒருவர்..தான்தேவதூதனில்லைஎனஅறிவித்துக்கொண்டுஅமெரிக்காவில் பார்த்தவருமானம்வரத்தக்கபணியினைதூக்கிஎறிந்துவிட்டுஅவர்கள்மத்தியில்வந்துசேர்ந்தார். அண்ணல்அம்பேத்கர்உரைத்ததுபோல‘கற்பி.ஒன்றுசேர்.புரட்சிசெய்..    அனைத்தும் நடந்தது.  இதற்காக அவர் கொடுத்த விலை மிகப் பெரியது. அவரது பள்ளிக்கூட்த்தினை இடித்து தரைமட்டமாக்கினர். போராட்டத்திற்காக நிதி வசூலிக்கிறார் என ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழலில் திளைத்தவர்கள் குற்றம் சாட்டினர். அவர் அமைதியாக அங்குள்ள குழந்தைகளுக்கு வரப்போகும் ஆபத்து குறித்து வகுப்பெடுத்துக் கொண்டு …

 1,056 total views

உதயகுமார் என்கிற தமிழன்

அரசியல் /

நான் தேவ தூதன் அல்ல – அண்ணன் உதயகுமார். அமெரிக்காவில் வகித்த உயர் பதவியை தூக்கி எறிந்து விட்டு, கல்வி அறிவு மறுக்கப்பட்ட , அப்பாவி மீனவ மக்களோடு தங்கி, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று,எந்த ஒரு அணு விஞ்ஞானிக்கும் சளைக்காமல் பதில் தரக்கூடிய அளவிற்கு அவர்களை அறிவு தெளிவூட்டி, தனது தெளிவான ,வெளிப்படையான ,நேர்மையான முறைகளால் ஒரு வருட காலத்திற்கு மேலாக போராட்டத்தினை முன்னெடுத்து, வன்முறையின் கரம் தீண்டி விட்ட பிறகும் கூட நிதானம் தவறாமல் …

 857 total views,  1 views today

அய்யா சுப.வீ அவர்களின் கொலை மிரட்டல் புகாரும்..அண்ணன் சீமான் அவர்களின் ’நச்’ பதிலும்..

அரசியல் /

அய்யா சுப.வீக்கு நீங்கள் கொலை மிரட்டல் விடுத்தீர்கள் என சுப.வீ சொல்கிறார் அண்ணா என்று அண்ணன் சீமானிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சீமான் சொன்ன பளிச் பதில் – ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவருக்கு நான் ஏன் கொலை மிரட்டல் விடுக்க வேண்டும்..?        877 total views

 877 total views

நாம் தமிழர் கட்சி ஆவணம் – காலத்தின் குரலும், திராவிடத்தின் அலறலும்

அரசியல் /

காலம் காலமாய் அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு தேசிய இனத்தின் தன்னெழுச்சி என்பது வரலாற்றின் போக்கில் நிகழ்கிற ஒரு சாதாரண நிகழ்வல்ல. தான் அடிமையாய் கிடக்கிறோம், நாம் வாழும் மண்ணைக் கூட ஆள முடியா அறியாமையில் அமிழ்ந்திருக்கிறோம் என்பது கூட தெரியாமல் வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டு தனக்குத் தானே வாய்க்கரிசி போட்டுக்கொண்ட வக்கற்ற  ஒரு இனத்தின் பிள்ளைகள் என்பதை விட தமிழர்களுக்கு வேறெந்த அடையாளமும் இல்லை. ஈழத்தில் நடந்த போரும்,துயரும், ஈந்த தியாகமும், படிப்பினைகளுமே  பன்னெடுங்காலமாய் …

 1,119 total views

பரமக்குடி படுகொலைகள் – அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்.

அரசியல் /

வெகு நாட்களுக்கு முன்பாக நான் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த போது ஒரு விசித்திரமான காட்சியை கண்டேன். அனைத்து தலைவர்களின் சிலைகளும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணல் அம்பேத்கார், காமராசர் ,அண்ணா, தந்தை பெரியார் பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல் சேகரனார்,எம்ஜிஆர் என அனைவரும் விலங்குகள் கூட தங்க மறுக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டு கிடந்தார்கள். மக்களின் தலைவர்களுக்கு மக்களால் ஆபத்து என்ற நிலையில் அந்த சிலைகளின் இருப்பு அந்த நிலத்தின் கொடும் சாட்சிகளாக விளங்கிக் கொண்டு நின்றன. வெறும் …

 1,003 total views