மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நந்தனின் கேள்வி.

சுயம் /

தனக்குள் ஆழ்ந்திருந்த தியானத்திலிருந்து கால நழுவலின் ஒரு நொடியில் கண் விழித்த புத்தர் மௌனத்தின் உரமேறி இருந்த ஞானத்திலிருந்து சிந்தப்போகும் சொற்களுக்காக எதிரே தன் முன்னே காத்திருந்த சீடர்களைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார். ஒரு இலை உதிர்தல் கூட அங்கே சூழ்ந்து இருக்கும் அமைதியின் ஒழுங்கை சிதைத்து விடுமோ என்ற சிந்தனையில் சீடர்கள் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எங்கும் அமைதி . எங்கும் அமைதி. முன்வரிசையில் அமர்ந்திருந்த நந்தன் எழுந்து நின்றான். புத்தரின் கனிவுமிக்க பார்வை தன் உச்சி …

 13 total views

அவனைப்போல வேறு யாருண்டு…??

சுயம் /

🟥 முதன் முதலாக நாம் தமிழர் கட்சியில் மாணவர் பாசறை உருவாக்கப்பட்டபோது அதன் தொடக்க கூட்டத்தில் தான் அந்த இளைஞனை நான் பார்த்தேன். மிக ஒல்லியான உடல்வாகு. யாரிடமும் முன்வந்து எதையும் கேட்காத கூச்ச உடற் மொழி. அவன் பெயரை அழைத்து மேடையில் ஏற்றிய போது தயங்கியவாறே சென்று பின் வரிசையில் நின்று கொண்ட அந்த நொடியில் என்னை போன்ற பலரது இதயத்தில் முன் வரிசையில் வந்து அமர்ந்து கொண்டவன் அவன். தம்பி என்று அழைத்தாலும் மனதால் …

 13 total views

சி.ஆர்.7 -தன்னிகரற்ற வீரர்.

சுயம் /

கால்பந்து ஆட்டங்கள் பார்க்கத் தொடங்கிய காலம் தொட்டு என்னுடைய அணி அர்ஜென்டினா. முதலில் மாரடோனா. தற்காலங்களில் என்னுடைய கதாநாயகன் மெஸ்ஸி. ஆனாலும் போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ ஆகச்சிறந்த கால்பந்து வீரனாக உருவாகி வந்த காலகட்டங்களில் ஒரு மெஸ்ஸியின் ரசிகனாக ரொனால்டோவை வெறுக்க முடியாதது ஒன்றுதான் ரொனால்டோவின் ஆகப்பெரும் வசீகரம். ஏனெனில் அந்தத் திறமை வெறுக்க முடியாத, பொறாமை கொள்ள முடியாத உயரம் கொண்டது. ஒரு பேட்டியில் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த வீரர்களை பற்றி கூறும் போது ரொனால்டோவின் …

 8 total views

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

என் கவிதைகள்.., கவிதைகள், சுயம் /

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள். “வேண்டாம். புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை. நினைவின் சுழல் கொண்டவை. கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை. மீளவே முடியாத ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை. வேண்டாம்..” …

 55 total views

எப்போதும் என் அம்மா.

சுயம் /

இன்று கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் என் அம்மா கலந்து கொண்டதை பற்றி என் தம்பி மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தான். இந்த காட்சி எனக்கு புதிதல்ல. சிறுவயதில் இருந்து எனக்கு தோளுக்கு தோளாக மட்டுமல்ல , உயிராக இருப்பது எனது அம்மா தான். நோயால் பாதிக்கப்பட்ட என் பால்ய காலத்தில் என் அம்மா மட்டும்தான் எனது பால்யகால தோழி. காலில் கட்டு போட்டு அமர்ந்திருக்கும் என்னோடு என் அம்மா …

 52 total views

“சேயோன்” வெல்வான்.

