மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

10827- வெறும் வாக்குகள் மட்டுமல்ல இவை.

அரசியல் /

🟥 ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்டன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை மேனகாவோடு நேற்று பேசிய போது “விடுடா தங்கை, இன்னும் கடுமையாக உழைத்து எதிர்காலத்தில் வெல்வோம்..” என்று ஆறுதலாய் சொன்னபோது, அவள் சொன்ன பதில்தான் இது. “நிகழ்காலத்திலேயே நாம் வென்று விட்டோம் அண்ணா …” 🟥உண்மைதான். பல்வேறு அனுபவங்களையும், உண்மையான போராளிகளையும்,எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இனத்திற்காக உழைக்க வந்த உழைப்பாளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற அண்ணன் சீமான் ஏற்கனவே வெற்றி …

 7 total views

ஈரோடு கிழக்கில் வென்றார் அண்ணன் சீமான்..

அரசியல் /

🛑 ஒரு அசலான போர்க்களத்தை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி எதிர்கொள்கிறது.ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடக்கின்ற இந்த போரில் அரசியல் மாண்புகள் அனைத்தும் ஆளும் கட்சியினரால் கொலை செய்யப்பட்டு விட்டன. ஜனநாயகம் என்ற பச்சைக் குழந்தை துடிக்க துடிக்க ஆளும் கட்சியின் அதிகாரத்தால் கழுத்தறுக்கப்பட்டு ஈரோட்டு கிழக்குத் தொகுதியின் வீதிகளில் கொலை செய்யப்பட்டு விட்டது. ஆடு மாடுகளை பட்டித் தொட்டியில் அடைப்பது போல மக்களை லாரிகளில் ஏற்றி வந்து மண்டபங்களில் அடைத்து வைத்து மற்ற எந்தக் …

 8 total views

இவ்வாறாகவே நடந்தது அந்தக் கொலை.

என் கவிதைகள்.. /

🟥 உன்னை கொல்லநான்ஆதி கால ஆயுதம்ஒன்றை பரணில்தேடிக்கொண்டிருக்கும்போது தான்,அந்த துருப்பிடித்த கத்தியைதேடி எடுத்தேன். அதன் முனைஅவ்வளவு கூர்மையாக இல்லை.ஆனால் அதன் வளைவில் எப்போதோ குத்தப்பட்டகுருதியின் கறைஅந்தக் கத்தியைநான் தேர்ந்தெடுக்க போதுமான காரணத்தை தந்தது. அதை உன்தோல்களை கவ்வி நிற்கும்விலா எலும்பில் குத்தலாமா,கதகதப்பானநடுநெஞ்சில் பாய்ச்சலாமா,தசை ததும்பி நிற்கும் அடிவயிற்றில் சொருகலாமா, என்றெல்லாம் நினைக்கும் போது ..மிடறு விழுங்குகிற உன் தொண்டைக் குழி எனக்கு நினைவுக்கு வந்தது. அதன் மென்மைஇந்தக் கத்திக்குஉகந்தது தான்‌. ஆனால்..எங்கே குத்தினாலும் சரிநான் ஒன்றில் மட்டும் …

 8 total views

புத்தகப் பரிந்துரை- 2023

இலக்கியம் /

அன்பு உறவுகளுக்கு வணக்கம். நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை நடத்திய சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பற்றிய ட்விட்டர் ஸ்பேஸ் அமர்வில் இளம் தமிழ் தேசியர் மற்றும் வாசகர்கள் தவறவிட கூடாத மிக முக்கியமான புத்தகங்கள் பற்றிய பட்டியல் ஒன்றினை கேட்டிருந்தார்கள். அதன்படி இந்த பட்டியலை நானே உருவாக்கி உள்ளேன். இது அடிப்படை வாசகர்களுக்கு பரந்துபட்ட இலக்கிய வகைமைகளுக்கு அறிமுகங்களாக இருக்கக்கூடும். வழக்கமாக பொன்னியின் செல்வன் பாலகுமாரன் புத்தகம் சுஜாதா …

 9 total views

சி.ஆர்.7 -தன்னிகரற்ற வீரர்.

