பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 10 of 11

சட்ட மாணவர்களின் மோதல்களும்: திமிறி எழும் சாதீய உணர்வுகளும்…

“உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்”
– புத்தர்
சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண்டதை ,அடித்ததை, அடி வாங்கியதை 50,002 முறையாக நம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு அதிர்வலைகளை குறையா வண்ணம் பேணிக் காப்பதில் மிகச் சிறந்த சேவைகளை (?) நமது ஊடகங்கள் வெற்றிக்கரமாக செய்து வருகின்றன.
இந்திய தொலைக்காட்சிகளில்…முதன் முறையாக..வீதிக்கு வந்த சில மணி நேரங்களே ஆன திரைப்படமாய் சட்டக் கல்லூரி மாணவர்களின் குழு சண்டையும் மாறிப்போனதுதான் உச்சக் கட்ட வேதனை. சட்டக்கல்லூரிகளில் இது போன்ற எண்ணற்ற குழு சண்டைகள் மாணவர்களிடையே நடந்திருக்கின்றன. இந்த சண்டை சமீபத்தில் நடந்த சண்டை. அவ்வளவுதான்.இதில் பரபரக்கவோ..பாய்ந்து தாக்கவோ எதுவுமே இல்லை. கிராமப் புற அரசுக் கல்லூரிகளில் இருப்பது போலவே சட்ட மாணவர்களுக்கு இடையிலும் சாதீயம் சார்ந்த அரசியல் வழக்கமான ஒன்று.நான் வசித்த கீழ தஞ்சை மாவட்டங்களில் அமைந்துள்ள அரசுக் கல்லூரிகளில் முக்குலத்தோர் என சொல்லப் படக்கூடிய கள்ளர்- அகமுடையார் என்ற இரு சாதியினருக்கு இடையேயே இதை தாண்டி கடுமையான சண்டைகள் நடந்திருக்கிறது. பல மாணவர்கள் இரு தரப்பிலும் தாக்கப் பட்டு இருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக ஊடக எழுச்சியும்,போட்டியும் எதையும் பரபரப்பாக்க வேண்டும் என்ற உணர்வும் ,மறைந்து கிடக்கும் பிழைப்பு அரசியலுமே இன்னும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அதிர்வுகளுக்கு காரணம்.சென்னை சட்டக் கல்லூரி விடுதியில் எப்போதும் மாணவர்களை தவிர வெளியாட்கள் அதிகம் பேர் வந்து தங்கி இருப்பார்கள். வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்காக தெற்கு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அடிதடி விருந்தினர்களுக்கு எப்போதுமே அடைக்கலம் தரும் இல்லமாய் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் விடுதி திகழும்.மேற்கண்ட விருந்தாளிகளின் தாக்கமும் ,நிழலும் மாணவர்களை மேலும் தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றன. மாணவர்கள் தங்களது சாதீய அடையாளங்களை உணர்ந்து குழுவாக பிரிவது பெரும்பாலும் முதல் ஆண்டில் இருந்தே துவங்கி விடும். அதற்கு மூத்த மாணவர்களின் உதவியும் , வழிக் காட்டுதல்களும் இருக்கும். பிறகு குழு குழுவாக சேர்ந்து போஸ்டர் அடிக்க துவங்குவார்கள். மாணவிகளும் மேற்கண்ட குழுக்களின் அடிப்படையிலேயே செயல் பட துவங்குவார்கள். ஒரு கல்லூரியில் எச்சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்கள் ஒரு குழுவாகவும், எஞ்சிய மாணவர்கள் மற்ற குழுக்களாகவும் பிரிவார்கள். கும்பகோணம் போன்ற பகுதிகளில் வன்னியர் இனத்தை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாகவும், எஞ்சிய மாணவர்கள் ஒரு குழுவாகவும் பிரிந்து இருப்பார்கள். சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்ததும் இது போன்ற பிரச்சனைதான். மாணவர்களுக்குள் எப்போது ,யாரால் சாதீயம் புகுந்தது,புகுத்தப் பட்டது என்பதெல்லாம் இந்த பிரச்சனையின் பின்புலமாக நாம் ஆராய வேண்டியவை. எல்லா கல்லூரிகளும் சாதியை மறுத்த மாணவர்கள் குறைந்த பட்சம் இருக்கவே செய்வார்கள்.இவர்கள் சிறுபான்மை குழுவின் ஆதரவாளர்களாக இருப்பார்கள்.
சாதீய மயமாக்கப் பட்ட கிராம வாழ்வின் எச்சமாய் கல்லூரி வாழ்க்கையும் மாற்றப் பட்டதன் துவக்கமே இந்த பிரச்சனைக்கான மூலமாக நாம் கொள்ளலாம். அதனால் தான் கிராமங்கள் அழிய வேண்டும் என்றார்கள் பெரியாரும், அம்பேத்காரும். சாதி ஒழிந்து விட்டது: இங்கு கீழோர்,மேலோர் இல்லை என மார் தட்டும் உன்னத சமூகத்தில் நாம் வசிக்கவில்லை என்பதனை முறையாக ஒப்புக் கொண்டு அல்லது ஒப்புக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு இந்த மாணவர்களின் பிரச்சனையை நாம் அணுகுவதுதான் நேர்மையானதாக இருக்கும்.இன்னும் உத்தபுரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
திண்ணியமும், வெண்மணியும்,பாப்பாபட்டி,கீரிபட்டி, நாட்டார் மங்கலம் ஆகியவையும் நம் தமிழகத்தில்தான் இருக்கின்றன. இன்னும் கோவை மாவட்டத்தில் இரட்டை குவளை முறை இருப்பதை நம் பெரியார் திராவிட கழக தோழமைகள் படம் பிடித்து காட்டினார்கள். மனிதரில் கீழோர்-மேலோர் இல்லை என்று உரத்த குரல் எழுப்பும் தோழமைகள் சமூகத்தில் வேரூன்றி போய் கிளைத்து நிற்கும் சாதீயம் இருப்பதை ஒத்துக் கொள்வதில் ஏதோ முரண் இருப்பதாகவே நான் உணர்கிறேன்.நாடெங்கும் நடக்கும் சாதீய கலவரங்களில் தலித் மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுவதும்,அம்பேத்கார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டும்,அகற்றப்பட்டும் வருவதும் தீவிர நிலையை மேலும் கவலைக்கிடமாக்கிறது. மாணவர்கள் தாக்கப் படுவது சாதீய ஒழிப்பிற்கான முதல் நிலை என்ற நிலைப்பாடு எப்படி ஆபத்தானதோ …தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் சாதீய செயல்பாடுகளை நியாயப் படுத்துவதும்,நாடெங்கும் தலித் மாணவர்களை தனிமைப் படுத்தி குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதும் ஆபத்தானதுதான். சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த பிரச்சனையை சாதீய வயப்படுத்தும் வேலைகளை நமது ஊடகப் பெருமக்களும், தமிழ் நல் உலகில் வாழ்ந்து வரும் அரசியல் தலைவர்களும் வெகு திறமையாக செய்து வருகின்றனர்.
இரத்த வாசனையை எப்போதும் மோப்பம் பிடித்து திரியும் மிருகமாய் ஊடகங்கள் மாறி வெகு காலமாகி விட்டது.பல்வேறு காரணிகளின் விளைவாய் எழுந்திருக்கும் ஒரு பிரச்சனையில் பொத்தாம் பொதுவாய் ஒரு நிலைப்பாடு எடுத்து குறை பேசி திரிவதும் சாதீயம் ஊடான செயலாகவே நாம் கருத வேண்டி உள்ளது. இது போன்ற களங்களில் முற்போக்காளர்கள் ,சாதி மறுப்பாளர்கள் என கருதும் தோழர்கள் முதலில் பிரச்சனைகளின் பல்வேறு கோணங்களை புரிந்துக் கொள்ளும் ,ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும். கல்வியியல் நிறுவனங்களில் சாதீய செயல்பாடுகளை மட்டுப் படுத்தும் விதமாக கல்வி முறைகள் மாற்றப் பட வேண்டும் .
டாக்டர் அம்பேத்காரும், தந்தை பெரியாரும் இன்னும் அளவுக்கதிமாக தேவைப்படும் காலமாக அமைந்து விட்ட சூழலில் முற்போக்காளர்கள் இது போன்ற பிரச்சனைகளை சாதீயம் சார்ந்த உணர்வுத் தளங்களில் அணுகாமல் அறிவுத் தளத்தில் அணுகி உண்மைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இரு பக்கமும் மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாக்கப் பட்டு இருக்கிறார்கள். இரு பக்கமும் நியாயப்படுத்தவே முடியாத தவறுகள் நடந்திருக்கின்றன. தாக்குதல் நடத்தும் அளவிற்கு தீவிரமாகி போன மாணவனின் மனநிலையும், அவன் ஏற்கனவே எதிர் கொண்ட இழிவுகளும் இந்த சமயத்தில் சமமான அக்கறையோடு ஆய்விற்கு உட்படுத்த படவேண்டும்.
மீண்டும் மாணவர்களிடையே இது போன்ற சாதீயம் சார்ந்த மோதல்கள் நிகழா வண்ணம் தமிழர் என்ற உணர்வுத்தளத்தில் மாணவர்களை இணைக்க வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாக நான் கருதுகிறேன்.அதற்கான புரிந்துணர்வு தளங்களை மாணவர்களிடையே ஏற்படுத்துவதில் சமூகத்தின் பங்கும் அதிகமாக இருக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளை தோழமைகள் தமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சாதீய மிருகத்தின் கழுத்தை நெறித்து கொல்லப்படுவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜெயமோகனின் தேர்வு -பகிர்வும்,பதிலும்…

