மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

என் கவிதைகள்.., கவிதைகள், சுயம் /

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள். “வேண்டாம். புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை. நினைவின் சுழல் கொண்டவை. கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை. மீளவே முடியாத ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை. வேண்டாம்..” …

 41 total views

நியாயத்தின் கதை.

என் கவிதைகள்.., கவிதைகள் /

நியாயம் என்ற வினாவின் ஓசை நடுநிசியில் மூடப்படாத குடிநீர் பைப்பு போல சரித்திரத்தின் வீதிகளிலே சொட்டி கொண்டே இருக்கிறது. எது நியாயம் என்பதற்கு அவரவருக்கு ஒரு தர்க்கம். ஆளாளுக்கு ஒரு கதை. வரையறையற்ற சுதந்திரத்துடன் அவரவர்‌ விழிகளில் படுகிற காட்சியாய், இலக்கற்ற ஓவியமாய், அலைந்துக் கொண்டே இருக்கும் சீரற்ற சிதறலாய் நியாயம். எந்த திசையில் நியாயம் உறைகிறது என்று எவருக்குமே தெரியாது. ஏனெனில் நியாயம் திசைகளை அழித்து அவரவருக்கு ஒரு திசையை பிரசவிக்கிறது. நியாயத்தை பற்றி எழுதி …

 35 total views

வழி தொலைத்த கதவு.

கவிதைகள் /

உனக்கும்எனக்கும் நடுவேகைப்பிடி இல்லாஒரு கதவு. அடிக்கடிகதவுபூட்டப்பட்டிருப்பதைநாம் இருவருமேஉறுதி செய்துகொள்கிறோம். இருபுறமும்பூட்டப்பட்ட பூட்டுக்களின்உறுதியைஅடிக்கடிஇழுத்துப்பார்த்துபரிசோதிக்கிறோம். என் சாவி உன்னிடமும்,உன் சாவி என்னிடமும்,இருப்பதுநன்றாக தெரிந்தும்தொலையாத சாவியைதொலைத்து விட்டதாகதேடிக் கொண்டிருக்கிறோம். கதவு முழுக்கதுளை போட முயன்றதழும்புகள். குளிர்காலபின்மாலையில்கதவின் இடுக்கில் இருந்துசெந்நிற வெளிச்சம்கசிவதை அச்சத்துடன்பார்க்கிறேன். பாசிப்படர்ந்தஅந்தக் கதவின் மேல்நீலக்கடல்ஒன்றின் படம்வரையப்பட்டு இருக்கிறது. உடலில்கருஞ்சிவப்புக்கோடுகளோடுஒரு வெள்ளை மீன்அதில் நீந்துவது போலஎன்னைபார்த்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக மறுபுறத்தில்இதே போலஇன்னொரு மீனும்உன்னையும்பார்த்துக் கொண்டிருக்க கூடும். நள்ளிரவின் திடுக்கிடலில்பின் கழுத்து வியர்க்கநான் விழித்துப் பார்த்த போதுஅந்த மீன் என்னை பார்த்து இமைத்ததாக தோன்றியது. …

 48 total views

நானறிந்த எதிரிக்கு..

கவிதைகள் /

நானறிந்தத எதிரிக்கு நானறிந்த எதிரிக்கு நாசூக்காக சொல்வது என்னவென்றால்.. நள்ளிரவு நடுக்கடலில் மெல்ல அசைந்து கொண்டிருக்கும் தனிமை படகு நான். உன் புறக்கணிப்பின் பாடல் என்னை ஒன்றும் செய்யாது. என் வானத்தில் நீ அந்தி வரைய முயற்சிக்காதே. பல இரவுகளையும் சில சூரிய சந்திரர்களையும் ஒரு வேனிற் காலத்தையும் குளிர் ஊதற் காற்றையும் என் உள்ளங்கையில் மறைத்து வைத்திருக்கிறேன். சட்டென அவைகளில் ஏதேனும் ஒன்றை அருகே இருக்கும் ஏரியில் வீசி எனக்கான பருவத்தை நானே உருவாக்குவேன். கால …

 47 total views

நினைவின் விரல்கள்.

கவிதைகள் /

கால அடுக்கு நழுவிய அந்த நொடியில் தான் என் நினைவின் விரல்கள் அந்த கதவின் மீது பட்டன. வெண்மையும் வெம்மையும் கசிந்துக்கொண்டிருந்த அந்த கதவிடுக்கின் வழியே கண்ட போது நீல நிறத்தில் மலர்ந்த செம்பருத்தி சாயலில் அந்த பாடல் எனக்காக காத்துக் கொண்டிருந்தது. துளித்துளியாய் திறந்த கதவிற்கு பின் பனித்துளி தூவிய பசுங் கொடி மேவிய அந்த வெள்ளைச்சுவர் இருந்தது. அங்கே இருந்த அலங்கார பீடத்தில் வைக்கப்பட்டிருந்த சுழலும் இசைத்தட்டில் இருந்து எழும்பிய மெல்லிய புகைச்சுருளின் ஊடே …

 52 total views

கழுத்தில் சொருகப்பட்ட கத்தியின் கருணை.

