மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

காக்கப்படட்டும் காஷ்மீரம்..

அரசியல் /

கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் காஷ்மீர் ஸ்ரீநகருக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த வாஜ்பாய் அப்போது ஒரு கவிதையை எழுதினார். வசந்தம் விரைவில் திரும்பும். அழகிய பள்ளத்தாக்கில் மீண்டும் மலர்கள் மலரும். நைட்டிங்கேல் பறவைகள் திரும்பும்.. மீண்டும் இசைத்துக் கொண்டே.. (Spring bill return to the beautiful valley Soon. The flowers will bloom again and the nightingales will …

 752 total views

சூனா. பானா வின் பஞ்சாயத்து..

அரசியல் /

  சமீபத்தில் காவிரி தொலைக்காட்சியில் பேட்டியாளர் மதன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதது குறித்து சுபவீ இன்று விளக்கம் என்ற பெயரில் வழக்கம் போல் வழ வழா கொழ கொழா பதிவு ஒன்றினை இட்டிருக்கிறார் . வழுக்கி விழந்ததை கூட இப்படி எண்ணை தடவி காட்டுவதற்கு சுப‌.வீயால் தான் முடியும். அது போகட்டும். பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுபவீ தடுமாறியது அவரது அரசியல் தோல்வி. அத்திவரதரை பார்க்க ஏன் திமுக தலைவர்களின் …

 1,125 total views

உதயநிதி போதும். நம்மாழ்வார் எதற்கு..??

அரசியல் /

நாம் தமிழர் கட்சியில் இன்று பயணிப்பவர்களில் நான் உட்பட 99% திமுக குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான். திமுகவை கருப்பு-சிவப்பு கொடியை கலைஞர் கருணாநிதி அவர்களை முரசொலி நாளிதழை தங்கள் உயிராக நினைத்து நேசித்தவர்கள் தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம். திமுகவின் முதல் இணையதள தலைமுறையின் முக்கிய மானவர்களில் நானும் ஒருவன் ‌. ஆர்குட் காலத்திலேயே திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து எழுதியவர்களை பக்கம் பக்கமாக எழுதி விரட்டி அடித்தவர்களில் நானும் ஒருவன். …

 780 total views

அவன் அப்படித்தான்..

அரசியல் /

  நீங்கள் என்ன வேண்டுமானாலும் அவனை விமர்சித்து விட்டு போங்கள். ஆனால் அவன் அவனாகவே இருக்கிறான். அலை பாய்ந்து வரும் அவதூறுகளுக்கு அவனுடைய பதில் செயல். விஷம் தோய்ந்த அம்புகள் என எய்யப்படுகிற பொய்களுக்கு அவனுடைய பதில் உண்மை. ஒதுக்கி வைத்து ஓரம் கட்டப்பட்டு வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிற சதிகளுக்கு அவனுடைய பதில் அலட்சிய எக்காளத்துடன் கூடிய சிறு புன்னகை. காலம் காலமாய் கட்டி வைத்திருக்கிற புராதன பழமை பஞ்சாங்கங்களுக்கு நெருப்பு வைத்து விட்டு புத்துலகம் படைக்க …

 619 total views

காலமென்ற பொல்லாத மிருகம்

அரசியல் /

வைகோவிற்கு அன்றைய திமுக அரசு தொடுத்த தேசத்துரோக வழக்கு மீது இன்று ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிற தண்டனையை நாம் நினைக்கும் போது சில காட்சிகள் நம் மனதிலே எழுகின்றன. வைகோ மீது தொடுக்கப்பட்ட வழக்கு போல.. அன்றைய இனத்துரோக திமுக ஆட்சியில் பல அநியாய வழக்குகள் தொடுக்கப்பட்டன. இனப்படுகொலையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய ஆதரவும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதில் அன்றைய திமுக அரசு மிகுந்த …

 602 total views

செத்துப் போன ஒரு திமுக காரனின் கடைசி முனகல்..

