மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

என் கவிதைகள்.., கவிதைகள், சுயம் /

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள். “வேண்டாம். புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை. நினைவின் சுழல் கொண்டவை. கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை. மீளவே முடியாத ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை. வேண்டாம்..” …

 54 total views

எப்போதும் என் அம்மா.

சுயம் /

இன்று கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் என் அம்மா கலந்து கொண்டதை பற்றி என் தம்பி மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தான். இந்த காட்சி எனக்கு புதிதல்ல. சிறுவயதில் இருந்து எனக்கு தோளுக்கு தோளாக மட்டுமல்ல , உயிராக இருப்பது எனது அம்மா தான். நோயால் பாதிக்கப்பட்ட என் பால்ய காலத்தில் என் அம்மா மட்டும்தான் எனது பால்யகால தோழி. காலில் கட்டு போட்டு அமர்ந்திருக்கும் என்னோடு என் அம்மா …

 51 total views

நியாயத்தின் கதை.

என் கவிதைகள்.., கவிதைகள் /

நியாயம் என்ற வினாவின் ஓசை நடுநிசியில் மூடப்படாத குடிநீர் பைப்பு போல சரித்திரத்தின் வீதிகளிலே சொட்டி கொண்டே இருக்கிறது. எது நியாயம் என்பதற்கு அவரவருக்கு ஒரு தர்க்கம். ஆளாளுக்கு ஒரு கதை. வரையறையற்ற சுதந்திரத்துடன் அவரவர்‌ விழிகளில் படுகிற காட்சியாய், இலக்கற்ற ஓவியமாய், அலைந்துக் கொண்டே இருக்கும் சீரற்ற சிதறலாய் நியாயம். எந்த திசையில் நியாயம் உறைகிறது என்று எவருக்குமே தெரியாது. ஏனெனில் நியாயம் திசைகளை அழித்து அவரவருக்கு ஒரு திசையை பிரசவிக்கிறது. நியாயத்தை பற்றி எழுதி …

 48 total views

இதுதான் என் வாழ்வு.

என் கவிதைகள்.. /

அப்போது நான் அப்படி செய்திருக்க கூடாது என்கிற ஒன்றே ஒன்றை வாழ்வின் பல சமயங்களில் நீக்கி விட்டு பார்த்தால்.. எதுவுமே இல்லை வாழ்வில்.  54 total views

 54 total views

தேன் மொழி

என் கவிதைகள்.. /

நிறைவேறி விட்ட உறவில் தேன்மொழி மரணம் அடைகிறாள். நிறைவேறாத ஏக்கத்தில் தான் தேன்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறாள். உண்மையில் தேன்மொழியை தேடி அலைபவர்கள் காணும் போது தொலைத்து விடுகிறார்கள். சொல்லப்போனால் தொலைப்பதற்காகவே கண்டெடுக்கப்படுகிறவள் தான் தேன்மொழி. மீண்டும் மீண்டும் அலைகள் கரைகளை நோக்கி வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் செந்நிற அந்தி ஒன்றில் கைநழுவிப்போன அந்த ஒரு அலை திரும்பி வருவதே இல்லை. நினைவின் உயிர் கால் நனைத்து ஒருபோதும் திரும்பி வராமல் போன அந்த அலை …

 43 total views

சீமான் எனும் சொல்வல்லான்.

அரசியல் /

அது ஒரு பல்கலைக்கழக வகுப்பு அல்ல. ஆனால் வகுப்பு எடுப்பவர் குறைந்தது 30க்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோள்காட்டி பேசுகிறார். கனிம வள கொள்ளை நீர் மேலாண்மை, மத்திய மாநில உறவுகள், தமிழரின் தொன்மை, திருக்குறள், பாரதியார் கவிதை, பாரதிதாசன், ஜேசி குமரப்பா எழுதிய தாய்மை பொருளாதாரம் உள்ளிட்ட நூல்கள் என பலவற்றை எடுத்து உரிய இடத்தில் பொருத்தி ஒவ்வொரு நொடியும் தகவல்களை அள்ளித் தரும் இடமாக அந்த அரங்கை மாற்றுகிறார். சமகாலத்தில் இத்தனை நூல்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் …

 210 total views

வழி தொலைத்த கதவு.