சுயம் /

அவனை வாழ்த்த சென்று வாழ்த்தாக தெரிவித்தது ஒன்றே ஒன்றுதான்… “இதையாவது வணிகமாக மட்டும் செய். “ …. உண்மையில் அவன் பெற்றிருக்கின்ற பலவற்றை வணிகமாக்க மறுத்ததை நானே பலமுறை எதிர்த்து இருக்கிறேன். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டில் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் பெரும் வாய்ப்பினை, அறிவை வணிகமாக்க மறுத்து, வெளிநாட்டு வாழ்வு, பொருளாதார உயர்வு என பலவற்றை இழந்து விட்டு, சொந்த ஊரில் கடை திறக்கும் அவனைப் பார்த்தால் ஒரே நேரத்தில் கோபம் கொள்ளவும், ஆழமாக …

 62 total views

அண்ணன் சீமானுக்கு..

சுயம் /

என் அண்ணனுக்கு…எனக்கு அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. நம் உயிர் தலைவர் அவர்களின் உடல் கிடைத்து விட்டதாக கூறி சிங்களன் செய்தி வெளியிட்டு மகிழ்ந்த நாள். அந்த செய்தி கிடைத்த போது நான் ஒரு முச்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். எந்த திசையும் தெரியாமல்.நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் திசையற்றுப்போனதருணம் அது. எல்லா ஊர்களிலும் ஈழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த எண்ணற்ற இளைஞர்கள் கண்கலங்கி , ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தப் போதும் கூட …

 73 total views

என் அன்பு மகன் சிபிக்கு..

சுயம் /

19.03.2022 இரவு 12.01. எனது அன்பு மகன் சிபிக்கு.. துளித்துளியாய் நகரும் இந்த இரவில், கண்கள் முழுக்க நெகிழ்ச்சியோடு, உள்ளம் முழுக்க பேரன்போடு உனக்காக எழுதுகிறேன்.முதலில் உன்னை உச்சிமோர்ந்து கண் கலங்க முத்தமிடுகிறேன்.கலீல் ஜிப்ரான் சொல்வதுபோல நீ என்னில் இருந்து வந்தவன் தான். ஆனால் நீ நான் அல்ல. என் கனவுகளை உன் மீது சுமத்தி நான் வளர்க்கும் ஒட்டகமாய் உன்னை திரிய வைக்க நான் எப்போதும் விரும்பியதில்லை. உனது சுதந்திரத்தையும், உனது தேர்வுகளையும் நான் பெரிதும் …

 74 total views

Missed call..

சுயம் /

❤️ ❤️ அந்தப் பாடல் ஒரு கருணை என்றாய். மழை போல. இளவெயில் போல.‌ எப்போதாவது உணரத்தக்க மனநிலையில் ‌ காலத்துளியின் நழுவத் துடிக்கும் ஒரு இழையில் அனிச்சையாக சிக்கிக்கொண்ட அபூர்வம் போல அந்தப்பாடல் ஒரு கருணை என விழிகள் மூடி மெய்மறந்து நீ சொல்லும் அந்தக் கணத்தில்… நிச்சயமாக நீதான் அந்தக் கருணை என எனக்கு சொல்லத் தோன்றியது. ❤️ இப்போதும் எங்கேயாவது என்னையும் மீறி கேட்டு விடுகிற அந்த பாடல் விரைந்து செல்கிற நதிகுளிர்கால …

 63 total views

அப்பாவின் பிறந்தநாளில்..

சுயம் /

அப்பாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள்.எப்போதும் அவருக்கு பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாளாக தான் கடந்து போகும் ‌. இன்றும் அவர் அப்படித்தான் அதை அவர் எடுத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் நாட்களின் நகர்வு ஒன்று மட்டுமே மனிதனின் வாழ்நாள் அல்ல. அந்த நாட்களில் அவன் என்ன சாதித்து இருக்கிறான் என்பதே அவனது வாழ்நாள் என்கிறார். அவர் அப்படித்தான். இன்றளவும் தினந்தோறும் மூன்று மணிநேரங்கள் படிப்பதற்காக ஒதுக்குகிறார். நாம் தமிழர் காணொளிகள் அனைத்தையும் விடாமல் பார்த்து …

 75 total views