மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

தேசிய இனங்களும்- தமிழ்த்தேசிய இன உருவாக்கமும்- தமிழ்த்தேசியச் சுவடுகள் 2

கட்டுரைகள்.. /

  வரலாறு என்பது கால வீதிகளில் தடம் பதித்து,புகழ் மணக்க வாழ்ந்த பெரு மன்னர்களின்,புகழ் மனிதர்களின் வாழ்க்கை கதையாகவே பதியப்பட்டிருக்கிறது.  அப்படியென்றால்..காலங்காலமாக சாதாரணமாக வாழ்ந்த எளிய மக்களைப்பற்றி, அவர்களின் வாழ்வியலைப்பற்றி தெரிந்துக் கொள்ள,ஆய்வு செய்ய எழுதப்பட்டுள்ள வரலாறு அனுமதிக்கிறதா என்றால் கசப்பான உண்மை இல்லை என்பதே.. மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என புதிய வரலாற்றுத்துறை நிபுணர்கள் விருப்புகிறார்கள்.மனித சமூகங்களின் வரலாறு நேர்மையாக எழுதப்பட்டிருந்தால், நிகழ்காலத்தில் நடக்கிற எத்தனையோ பிரச்சனைகளுக்கான,முரண்களுக்கான தொடக்கப்புள்ளியை நாம் கண்டறிந்திருக்க முடியும் . …

 2,367 total views

தி வாக்.. (The walk )

கட்டுரைகள்.. /

    உலகம் எப்போதும் தனித்துவமானவர்களையே நினைவில் கொள்கிறது. சராசரிகளை சரித்திரம் தனது குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு சென்று கொண்டே இருக்கிறது. இலட்சிய உறுதியும், அசாத்திய பொறுமையும்,கடும் உழைப்பும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற தனித்துவமான ஒரு மனிதனின் வாழ்க்கை உண்மை கதையே .. தி வாக்.. (The walk ) அவன் பெயர் பிலிப்பி பெடிட். தெருக்களில் நாம் ஒரு காலத்தில் இயல்பாக பார்த்த அந்தரத்தில் கட்டப்பட்ட கம்பிகளில் நடக்கும் வித்தைக்காரன். அதை …

 1,582 total views,  1 views today

பொழுதுகள் கடந்த வெளி..

கட்டுரைகள்.. /

கூந்தலை அள்ளி அப்படியே என் முகத்தில் படர்த்தினாய் …   இது நீள் இரவு என்றேன்..   இல்லை..இல்லை.. சூரியன் இருக்கிறதே இது பகல்.. என்றாய் நீ.. . அது உன் விழிகள்.. இது அதிகாலை என்றேன்.   போடா என்று புன்னகைத்தவாறே இறுக அணைத்தாய்..   மீண்டும் சிரித்தவாறே சொன்னேன்..   இது ஒரு பொன்மாலைப் பொழுதென..  1,630 total views

 1,630 total views

இளையராஜா – எம் தலைமுறை வாழ்க்கை.

கட்டுரைகள்.. /

தேவ தீண்டல்களால் உயிர் வாழ்பவனின்நன்றிக் குறிப்பு இது.   …..   புகழ்ப் பெற்ற டைட்டானிக் படத்தில் வரும் அந்த சில நிமிடக் காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. கப்பல் முழ்கி கொண்டிருக்கும் அந்த துயர வேளையில்..அந்த வயலின் இசை கலைஞர்கள் தங்கள் இசையை நிறுத்தாமல் வாசித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காட்சி உலகத்தையே உலுக்கிப் போட்டது. ஆனால் தமிழர்களோ ஒரு சிறிய புன்னகையோடு அந்த காட்சியை எளிதில் கடந்தார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு இசைக்கலைஞனை அவர்கள் ஏற்கனவே …

 1,653 total views,  1 views today

திராவிட நச்சுப்பாம்புகளின் விச பெருமூச்சுகளும்.. துரோக கதையாடல்களும்..

கட்டுரைகள்.. /

சமீப காலமாக இணைய வெளிகளில் தி(ருக்குவளை குடும்ப) முன்னேற்றக்கழகத்தின் இணைய எழுத்தர்கள் செத்துப் போன பிணமாய் தங்கள் ஆட்சி அதிகார கனவு ஆகிவிட்டதே என்ற ஆற்றாமையில்.. தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து தரம் குறைந்த வசவுகளை.. முக்கிக் கொண்டும், முனகிக் கொண்டும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.   தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் இருமுறைமைகளாக மட்டுமே பேச உரிமையிருக்கிறது என கருதுகிறவன் நான். ஒன்று அவரின் வீரம், ஈகை , அளப்பரிய உழைப்பு, அதன் வாயிலாக …

 1,670 total views

வசவுகள் உணர்த்தும் செய்திகள்..