http://jeyamohan.in/?p=488

எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட ‘தேர்வு’என்ற கட்டுரைக்கு
என் பகிர்வும் ,அதற்கான ஜெயமோகனின் பதிலும்….

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…

வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…
மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்…

உண்மைதான். எதற்கும் பதட்டப் பட்டு திரிவதன் விளைவு குழந்தைகளின் மீது சிறு அக்கறைக் கூட பாராட்ட முடியாத அவலத்திற்கு நாம் உள்ளாகி இருக்கிறோம்..

தங்கள் பதிவில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் கூடங்கள் குறித்த தங்கள் அவதானிப்பில் நான் முரண்பாடு கொள்கிறேன்..கல்வி என்பது எங்கோ மாய உலகில் மறைந்து கிடக்கும் அதிசயமாய் மறைத்து வைக்கப் பட்டிருந்த காலத்தில் …ஊரின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த சேரிகளில் வெண்ணிற ஆடைகளோடு நுழைந்து கல்வி அளித்து, சுகாதாரம் போதித்து, மருத்துவம் தந்தது பாதிரிமார்கள்தான்.அவர்களுடைய நோக்கம் தங்கள் மதத்தை பரப்ப சேவையை கருவியாக பயன்படுத்துவதாக இருக்கலாம்..அதனாலென்ன…எந்த மதம் இறந்தால் என்ன..? எந்த மதம் பிறந்தாலென்ன..?

சூத்திரன் நாவிற்குள் பைபிளால் சரஸ்வதி அமர்ந்ததுதான் அதில் நடந்த நன்மை..

மற்ற படி அஜிதன் எதிர்கொண்ட சிக்கலான வாழ்வியல் முரண்கள் -எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது..எந்த ஆசிரியரும் மாணவனை மனிதனாகக் கூட நினைப்பதில்லை..அவர்களுக்கு தங்கள் பணி குறித்து இருக்க வேண்டிய நியாயமான அக்கறை இல்லை..அடித்தால்…அவமதித்தால் தரையில் கிடப்பதைக் கூட மாணவன் தலையில் ஏற்றி வைத்துக் கொள்வான் என்று நினைத்துக் கொள்வார்கள் போல..

தங்களுடைய பதிவு எனக்கு சமீபத்தில் வெளிவந்த அமீர்கானின் தாரே ஜமீன் தார் என்ற திரைப் படத்தை நினைவுப் படுத்தியது…

நம் நாட்டு குழந்தைகளுக்கான கல்வி முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும் என்பதான தங்களுடைய அக்கறையில் நானும் பங்கேற்கிறேன்….

எனது 4 வயது மகனை என் மனைவி பள்ளிக்கு அனுப்பும் போது போர்க் களத்திற்கு செல்லும் மான் போல தயார்ப் படுத்தி அனுப்பவது எனக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும் செயலாகவே தெரிகிறது.ஏனென்றால் அவன் டாக்டராகணுமாம்…சொல்லி சொல்லி வளர்க்கிறாள் என் மனைவி.
என் குழந்தை ஒரு டாக்டராகவோ, ஒரு பொறியாளராகவோ ஆக்க எனக்கு துளி கூட விருப்பமில்லை என என் மனைவியுடன் சண்டை போட்டு இருக்கிறேன்..

பிறகு என்னதாண்டா அவனை செய்ய போற..? என்று கோபமாய் கேட்ட என் தந்தையை பார்த்து அவனுக்கு சினிமா பிடித்திருக்கிறது..அதனால அவன நடிகனாக்கப் போறேன் என்று வெறுப்பாய் பேசி விட்டு வந்திருக்கிறேன்…

என்ன உலகம் இது…

ஒழுங்கமைவுகள் என்பதன் பேரில் குழந்தைகள் மீது அறிவிக்கப் படாத ஒரு யுத்தத்தையே ஏற்படுத்தி இருக்கிறது இந்த கல்வியும் சமூகமும்…

இங்கு எந்த குழந்தைக்கும் ஓடி ஆட அனுமதி இல்லை…காலில் இறுக்கிக் கட்டிய காலணிகளோடு…கழுத்தில் இறுக்கும் டைகளோடு..பொங்கி வழியும் புத்தகங்களோடு ..வானுயர்ந்த மதில்களை உடைய கல்விக் கூடம் என்ற சிறையில் அடைக்க அவர்களை அழைத்து போக போலீஸ் வேன் போல ஒரு வேன்…

எல்லாக் குழந்தைகளின் உதடுகளிலும் புன்னகை இறந்து கிடக்கிறது…

ஏதாவது செய்து …இந்த குழந்தைகளின் மகிழ்வை,பால்யத்தை மீட்டே ஆக வேண்டும்….

என் துயரத்திற்கான ஆறுதல்- அஜிதனின் வெற்றியும், மதிப்பெண்ணும்…

அந்த வகையில் எளிமையாய் படித்து, வலிமையாய் தேர்ந்த அஜிதனுக்கு என் வாழ்த்துக்களும் …பாரட்டுகளும்….

தங்கள் ..
மணி.செந்தில்குமார்,
வழக்கறிஞர்.
கும்பகோணம்.

இந்த கடிதத்திற்கு திரு.ஜெயமோகனின் பதில்:

அன்புள்ள மணி செந்தில் அவர்களுக்கு,
நாம் நம் குழந்தைகளை ‘வளர்க்க’ முடியாது. அவர்களுடன் சிலவற்றை பகிர்துகொள்ள மட்டுமே முடியும். நாம் அவர்களை பொருட்படுத்தி , அவர்களின் உற்சாகமானதும் நம்பிக்கை நிறைந்ததுமான உலகை சிதைக்காமல் அதே உற்சாகத்துடன் ஈடுபட்டுச் சொலும் எதையும் வர்கள் கேட்பார்கள் என்றுதான் நான் எண்ணிகிறேன். இன்னொருவரின் கனவை வாழும்படி ஒருவரை நிர்பந்திப்பது கொடுமையானது.
தங்கள் கடிதம் கண்டேன். ஒரே வகையான அனுபவங்கள் வழியாக கடந்து சென்றுகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இப்போது கடிதங்கள் வழியாக உருவாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதில் எப்படி நுண் உணர்வுகளை அவித்து விட்டு போட்டி உலகின் சவால்களை எதிர்கொள்வதெ என்பதே அது. ஒரு சமன்பாட்டைக் கண்டுகொள்கிறவர்களே ஏதாவது சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள். போட்டி உலகை மாற்றுவதென்பது உடனடியாக நம் கையில் இல்லை. ஆனால் இந்த சமரசம் வலியும் வதையும் கூடியதாக இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியமானதக இருக்கிறது. அதற்கு அடிபப்டையில் இலக்குக்காக எதையும் செய்யும் நோக்கை சற்றே விலக்கி அன்பின் அடிப்படையில் நம் குழந்தைகலுடன் உரையாட முனைந்தாலே போதும் . நான் எந்த கொள்கைகளையும் இது சார்ந்து முன்வைக்க மாட்டேன், குழந்தைகளுடன் உரையாடுங்கள் என்பதைத் தவிர

