அன்பு உறவுகளுக்கு வணக்கம்.
நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை நடத்திய சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பற்றிய ட்விட்டர் ஸ்பேஸ் அமர்வில் இளம் தமிழ் தேசியர் மற்றும் வாசகர்கள் தவறவிட கூடாத மிக முக்கியமான புத்தகங்கள் பற்றிய பட்டியல் ஒன்றினை கேட்டிருந்தார்கள்.
அதன்படி இந்த பட்டியலை நானே உருவாக்கி உள்ளேன். இது அடிப்படை வாசகர்களுக்கு பரந்துபட்ட இலக்கிய வகைமைகளுக்கு அறிமுகங்களாக இருக்கக்கூடும்.
வழக்கமாக பொன்னியின் செல்வன் பாலகுமாரன் புத்தகம் சுஜாதா எழுதியவை என்றெல்லாம் இல்லாமல் இன உணர்வு மற்றும் நவீன இலக்கியங்கள் சார்ந்து இந்த பட்டியல் ஒன்றினை நான் உருவாக்கி இருக்கிறேன். சிறார் இலக்கியங்கள் குறித்து தனியே ஒரு பட்டியல் உருவாக்க திட்டமிட்டு உள்ளேன்.
இது முழுக்க முழுக்க என் ரசனை சார்ந்தது. நான் வாசித்தபோது எழுந்த அனுபவ உணர்ச்சியினை சார்ந்து தயாரிக்கப்பட்டது.
இது தரவரிசை பட்டியல் அல்ல. எனக்குப் பிடித்த சில நூல்கள் இவை. இன்னும் பட்டியல் இடப்படாத பல நூறு நூல்கள் இருக்கின்றன என்றாலும் நான் வாசித்த வகையில் மிகப்பெரிய வாசிப்பு அனுபவத்தை எனக்கு அளித்த இந்த நூல் வரிசையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் வாங்குங்கள் என்றெல்லாம் நினைத்து செய்யப்பட்ட பரிந்துரை அல்ல.
தமிழ் தேசிய தத்துவத்திற்கு மாற்றாக எழுதி வரும் சில எழுத்தாளர்களின் நூல்களும் இதில் இடம் பெற்று இருக்கின்றன. ஆனாலும் அவையும் படிக்க வேண்டியவை எனக் கருதி இந்த பட்டியலில் நான் இணைத்து உள்ளேன். எனவே நூல்களில் உள்ள கருத்துக்களை எல்லாம் நான் சார்ந்திருக்கும் அரசியல் தத்துவத்தின் மீது பொருத்தி குழம்பிக் கொள்ள தேவையில்லை.
புத்தக கண்காட்சிக்கு நீங்கள் செல்லும்போது இந்த புத்தகங்கள் உங்கள் கண்களில் பட்டால் ஒரு நிமிடம் எடுத்துப் பாருங்கள். பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.
இந்தப் பட்டியல் தரவரிசை பட்டியலும் அல்ல என்பதோடு இந்தப் பட்டியல் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகம் தேடி செல்வோர்க்கு இந்த பட்டியல் சிறு உதவி செய்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.
அவசியம் களம் மற்றும் தமிழம் பதிப்பகம் அரங்குகளுக்கு செல்ல தவறாதீர்கள்.
நன்றி.
மணி செந்தில்.
????
- தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் க.ப. அறவாணன்
- தமிழன் ஏன் அடிமையானான் க.ப அறவாணன்
- சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு ராமச்சந்திர குகா எதிர் வெளியீடு
- தேசியமும் மார்க்சியமும் தணிகைச் செல்வன்
- தமிழ்நாடு தமிழருக்கே
வழக்கறிஞர் சக்திவேல் - ம.பொ.சியின் தமிழன் குரல்
- தொ பரமசிவன் முழு தொகுப்பு காலச்சுவடு வெளியீடு
- ஆசான் ம செந்தமிழன் அவர்களின் நூல்கள் செம்மை வெளியீடு
- தமிழகத்தில் பிற மொழியினர் ம.பொ.சி
- ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
தமிழில் இரா முருகவேள் - கம்யூனிசம்- நேற்று இன்று நாளை_ இரா. ஜவகர் நக்கீரன் வெளியீடு
- தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்- அருணன்
- நான் நம்மாழ்வார் பேசுகிறேன்- விகடன் வெளியீடு
- சுதேசி இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு- விகடன் வெளியீடு
- சாதியை அழித்து ஒழித்தல்- அண்ணல் அம்பேத்கர் – அருந்ததி ராய் முன்னுரையுடன் காலச்சுவடு வெளியீடு
- உலக சினிமா- மூன்று தொகுப்புகள் செழியன்
- மாவீரர் உரைகள் நேர்காணல்கள்
- இவன் ஒரு வரலாறு தொகுப்பாசிரியர் பூபதி
- மண்டோ படைப்புகள்
- புதுமைப்பித்தன் சிறுகதைகள்
- எனது இந்தியா- எஸ் ராமகிருஷ்ணன்
- அறம்- ஜெயமோகன்
- இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ் தேசியமும் கு.ச. ஆனந்தன்
- நள்ளிரவில் சுதந்திரம்
- வையத் தலைமை கொள் -இறையன்பு
- போர் தொழில் பழகு -இறையன்பு
- வெள்ளை யானை- ஜெயமோகன்
- 1801 -ராஜேந்திரன் ஐஏஎஸ்
- காலா பாணி -ராஜேந்திரன் ஐஏஎஸ்
- உலக இலக்கியப் பேருரைகள்- எஸ் ராமகிருஷ்ணன்
- வால்காவிலிருந்து கங்கை வரை
- பட்டாம்பூச்சி- நர்மதா பதிப்பக வெளியீடு
- மோகமுள்- தி ஜானகிராமன்
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -ஜெயகாந்தன்
- ஜெயகாந்தன் சிறுகதைகள்
- பாரதியார் கவிதைகள்
- பாரதிதாசன் கவிதைகள்
- உலகின் மிக நீண்ட கழிவறை அகர முதல்வன்
- இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்- ஆலடி அருணா
- சுளுந்தீ- முத்துநாகு
- மாபெரும் தாய் -அகரமுதல்வன.
