பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கொலவெறி பாடல்- யாழ் தமிழர்களின் அதிரடி எதிர்ப்பு.

உலக மகா புகழ் அடைந்ததாக பீற்றிக் கொள்ளப்படும் ‘கொலவெறி’ பாடலின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து யாழ் தமிழர்கள் நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல். வாழ்த்துக்கள் உறவுகளே.. நீங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும். 8 கோடி இருந்தும் எம் உணர்வற்ற நிலை உணர்ந்து தலைகுனியும் -தாயகத் தமிழன்.

Previous

பரமக்குடி படுகொலைகள் – அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்.

Next

பச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.

5 Comments

  1. ””ஒலக புகல் பெற்ற கொல வெரி””பாடலை அதன் மெட்டிலேயே நெத்தியடியாக இதெல்லாம் ஒரு (தமிழ்)பாட்டாடா?என புத்தி சொல்லியிருக்கும் அந்த யாழ் தமிழனுக்கு வாழ்த்துகள்.நன்றிகள்.

  2. அன்புள்ள இடிமுழக்கம். …இதே போன்ற பாடல் மராத்திய திரைப்படத்தில் வந்திருந்தால் அப்போது தெரிந்திருக்கும் செய்தி. ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்ற பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பாடல்கள் குப்பையில் கிடந்த எச்சிலைகள் போல காணாமல் போய்விட்டன.ஆனால் இப்பாடல் மேல் காட்டப்படும் அதீதமான வெளிச்சம் இது போன்று மொழியை கொலை செய்து பாடல்கள் வருவதற்கு வழிவகுக்கும்.ரசிகத்தன்மை என்றால் என்ன என்பதற்கு யாழ் தமிழர்களே இப்பாடலில் பதிலளித்திருக்கிறார்கள்.ரசிகத்தன்மை வேறு.அடிமைத்தன்மை வேறு .இதில் நாம் யார் என நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்

  3. ஒரு தமிழன் எழுதி பாடி இன்னொரு தமிழன் இசையமைத்த பாடல் சர்வதேச அளவில் ரசிக்கபட்டு பாரட்ட படுவதில் ஒரு தமிழனாக பெருமை அடைகிறேன். அந்த பாடலை நானும் பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். ஆனால் பலருக்கு இந்த பாடல் விசயத்தில் தமிழ் பற்று விஸ்வரூபம் எடுத்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது.

    இதில் எங்கு வந்தது தமிழ் துரோகம்? ஒரு படத்தில் ஒரு பாடல் இடம் பெறுகிறது என்றால் அந்த படத்தில் எந்த சந்தர்ப்பத்தில் இடம் பெறுகிறது என்பதை கூட தெரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது சரியானதா?

    இதுவரை எந்த பாடலிலும் அங்கில வார்த்தை வரவில்லையா? ஏன் ஒரு ஆங்கில வார்த்தை கூட கலவை இல்லாமல் உங்களால் பேச முடியுமா? அப்போ நீங்கள் தமிழுக்கு துரோகம் செய்ய வில்லையா? ஒரு தமிழன் பாடல் இந்தளவுக்கு பாரட்ட பட்டு மொழிகள்,நாடுகள் தாண்டி ரசிக்கபடுவதுக்கு குறை சொல்வது எந்தவகையான மனபாங்கு என்பது இலகுவில் புரிந்து கொள்ள முடியும். இது தமிழனுக்கு கூடவே பிறந்த குணம்.

    http://www.idimulhakkam.blogspot.com/2012/01/blog-post_02.html

  4. சினிமாவுல தாயையும் வேசியாக சித்தரிப்பார்கள். அதையும் இந்த மானமற்ற நபும்சக தமிழர்கள் “என்ன கலை” என்று புகழ்வார்கள்.

Powered by WordPress & Theme by Anders Norén