மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

எம்.எஸ்.வி -இசையால் நிறைத்த பெருமழை..

கட்டுரைகள்.. /

    எழுபதுகளின் இறுதியிலும் , எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான கட்டமைக்கப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாங்களெல்லாம் இளையராஜாவோடு வளர்ந்தவர்கள். ஏறக்குறைய எம்எஸ்வி காலம் அப்போது இறுதி காலத்தை எட்டியிருந்தது.நாட்டுப்புற அழகியலோடு இளையராஜா அள்ளிக்கொடுத்த மென் சோக செவ்வியல் இசை இரண்டு தலைமுறை காலத்து தமிழ்ச் சமூகத்தை கட்டிப்போட தொடங்கியதும் அந்த காலகட்டத்தில்தான் . இளையராஜாவின் இசை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகவே நாங்கள் நம்பினோம். அவரது சமகாலத்து …

 702 total views

அண்ணன் சீமானின் “அன்பு”

கட்டுரைகள்.. /

அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் தான் இருக்கிறதா என்பது போன்ற சந்தேகங்களை எழுப்புகிற ஒரு நிலப்பகுதி. தஞ்சை கடைநிலை பகுதியான சீர்காழி என்கின்ற ஒரு சிறிய நகரத்தைத் தாண்டி தில்லை நத்தம் என்கின்ற உள்ளடங்கிய ஒரு குக்கிராமம். ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் வழி விட முடியாத அளவிற்கு குறுகிய ஒற்றைச் சாலை. அந்தக் கிராமத்தின் தெருவில் கடைசி வீடாக அந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட எளிய வீடு இருந்தது.‌ மிகச் சிறிய வீடு. …

 534 total views

மெளனத்தின் மலர்

கட்டுரைகள்.. /

      அலைவரிசை தவறிய உன் தடுமாற்ற சொற்களுக்கு மத்தியில்.. உனது மெளனம் ஒன்று சின்னதாய் பூத்துவிடுகிறது. அந்த மெளனத்தின் ஆழத்தில் தான் எனது மீளெழும்பலுக்கான பாடலை நான் கண்டடைய வேண்டும். புராதன காதலுணர்வின் ஆதித்துயராக அந்த மெளனத்தை நான் நம்புகிறேன். அது அதுவாக கலைவதற்குள்.. அல்லது நீயே அதை கலைப்பதற்குள்.. இப்போதே நீ போகலாம். மணி செந்தில்.  778 total views

 778 total views

துளி-23

கட்டுரைகள்.. /

  பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம் சமூகத்தில் பல சிந்தனைகளை, விவாதங்களை உருவாக்குகின்ற குறியீடாக மாறி இருக்கிறது. பொள்ளாச்சி நடைபெற்ற அந்த சம்பவங்கள் வெறும் ஒரு ஊரும்,சில இளைஞர்களும் சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த சமூகமே தங்களைத் தாங்கள் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நிலையை இச்சம்பவம் உருவாக்கி இருக்கிறது. சாதி முதல் குழந்தை வளர்ப்பு வரை அனைத்தையுமே நாம் இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். காதலித்து விடக்கூடாது. சாதி மாறி காதலிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்,நாடகக் காதல் , ஜீன்ஸ் காதல் என்றெல்லாம் …

 728 total views,  1 views today

நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா

கட்டுரைகள்.. /

நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு..  புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக நாட்கணக்காக ஆண்டுக்கணக்காக இருண்ட யுகங்களாக  நட்சத்திர நூற்றாண்டுகளாக என்னை அழ விடு. -பாப்லோ நெரூதா. * இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல திரிவார்கள். பால்யத்தின் பசி என்பது வாழ்வு முழுக்க அடங்காத நீட்சியை கொண்ட பெரும் பயணம். துன்பமும் துயரமும் கொண்ட இளம் …