ஜெயமோகன்

தோழர்களே….
குழந்தைகளின் கல்வியும் ,அதனைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிக்கலாகி வருகின்றன..
நம் நாட்டு கல்வி அமைப்பையும், அதனைச் சார்ந்த நிறுவனக் கோட்பாடுகளையும் நாம் மறுபரீசிலனை செய்து தீர வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்…

எம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை…

மே 18…

காலை 10.30 மணி அளவில் கலை விமர்சகர் தேனுகா அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு…இன்று எம்.வி.வி அவர்களின் பிறந்தநாள்….அவர் வீட்டிற்கு சென்று மரியாதை செய்து விட்டு வருவோமா என்று அவருக்கே உரித்தான மென்மையான குரலில் கேட்டார்…

தேனுகாவிற்கு என்று சிறப்பான குணங்கள் பல உண்டு…. இலக்கிய மரபுகளை….சிற்ப தொன்மத்தை ..நவீன ஒவிய கலையின் உச்சத்தை அரசியல் கலப்பின்றி தெளிவாக அறிந்த அவருக்கு …உள்ள முக்கிய குணம்..இலக்கியவாதிகளை உள்ளன்போடு போற்றுவது…
அவருடைய அழைப்பில் நானும் நெகிழ்ந்து தான் போனேன்…இருக்காதா பின்னே…..

எம்.வி.வி என்று அழைக்கப் பட்ட எம்.வி .வெங்கட்ராம் என்ற அந்த எழுத்தாளரின் வீச்சை நானும் உள்வாங்கி இருக்கிறேன்…அவருடைய காதுகள் என்ற நாவல் என் பல நாள் தூக்கத்தை திருடி இருக்கிறது…வேள்வி தீயும் ,அரும்பும் என்னை மிகவும் ஏற்கனவே பாதித்து இருக்கின்றன….அவருடைய வியாசர் படைத்த பெண்மணிகள் –மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்கள் குறித்த மீள்புனைவு..ஒரு பெண் போராடுகிறாள் என்ற மிகப் பெரிய நாவலும் வாசிக்க வேண்டிய ஒன்றுதான்…காதுகள் நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது…குழந்தைகளுக்காக பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்ட நாட்டுக்குழைத்த நல்லவர்கள் என்ற தொகுதியில் பல புத்தகங்களை மிக எளிமையாக ,தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பதிவு செய்ததும் எம்.வி.விதான்.

எம்.வி.வி கும்பகோணத்தில் அறுபதுகளில் முகிழ்ந்த இலக்கிய விருட்சங்களில் மிக முக்கியமானவர்.தி.ஜானகிராமன்.,கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி,கு.பா.ரா என்று கும்பகோணம் பல பெருமைகளின் உச்சத்தை எட்டியுள்ளது…தி.ஜானகிராமனின் புகழ் பெற்ற நாவலான மோகமுள்ளில் எம்.வி.வி ஒரு கதாபாத்திரமாகவே வருவார்..

எம்.வி.வியும் சரி…அவர்களது நண்பர்களும் சரி..தேர்ந்த கலாரசிகர்கள்..பெண்களை மிகவும் அசலாக பதிவு செய்தவர்கள்….கொந்தளிக்கும் காமமும்..குமுறும் வாழ்க்கை முரண்களுமே அவர்களின் கதைகளுக்கான அடிநாதமாக விளங்கின…

குறிப்பாக எம்.வி.வியின் காதுகள் தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்று…காதுக்குள் சதா கேட்டுக் கொண்டிருக்கும் உரையாடல்களையும்…அதை சார்ந்த கனவு வயப் பட்ட மனநிலையையும் விவரிக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப் பட்ட உளவியல் சார்ந்த நாவல்களில் சிறப்பானது…எம்.வி.வியின் சுயம்தான் இந்த நாவல் என்ற தகவலும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று…

எம்.வி.வி தன் எளிய கதாபாத்திரங்கள் மூலம் விவரிக்க இயலா உணர்வுகளை தன் கதைகளில் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்…பெரும்பாலும் கும்பகோணத்தில் வாழும் செளராஷ்டிரா மக்களின் வாழ்க்கையை தன் கதைகளின் களமாக வைத்துக் கொண்டு எழுதிய எம்.வி.வி, வாழுங்காலத்தில் எவ்வித இலக்கிய அரசியலுக்கும் சிக்காதவர்…

எம்.வி.வியின் எழுத்துக்கள் பின்னிரவின் மழை போல அதிகம் அறியப் படாதவை..அற்புதம் மிக்கவை…

அவரின் கதைகள் மனிதனின் ரகசிய வேட்கைகளை போகிற போக்கில் அழகாகவும், நேர்த்தியாகவும் பதிவு செய்கின்றன…அதனால் தான் எம்.வி.வி நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளராக என்றும் இருக்கிறார்…அவருடைய பல கதைகளை என் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வாசித்து வந்திருக்கிறேன்…ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அவருடைய கதைகள் ஒவ்வொரு அர்த்தத்தை கற்பிப்பது எனக்கு புரிபடாத ஆச்சர்யமாக இருக்கிறது…அவருடைய எழுத்தில் உக்கிரம் இல்லை…மாறாக யாரோ ஒருவர் நம் அருகே அமர்ந்து மென்மையான குரலில் ,நம் தோளில் கைப் போட்டவாறே ,நமது ரகசிய ஆசைகளை சற்றே கூச்ச தொனியில் சொல்வது போன்ற வகையில் அமைந்திருக்கும்.

எனவே தான் தேனுகா அழைத்த போது நான் மிக உவகையுடன் சம்மதித்தேன்….கும்பகோணம் கோபால் ராவ் நூலகத்தில் இருந்து தேனுகா என்னை மற்றும் சில நண்பர்களை தோப்பு தெருவில் இருக்கும் எம்.வி.வி வீட்டிற்கு அழைத்து சென்றார்….

வெயில் மழை போல அமைதியாக , அதே சமயம் உக்கிரமாக பெய்து கொண்டிருந்தது…தோப்புத் தெருவில் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திய தேனுகா எங்களையும் அங்கேயே வண்டியை நிறுத்த சொன்னார்…

சாலையில் சிறுவர்கள் கோடை வெயிலை போர்த்திக் கொண்டு வியர்க்க ,வியர்க்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்…அந்த வீட்டின் மும் நாங்கள் கூடியதை கண்டவுடன் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ பிரச்சனை போல ஆர்வமாக எட்டி பார்த்தனர்…

பழமையான வீடு…வீட்டின் முகப்பில் பெரிய நாமம் இடப் பட்டு இருந்தது…சற்று உயரம் குறைவான திண்ணை…பல இலக்கிய மேதைகளை தன் மடியில் இருத்திக் கொண்ட அந்த திண்ணை புழுதி படர்ந்து கிடந்தது..நான் ஆசையாய் அதில் உட்கார்ந்து கொண்டேன்…இங்குதான் எம்.வி.வியும் ,தி.ஜாவும் அமர்ந்து மோகமுள்ளின் யமுனாவை பற்றி பேசி இருப்பார்களோ…?
வீட்டின் கதவு சற்று லேசாக திறந்திருந்தது…வீட்டில் வறுமை தெரிந்தது.செளராஷ்டிரா இனத்து மக்களுக்கு உரித்தான பாணியில் கட்டப் பட்ட வீடு..வீட்டின் நடுவில் உள்ள முற்றத்தில் வெயில் தனிமையாய் இறங்கிக் கொண்டிருந்தது.தேனுகா உள்ளே இருந்து யாரையோ அழைத்தார்…கைலி கட்டிய வாறு ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வீட்டினுள் இருந்து வெளியே வந்தார்.வாங்க…வாங்க ..உற்சாகமாக அழைத்த அவரை தேனுகா எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்…அவர் எம்.வி.வியின் மகன்.எங்களுடன் கூச்சத்துடன் கைக்குலுக்கினார்…பிறகு தேனுகா நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என்ற விபரத்தை அவருக்கு தெரிவித்தார்…