கட்டுரைகள்.. /

சமீப நாட்களாக கீற்று இணையத்தளத்தில் நாம் தமிழர் எதிர்ப்பு கட்டுரைகள் மீண்டும் அதிகமாக பிரசுரமாகி வருகின்றன. (நடுவில் ஏனோ..நிறுத்தி இருந்தார்கள்.) பொய்யும்,புரட்டும்,தேர்தல் அச்சமும் (சொந்தக்காரர்கள் ஜெயிக்கணுமில்ல…) நிரம்பி வழியும் அக்கட்டுரைகள் பற்றி நமக்கு ஒரு பொருட்டே இல்லை என்றாலும் கூட… மேற்கண்ட கட்டுரைகள் சில செய்திகளை சமூகத்திற்கு தெளிவாக வெளிக்காட்டுகின்றன.. அவையாவன.. தமிழ்த்தேசிய கருத்தியலின் ஏகமனதான பிரதிநிதியாய் நாம் தமிழர் அமைப்புதான் இருக்கிறது.. திராவிட கருத்தியலின் சிம்ம சொப்பனமாய் நாம் தமிழரே திகழ்கிறது. தமிழ்த்தேசிய கருத்தியல் எதிர்ப்பு …

 1,582 total views

சில நேரங்களில் பல கேள்விகள்- மணி செந்தில்..

கட்டுரைகள்.. /

தமிழ்த்தேசிய கருத்தியல் குறித்து இணைய வெளிகளில் ,கருத்துத்தளங்களில் பரவலாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ்த்தேசியர்கள் குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. எந்த அதிகாரத்தினால் தமிழ்த்தேசிய இனம் வீழ்ச்சியுற்றதோ அந்த அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கிற முழக்கத்தை முன் வைத்து நகரும் தமிழின இளைஞர்களை முதலமைச்சர் ஆக கனவு காண்கிறார்கள், முதலமைச்சுத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வசவுகள் பொழிகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முனையும் தமிழ்த்தேசியர்களை வலது சாரி தமிழ்த்தேசியவாதிகள் …

 1,281 total views

கருத்துரிமை என்பது யாதெனில்… . -மணி செந்தில்

கட்டுரைகள்.., கவிதைகள் /

…   எம் முகத்தில் நீ காறி உமிழ்ந்த அந்த மஞ்சள் எச்சிலுக்கு மற்றொரு பெயர் உண்டென்றாய்… எம் செவியில் நீ உரக்கச் சொல்லிப்போன அவமானச் சொற்களின் பின்னால் மகத்தான உரிமை ஒன்று மறைந்து கிடக்குதென்றாய்.. எம் கண்களை நோண்டியெடுத்து உன் கால்களுக்கு கீழே போட்டு நசுக்கி… அதில் கசிந்த உதிரத்தில் தான் உன் மஞ்சள் எழுத்திற்கான மை தயாரித்தாய்.. உதிர சிவப்பேறிய எம் விடுதலைக்கான பக்கங்களில் உன் மஞ்சள் புத்தியை பூசி விட்டு போனதைதான் உன் …

 1,067 total views

கங்காரு -தீவிர அன்புணர்வின் எளிய மொழியியல்…

கட்டுரைகள்.. /

  மிருகம்,உயிர்,சிந்து சமவெளி போன்ற சர்ச்சை திரைப்படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ள கங்காரு வேறு தளத்தில் பயணிக்கிறது. எப்போதும் உணர்வு சார்ந்த திரைக்கருவில் மிகை நடிப்பிற்கான சாத்தியங்கள் அதிகம். அதே போன்ற அண்ணன் -தங்கை அன்புணர்வினை தீவிரமாக பேசுகிறது கங்காரு.. எப்போதும் வாழ்க்கை நினைத்தது போல அமைந்துவிடுவதில்லை.நினைப்பது போல நடக்காததன் அவஸ்தைகளை,வலிகளை,வேதனைகளை, ஏமாற்றங்களை,சவால்களை பேசுவதுதான் திரைப்படங்களும், இலக்கியங்களும்… மனித மனம் விசித்திரமானது. அந்த விசித்திரங்களின் தொகுப்பில் மகத்தானது அன்பு என்கிற மகத்தான உணர்வு.ஒரு வகை பதிலீட்டை,எதிர்பார்ப்பை,கைமாற்றை கோரி …

 955 total views,  1 views today

சொற்களின் மினுக்கும் சிறகுகள்

கட்டுரைகள்.. /

காற்றில் மிதந்து திரிகிற உன் சொற்களில் மின்மினி பூச்சிகளின் சிறகினை கண்டேன்… வளைந்து,நெளிந்து திரிகிற புதிர் பாதையில் ஆயிரத்தி எட்டு நட்சத்திரங்களை விதைத்து போயின அவை. சட்டென கிளைத்த மெளனத்தில்… நட்சத்திரம் அழிந்த வானமாய் நிர்மூலமானது நானும் கூட….    770 total views

 770 total views