சுயம் /

கால்பந்து ஆட்டங்கள் பார்க்கத் தொடங்கிய காலம் தொட்டு என்னுடைய அணி அர்ஜென்டினா. முதலில் மாரடோனா. தற்காலங்களில் என்னுடைய கதாநாயகன் மெஸ்ஸி. ஆனாலும் போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ ஆகச்சிறந்த கால்பந்து வீரனாக உருவாகி வந்த காலகட்டங்களில் ஒரு மெஸ்ஸியின் ரசிகனாக ரொனால்டோவை வெறுக்க முடியாதது ஒன்றுதான் ரொனால்டோவின் ஆகப்பெரும் வசீகரம். ஏனெனில் அந்தத் திறமை வெறுக்க முடியாத, பொறாமை கொள்ள முடியாத உயரம் கொண்டது. ஒரு பேட்டியில் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த வீரர்களை பற்றி கூறும் போது ரொனால்டோவின் …

 7 total views

நவம்பர் -26 தலைவர் பிறந்தநாள்

அரசியல் /

வனமேறி நின்றஅந்த புலியின்கண்கள்ஆதி முருகன்சாயல் ஒத்தவைஎன பார்த்தோர்பதற சொன்னார்கள். சினமேறி நின்றஅதன் சீற்றம்அறிந்தோர்அது வெறும்வனமேறிய புலிஅல்ல..அது மூத்த குடிசுமந்த கனவுஎன கண்டார்கள். கார்த்திகை இரவில்காந்தள் மலர் பூட்டிசன்னதம் வந்துமுழங்கிய முதியவன்ஒருவன் கம்பீரமாய்சொன்னான். அது கனவும் அல்ல ,நினைவின் சினமும் அல்ல,அதுஇனம் வணங்கும்இறை என்று.  5 total views

 5 total views

நவம்பர்-8 அண்ணன் சீமான் பிறந்தநாள்.

கட்டுரைகள்.. /

“அமைதியான வரலாறு என்ற ஒன்றே உலகில் கிடையாது” என்கிறார் மாமேதை வால்டர். வரலாற்றின் பக்கங்கள் எங்கோ தோன்றிய தனி நபர் விளைவித்த சிந்தனைகளால், கலகங்களால் சதா அதிர்ந்துக் கொண்டே இருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத ஒருவரிடம், போகிற போக்கில் நிகழ்ந்துவிடுகிற கால ஓட்டத்தில் இருந்துதான் வரலாற்று அதிர்விற்கான சூட்சமப் புள்ளிகள் தோன்றி விடுகின்றன. இவர் எங்கிருந்து வந்தார் என யோசிக்கும் முன்னே வரலாற்றுநாயகர்கள் சமகாலத்து சிந்தனைகளை மாற்றிக் கட்டமைத்து புது பாய்ச்சலை நிகழ்த்தி விடுகிறார்கள் ‌. எப்படி சாத்தியம் …

 9 total views

உலகமெங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை..

கட்டுரைகள்.. /

🌑 “சங்கத் தமிழ் ஓசை” என்ற பெயரில் அழைப்பிதழ் பார்த்தவுடன் உண்மையில் அச்சமாகத்தான் இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுட்பமான இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரையப்பட்ட இலக்கிய பாடல்களான சங்க பாடல்களுக்கு சமகாலத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எந்த வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிற கேள்வியும்,சாதாரண வாசகர்களால் வெற்று வாசிப்பின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சங்க பாடல்களை எப்படிப்பட்ட இசை வடிவத்தில் பொருத்தி கேட்போரை ஈர்க்க செய்யப் போகிறார்கள் என்கிற கேள்வியும் …

 261 total views

திசை அறியும் திசைக்காட்டி.

அரசியல் /

சமகால தமிழக அரசியல் வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஆளுமையாக அண்ணன் சீமான் உருவாகி இருக்கிற உயரம் அவரே எதிர்பார்க்காத ஒன்று‌.அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அல்லது நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட நிகழ்வு அல்ல. காலத்தின் கருவியாக தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு தனி மனிதனின் அசாத்திய மனப்பாங்கு. தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்து யாரும் தொட தயங்குகிற ,பிற தலைவர்கள் அதுவரை தொட்டிராத வரலாற்றின் வீதியில் இறுக மூடப்பட்டு துருவேறிக் கிடக்கின்ற பல சர்ச்சைக் …

 49 total views

பொன்னியின் செல்வன் பார்ப்போர் கவனத்திற்கு…

திரை மொழி /

அமரர் கல்கி எழுதி ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து “புல்லரிப்போடு” இருக்கின்ற அனைவருக்கும்… 1. முதலில் பொன்னியின் செல்வன் என்பது கற்பனை கதை. வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட புனைவு. இந்தக் கதையையே வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டாம் . வரலாறு இந்த புனைவுகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்டமானது. 2. அமரர் கல்கி எழுதியபோதே வரலாற்று கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த கரிகாலன் …

 54 total views