 1,384 total views,  1 views today

தற்கால மருத்துவ நல விவாதங்களும்….தமிழர் மரபு மருத்துவமும்

கட்டுரைகள்.. /

      சமீப காலமாக மரபு வழி மருத்துவத்திற்கும், ஆங்கில மருத்துவத்திற்குமான முரண் உரையாடல்கள் நடந்து வருகின்றன. மரபு வழி மருத்துவம் பிற்போக்குத்தனமானது, அறிவியல் தன்மையற்ற கையாளல்   என்றும் , ஆங்கில வழி மருத்துவம் அறிவியல் பூர்வமானது என்றும் ,நவீனமானது என்றும் அவரவர் பார்வைகளுக்கேற்ப ,அரசியல்- சமூக சிந்தனைகளுக்கேற்ப ஒருவருக்கொருவர் ஊடகங்களிலும், சமூக வெளி தளங்களிலும் விவாதித்து வருகின்றனர்.  ஆங்கில மருத்துவம் தான் அகில உலகையும் காக்கவும் மீட்கவும் வந்த இறுதி மீட்பர் போல சில முற்போக்கு முட்டுச்சந்துகள் …

 2,297 total views,  1 views today

இ.த.ச பிரிவு 377 நீக்கம்- தேவைப்படும் சில புரிதல்கள்..

கட்டுரைகள்.. /

இன்றைய தினம் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களை விடுவிக்க அதிகாரம் தமிழக அரசுக்கு பிரிவு 161 ன் வாயிலாக உண்டு என்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. மற்றொன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 யை ரத்து செய்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. 1860 ஆம் ஆண்டு மெக்காலே பிரபு அந்த கால சூழலுக்கு ஏற்ப …

 952 total views

செங்கொடி… தீயில் உறைந்திருக்கும் கனவு.

கட்டுரைகள்.. /

    ஜன்னல்களை கடந்து நான் நகரும்போது … என் அரவம் கேட்டு கண்களை உயர்த்தி கேட்கிறார்கள்.. “நான் கடலைச் சென்று அடைவது எப்படி..?” அப்போது கடலின் நட்சத்திர எதிரொலிகளை .. நுரையின் சிதறல்களை.. மணற் சுழல்களின் சிதறலை..‌ பின்னொதுங்கும் உப்பின் முனகலை …. கரையில் ஒதுங்கும் கடற்பறவைகளின் கூக்குரலை… எதுவும் பேசாமல் ஒலிபரப்புவேன். அவ்வாறு என்னில் ஊடே..‌ சுதந்திரமும் கடலும் மூடப்பட்ட இதயத்திற்கு பதில் அளிக்கும். -பாப்லோ நெருடா (தமிழில் சுகுமாரன்) நிறமற்ற பல நிறங்களின் …

 960 total views

கடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.

கட்டுரைகள்.. /

  கால்கள் இழந்தும் கண்,கைகள் சிதைவடைந்தும் சித்தம் குழம்பிப்போய் சிரித்தும் அழுதுக் கொண்டும் ஊனமாய் போய்விட்ட ஒரு பெரும் சமுதாயம் கத்தி அழுதபடி காரிருளில் அங்குமிங்கும் வாழ்ந்த மண்ணை வாயினிலும் தலையினிலும் அள்ளி எறிந்து ஆவிகளாய் அலைந்தபடி. ஒப்பாரி வைக்கின்ற ஓலத்தை என் வாழ்வில் எப்படிதான் நான் மறப்பேன். என் சகியே..                           -திரு. எனக்கு முன்னால் அமர்ந்திருந்த சரவணன் …

 2,086 total views

கடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.

கட்டுரைகள்.. /

….. 2016 ஜனவரி. அவர்கள் எங்களை தடுத்தார்கள். இதற்கு மேலே வாகனங்கள் செல்ல முடியாது. பாலங்கள் உடைந்து கிடக்கின்றன என்றார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அழிவு அதிகமாகத்தான் இருந்தது. சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மக்கள் எதிரே வாகனங்களை மறித்து, இருப்பதை பிடிங்கிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகதானிருந்தது. பசியால் வெளிறிய கண்களோடு குழந்தைகள் ஏங்கி நிற்கின்ற அக்காட்சி எதனாலும் சகிக்க முடியா துயராய் இருந்தது. ஆம். கடலூர் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலமாய் , வேதனையும், அழுகுரல்களும் நிரம்பிய …

 1,415 total views,  1 views today