மறைந்த…அதிகம் புகழ் பெறாத …அமைதியான ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்ய போன எங்களை அவர் மிகவும் ஆச்சர்யமாகவும் ,வியப்பாகவும் பார்த்தார்…தன் வீட்டிற்கு முன்னால் கூடிய இச்சிறு கூட்டம் தன் தந்தையின் எழுத்துகளின் மீதுள்ள காதலினால் வந்துள்ளது என்பது அவருக்கு பெருமையாக இருந்தது,,,,

நான் அவரின் நடுங்கிய கைகளை பிடித்துக் கொண்டு….நாங்கள் உங்கள் தந்தையின் ரசிகர்கள்…மாபெரும் எழுத்தாளர் அவர் என்று நான் சொன்னவுடன் கூச்சத்துடன் நன்றி என்றார் அவர்…வந்திருந்த நண்பர்களும் தத்தம் கருத்துகளை பதிவு செய்தனர்…அனைவரின் நினைவுகளிலும் எம்.வி.வியின் எழுத்துக்கள் பசுமையாக ஒளிர்ந்தன….

நாம் எல்லோரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் என்று தேனுகா சொன்னவுடன் இருங்க ..நான் உள்ளே போய் வேட்டி கட்டிகிட்டு வந்திர்றேன் என்று ஓடினார் எங்கள் மாபெரும் எழுத்தாளரின் மகன்….

வரும் போது அவர் எம்.வி.வி எழுதி விருது பெற்ற காதுகள் நாவலையும்…வேள்வி தீ நாவலையும் எடுத்து வந்தார்…நான் அதை உடனே ஆசையாய் வாங்கிப் பார்த்தேன்…நாவலின் உள்ளே முதல் பக்கத்தில் எம்.வி.வியின் கையெப்பம் பச்சை வண்ண மையில் மங்கி இருந்தது…எம்.வி.வி தன் எழுத்துக்களை தானே வாசித்த புத்தகம் அது என்பதால் எனக்கு அது சற்று பெருமிதமாகவும் இருந்தது….

நாங்கள் மிகவும் மகிழ்வுடனும் ,நெகிழ்ச்சியுடனும் கூடியிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை தெருவே வேடிக்கை பார்த்தது.பிறகு வீட்டிற்கு அருகே இருந்த இடிந்த பழமையான ஒரு கோவிலுக்கும் அழைத்துச் சென்றார் தேனுகா…மாலை வேளைகளில் எம்.வி.வி அந்த கோவிலின் படிக்கட்டிகளில் அமர்ந்திருப்பாராம்…அங்கேயும் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்……. நாம் இன்னொரு முக்கிய இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது என்று தேனுகா சொன்னார்..நாங்கள் மீண்டும் எங்களின் அன்பினையும், மரியாதையினையும் அந்த மாபெரும் எழுத்தாளனின் மகனுக்கு தெரிவித்து விட்டு….நாங்கள் தேனுகா வழியில் சென்றோம்.

கும்பகோணத்தின் குறுகலான பல தெருக்களில் எங்களின் இரு சக்கர பயணம் நீண்டது…
இறுதியாக நாங்கள் வந்து சேர்ந்தது கும்பகோணத்தின் ராமசாமி கோவிலுக்கு…நேரம் நடுப் பகலை கடந்து விட்டு இருந்ததால் கோவிலின் கதவு அடைக்கப் பட்டிருந்தது…ஒரு சிறிய நுழைவாயில் மட்டுமே திறந்திருந்தது..அதன் முன் நின்ற வாட்ச் மேனிடம்..தேனுகா உள்ளே செல்ல அனுமதிக் கேட்டார்…சன்னதி எல்லாம் முடியாச்சே…என்று சொன்ன வாட்ச் மேனிடம் …நாங்க சாமி கும்பிட வர்ல…இங்கு அதிகமாக வந்து போன ஒருத்தவரின் நினைவுக்காக வந்திருக்கிறோம்…கொஞ்சநேரம் முன் பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டு போயிடுறோம்…என்று சொன்ன தேனுகாவை வாட்ச்மேன் தயக்கத்துடன் உள்ளே அனுமதித்தார்…

வெளியே வெயிலின் உக்கிரம் கோவிலுக்குள் தெரியவில்லை.அற்புதமான பல சிற்பங்கள் நிறைந்த கோவில் அது..தேனுகா அனைத்தையும் உற்சாகமாக விளக்கியபடி வந்தார்..கோவிலின் இடது புறத்தில் இருந்த ஒரு மேடையில் அனைவரும் அமர்ந்தோம்..அங்குதான் எம்.வி.வியும் ,தேனுகாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களாம்..எம்.வி.வி.க்கு மிகவும் பிடித்த இடமாக ராமசாமி கோவில் இருந்திருக்கிறது….

அங்கு உட்கார்ந்து மீண்டும் எம்.வி.வியை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்…எம்.வி.வியும் எங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு எங்கள் அனைவருக்குமே தோன்றியது…

நம் தமிழ் சமூகத்தில் எம்.வி.வி போன்ற எளிமையான ,அதே சமயம் அசலான பல இலக்கிய மேதைகள் வாழ்ந்திருக்கின்றனர்..எழுதுவதும்…அதில் இன்பம் துகிப்பதுமான ஒரு மனநிலையில் தன் படைப்புத் தளத்தில் பல சாகசங்களை எவ்வித விளம்பரமும் இன்றி நிகழ்த்தி இருக்கின்றனர்…மனிதனை மிக அருகில் நின்று …ஒரு சிற்பத்தை செதுக்குவது போல ..அணுஅணுவாய் தங்கள் படைப்பு உலகை அவர்கள் சிருஷ்டித்துள்ளனர்…..

ஆனால் அவர்களிடம் விளம்பரம் இல்லை…விருதுகள் கூட அதிகமில்லை…வருமானம் இல்லை..அதற்கான வழிகளை அமைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை…படிப்பதும்…
எழுதுவதுமே அவர்களின் பணியாக இருந்திருக்கிறது…எளிய மனிதர்களாய் பிறந்து…எளிய மனிதர்களாய் இறந்தும் போய் இருக்கின்ற மாமேதைகள் அவர்கள்…

தான் வாழுங்காலத்தில் புகழப் படுவதும் ,போற்றப் படுவதும் நிகழ்வது இலக்கியவாதிகளை பொறுத்த வரையில் ஒரு கனவுதான்..மேடையில் வைத்து இலக்கிய செம்மல்,வேந்தர் என்றெல்லாம் பட்டம் பெற்ற எழுத்தாளரின் வாழ்க்கை விழா முடிந்து ,விழா நடத்தியவர்கள் காரினில் சென்று விட … வீட்டிற்கு திரும்பி செல்ல காசில்லாமல் டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து..நடத்துனரிடம் கெட்ட வார்த்தை திட்டு வாங்கி…அலுப்புடன் கதவை திறக்கும் மனைவியிடம் சலிப்பு வாங்கி…அப்பா என்ன வாங்கி வந்திருப்பார் என்ற ஆவலில் பார்த்த குழந்தைகளின் பார்வையில் வெறுமையை வாங்கி….வறுமையில் வீழ்ந்து கிடப்பதுதான் பெரும்பாலான நடை முறையாக இருக்கிறது…

இலக்கிய வாதிகளின் வீட்டை…அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்களை வைத்து அருங்காட்சியமாக வைத்து போற்றுகின்றன மேலை நாடுகள்…
ஆனால் நம் நாட்டிலோ …….

எழுத்துக்கும்,எழுத்தாளனுக்கும் மதிப்பில்லை….

சிந்தனையோடு நாங்கள் பிரிந்தோம்…

வெளியே வெயில் தளராமல் தாக்கிக் கொண்டிருந்தது…
வேக வேகமாக வீட்டிற்கு வந்து..அம்மாவிடம் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக் குடித்தேன்….
வயிறு குளுமையாக ஆனது….