- ஒரு சிறு இசை- வண்ணதாசன்
- வைரமுத்து கவிதைகள்
- அப்துல் ரகுமான் கவிதைகள்
- திராவிடம் தமிழின் மறுமலர்ச்சியை வளர்த்ததா மடை மாற்றியதா- பெ மணியரசன்
- தேசியமும் திராவிடமும்- மாசோ விக்டர்
- ஆழி சூழ் உலகு- ஜோ டி குரூஸ்
- பூஉலகின் நண்பர்கள் சிறியதே அழகு புத்தக வரிசை
- பார்த்தீனியம்- தமிழ் நதி
- ரசவாதி
50.புயலிலே ஒரு தோணி/ கடலுக்கு அப்பால்- ப.
சிங்காரம்
- பாப்லோ நெருடா கவிதைகள்- தமிழில் சுகுமாரன்
- பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
-புதுவை ரத்தினதுரை தொகுப்பு - தமிழின படுகொலைகள்
களம் வெளியீடு - தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
- வண்ண நிலவன் சிறுகதைகள்
- ஜாப்னா பேக்கரி -வாசு முருகவேல்
- நடுகல்- தீபச்செல்வன்
- இரண்டாம் ஆட்டம்/கொமாரா – லட்சுமி சரவணகுமார்
- சைவ சமயம் ஒரு புதிய பார்வை- சிகரம் செந்தில்நாதன்
- இந்து மதம் எங்கே போகிறது இரண்டு பாகங்கள்- நக்கீரன் வெளியீடு
- காந்தியைக் கொன்றவர்கள் -எதிர் வெளியீடு
- குற்றப்பரம்பரை -வேல ராமமூர்த்தி
- கள்ளிக்காட்டு இதிகாசம்/ கருவாச்சி காவியம்/ மூன்றாம் உலகப் போர்/ வைரமுத்து
- குஜராத் மதவெறி படுகொலைகள்- சூத்திரதாரிகளும், பங்காளிகளும் -களம் வெளியீடு
- அண்ணல் அம்பேத்கர் வரலாறு வசந்த் மூன் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு/ பாபா சாகேப் அருகில் இருந்து- மைத்திரி
- சயாம் பர்மா மரண ரயில் பாதை
- ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும் ஸ்டீபன் ஹாக்கிங்
- தூக்கிலிடுபவனின் குறிப்புகள் சசிவாரியர் எதிர் வெளியீடு
- விடுதலைக்கு விலங்கு ராபர்ட் பயஸ் களம் வெளியீடு
- சிறை கொட்டடியில் இருந்து ஒரு மடல் பேரறிவாளன்
- தமிழ் தேசியத் தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்
- நிலைத்த பொருளாதாரம்- ஜே சி குமரப்பா
- தமிழர் எழுச்சியின் வடிவம் -பழ நெடுமாறன்
- கால்கள்- ஆர் அபிலாஷ் உயிர்மை வெளியீடு
- இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் 100 -பதிப்பு முனைவர்.வீ. அரசு
- புலி நகக்கொன்றை- பி ஏ கிருஷ்ணன்
- கோபல்ல கிராமம் -கி ராஜநாராயணன்
- ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
- அ முத்துலிங்கம் சிறுகதைகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாறு/ தகர்ந்து போன தன்னாட்சிக் கனவுகளும் தேசிய இனங்களின் தன்னுரிமை பயணமும் முனைவர் த ஜெயராமன்.
- ஈரோட்டுப் பாதை சரியா- ப ஜீவானந்தம்
- சாதியும் தமிழ் தேசியமும்- பெ மணியரசன்
- வ உ சிதம்பரனார்/ மா ரா அரசு/ சாகித்திய அகாதமி வெளியீடு
- அருணகிரி நாதர் முதல் வள்ளலார் வரை சிகரம் செந்தில்நாதன்.
- ஆரியக்கூத்து- அ.மார்க்ஸ்
- நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்- ஜெயமோகன்
- இடக்கை, யாமம், துயில் எஸ் ராமகிருஷ்ணன்,
- நிலம் பூத்து மலர்ந்த நாள் -மனோஜ் குரூர்
- செம்புலம் -இரா முருகவேள்
- மாநில சுயாட்சி- முரசொலி மாறன்
- முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் தமிழ் பணி / முனைவர் கோ வீரமணி
- சிதம்பர நினைவுகள் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே வி சைலஜா
- ஈழப் படுகொலையின் சுவடுகள் நிலவன்
- ஓநாய் குலச் சின்னம்
- மனித குலமும், தமிழ்த் தேசியமும் பல நெடுமாறன்
- சூழலியல்- கி வெங்கட்ராமன்
- பெருந்தலைவர் காமராஜர் விகடன் வெளியீடு
- அஜயன் பாலா எழுதிய நாயகன் வரிசை நூல்கள் விகடன் வெளியீடு
- நெடுங்குருதி- எஸ் ராமகிருஷ்ணன்.
தொகுப்பு: மணி செந்தில்
மறுமொழி இடவும்