மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

மானுட ஜீவித வரலாறு

இலக்கியம் /

ஒரு காலத்தில் காதுகளே இல்லாத மனிதர்கள் இருந்தார்கள். காதுகளே இல்லாத மனித வாழ்க்கையில் சொற்களுக்கோ உணர்ச்சிகளுக்கோ இடமில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் இல்லை. அப்படிப் பேசிக் கொண்டால் கூட அவைகளுக்கு பொருளும் இல்லை. சரி.. காதுகள் இல்லாதது தான் பிரச்சனை. காதுகளைப் பொருத்துவோம். இனியாவது மனித வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தங்கள் தென்படுகிறதா என்பதை பார்ப்போம் என கடவுள் சிந்தித்து மனிதர்களுக்கு காதுகளை பொருத்தினான். அப்போதும் அவர்கள் அவ்வாறே இருந்தார்கள். அர்த்தம் இல்லாததைப் பேசிக்கொண்டு எவ்வித உயிர்ப்பும் …

 904 total views

புத்தக நதியில் மிதக்கும் சருகு..

இலக்கியம் /

–++++++-++——–++++–+————-_- “ஒரு புத்தகம் என்பது உங்கள் உள்ளங்கையில் அமர்ந்திருக்கும் தனித்துவமான அற்புதம்.” –ஸ்டீபன் கிங் புத்தகங்கள் இல்லாத ஒரு உலகம் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை. உடன்பிறந்தார் யாருமில்லாத பிறப்பு, பிறப்பிலேயே வாய்த்துவிட்ட நோய் தந்த தனிமை, உறக்கமில்லா இரவுகள், பேச துணையற்ற மருத்துவமனை பொழுதுகள் என இயல்பு உலகத்திலிருந்து மாறுபட்ட இன்னொரு உலக வாழ்க்கை என்னுடையது. படுக்கையில் படுத்திருக்கும் என் விழிகள் நிலைகுத்தி கண்டு கொண்டிருக்கின்ற மின்விசிறியை பார்க்க சோரும் போதெல்லாம்.. அருகிலேயே வைக்கப்பட்டிருந்த புத்தக அலமாரியை …

 752 total views

செவ்விந்தியனின் நடனம்- நூல் வாசிப்பு அனுபவ குறிப்புகள் சில.

இலக்கியம் /

அண்ணன் மணி செந்தில் அவர்களின் இந்த படைப்பை, ஆற அமர, உட்கார்ந்து படித்து ரசிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவெழுத அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டேன். இப்படைப்பின் மீதான என் எண்ணங்களை மூன்று தலைப்பின் கீழ் பதிகிறேன். ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள்: மிகச்சிறந்த எழுத்தாளுமைகளுக்கே உரிய குணங்கள் “ஆழம் உணர்தல்” மற்றும் “உணர்தலில் ஆழம்”. எந்தொவொரு உணர்வினையும் மதிப்பீடுகளுக்கு இடம் கொடுக்கும் முன் அதை முழுமையாக உள்வாங்கி எழுத்தில் வெளிக்கொணர்தல். அண்ணனுக்கு இவ்வரம் இயல்பாகவே வாய்க்கப்பெற்றுள்ளது என்று …

 700 total views

அக்காளின் எலும்புகள்.. -யாவருக்குமான கள் பிரதி.

இலக்கியம் /

  எனக்கு முன்னால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கின்ற அந்தப் புத்தகம் மெதுவாக அசைகிறது. நான் தலை சாய்த்து படுத்திருந்த மகிழம்பூ மரத்தடியில் பூக்கள் அதிகம் உதிர தொடங்குகின்றன. உச்சி வேளை வெயில் பொழுதில் வயற்க் காட்டில் யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு அசைந்து கொண்டிருந்த அந்தப் புத்தகத்தையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கவிழ்த்து வைக்கப்பட்ட அந்தப் புத்தகத்திலிருந்து அக்காக்கள் சொற்களாக கசிந்துக் கொண்டிருந்தார்கள். கசிந்த சொற்கள் உதிரா முதிர்எலுமிச்சை பழத்தின் வாசனையை காற்றில் பரப்பிக் …

 1,427 total views

செவ்விந்தியனின் நடனம் -புத்தக வெளியீட்டு விழா- 12-01-2019

இலக்கியம் /

        நான் எழுதி களம் வெளியிட்டிருக்கிற “செவ்விந்தியனின் நடனம்” என்கின்ற நினைவோடை கட்டுரைத் தொகுதியினை எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட.. களம் பதிப்பகத்தின் சார்பாக எனது மைத்துனர் பாக்கியராசன் சே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். எழுத்துலகில் எனக்கு ஆசானாக இருக்கிற திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எனது நூல் ஒன்று வெளியிடப்பட்டிருப்பது எனது வாழ்நாள் பெருமை. விடுதலைக்கு விலங்கு, சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம் என்கின்ற எனது …

 757 total views

நன்றி..

இலக்கியம் /

  2019 ஜனவரி  மாதம் காக்கை சிறகினிலே இலக்கிய மாத இதழில் நான் எழுதிய பிரபஞ்சனின் ஊஞ்சல் என்கிற கட்டுரை வெளியாகியிருக்கிறது. காக்கை சிறகினிலே ஆசிரியர் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி.  565 total views

 565 total views

பிரபஞ்சனின் ஊஞ்சல்..

இலக்கியம் /

நான் சற்று தாமதமாக சென்றுவிட்டதாக என்னை நானே நொந்துகொண்டேன் ‌. குறித்த நேரத்தில் புறப்படுவது என்பது வாழ்நாளில் எப்போதும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருவது குறித்து மிகப்பெரிய கவலை இருக்கிறது. அதுவும் ஒரு முக்கியமான நபரை சந்திக்கச் செல்லும்போது ஏற்படும் காலதாமதம் அந்த சந்திப்பின் விளைவுகளை எதிர்மறையாக்கி விடும் என்பதில் நான் ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தேன். அப்படித்தான் அன்றும் எனக்கு காலதாமதம் ஆகிவிட்டது. விடுதியில் நுழைந்த போது அவர் எனக்காக விடுதியின் வரவேற்பறையில் காத்திருந்தார். பார்க்க …

 590 total views

ஞாநி..சில நினைவுகள்.

இலக்கியம் /

வாழ்வின் சூட்சமக் கோடுகள் விசித்திரமானவை. யாராலும் வகைப்படுத்த இயலாத மர்மச் சுழிகளால் வாழ்வெனும் நதி நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறது. எவரோடு எவர் பிணைக்கப்படுவர் …பிரிக்கப்படுவர் என்று தெரியாத வாழ்வின் பொல்லாத பகடை ஆட்டத்தில் தான் நானும்,அவரும் அறிமுகமானோம். 2006-07 காலக்கட்டம். அப்போது அவர் புகழ்ப்பெற்ற எழுத்தாளர். அவரது நவீன நாடகங்கள் மூலமாகவும்,எழுத்துக்கள் மூலமாகவும் தமிழுலகம் தெரிந்த ஆளுமையாக உருவான அக்காலக் கட்டத்தில் தான் அவர் ஆனந்த விகடனில் ஓ பக்கங்கள் என்கிற தொடரை எழுதத் தொடங்கினார். …

 995 total views