மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

அண்ணன் என்ற அற்புதன்..

அரசியல் /

❤️ 2009 -ல் மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் “கூட்ட மேடையில் முதன்முதலாக ஏறிய போது கைப்பிடித்து என்னை ஏற்றினார். அந்த நொடி முதல் அந்த கைகள் என்னை விட்டு விலகியதே இல்லை. தாய்மை சாயல் கொண்ட அந்தக் கண்கள் என்னை விலக்கியதே இல்லை. அண்ணன் என்ற சொல்லுக்கு அவரைத் தவிர வேறு எதுவும் அர்த்தமில்லை. அவரிடமிருந்து வரும் என்ற தம்பி என்ற அழைப்பைத் தாண்டி வேறு எதுவும் உயர்வில்லை. தனிப்பட்ட அளவில் நான் எவ்வாறு அவரைப்பற்றி …

 67 total views

Missed call..

சுயம் /

❤️ ❤️ அந்தப் பாடல் ஒரு கருணை என்றாய். மழை போல. இளவெயில் போல.‌ எப்போதாவது உணரத்தக்க மனநிலையில் ‌ காலத்துளியின் நழுவத் துடிக்கும் ஒரு இழையில் அனிச்சையாக சிக்கிக்கொண்ட அபூர்வம் போல அந்தப்பாடல் ஒரு கருணை என விழிகள் மூடி மெய்மறந்து நீ சொல்லும் அந்தக் கணத்தில்… நிச்சயமாக நீதான் அந்தக் கருணை என எனக்கு சொல்லத் தோன்றியது. ❤️ இப்போதும் எங்கேயாவது என்னையும் மீறி கேட்டு விடுகிற அந்த பாடல் விரைந்து செல்கிற நதிகுளிர்கால …

 55 total views

மாநாடு-திரைக்கதை கலையின் விசித்திரம்.

திரை மொழி, திரைப்பட விமர்சனம் /

திரை உலகை கனவுத் தொழிற்சாலை என வரையறுத்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா . நம் கண்முன்னால் விரிகிற திரை நமக்கும் , நம் கனவிற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை அழிக்க முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சியை தான் நாம் திரைப்படம் என்கிறோம். ஒரு நல்ல திரைக்கதை “ஹைக்கூ” வடிவம் போன்றது என்கிறார் காட்பாதர் , அபாகலிஸ் நெள போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ. அவரே சொல்கிறார் , “ஒரு …

 77 total views

அப்பாவின் பிறந்தநாளில்..

சுயம் /

அப்பாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள்.எப்போதும் அவருக்கு பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாளாக தான் கடந்து போகும் ‌. இன்றும் அவர் அப்படித்தான் அதை அவர் எடுத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் நாட்களின் நகர்வு ஒன்று மட்டுமே மனிதனின் வாழ்நாள் அல்ல. அந்த நாட்களில் அவன் என்ன சாதித்து இருக்கிறான் என்பதே அவனது வாழ்நாள் என்கிறார். அவர் அப்படித்தான். இன்றளவும் தினந்தோறும் மூன்று மணிநேரங்கள் படிப்பதற்காக ஒதுக்குகிறார். நாம் தமிழர் காணொளிகள் அனைத்தையும் விடாமல் பார்த்து …

 66 total views

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு கடிதம்.

கடித இலக்கியம் /

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு. வணக்கம் தல. மாநாடு படத்தை உடனே பார்க்க முடியாததற்கு மன்னிக்கவும்.படம் வெளியாகி சில நாட்கள் கழித்து தான் பார்க்க நேர்ந்த போதிலும், கூட்டம் நிறைந்து அரங்கம் முழுமையாக இருந்ததை பார்த்த போது உண்மையிலேயே உங்கள் முகம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. மற்றபடி இந்த கடிதம் மாநாடு பற்றி அல்ல. திரையரங்கில் இருந்து நான் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய குரல் பதிவில் சொன்னதுபோலவே உங்கள் பெயர் திரையில் மின்னிய உடன் …

 71 total views

ஆசான் எனும் பெருவழி.

கட்டுரைகள்.. /

சூழ வரும் சூழ்நிலைகளால், பிழையாகி போன வாழ்க்கை முறைகளால் அலைக்கழிக்கப்படும் மனித உளவியலை நிலைநிறுத்த மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.தியானம் என்றும் தவம் என்றும் அவரவருக்கு ஏற்ற ஒரு வடிவத்தை பயிற்சி செய்து பார்த்து, ஏதோ ஒரு வகையில் மனித மனம் அலைக்கழிப்பு எனும் பேரலையில் இருந்து விடுதலை பெறாதா என மனிதர்கள் ஏங்கிக் கொண்டும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏறக்குறைய மெய்யியல் தேடலுக்கும் இதுதான் அடிப்படை என்றே கருதுகிறேன். தனக்குள்ளாக ஏற்படும் …

 65 total views

புரிய வேண்டிய புரிதல்கள்..

அரசியல், கட்டுரைகள்.. /

வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என …

 68 total views

இது நம் காலம்.

அரசியல் /

சம காலத்தில் திராவிட/தேசிய தத்துவங்களை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும் எதிராக நிற்பது என்பது உண்மையில் சற்றே திமிர் கலந்த பெருமிதமாகத்தான் இருக்கிறது. இவர்கள் நம்மை பார்த்து பதற பதற நமக்கு ஆர்வம் கூடுகிறது. பதற்றத்தோடு நம் மீது அவதூறுகளை அள்ளி வீசி அழித்துவிடுவோம், முடித்து விடுவோம், தனித்து விடுவோம் என இவர்கள் துள்ளி குதிக்கும் போது நமக்கு பரவசம் கூடுகிறது. இவர்கள் எதிர்க்கும் போதெல்லாம் மனம் உற்சாகம் அடைந்து உயிர் கொள்கிறது.வரலாற்றில் நம்மைப்போன்ற உறுதி கொண்ட ஒரு …

 70 total views

உறையாத நினைவோடை.

என் கவிதைகள்.. /

ஏதோ நகர்த்தலில் என்றோ , யார் பெயரிலோ சேமித்து வைத்திருக்கும் உன் அலை பேசி எண்ணை கால நழுவலின் பிசகிய நொடி ஒன்றில் என்னை அறியாது பார்த்துவிட்டேன். அது ஒரு குழந்தையைப் போல ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் விழித்து விடுகிற அபாயத்துடனும், அலறி காட்டிக் கொடுத்துவிடும் ஆபத்துடனும். ஆனாலும் ஆழ்ந்து தூங்கும் அந்த குழந்தையின் முகத்தில் தான் எத்தனை அழகு..??  70 total views

 70 total views

ஆன்மாவின் வண்ணத்துப்பூச்சி

என் கவிதைகள்.. /

விடுபடவே முடியாத கால சுழற்சியின் திடுக்கிடும் கணமொன்றில் உலராது உறைந்திருக்கும் உந்தன் முகம்.. ஒரு இசைக்குறிப்பு போல என் இதயத்தில் ஆழ்ந்து கால நேர பேதம் அறியாமல் ஒலித்து கொண்டே இருக்கிறது. நிறைவேறாத கனவின் தணியா தாகத்தை பொன் மகரந்தங்களாக சுமந்து திரிகிறது என் ஆன்மாவினுள் ஒரு வண்ணத்துப்பூச்சி. மணி செந்தில் 35Raju Janu, மு.முகம்மது சர்வத்கான் and 33 others1 comment1 shareLikeCommentShare 1  70 total views

 70 total views