மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

காணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.

திரை மொழி /

  வாழ்வென்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப வரைந்து கொள்ளும் ஓவியமா அல்லது எதிர்பாரா மின்மையையே சூட்சமமாக கொண்டு எதனாலோ கிறுக்கப்படும் கிறுக்கல் தான் வாழ்க்கையா.. என்று நினைக்கும்போது இரண்டும் தான் என நினைக்கத் தோன்றுகிறது. இந்த வாழ்வு என்பது நிரந்தரம்.. ஒரு பாதுகாக்கப்பட்ட பெட்டியில் நாமும் நமது குடும்பத்தினரும் பத்திரமாக இருக்கிறோம் என்றெல்லாம் பலர் நினைத்துக் கொண்டிருப்பதால் தான்.. சின்னஞ்சிறு விதியின் பிசகில் கூட மானிட வாழ்வு பலருக்கு நரகமாகி விடுகிறது. ஆனாலும் மாற்றி எழுதப்பட்ட ஒரு …

 707 total views

மேற்குத் தொடர்ச்சி மலை- யதார்த்த அழகியலின் திரைமொழி.

திரை மொழி /

    ஒரு நாள் இலக்கிய நணபர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு வந்தது. அப்போது என் பக்கத்தில் இருந்த ஒரு மூத்த எழுத்தாளர் வெகு சாதாரணமாக விடுதலைப் புலிகளிடம் இருந்த பணத்திற்கு ஏதேனும் ஒரு தீவை விலைக்கு வாங்கி கொண்டு தங்களுடன் வரும் மக்களோடு அங்கே சென்று ஒரு நாட்டை கட்டியிருக்கலாமே என்று கேட்டார். கேள்வி மிக எளிதுதான். அவர் என்னிடம் கேட்க விரும்பியது ஏன் அதே நிலத்தை தக்கவைக்க பிடிவாதமாக உயிரை …

 593 total views

மரணம்- தீராத் துயர் நீங்க சிறுபுன்னகை..

திரை மொழி /

    எப்போதும் என் இரவுகளில் தனிமை தகர வாளியின் மீது சொட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகள் போல அமைதியற்றது. விரிந்த வானில் தனித்து பறக்கும் ஒரு பறவை போல ஆழ் தனிமையை என் இரவுகள் போற்றுகின்றன. கண் மூடி அமைதிக் கொண்டிருக்கிற இமைகளுக்குள் அமர்ந்து தனிமை வயலின் வாசிப்பதை என் இரவுகள் உணர்ந்திருக்கின்றன. ஆதி வனத்தின் விடியற்காலைப் பொழுதைப் போல களங்கமற்ற தனிமையைத் தான் மரணமும், பிறப்பும் சதா நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. ஒரு சிறு புன்னகை, இடது …

 1,338 total views

சமீப மலையாளத் திரைப்படங்கள் -எளிமையின் அழகியல்.

திரை மொழி /

சமீப கால மலையாளத் திரைப்படங்களின் தரமும், திரைக்கதை அடவுகளும் நம்மைப் பொறாமைப்படுத்துகின்றன. ( நன்றி : துருவன் செல்வமணி, packiyarasan se) சமீப காலமாக வரிசையாக பல மலையாளப்படங்களை கண்டு வருதலில் நான் உணர்ந்தது மலையாளப்படங்கள் கொண்டுள்ள எளிமை.   இன்னமும் தன் பண்பாட்டு விழுமியங்களை தனது திரைமொழி மூலமாக ஆவணப்படுத்துகிற மலையாளிகளின் கவனம் பிரமிக்கத்தக்கது. புதியவர்களின் வருகையால் மலையாள திரையுலகம் புத்துணர்ச்சி அடைந்ததுள்ளது. துல்கர் சல்மான், நிவின் பாலி , பஹத் பாசில், சாவித்திரி என …