கவிதைகள் /

…அடை மழை இரவில் காற்றின் பேரோசைப்பொழுதில் படபடவென அடித்துக்கொண்ட ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அந்த நீல விளக்கு ஒளிர்ந்த மாடி அறையின் மையத்தில் நீ நின்று கொண்டிருந்தாய். தலை குனிந்த வாறே நீ நின்றிருந்த கோலம் எனக்கு மிஷ்கின் படத்து நாயகனை நினைவூட்டியது. உறுதியான கால்களுடன் அங்கிருந்து நகரப் போவதில்லை என்ற தீர்மானத்துடன் நீ நின்று இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் பேச எதுவும் இல்லை. ஆனால் என் நடு மார்பில் பாய்ச்சுவதற்கான அம்புகளாய் …

 67 total views

அல்லாஹு அக்பர்

என் கவிதைகள்.., கவிதைகள் /

நீ என்னைஆக்கிரமிப்பதற்காகவும்,கட்டுப்படுத்துவதற்காகவும்வீசும் ஆயுதங்களைகம்பீரமானஎனது கலகக் குரல் மூலமாகஅடித்து நொறுக்குவேன். நான்விடுதலையின் காற்று.எதிர்ப்பின் ஏகாந்தம்.உன் கட்டுபாட்டுக்கம்பி வேலிக்குள்அடங்கி விடமாட்டேன். ஓங்கி ஒலிக்கும்எனது முழக்கம்என்னைப்போலவே,உன்னை எதிர்த்துப்போராடி உன்னால்உயிரோடுகொளுத்தப்பட்டஎனது முன்னோரின்சாம்பலிலிருந்துகிளர்ந்து எழுந்தது. நான் யாராக இருக்க வேண்டும் என்பதைநான் தீர்மானிப்பதை விடநீ தீர்மானிக்கக் கூடாதுஎன்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் யார் என்பதைநீ தீர்மானித்துவைத்திருக்கும்எல்லா வரையறைசட்டகங்களையும்கிழித்து எறிவேன். எனது உடைஉன் அதிகாரபாசிச உச்சங்களின்உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால்அதை நான் ரசித்துஅணிவேன். எனது பண்பாட்டின்,எனது வழிபாட்டின்,கற்றைப் புள்ளிகளைஉன்கைப்பிடி அதிகாரத்தால்ஒற்றைப் புள்ளியாகவரைய துடிக்கும்உனது வரலாற்றுவன்மத்தைஎகிறி …

 71 total views

அன்பே சகலமும்..

கவிதைகள் /

இறுதியில்அனைத்திலும்இழந்து இருப்பதும்,பெற்றிருப்பதும்,ஒன்றே ஒன்று தான்.. அதைவிடசுகமானதும்கொடுமையானதும்வெவ்வேறில்லை. அதுதான்கோரப்படும்வரமாகவும்விதிக்கப்படும்சாபமாகவும்திகழ்கிறது. அதுவேதண்டனையாகவும்பிரார்த்தனையாகவும்இருக்கிறது. அதுவேவாழ்வின்அர்த்தமுமாகஅபத்தமுமாகவாய்க்கப்பட்டிருக்கிறது. அதுதான்சாத்தானின்விலக்கப்பட்ட கனி.அதுதான்தேவனின்கருணை மிகுந்தஉதிரம். இறுதியாகஅனைத்திலும்மிஞ்சியதும்எஞ்சியதுமாகஅதனது பாடலேகேட்கக் கிடைக்கிறது. ஆதி அந்தம்அதுதான். அன்பே சகலமும். ♥️  566 total views

 566 total views

இரவின் சிறகுகள்

கவிதைகள் /

நிரந்தர பிரிவொன்றின் அடையாளமாக நாங்கள் புனைவேறிய திட்டமிட்ட புன்னகையோடு கைக்குலுக்கி கொண்டோம்.. இருவருமே இயல்பாக இருப்பதாக அவரவருக்கு உணர்த்திக் கொள்வதில் பெரிதாக ஒன்றும் சிரமமில்லை. எல்லா கணக்குகளும் தீர்த்தாகிவிட்டது. இறுதியாய் இருந்த புன்சிரிப்பைக் கூட உதிர்த்தாகிவிட்டது. திரும்பி பார்க்கவே இயலாத ஒரு பாதையில் திசைகள் அமைக்க எங்கள் திசைக்காட்டிகளை கூட திருப்பி வைத்தாகி விட்டது. அவள் வெகு தூரம் போன பிறகு தான் நான் மெதுவாக உணர்ந்தேன். ஒரு குழந்தையின் அழுகைப் போல எங்களின் சில இரவுகள் …

 534 total views

விடைபெறுதலின் நம்பிக்கை.

கவிதைகள் /

    திரும்ப வரப் போவதே இல்லாத ஒரு நாளில் சந்திக்க வருவதாக சொல்லி விட்டு சென்று இருக்கிறாய்.. அன்றைய நாளில் மழை பெய்யும் என்றாய். நீலக் கலர் சட்டையும் கருப்பு ஜீன்ஸீம் அணிந்து வா என்றாய். இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டே காத்திரு என்று சிரித்துக் கொண்டே சொன்னாய். நா உலரும் தருணங்களில் தேநீர் குடித்துக் கொள் என்றாய்… காத்திருக்கும் தருணங்களில் யாரையும் வேடிக்கை பார்க்காதே.. தப்பாக நினைப்பார்கள் என்றாய். மிகவும் காலதாமதம் ஆனால் பசியோடு இருக்காதே. …

 495 total views