எம்.வி.வி எழுத்தும்…கோடைக்காலத்து குடிநீர் போலத்தான்…
வறண்ட வாழ்க்கையில்…உணர்வின் இருப்பை நினைவுப் படுத்துகின்றன அவை….

இளையராஜா-தமிழ் மண்ணின் இசை……

வணக்கம் தோழர்களே….
சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது…

இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த மாமேதை எப்படி மற்ற இசை வல்லுனர்களை விட தனித்து நிற்கிறார் என்பதற்காகவும் ,அவரின் தனித்துவமான இசைக் கூறுகள் எப்படிப்பட்ட உச்சங்களை தொடுகின்றன என்பதை நான் உணர்ந்தவைகளை உங்களிடத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டவன் என்பதற்காகவும் இந்த இக் கட்டுரையை எழுதுகிறேன்..

தமிழ்சினிமாவின் ஆரம்ப கால இசைக் கூறுகள் மேட்டிமைத் தனம் வாய்ந்த ,கர்நாடக இசை அறிவு உடைய மேலோருக்கும் உடையதாக இருந்தது என்பதும்,நாடகத்தின் நவீன வடிவமாய் சினிமா தோன்றியதால் இசை என்ற அம்சம் முழுக்க நாடகத் தன்மை நிறைந்ததாக விளங்கியது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை…

சினிமா என்ற அம்சம் மெல்ல மெல்ல பாமர மனிதர்களை ஈர்க்க துவங்கியதன் விளைவுகள் திரையசையிலும் எதிரொலிக்க துவங்கியது..

தமிழ்த்திரையுலகில்சி.ஆர்.சுப்பாராமன்(தேவதாஸ்),
எஸ்.வி.வெங்கட்ராமன்(மீரா),எஸ்.ராஜேஸ்வரராவ்(மிஸ்ஸியம்மா),
கண்டசாலா(பாதாளபைரவி,மாயாபஜார்),ஜி.ராமநாதன் (ஹரிதாஸ்,உத்தம புத்திரன்,அம்பிகாபதி) போன்ற இசைமேதைகள் மின்னத் துவங்கினர்.

திருவிளையாடல் ,வசந்தமாளிகை போன்ற படங்களுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன் அவர்களும் திரையிசையில் மறக்க இயலாத உச்சத்தை தொட்டவர்தான்.
1957-ல் மாலையிட்ட மங்கை படத்தில் அறிமுகமான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் –ராமமூர்த்தி என்ற இரட்டையர் தமிழ் திரையிசையின் போக்குகளை மாற்றத் துவங்கினர்.பாமர மக்களும் ,எளிய மக்களும் திரை இசை சுகத்தை அனுபவிக்க துவங்கினர்.
மெல்லிசை மன்னர்கள்,ஏ.எம்.ராஜா,போன்றோர் திரையிசையின் திரைக் கட்டுகளை மெதுவாய் நெகிழ்த்தி அதை சாதாரண மக்களின் உணர்வு தளத்திற்கு கடத்தினர்….மக்கள் திரையிசையை தன் சாதாரண வாழ்க்கையின் மறுக்க முடியாத அம்சமாய் வரையறுத்துக் கொண்டதும் இந்த காலக் கட்டதில்தான்…

தமிழ் திரையுலகில் பாபி,குர்பானி,சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட இந்தி திரையிசையின் தாக்கம் மிகுதியாக இருந்த காலக் கட்டத்தில் ,நவ நாகரீக தூதுவர்கள் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள துடித்த இளைஞர்களின் உதட்டில் இந்திப் பாடல்களே உட்காரத் துவங்கியது.
அந்த நேரத்தில்தான் அன்னக் கிளி படம் மூலம் ஒரு குக்கிராமத்தில் இருந்து,தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் பிறந்து,கருத்த நிறத்தில்,சினிமா உலகிற்கென வகுக்கப் பட்ட எந்த ஒரு இலக்கணத்திற்கும் உட்படாத ,
சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள் ஏதும் அறியாத,எளிய மக்களின் அடையாளமாய் நுழைந்த இளையராஜாவின் பிரவேசம் நடந்தது.

இளையராஜாவின் இசை துவக்கம் முதலே மனித உணர்வின் தளத்தின் ஊடே நுழையும் வித்தையை தெரிந்துவைத்திருந்தது தான் இன்றளவும் எனக்குள்ள ஆச்சர்யம்.
முதல் பாடல் அன்னக் கிளியே உன்னை தேடுதே என்ற பாடலில் அவர் நம் தமிழ் மண்ணுக்கே உரிய நாட்டுப் புறத்தன்மையும்,வளைவும் நெளிவும் நிறைந்த புல்லாங்குழல் இசையோடு கூடிய ,ஒரு கிராமத்து வாழ்வியலை நினைவுக் கூறும் ,மெல்லிய மேற்கத்திய இசை வடிவங்களின் அடிப்படையோடு கலந்த புதுமையான இசையை வழங்கினார்…

கோரஸ் என்ற கூட்டுப் பாடல் உத்தியை மிகவும் அழகாக தன் பெரும்பாலான பாடல்களில் கையாளுகின்ற இளையராஜா அதற்கென பாடலோடு இழைகின்ற சின்னச் சின்ன உத்திகளால் அந்தப் பாடலை ஒரு அழகான கவிதையாய் மலர்த்துவதில் தனித் திறமை கொண்டவராக இருக்கிறார்..

இளையராஜாவின் ஆரம்பகால படங்களான , சிட்டுக்குருவி,கவிக்குயில் பத்ரகாளி போன்ற பாடங்களில் தனக்கேரிய தனி முத்திரை எதுவென தேர்ந்தெடுக்க இளையராஜாவிற்கு எந்த ஒரு குழப்பமும் இருந்ததில்லை.

கவிக்குயில் என்ற திரைப் படத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் இன்றும் கவனித் தக்க இசையை கொண்டிருக்கிறது…அந்தப் பாடல் முழுக்க நீரோடை போன்ற ஒட்டத்தை கொண்டது…குறிப்பாக அந்த பாடலை பெண் குரலில் கேட்கும் போது …முதலில் அதிர்ச்சி அம்சத்துடன் துவங்கும் சோக உணர்வை ஏற்படுத்தும் வயலின் இசையையும், இனிய புல்லாங்குழல் குரலோடு,பனி இரவில் பெளர்ணமி நிலவில் தனியாய் ஒடும் ஒற்றை நீரோடை காண்பதில் உள்ள சுகத்தை ஏற்படுத்தும்.

அதே போல சிட்டுக்குருவி என்ற படத்தில் வரும் என் கண்மணி என்று துவங்கும் பாடல் மிகவும் வித்தியாசமான முயற்சி..இரட்டை குரலோடு ஒலித்தாலும், அந்த குரல்களின் இடைவெளி தூரத்தை இளையராஜா வகுத்திருக்கும் தன்மை பிரமிக்க வைக்கக் கூடியது. அந்த பாடலின் ஊடே பேருந்து பயணச் சுவடுகளை விதைத்து அந்த பாடலை அழகானதாக ,அபூர்வமான ஒன்றாக வடிவமைத்து இருப்பார் ராஜா.

சக்களத்தி படத்தில் வாடை வாட்டுது என்ற பாடல் இரவின் தனிமையும்,தன்னிரக்கத்தையும் நம்மிடையே விதைக்க வல்லது.
இதே போன்ற பாடல்தான் மலைக்கிராமத்தின் இரவினைப் பற்றிப் பேசும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் உச்சி வகுந்தெடுத்து என்ற பாடல்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் சிறு பொன்மணி துவங்கும் பாடல் சரணமும் ,பல்லவியும் நீண்ட தொடர்களாக அமையும் வண்ணம் அமைத்திருப்பது புதுமை.இதே உத்தியை அவர் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வரும் கண்மணியே …காதல் என்பது என்ற பாடலிலும் ,கேளடி கண்மணி படத்தில் மண்ணில் இந்த ..என்ற பாடலிலும் ,புதிய வார்ப்புகள் படத்தில் தம் தன தம் தன தாளம் வரும் என்ற பாடலிலும் பயன்படுத்தி இருப்பார்.

நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற ஒரு பாடலுக்காகவே தனிக் கட்டுரை எழுதலாம்…இசைக் கலவையின் உச்சம் அது.ஜென்ஸி என்ற மயக்கும் குரல் உடைய பாடகி தன்னால் முடிந்த அளவிற்கு அந்த பாடலை கிளாசிக் என்ற வகையில் சேர்த்திருப்பார்…
இதே போன்ற பாடல்தான் கரும்பு வில் திரைப்படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மதராஜன்..என்ற பாடல் மற்றும் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…..என்ற பாடல்களும்…

அதே போல் உதிரிப் பூக்கள் படத்தில் கேட்கும் போதெல்லாம் நம்மை உள்ளுக்குள் கலங்க வைக்கும் அழகிய கண்ணே என்ற பாடலின் தனித்துவத்தை உணர்ந்து காட்சியமைப்பில் கவிதையாக்கி இருப்பார் மகேந்திரன்…தாயின் வாசனையையும், தனிமையின் துயரத்தையும் அந்த பாடல் இன்றளவும் கசிய விட்டுக் கொண்டிருக்கிறது.இதே போன்ற மற்றொரு பாடல் மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே…என்ற பாடல்.

அலை அலையாய் துவங்கும் 16 வயதினிலே திரைப்பட பாடல் செந்தூரப் பூவே என்ற பாடலில் நாட்டுப் புற இசை வடிவங்களை கொண்டு பருவத்தின் கனவுகளை மெல்லிய சோகத்துடன் வடிவமைத்து இருப்பார்….

மெல்லிய ராகமாய் ,ஒரு பூ அவிழ்வது போல உச்சத்தை எட்டும் மற்றொரு பாடல் ஜானி திரைப்படத்தில் காற்றில் எந்தன் கீதம் என்ற பாடல்…அதில் முதல் முதல் பல்லவிக்கு முன்னர் சேர்க்கப் பட்டிருக்கும் இசைக் கோர்வை மிகவும் பிரசித்தமானது. அதே படத்தில் வரும் மற்றொருப் பாடலான என் வானிலே என்ற பாடலும் மிகவும் நல்ல உணர்வுகளை நம்மில் எழுப்பக் கூடியது.

ஜாஸ் வகை பாடல்கள் என்ற வரிசையில் ஒலிக்கும் சிவப்பு ரோஜாக்கள் பாடலான இந்த மின்மினிக்கு …என்ற பாடலில் துவக்கத்தில் மற்றும் நடுவில் வரும் பெண்ணின் கோரஸ் குரல் கேட்க மிகவும் சுவாரசிய தன்மையை உடையது.விக்ரம் படத் தலைப்பு பாடலான விக்ரம் என்ற பாடலில் வரும் பெண்களின் கோரஸ் குரல் கோர்வைகளும் இத்தகையதே…

காதலாகட்டும், காமம் ஆகட்டும் ,கோபம் ஆகட்டும், விரக்தி ஆகட்டும் இளையராஜா மனித உணர்வுகளை இசை மொழியாக வகுக்கும் விதமே அலாதி.அவரின் மிகுதியான உற்சாகத்தை வழங்கக் கூடிய பாடல்களிலும் மாலை இருட்டினை பேசும் தனிமையான சோக உணர்வினை வழங்கக்கூடிய இசையினை மெலிதாக கசிய விட்டிருப்பார்.

(தொடர்ந்து எழுதுவேன்…)

நாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.

தோழர்களே…..

வணிக மயமாக மாறிப்போன நம் நாட்டின் திரைப்படத் துறையை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் மாற்றுச் சிந்தனைகளை, திரைப்படங்கள் குறித்த நேர்மறையான எண்ணங்களை சமூகத் தளத்தில் உண்டாக்க திரைப்பட இயக்கங்களின் இயக்கம் நாளது தேதியில் அவசியமாக உள்ளது.

உலக சினிமாக்கள் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இடம் பிடிக்க துவங்கி விட்ட இந்த சூழலில் திரைப்படம் என்ற அரிய பொருளை வெறும் பொழுதுபோக்கிற்கானது என்று உணரும் அபாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது..
மக்களை அசலாக பிரதிபலிக்கக் கூடிய திரைப் படங்களை காணுவதும்,அவை குறித்த எதிர்வினைகளை சமூகத் தளத்தில் ஆரோக்கிய சூழலில் ஏற்படுத்திட திரைப்பட இயக்கம் என்ற குழுவின் செயல்பாடு அவசியமானது.

குறும்படங்கள் ,மாற்று சிந்தனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படைப்பிற்கு துரோகம் இழைக்காமல் சித்தரிக்கின்ற படங்கள் ஆகியவைகளை முன்னிறுத்த வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.ஏதோ ஒரு வகையில் உண்மையான திரைமொழியை நிகழ்த்தத் துடிக்கும் படைப்பாளிகளை கெளரவப் படுத்துவதும் இதில் அடங்கும்.

இதைத் தான் என் தோழர்கள் கோவையில் நாய்வால் திரைப்பட இயக்கம் மூலம் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கோவையில் செயல்பட்டு வரும் நாய்வால் திரைப்பட இயக்கம் மாற்றுப் படங்கள் மற்றும் குறும் படங்கள் ஆகியவை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமில்லாமல் அவற்றை சார்ந்து இயங்கும் படைப்பாளிகளை முன்னிலைப் படுத்தியும் வருகிறது….அத்தி பூத்தாற் போல் நல்ல திரைமொழியை உள்ளடக்கமாக கொண்டுவரும் திரைப்படங்கள் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைத்து,அதன் படைப்பாளிகளை பாராட்டி வரும் நாய்வால் திரைப்பட இயக்கத்தின் பணி மகத்துவமானது.

தோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில்வாணன் மற்றும் தோழர்கள் நடத்தி வரும் நாய்வால் திரைப் பட இயக்கம் நாளை கோவையில் நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளது…நடிகர் சத்யராஜ்..,எழுத்தாளர் மணா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.தோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில் வாணன் ஆகியோர் தன் தெளிந்த சிந்தனைத் திறத்தால், ஊக்கம் மிக்க செயல்பாட்டால் நாய்வால் திரைப்பட இயக்கத்தை மிளிரச் செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் புகழ்ப் பெற்ற எழுத்தாளுமை, நம் சகா..நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் பெருமைமிகு தோழமை ….தோழர் பாமரனின் சிறப்புரையும் உண்டு…
நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சக இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கம் தனது அளப்பரிய செயல்பாடுகளால் திரைப்படங்கள் குறித்த மாற்றுச் சிந்தனைகளை முன் வைத்து வருகின்ற இந்த பெருமை மிகு சூழலில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் தனது சகோதர இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கத்தை பெருமையுடன் பாராட்டுகிறது..

தோழர் யுவனின் அழைப்பும்,.தோழர் ஜெயக்குமாரின் அழைப்பும் என்னைப் பொறுத்தவரையில் விலை மதிக்க முடியாதவை….அவர்களை நோக்கி என் தவறுதலுக்கான வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
என் சார்பாக தோழர் யுவனின் பங்கேற்பும் ,செயல்பாடும் சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மேற்கண்ட விழாவில் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் தோழர்.யுவன் பிரபாகரன்..,தம்பிகள் தமிழ்,நாசர் மற்றும் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் கோவை உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்… தம்பி இளவரசன் இறுதி நேரத்தில் எப்படியாவது சென்றுவிடுவதாக கூறியுள்ளான்.
தேர்வு வகுப்பு காரணமாய் என்னாலும் ,பணிப் பளு காரணமாய் தோழர் சசியாலும் கலந்துக் கொள்ள முடியவில்லை.. கடல் கடந்து இருக்கும் தோழர்கள் உமாசங்கர்,தயாள் ஆகியோரும் பணி காரணமாய் தலைநகரில் இருக்கும் தோழி விக்னெஷ்வரி..படப்பிடிப்பில் இருக்கும் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார் ஆகியோரும் இதில் அடக்கம்.

இருந்தாலும் எம் நினைவுகள் விழா சிறக்க வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
வாழ்த்துக்கள்.

