மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

என் கவிதைகள்.., கவிதைகள், சுயம் /

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள். “வேண்டாம். புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை. நினைவின் சுழல் கொண்டவை. கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை. மீளவே முடியாத ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை. வேண்டாம்..” …

 35 total views

நியாயத்தின் கதை.

என் கவிதைகள்.., கவிதைகள் /

நியாயம் என்ற வினாவின் ஓசை நடுநிசியில் மூடப்படாத குடிநீர் பைப்பு போல சரித்திரத்தின் வீதிகளிலே சொட்டி கொண்டே இருக்கிறது. எது நியாயம் என்பதற்கு அவரவருக்கு ஒரு தர்க்கம். ஆளாளுக்கு ஒரு கதை. வரையறையற்ற சுதந்திரத்துடன் அவரவர்‌ விழிகளில் படுகிற காட்சியாய், இலக்கற்ற ஓவியமாய், அலைந்துக் கொண்டே இருக்கும் சீரற்ற சிதறலாய் நியாயம். எந்த திசையில் நியாயம் உறைகிறது என்று எவருக்குமே தெரியாது. ஏனெனில் நியாயம் திசைகளை அழித்து அவரவருக்கு ஒரு திசையை பிரசவிக்கிறது. நியாயத்தை பற்றி எழுதி …

 29 total views

இதுதான் என் வாழ்வு.

என் கவிதைகள்.. /

அப்போது நான் அப்படி செய்திருக்க கூடாது என்கிற ஒன்றே ஒன்றை வாழ்வின் பல சமயங்களில் நீக்கி விட்டு பார்த்தால்.. எதுவுமே இல்லை வாழ்வில்.  36 total views

 36 total views

தேன் மொழி

என் கவிதைகள்.. /

நிறைவேறி விட்ட உறவில் தேன்மொழி மரணம் அடைகிறாள். நிறைவேறாத ஏக்கத்தில் தான் தேன்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறாள். உண்மையில் தேன்மொழியை தேடி அலைபவர்கள் காணும் போது தொலைத்து விடுகிறார்கள். சொல்லப்போனால் தொலைப்பதற்காகவே கண்டெடுக்கப்படுகிறவள் தான் தேன்மொழி. மீண்டும் மீண்டும் அலைகள் கரைகளை நோக்கி வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் செந்நிற அந்தி ஒன்றில் கைநழுவிப்போன அந்த ஒரு அலை திரும்பி வருவதே இல்லை. நினைவின் உயிர் கால் நனைத்து ஒருபோதும் திரும்பி வராமல் போன அந்த அலை …

 28 total views

அல்லாஹு அக்பர்

என் கவிதைகள்.., கவிதைகள் /

நீ என்னைஆக்கிரமிப்பதற்காகவும்,கட்டுப்படுத்துவதற்காகவும்வீசும் ஆயுதங்களைகம்பீரமானஎனது கலகக் குரல் மூலமாகஅடித்து நொறுக்குவேன். நான்விடுதலையின் காற்று.எதிர்ப்பின் ஏகாந்தம்.உன் கட்டுபாட்டுக்கம்பி வேலிக்குள்அடங்கி விடமாட்டேன். ஓங்கி ஒலிக்கும்எனது முழக்கம்என்னைப்போலவே,உன்னை எதிர்த்துப்போராடி உன்னால்உயிரோடுகொளுத்தப்பட்டஎனது முன்னோரின்சாம்பலிலிருந்துகிளர்ந்து எழுந்தது. நான் யாராக இருக்க வேண்டும் என்பதைநான் தீர்மானிப்பதை விடநீ தீர்மானிக்கக் கூடாதுஎன்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் யார் என்பதைநீ தீர்மானித்துவைத்திருக்கும்எல்லா வரையறைசட்டகங்களையும்கிழித்து எறிவேன். எனது உடைஉன் அதிகாரபாசிச உச்சங்களின்உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால்அதை நான் ரசித்துஅணிவேன். எனது பண்பாட்டின்,எனது வழிபாட்டின்,கற்றைப் புள்ளிகளைஉன்கைப்பிடி அதிகாரத்தால்ஒற்றைப் புள்ளியாகவரைய துடிக்கும்உனது வரலாற்றுவன்மத்தைஎகிறி …

 65 total views

உறையாத நினைவோடை.

என் கவிதைகள்.. /

ஏதோ நகர்த்தலில் என்றோ , யார் பெயரிலோ சேமித்து வைத்திருக்கும் உன் அலை பேசி எண்ணை கால நழுவலின் பிசகிய நொடி ஒன்றில் என்னை அறியாது பார்த்துவிட்டேன். அது ஒரு குழந்தையைப் போல ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் விழித்து விடுகிற அபாயத்துடனும், அலறி காட்டிக் கொடுத்துவிடும் ஆபத்துடனும். ஆனாலும் ஆழ்ந்து தூங்கும் அந்த குழந்தையின் முகத்தில் தான் எத்தனை அழகு..??  64 total views

 64 total views

ஆன்மாவின் வண்ணத்துப்பூச்சி

என் கவிதைகள்.. /

விடுபடவே முடியாத கால சுழற்சியின் திடுக்கிடும் கணமொன்றில் உலராது உறைந்திருக்கும் உந்தன் முகம்.. ஒரு இசைக்குறிப்பு போல என் இதயத்தில் ஆழ்ந்து கால நேர பேதம் அறியாமல் ஒலித்து கொண்டே இருக்கிறது. நிறைவேறாத கனவின் தணியா தாகத்தை பொன் மகரந்தங்களாக சுமந்து திரிகிறது என் ஆன்மாவினுள் ஒரு வண்ணத்துப்பூச்சி. மணி செந்தில் 35Raju Janu, மு.முகம்மது சர்வத்கான் and 33 others1 comment1 shareLikeCommentShare 1  62 total views

 62 total views

குமிழி

என் கவிதைகள்.. /

வன் காற்றின் சிறகு மோதினாலும் சிதையாமல்சற்றே விலகி சிணுங்கிக் கொண்டே உயர உயர பறக்கிறது நம்பிக்கை முகத்தின் புன்னகைக்குமிழி.  54 total views

 54 total views

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

என் கவிதைகள்.. /

என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதை என்னை பற்றி பேசும் .உங்களையும் பற்றி பேசக் கூடும். உங்களுடையது என நீங்கள் உணரும்போது கதை என்னுடையதாக இருப்பதை நீங்கள் மறப்பீர்கள்.. என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையில் ஒரு காடு இருக்கிறது. அந்தக் காட்டில் தான் நான் இருக்கிறேன் .நீங்களும் இருப்பீர்கள். அந்தக் காட்டில் நீங்கள் இருப்பதை உணரும்போது நான் இருப்பதை மறப்பீர்கள். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதில் வெளிறிய மதிய நேரம் ஒன்று …

 58 total views

நினைவின் பக்கங்களில் மலரும் பூ..

என் கவிதைகள்.. /

தூசி படர்ந்த புத்தக அடுக்கில் தவறி விழுந்த கதைப் புத்தகம் ஒன்றின் சட்டென விரிந்த திறந்த பக்கம் ஒன்றில் ஒட்டியிருந்த பழுப்பேறிய மல்லிகைப்பூ அதுவாகவே எழுதத் தொடங்கியது. நினைவின் பக்கங்களில். அதுவரை எழுதப்படாத அழகிய கதை ஒன்றை. மணி செந்தில். 83தமிழ வேள், M.I. Humayun Kabir and 81 others29 comments2 sharesLikeCommentShare 29  55 total views

 55 total views