 1,444 total views

ஷிண்டர்ஸ் லிஸ்ட்(1993 )- இன அழிப்பின் வலி நிறைந்த திரைமொழி

திரை மொழி /

  உலக வரலாற்றில் மாபெரும் மனித அழிவு காட்சியாக 1939-45 வருடக் காலங்களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நம் கண் முன்னால் தோன்றுகிறது . மனித குலத்தில் 3 ல் ஒரு பங்கு உயிர்களை பலிவாங்கிய இரண்டாம் உலகப் போர் மனித மனங்களில் நிகழ்த்தி இருக்கிற உளவியல் மாற்றங்கள் மிக முக்கியமானவை. மனித குலத்தின் பாற் நேசமும், சமநீதியும் போதிக்கிற கம்யூனிச கொள்கைகளின் பாற் உலகம் தழுவிய ஈர்ப்பும், எழுச்சியும் இரண்டாம் உலகப் போரின் அழிவிற்கு …

 1,255 total views

லிங்கா..  கலைந்த கனவும்,மாறி வரும் இரசனைகளும்.

திரை மொழி /

                   உச்ச நட்சத்திரங்கள் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழகத்தில் நாம் தரிசிக்கும் அதே மாறா காட்சிதான்.  மழைக்காலங்களில் மின்னிடுகிற சுடு வெயில் பொழுதொன்றில்.. அத் திரையரங்கின் முன் திரண்டியிருக்கிற ரசிகர் கூட்டம் கத்திக் கொண்டிருக்கிறது. திடீரென்று கையில் பால்பாக்கெட்டுகளோடு நாலைந்து பேர் ’தலைவா’ என கத்திக் கொண்டு ஒடி வருகிறார்கள். “சர சர” வென்று அந்த கட் அவுட் மூங்கில்களில் ஏறி தங்களது தலைவர் முகத்தில் …

 939 total views

கண்களால் எழுதிய கலைஞன் –பாலுமகேந்திரா.

திரை மொழி /

                     அது ஒரு பாடல் காட்சி.  கதாநாயகனும்,கதாநாயகியும் ஊட்டியின் மெல்லிய குளிரை அனுபவித்தவாறே ஏரிக்கரையில் பேசிய படி நடந்து செல்வார்கள். பின்ணணியில் இளையராஜாவின் மெல்லிய செவ்வியல் இசை கசிந்துக் கொண்டிருக்கும். மலரே மலரே ..உல்லாசம் என தொடங்கும் அப்பாடல் (http://www.youtube.com/watch?v=BG8n2RRvDxU ) இடம் பெற்ற திரைப்படம் ரஜினிகாந்த்,மாதவி நடித்த மறைந்த மாமேதை பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான உன் கண்ணில் நீர் வழிந்தால் .   …

 1,169 total views

பச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.

திரை மொழி /

ஒரு மனிதனை அவனது சகல விதமான நிறை குறைகளோடு திரையில் தரிசிக்கும் அனுபவம் தான் பச்சை என்கிற காத்து. ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் என்பவன் விண்ணில் முளைத்து மண்ணில் கிளம்பிய அதிசயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சமூக வெளியில் நாம் சாலையில் கடக்கும் போது இயல்பாக சந்திக்க நேரிடும் ஒரு மனிதன் தான் இந்த ‘பச்சை என்கிற காத்து ‘. சற்றே தெனாவட்டோட்டு சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு சாலையில் திரியும் கதாநாயகன் இப்படத்திலும் …

 806 total views

கொலவெறி பாடல்- யாழ் தமிழர்களின் அதிரடி எதிர்ப்பு.

திரை மொழி /

உலக மகா புகழ் அடைந்ததாக பீற்றிக் கொள்ளப்படும் ‘கொலவெறி’ பாடலின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து யாழ் தமிழர்கள் நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல். வாழ்த்துக்கள் உறவுகளே.. நீங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும். 8 கோடி இருந்தும் எம் உணர்வற்ற நிலை உணர்ந்து தலைகுனியும் -தாயகத் தமிழன்.  983 total views

 983 total views

கொலவெறி பாடல்- யாழ் தமிழர்களின் அதிரடி எதிர்ப்பு.

திரை மொழி /

உலக மகா புகழ் அடைந்ததாக பீற்றிக் கொள்ளப்படும் ‘கொலவெறி’ பாடலின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து யாழ் தமிழர்கள் நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல். வாழ்த்துக்கள் உறவுகளே.. நீங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும். 8 கோடி இருந்தும் எம் உணர்வற்ற நிலை உணர்ந்து தலைகுனியும் -தாயகத் தமிழன்.  989 total views

 989 total views