உலகத் தமிழ் மக்கள் அரங்கம்
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக…

மணி.செந்தில்குமார்

சிலைகள் குறித்தான பார்வையும்..பதிவும்…

சிலைகள் உருவாக்கப் படுவதன் தத்துவமும்,நோக்கமும்,வரலாறும் கண்டிப்பாக ஆராயத் தக்கவை…

சிலைகளின் தோற்றம் என்பது இறந்த மனிதனை மீள் புனைவு மூலம் அவரது நினைவை சாத்தியமாக்கும் தன்மையே ஆகும்….கிறிஸ்து பிறப்பதற்கு முன் சிலைகள் ஏற்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது…சிறு சிறு சிலை போன்ற வடிவங்களை சிந்துவெளி அகழ்வாரச்சியின் போதே கண்டெடுக்கப் பட்டுள்ளது…

எனவே சிலையின் தோற்றம் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது அல்ல…

சிலைகள் தேவையா என்பது அந்தந்த மக்களின் சமூக ,அரசியல் வரலாற்றிக்கு உட்பட்டதாகும்…சிலைகள் உருவாக்குவது என்பது எதிர்காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஆளுமை குறித்தான செய்தியை நிரந்தரமாக விட்டுச் செல்லும் எண்ணத்தின் பாற் சார்ந்தது…

தந்தை பெரியார்,, அண்ணல் அம்பேத்கார் ஆகியோரின் சிலைகள் நிறுவப் படுதலை ஆதரிப்பதும் இவ்வகையை சார்ந்தது…பறவைகள் சிலைகள் மீது மட்டுமா அசிங்கம் செய்கின்றன…?

பறவைகளுக்கு சிலை,மனிதன் என்றெல்லாம் பேதமில்லை..நாம் துடைத்துக் கொள்கிறோம்..சிலைகளை மழை குளிப்பாட்டுகிறது. அவ்வளவே…

ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் மீதும் தான் பறவைகள் அசிங்கம் செய்கின்றன,,,,காக்கைகளுக்கு தெரியுமா…மனிதன் கண்டுபிடித்த கடவுளின் அரசியல்…?

ஒடுக்கப்பட்ட,விளிம்பு நிலை மக்களுக்கு போராடிய, மொழி ,இன உணர்விற்கு வித்திட்ட ,மக்களை சமூக தாழ்விநிலையில் இருந்து உயர்த்த துடித்திட்ட தலைவர்களுக்கு சிலை வைப்பது….கோவில் கட்டுவதை விட புனிதமான காரியம் ஆகும்.