கவிதைகள் /

உனக்கும்எனக்கும் நடுவேகைப்பிடி இல்லாஒரு கதவு. அடிக்கடிகதவுபூட்டப்பட்டிருப்பதைநாம் இருவருமேஉறுதி செய்துகொள்கிறோம். இருபுறமும்பூட்டப்பட்ட பூட்டுக்களின்உறுதியைஅடிக்கடிஇழுத்துப்பார்த்துபரிசோதிக்கிறோம். என் சாவி உன்னிடமும்,உன் சாவி என்னிடமும்,இருப்பதுநன்றாக தெரிந்தும்தொலையாத சாவியைதொலைத்து விட்டதாகதேடிக் கொண்டிருக்கிறோம். கதவு முழுக்கதுளை போட முயன்றதழும்புகள். குளிர்காலபின்மாலையில்கதவின் இடுக்கில் இருந்துசெந்நிற வெளிச்சம்கசிவதை அச்சத்துடன்பார்க்கிறேன். பாசிப்படர்ந்தஅந்தக் கதவின் மேல்நீலக்கடல்ஒன்றின் படம்வரையப்பட்டு இருக்கிறது. உடலில்கருஞ்சிவப்புக்கோடுகளோடுஒரு வெள்ளை மீன்அதில் நீந்துவது போலஎன்னைபார்த்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக மறுபுறத்தில்இதே போலஇன்னொரு மீனும்உன்னையும்பார்த்துக் கொண்டிருக்க கூடும். நள்ளிரவின் திடுக்கிடலில்பின் கழுத்து வியர்க்கநான் விழித்துப் பார்த்த போதுஅந்த மீன் என்னை பார்த்து இமைத்ததாக தோன்றியது. …

 56 total views

நானறிந்த எதிரிக்கு..

கவிதைகள் /

நானறிந்தத எதிரிக்கு நானறிந்த எதிரிக்கு நாசூக்காக சொல்வது என்னவென்றால்.. நள்ளிரவு நடுக்கடலில் மெல்ல அசைந்து கொண்டிருக்கும் தனிமை படகு நான். உன் புறக்கணிப்பின் பாடல் என்னை ஒன்றும் செய்யாது. என் வானத்தில் நீ அந்தி வரைய முயற்சிக்காதே. பல இரவுகளையும் சில சூரிய சந்திரர்களையும் ஒரு வேனிற் காலத்தையும் குளிர் ஊதற் காற்றையும் என் உள்ளங்கையில் மறைத்து வைத்திருக்கிறேன். சட்டென அவைகளில் ஏதேனும் ஒன்றை அருகே இருக்கும் ஏரியில் வீசி எனக்கான பருவத்தை நானே உருவாக்குவேன். கால …

 56 total views

“சேயோன்” வெல்வான்.

சுயம் /

அவனை வாழ்த்த சென்று வாழ்த்தாக தெரிவித்தது ஒன்றே ஒன்றுதான்… “இதையாவது வணிகமாக மட்டும் செய். “ …. உண்மையில் அவன் பெற்றிருக்கின்ற பலவற்றை வணிகமாக்க மறுத்ததை நானே பலமுறை எதிர்த்து இருக்கிறேன். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டில் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் பெரும் வாய்ப்பினை, அறிவை வணிகமாக்க மறுத்து, வெளிநாட்டு வாழ்வு, பொருளாதார உயர்வு என பலவற்றை இழந்து விட்டு, சொந்த ஊரில் கடை திறக்கும் அவனைப் பார்த்தால் ஒரே நேரத்தில் கோபம் கொள்ளவும், ஆழமாக …

 61 total views