மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ஆசான் எனும் பெருவழி.

கட்டுரைகள்.. /

சூழ வரும் சூழ்நிலைகளால், பிழையாகி போன வாழ்க்கை முறைகளால் அலைக்கழிக்கப்படும் மனித உளவியலை நிலைநிறுத்த மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.தியானம் என்றும் தவம் என்றும் அவரவருக்கு ஏற்ற ஒரு வடிவத்தை பயிற்சி செய்து பார்த்து, ஏதோ ஒரு வகையில் மனித மனம் அலைக்கழிப்பு எனும் பேரலையில் இருந்து விடுதலை பெறாதா என மனிதர்கள் ஏங்கிக் கொண்டும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏறக்குறைய மெய்யியல் தேடலுக்கும் இதுதான் அடிப்படை என்றே கருதுகிறேன். தனக்குள்ளாக ஏற்படும் …

 66 total views

புரிய வேண்டிய புரிதல்கள்..

அரசியல், கட்டுரைகள்.. /

வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என …

 68 total views

இது நம் காலம்.

அரசியல் /

சம காலத்தில் திராவிட/தேசிய தத்துவங்களை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும் எதிராக நிற்பது என்பது உண்மையில் சற்றே திமிர் கலந்த பெருமிதமாகத்தான் இருக்கிறது. இவர்கள் நம்மை பார்த்து பதற பதற நமக்கு ஆர்வம் கூடுகிறது. பதற்றத்தோடு நம் மீது அவதூறுகளை அள்ளி வீசி அழித்துவிடுவோம், முடித்து விடுவோம், தனித்து விடுவோம் என இவர்கள் துள்ளி குதிக்கும் போது நமக்கு பரவசம் கூடுகிறது. இவர்கள் எதிர்க்கும் போதெல்லாம் மனம் உற்சாகம் அடைந்து உயிர் கொள்கிறது.வரலாற்றில் நம்மைப்போன்ற உறுதி கொண்ட ஒரு …

 71 total views,  1 views today

உறையாத நினைவோடை.

என் கவிதைகள்.. /

ஏதோ நகர்த்தலில் என்றோ , யார் பெயரிலோ சேமித்து வைத்திருக்கும் உன் அலை பேசி எண்ணை கால நழுவலின் பிசகிய நொடி ஒன்றில் என்னை அறியாது பார்த்துவிட்டேன். அது ஒரு குழந்தையைப் போல ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் விழித்து விடுகிற அபாயத்துடனும், அலறி காட்டிக் கொடுத்துவிடும் ஆபத்துடனும். ஆனாலும் ஆழ்ந்து தூங்கும் அந்த குழந்தையின் முகத்தில் தான் எத்தனை அழகு..??  72 total views

 72 total views

ஆன்மாவின் வண்ணத்துப்பூச்சி

என் கவிதைகள்.. /

விடுபடவே முடியாத கால சுழற்சியின் திடுக்கிடும் கணமொன்றில் உலராது உறைந்திருக்கும் உந்தன் முகம்.. ஒரு இசைக்குறிப்பு போல என் இதயத்தில் ஆழ்ந்து கால நேர பேதம் அறியாமல் ஒலித்து கொண்டே இருக்கிறது. நிறைவேறாத கனவின் தணியா தாகத்தை பொன் மகரந்தங்களாக சுமந்து திரிகிறது என் ஆன்மாவினுள் ஒரு வண்ணத்துப்பூச்சி. மணி செந்தில் 35Raju Janu, மு.முகம்மது சர்வத்கான் and 33 others1 comment1 shareLikeCommentShare 1  71 total views

 71 total views

குமிழி

என் கவிதைகள்.. /

வன் காற்றின் சிறகு மோதினாலும் சிதையாமல்சற்றே விலகி சிணுங்கிக் கொண்டே உயர உயர பறக்கிறது நம்பிக்கை முகத்தின் புன்னகைக்குமிழி.  62 total views,  1 views today

 62 total views,  1 views today

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

என் கவிதைகள்.. /

என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதை என்னை பற்றி பேசும் .உங்களையும் பற்றி பேசக் கூடும். உங்களுடையது என நீங்கள் உணரும்போது கதை என்னுடையதாக இருப்பதை நீங்கள் மறப்பீர்கள்.. என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையில் ஒரு காடு இருக்கிறது. அந்தக் காட்டில் தான் நான் இருக்கிறேன் .நீங்களும் இருப்பீர்கள். அந்தக் காட்டில் நீங்கள் இருப்பதை உணரும்போது நான் இருப்பதை மறப்பீர்கள். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதில் வெளிறிய மதிய நேரம் ஒன்று …

 65 total views

காதல் என்பது யாதெனில்..

சுயம் /

காதல் என்றால் என்ன..?இளமைத் தீ பற்ற வைத்த நெருப்பா, உணர்ச்சிகளின் விளையாட்டா, ஹார்மோன்களின் சதியா, வாழ்க்கை விதித்த தவிர்க்க முடியா விதியா‌.. என்றெல்லாம் யோசித்தால் குழம்பி விடுகிறோம்.”செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே” என்கிறது குறுந்தொகை.”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.”காதல் கூட கடவுள் மாதிரி தான். காதல் என்னும் ஈர அலைகள் அடித்துக் கொண்டிருப்பதால் தான் இன்னும் இந்த பிரபஞ்சம் ஈரமாகவே இருக்கிறது” என்கிறார் …

 65 total views

ஸ்டாலின் – சீமான் சந்திப்பு

அரசியல் /

விமர்சனங்களில் பலவகை உண்டு.ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது, விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கற்பனை செய்து கதை எழுதுவது‌ என்பதான வகைகள் விமர்சனங்களில் உண்டு.குறிப்பாக நாம் தமிழர் மீது ஏவப்படும் விமர்சனங்களை கூர்ந்து கவனியுங்கள். கடந்த பத்தாண்டுகளாக விமர்சனங்களைத் தவிர வேறு எதையும் அடையாத நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணம் என்பது அசாதாரணமானது.ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தபோது அதிமுகவோடு கூட்டணி வைக்கப் போகிறார் என ஒரு கூட்டம் அலறும்.சசிகலாவை போய் பார்த்து விட்டு நடராஜன் சாவிற்கு துக்கம் விசாரித்துவிட்டு வந்தால் …

 65 total views,  1 views today

இளையராஜா – என்றொரு மீட்பர்.

கட்டுரைகள்.., சுயம் /

சட்டென அந்தக் கேள்வியை என் மகன் கேட்டு விட்டான். “உனக்கு ஏன் இளையராஜாவை அவ்வளவு பிடிக்கிறது..?”உண்மையில் அந்தக் கேள்வியை நேர்மையாக எதிர்கொள்ள எனக்கு பயமாக இருந்தது. அதை அப்படியே வார்த்தைகளால் நான் விவரித்தாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது.இளையராஜாவை கேட்பது என்பது எனது அந்தரங்க உணர்வு போல, நான் மட்டும் ஆத்மார்த்தமாக உணர்ந்து ரசித்து உள் வாங்குகிற சுய நிகழ்வு. அதை எப்படி இவனுக்கு விவரித்து உணர்த்துவது..?எல்லாவற்றையும் மகனிடம் கொட்டிவிட கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. மழை போல எப்போதும் …

 72 total views