அரசியல் /

ராகு காலம் எமகண்டம் பார்த்து வளர்பிறை அமிர்த யோகத்தில் திமுக இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று இருக்கின்ற உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பினை பற்றி விடுதலையில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்.. இதேபோல ஒரு நாள் திகவின் தலைவராக ஆக இருக்கிற அன்புராஜ் வீரமணியின் பதவியேற்பினை பற்றி முரசொலியில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்.. இதேபோல திமுகவின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும்போது பதவியேற்பினைப் பற்றி விடுதலையில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும்.. அதேபோல திமுகவின் இளைஞரணி செயலாளராக …

 769 total views

ஒரு வரலாற்றின் கதை.. ——————————–

அரசியல் /

  அவன் முன்னால் கால்கடுக்க நின்றவாறு அவனின் சொற்களுக்கு ஏற்றவாறு.. சிந்தித்தும் சிரித்தும் கோபப்பட்டும் கொந்தளித்தும் ஆர்ப்பரிக்கும் அந்த இளைஞர் கூட்டம் அரியணையில் அமர்ந்து அரசாண்ட ராஜவம்சத்தினர் அல்லர். மிக எளியவர்கள். அவர்களின் தந்தையர் செய்திருந்த வரலாற்றுப் பிழைகளுக்காக.. அவர்கள் அங்கே கூடியிருந்தார்கள். அவர்களின் தந்தையரும் அவர்களைப் போலவே எளியவர்கள்தாம். தவறான எஜமானர்கள் மீது கொண்டிருந்த அளவற்ற விசுவாசத்தால் அவர்களுக்கு அவர்களாகவே விதித்துக் கொண்ட கொடும் விதியின் கரம் பற்றி வாழ்ந்தவர்கள். ஒரு பொன்னான ஐம்பது ஆண்டு …

 659 total views

உங்களோடு ஒரு நிமிடம்

அரசியல் /

  உங்களோடு ஒரு நிமிடம .. அந்த உணர்வை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது இனவெறியாக, பாசிசமாக நாசமாக காட்டுமிராண்டித்தனமாக எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். இந்தக் காற்று இந்த நிலம் இந்த மலை இந்த மண் இந்த செடி கொடிகள் இந்த மரம் என இங்கே இருக்கின்ற அனைத்தும் எங்களுக்குச் சொந்தம். நான் இம்மண்ணின் பூர்வகுடி. நீங்கள் உங்கள் தத்துவ ஆயுதங்களை தூக்கிக்கொண்டு எங்களது வீதிகளில் வந்து இனிப்பு தடவிய வார்த்தைகளால் ஒரு எதிர்காலத்தை …

 602 total views

சிரித்து விட்டுப் போவோம்

அரசியல் /

ஆதித்தமிழர் தமிழ் இன உணர்வோடு தமிழ்த்தேசியப் பாதையில் திரளத் தொடங்குவதை மறுத்து..எதிர்த்து..இறுதிவரை அவர்களை ‘தலித் தாகவே வைத்து’ பராமரிக்க விரும்புவது …ஆதிக்கச் சாதி உணர்வாளர்கள் கொண்டிருக்கும் அதே ஆதிக்குடிகளை தனிமைப்படுத்தும் உளவியல் தான்.. இந்த நுட்பமான விசித்திர ஒற்றுமைதான் சாதிகளை காப்பாற்றும் முக்கிய கருவி. சுய சாதியை மறுத்து.. தமிழர் என்ற இன அடையாளத்தில் திரளும் சாதி மறுப்பாளர்களையும்… சாதிதான் தமிழர் இன ஓர்மைக்கு எதிரான முக்கிய காரணி என தன் சுய சாதி பெருமிதத்தை அழித்து …

 586 total views

இதற்கு யாரும் வர மாட்டார்கள்..

அரசியல் /

————————-+———————— தமிழக அரசியல் கட்சிகளில் வேறு எதுவும் நினைத்துக்கூட பார்க்க இயலாத மாபெரும் புரட்சிகர காரியம் ஒன்றை நாம் தமிழர் கட்சியின் இளையப் போராளிகள் நிகழ்த்தி வருகிறார்கள். உலகத்திலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் 85% நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு விட்டது. 2020க்குள் நிலத்தடி நீர் முற்றும் அழிகிற நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. இந்நிலையில் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து …

 612 total views