காலச்சுவட்டின் நவீன கதாகாலட்சேபம்…

அ.மார்க்ஸ் குறித்து காலச்சுவடு நவம்பர் 07 மாத இதழில் வெந்து தணியும் அவதூறுகள் என்ற தலைப்பில் வெளிவந்த பழித்தூற்றலுக்கு எதிர்வினையாக இந்த விவாதத்தை துவக்குகிறேன்…
காலச்சுவடு கண்ணன் எதிர்பார்த்தது போலவே ஞாநிக்கு ஆதரவாக களமிறங்கி போராட துவங்கி உள்ளார்…இதில் ஆச்சர்யப்படவோ, அச்சப் படவோ ஏதுமில்லை என்றாலும் கண்ணன் இந்த முறை அளவுக்கதிகமாக கொந்தளிப்பது நடக்கும் சர்ச்சையை சுவாரசியமாக்கிக் காட்ட உதவுமே தவிர வேறு ஒன்று மில்லை…
தலித் மற்றும் சிறுபான்மை, விளிம்பு நிலை இலக்கிய பக்கங்களில் அ.மார்க்ஸ் அவர்களுக்கு தனியே ஒரு இடம் உண்டு…பெளத்த,சமண ஆய்வுகள் மூலம் இந்துத்துவாவின் தோலுறித்த அ.மார்க்ஸ்க்கு காலச்சுவடு கண்ணன் மூலம் எதிர்ப்பு வந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்…..
ஞாநியும்,கண்ணனும் அமைந்திருக்கும் சாதிக் கூட்டணி இந்த முறை அ.மார்க்ஸை தாக்க அமைந்துள்ளது…..பார்ப்பனச் சார்பு தன்மையில் காலச்சுவட்டின் முகமுடி கிழிந்து தொங்குவது குறித்து கண்ணனுக்கு திடீரென்று ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது…..ஏற்கனவே சங்கராச்சாரி கைது சம்பவத்தின் போது எழுத்தாளர்கள் இதில் எதிர்வினை புரிய வேண்டும் என மறைந்த சுந்தர ராமசாமி கருத்து தெரிவித்தப் போதே நான் தீராநதியில் எழுதிய எதிர்வினையில் இது போன்ற சாதாரண கைது நிகழ்வை சுந்தர ராமசாமி தனக்கே உரிய குறுக்கு வழியில் பரபரப்பாக்க முயல்கிறார் என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
காலச்சுவடு இந்த முறை அ.மார்க்ஸை தாக்கியுள்ளதை அ.மார்க்ஸ் என்ற தனிநபர் மீது நடந்த தாக்குதலாக நாம் கருத இயலாது. ஞாநியின் விஷம் தோய்ந்த கட்டுரை குறித்து எதிர்வினைகள் செய்த உலக தமிழ் மக்கள் அரங்கம் உறுப்பினர்கள் மற்றும் இணைய பக்கங்களில் எழுதி தன் எதிர்ப்பை பதிவு செய்த தோழர்கள், தமிழ் நாடு முழுதும் கண்டன கூட்டங்கள் நடத்திய தமிழ் படைப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி சேர்த்து மொழிப் பற்றாளர்கள் அனைவரின் மீதும் காலச்சுவடு நடத்திய தாக்குதலாக இதை நாம் நினைக்கிறோம்…
ஞாநி மீது ரத்தபாசம் கண்ணனுக்கு வர என்ன காரணம் என்பதை நான் இங்கே விளக்கத் தேவை இல்லை.ஆனால் அதே கட்டுரையில் ஞாநி எழுதியது தவறு தான் கண்ணனே ஒத்துக் கொள்கிறார்…..அப்புறம் எதற்கு வருகிறது கோபம் என்ற கேள்விக்கு யாரும் அளிக்கலாம் விடையை…
வக்கிரம் பிடித்து, தான் என்ன எழுதுகிறோம் என்று நன்கு தெரிந்து தன்னுடைய விஷம் தோய்ந்த எழுத்துக்களால் தமிழர்களையும் ,அவர்களது பிரத்யோக ஆளுமைகளையும் தாக்கி வரும் ஞாநி குறித்து நாம் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை ஞாநி தி ரைட்டர் என்ற ஞாநியின் ரசிகர்கள் நடத்தி வரும் ஆர்குட் குழுமத்தில் முன் வைத்தோம்…ஞாநியின் எழுத்துகளில் தெரியும் ஆரிய மனம் என்று துவங்கும் அந்த விவாதத்தில் ஞாநியே நேரடியாக கலந்து கொண்டு விவாதித்து ,பிறகு ஒதுங்கிக் கொண்டார்…அந்த விவாத்தின் போது நமது உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகிகள் சசி,யுவன்பிரபாகரன், பிரபாகரன், தமிழ் மற்றும் பிரின்ஸ் பெரியார், விடாது கருப்பு போன்ற தோழர்கள் என்னோடு இணைந்து அந்த விவாதத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர்…..அந்த விவாதத்தில் பார்ப்பன மோசடியை, உள்ளுக்குள் அர்த்தம் புதைத்து எழுதும் மாய்மாலத்தை நம் தோழர்கள் இணைந்து அம்பலப் படுத்தினோம்…அதனால் அந்த விவாதம் அடங்கிய பத்தியே ஞாநி தி ரைட்டர் குழும நிர்வாகிகளால் நீக்கப்பட்ட்து..ஆனால் நான் அந்த விவாதத்தை முழுக்க சேகரித்து என்னுடைய வலைப்பூவான வெண்ணிற இரவுகளில் வெளியிட்டுள்ளேன்..
நம் உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகி சசி மேற்கண்ட விவாதத்தை சமூக களத்திற்கு எடுத்து சென்று அந்த விவாதத்தை ஒரு சிறிய நூலாக்கி பாவலர் அறிவுமதி அண்ணனிடம் அளிக்க அந்த தொகுப்பைதான் அ.மார்க்ஸ் கலந்துக் கொண்ட காலச்சுவடு கண்ணன் குறிப்பிட்டுள்ள ஞாநி கண்டன கூட்டத்தில் அண்ணன் அறிவுமதி வாசித்தார்….
அந்த கூட்டத்தில் பேசியவர்கள் அனைவருமே ஞாநியின் மோசடித்தனத்தையும், பார்ப்பனர்கள் எழுத்துலகிலும், இலக்கிய அரங்கங்களிலும் செய்து வரும் மாய தந்திர பொய் பித்தலாட்ட வேலைகளை சுட்டிக்காட்டி பேசினர்….உடனே கண்ணனுக்கு வந்து விட்டது கண் மண் தெரியாத கோபம்…அ.மார்க்ஸ் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை முன் வைத்துள்ள கண்ணன் அவரது கல்லூரி ஆசிரியர் பணி குறித்தும்,.தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும் மிக தவறான தகவல்களை, பொய் பரப்பும் நோக்கத்தோடு புனைந்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
அரசு ஊழியர் போராட்டத்தின் போது மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து பணியில் இணைந்தாக அ.மார்க்ஸ் மீது இமாலய குற்றச்சாட்டு சுமத்தி இருக்கும் புரட்சியாளர் காலச்சுவடு கண்ணன் எத்தனை முறை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது அவருக்கும் ,ஞாநிக்கும் தெரிந்த ரகசியங்கள்..
அது இருக்கட்டும்….அ.மார்க்ஸ் கையெப்பமிட்டது மன்னிப்பு கடிதம் அல்ல….தொழிற்சங்கங்கள் அரசு ஊழியர்களுக்காக பொதுவாக வனைந்த விளக்க கடிதம்….அது அ.மார்க்ஸ் தயாரித்தது அல்ல…வேலைநீக்கம் செய்யப் பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்காக தொழிற்சங்கங்கள் தயாரித்து அளித்தவை…….நான் கேள்விப்பட்ட வகையில் அ.மார்க்ஸ் போர்க்குணம் மிக்க தொழிற்சங்க வாதி என்பதை இங்கே பதிவு செய்கிறேன்..அது மட்டுமில்லாது தலித் மற்றும் விளிம்பு நிலை இன மாணவர்களுக்கான போராட்டங்களில்,தன் முனைப்பை காட்டியவர் அ.மார்க்ஸ் என்பதை கண்ணன் அறிந்தும் அறியாமல் இருப்பது உண்மையை ஊருக்கு மறைக்கும் செயல்…
இதே கட்டுரையில் டாக்டர் அம்பேத்காருக்கும், தந்தை பெரியாருக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுவதாக உளறிக் கொட்டி குழப்பி இருக்கிறார் கண்ணன்..அதாவது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என சர்வ கவனமாக யோசிக்கும் பார்ப்பன மூளை தான் வாழ்வதற்கான போராட்டத்திற்காக எதையும் செய்ய வல்லது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் இருக்க முடியும்..?
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் இருவருமே பார்ப்பனன் வகுத்த சாதி நிலைகளை தகர்த்து மனிதன் மனிதனாக நடத்தப் பட வேண்டும் என்று போராடியவர்கள்…. ஏற்கனவே இதே போலத் தான் அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் ஒப்பிட்டு நமது கடும் எதிர்ப்பை ஞாநி சந்தித்தார் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்….
ஒரு வேளை தோழர்.ரவிக்குமாருக்கும், அ.மார்க்ஸ்க்கும் பிரச்சனைகள் இருப்பின் –அதற்கான தீர்வுகளையும் அவர்களே ஏற்படுத்திக் கொண்டு பார்ப்பன சாதி நிலைகளை தகர்க்கும் வேலையில் இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது…
அது குறித்து கண்ணன் கவலைப் பட ஏதுமில்லை…சிண்டு முடிவதை இந்த நூற்றாண்டிலாவது விடுங்கோ கண்ணன்….
சர்ச்சையை ஊதி பெரிதாக்கும் வேலையை கண்ணன் செய்து வருவதை சம்பந்தப் பட்ட இருவரும் இனி புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு….ஞாநியின் பார்ப்பன மனோபாவத்தை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என குமுறும் காலச்சுவடு கண்ணன் கலைஞரை தரக் குறைவாக , வக்கிரமாக விவரித்து , அவரது முதுமையை வஞ்ச புகழ்ச்சி அணி தோற்றத்தில் எள்ளி நகையாடியதை ஆதரிக்கிறாரா..?
ஞாநி எழுதிய சர்ச்சை மிகுந்த அக் கட்டுரை வெளி வந்த காலக் கட்டம் சேது சமுத்திர திட்ட சர்ச்சையில் கலைஞர் உண்மையான உணர்வை வெளிப் படுத்தியதன் மூலம் இந்துத்துவ, பார்ப்பன சக்திகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பை சந்தித்து கொலை மிரட்டலுக்கு உள்ளான காலம்…
அந்த வக்கிர கட்டுரைக்கு வேறு என்ன நியாயமான காரணங்கள் இருக்க முடியும் ஞாநிக்கு..?
மேலும் அதே கட்டுரையில் தலித்களின் தலைவராக பெரியாரை காண முடியாது என கண்ணன் கதறுகிறார்…அது சரி…நாளை முதல் தலித்துகள் சங்கராச்சாரியை வழிபட வேண்டும் என்று கண்ணன் நினைப்பதெல்லாம் நடைபெற அவரது கனவுலகில் தான் சாத்தியம்….
திருவாளர் கண்ணன் அவர்களே….
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்….பெரியார், அம்பேத்கார் போன்றவை உங்களுக்கு எதிரான, உங்கள் கருத்தியல்களுக்கு எதிரான ஆளுமைகள்……அவற்றில் ஏற்படும் சரிவுகளையும், சங்கடங்களையும் நாங்கள் சரி செய்து கொள்கிறோம்…..நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சங்கர மடத்திற்கு காவடி தூக்குவதை யாரும் தடுக்கப் போவதில்லை..
மறைந்த சுந்தர ராமசாமி அவர்களை அ.மார்க்ஸ் உயர்சாதி அகங்காரம் மிகுந்த மேட்டிமை தனம் உடைய ஆளுமை என விமர்சித்தது அடக்கவியலா வெறுப்புணர்வு என்றால், பெரியாரையும், அம்பேத்காரையும் சிண்டு முடிந்து ஆதாயம் தேட முயல்வது என்ன உணர்வு..?

பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இடையே வேறுபாடுகளை பெரிதாக்கி ஆனந்த சிரிப்பை உதிர்க்க துணியும் எண்ணம் எத்தகையது..?
சொல்லுங்கள் கண்ணன்…
பண்டைய வாழ்வியல் வரலாற்றுகளையே உங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதி அதை எங்களை பள்ளிகளில் படிக்க வைத்து சாதி என்னும் சமூகக் கேட்டு படிமத்தை எங்களுள் பதித்த இனமாயிற்றே உங்கள் இனம்..?
இதில் ரவிக்குமாரும், அ.மார்க்ஸும் எம் மாத்திரம்..?
தோழர்களே…
காலச்சுவடு கண்ணன் எழுதியுள்ள அ.மார்க்ஸ் குறித்த அக் கட்டுரை அவதூறு நிரம்பிய ஆத்திரக் கூச்சல்….ஆனால் இவர்கள் ஆத்திரம் பெரியாரை பின்பற்றும் நமக்கு ஒரு சிறிய புன்சிரிப்பையே உதிர்க்க வைக்கிறது…..
ஆனால்….
அதே சமயத்தில் காலச்சுவடு கண்ணனின் கட்டுரைக்காக நம் கண்டனத்தை தெரிவிப்பதும் நம் கடமை….
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை ஒன்றுடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்…..
“ஆடுகின்றாய் உலகப்பா..யோசித்துப் பார்…
ஆர்ப்பாட்டக்கார ர் இதை ஒப்பாரப்பா….
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்…
செகத்தப்பன் யோசித்து சித்தம் சோர்ந்தான்,,,,
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஒர் நொடிக்குள்
ஓடப்பர்,உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய் விடுவார் உணரப்பா…நீ..”
நன்றி…

Page 10 of 11

Powered by WordPress & Theme by Anders Norén